Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

Featured Replies

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு MAR 04, 2015 | 11:48by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள்

imf-Todd-Schneider-300x199.jpgசீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து, 4 பில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது.

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்தமாதம் வோசிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன்களை கோரியிருந்தார்.

ஆனால், சிறிலங்காவுக்கு ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்ட அனைத்துலக நாணய நிதியத்தின் நிபுணர்கள், சிறிலங்கா தற்போது உடனடி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

அனைத்துலக நாணய நிதியத்தின் நிபுணர் குழுவின் தலைவர் ரொட் சினேய்டர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் வெளிநாட்டு  நாணயக் கையிருப்பு நல்ல நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம், 2.6 பில்லியன் டொலரை கடனாக வழங்கியிருந்தது.

“தற்போது நிலைமை முற்றிலும் வேறுபட்டது. எம்மால் நிலுவையாக உள்ள கொடுப்பனவு உதவியையே வழங்க முடியும்.” என்று நிபுணர் குழுவின் தலைவர் ரொட் சினேய்டர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சிறிலங்கா கொண்டுள்ளது.

எனினும், கடந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் 42.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

2013ம் ஆண்டு இறுதியில் சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் 39.7 பில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/03/04/news/4135

 

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரிப்பு
 
rot_sinetor_001.jpg
இலங்கையின் புதிய அரசாங்கம் விடுத்திருந்த 4 பில்லியன் டொலர் கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்துள்ளது.

சீனாவிடம் இருந்து மகிந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கே அனைத்துலக நாணய நிதியத்திடம் கடனுதவியை கோரியிருந்தது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த மாதம் வோசிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன்களை கோரியிருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்ட அனைத்துலக நாணய நிதியத்தின் நிபுணர்கள், இலங்கை தற்போது உடனடி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

இன்று கொழும்பில் அனைத்துலக நாணய நிதியத்தின் நிபுணர் குழுவின் தலைவர் ரொட் சினேய்டர் செய்தியாளர்களிடம் பேசிய போது,

2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நல்ல நிலையிலேயே உள்ளது.

போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது அனைத்துலக நாணய நிதியம், 2.6 பில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கியிருந்தது.

தற்போது நிலைமை முற்றிலும் வேறுபட்டது. எம்மால் நிலுவையாக உள்ள கொடுப்பனவு உதவியையே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் பெரியண்ணர் வந்து பிணைக்கு நின்று 2 பில்லியன் கிடைக்க உதவ முடியும் என்பார்.. :wub: நிபந்தனைகள் போடுவார்.. சிங்களவன் பதிலுக்கு கடன் சீனனிட்டையே இருக்கட்டும் எண்டுவினம்.. :huh: ஒரே இழுபறிதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்திலே யாரிடமோ கடன் தான். :)  சிங்கள அரசு ஒரு  கடனை கொடுக்க இன்னுமொரு கடனை தான் கோருகிறது. :)

  • தொடங்கியவர்

மொத்தத்திலே யாரிடமோ கடன் தான். :)  சிங்கள அரசு ஒரு  கடனை கொடுக்க இன்னுமொரு கடனை தான் கோருகிறது. :)

 

 

இந்த அரசின் வருகைக்கு பணத்தின் மேல் படுத்துறங்கும் பல வெளி நாட்டுத்தமிழர்கள் ஆதரவு வழங்கினார்கள் தானே.அவர்கள் தங்கள் பணத்தை இலங்கை அரசுக்கு வட்டிக்கு விடலாமே

 

Money+under+teh+bed.jpg

 

 

 

 

http://jackpeat.blogspot.ca/2013/03/say-hello-to-mattress-economy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.