Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்று சூழல் பேரழிவு – வலிகாமம்- பேராசிரியர் தயா சோமசுந்தரம்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுற்று சூழல் பேரழிவு பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வலிகாமத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வலிகாமத்தில் வாழும் 261,897 எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் நிலத்தடி நீர் எண்ணையால் மாசாகிக் கொண்டிருப்பதாக மெதுவாக உணர்ந்து வருகின்றனர். மின் மின்பிறப்பாக்க நிலையத்தை சுற்றியுள்ள 1.5km விட்டமான பிரதேசத்தில் 2013 – 2014 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளின் படி, பெருமளவிலான கிணறுகள் ( அண்ணளவாக 73%) எண்ணையால் மாசுபட்டு இருக்கின்றது. அதாவது ஏற்புடையதான அளவிலும் இது (1 mg/ L எண்ணெய்) மிதை மிஞ்சி உள்ளது. இதன் பின்னர் அந்த பகுதி மக்களின் அவதானிப்புக்களின் படி 4km விட்டத்திற்கு எண்ணெய் மாசு நிலத்தடி நீரில் பரவியிருப்பது புலனாகியிருக்கின்றது. எண்ணெய் மாசினால் ஏற்படும் சுகாதார, சுற்று சூழல் மற்றும் நீண்ட கால பாதிப்புகள் அங்கு தெளிவாகவில்லை. அண்மையில் நீர் வள சபை  தெரிவித்திருப்பதற்கிணங்க நீண்ட காலத்தில் இந்த மாசினால் புற்றுநோய், கருச்சிதைவுகள், குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்புக்கள், தோல், மற்றும் உள ஆரோக்கியம் இன்மை என்பன ஏற்படலாம். ஏற்கனவே இது பற்றி பரந்த எச்சரிக்கை, அச்சம், கவலை, பீதி மற்றும் குழப்பம் போன்றன மக்கள் மத்தியில் இருப்பினும், இது குறித்த ஆபத்துக்கள் என்ன? அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த பேரழிவினை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பன பற்றி மக்களிற்கு அறிவூட்டப்படவில்லை. மாறாக, அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் தெளிவான தகவல் இல்லாமல், அங்கு ஆதாரமற்ற வதந்திகள், தவறான தகவல்கள், அனுமானங்கள், பிழையான கோட்பாடுகள், பயம் மற்றும் அமைதியின்மை என்பனவே இருக்கின்றன. சமீபத்தில் (28 மாசி மாதம்,2015), யாழ்ப்பாணத்தில் நல்லாட்சிக்கான உதவியாக வெளிப்படைத்தன்மையான சர்வதேச நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்தில், பல சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஈய மாசுக்கள் (அத்துடன் இன்னும் சில பார உலோக மாசுகளும்) நீரில் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். எனினும், நீர் வள சபையின் அறிக்கைகளின் படி, நீர் மாதிரிகளில் எந்தவொரு பார உலோக மாசுக்களும் காணப்படவில்லை. 

நீர் வள சபையின் அறிக்கையில், இந்த எண்ணெய் மாசுக்களின் அடிப்படை மூலம் பெரும்பாலும் சுன்னாகம் அனல் மின்பிறப்பாக்க நிலையமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. தகவல்களை சரிவர விபரமாக ஆராய்ந்தால், அதாவது  எண்ணெய் பரவியுள்ள விதத்தினை ஆராய்கையில், எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்றன சுன்னாகம் அனல் மின்பிறப்பாக்க நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நில அடுக்குகளில் கூடிய செறிவில் இருப்பதுவும் மின்பிறப்பாக்க நிலையத்திலிருந்து வெளியே செல்ல செல்ல அடுக்குகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்றனவற்றின் செறிவு குறைந்து கொண்டே செல்வதும் புலப்படுகின்றது. 2015 இல் இந்த மாசுக்கள் மேலும் பரவும் என தோன்றுகிறது. வெளிப்படையாக, இந்த கிணறுகளில் இருந்து மாதிரிகளை பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்னரே சோதனை செய்துள்ளது. ஆனால் இந்த சோதனை முடிவுகள் மக்களிற்கு வெளிப்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு தேசிய மின் வழங்கல் வழி மூலம் (லக்சபான) மின் வழங்கப்படாத காலத்தில், அதாவது அனல் மின் உற்பத்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் பெறப்பட்ட காலத்தில் அதில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகள் பம்பிகளால் சுற்றுப்புறத்திற்கு பாய்ச்சப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடைமுறையானது, 1950 களின் பிற்பகுதி தொடக்கம் 1973 வரை (அதாவது, லக்சபான மின்சாரம் கிடைக்காமல் இருந்த காலப்பகுதியில்) மற்றும் யுத்த காலத்தில் லக்சபான மின்சாரம் தடைப்பட்டிருந்த காலத்திலும் நடைமுறையில் இருந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. தற்போது லக்சபான மின்சாரம் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கும் வரை, முதலில் அக்ரி கோ என்ற நிறுவனமும் பின்னர் நோதேன் பவர் என்ற நிறுவனமும் 2012 ஆம் ஆண்டு வரை மின்பிறப்பாக்கிகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு மின் வழங்க ஒப்பந்தம் செய்து இருந்தது.  100,000 - 200, 000 லீட்டர் கழிவு எண்ணையை நோதேன் பவர் என்ற நிறுவனம் அகற்றியிருக்கும் என உதாரணமாக மதிப்பிடப்பட்டுள்ளது (2000 லீட்டர் படி 5 மின்பிறப்பாக்கிகளில், வருடத்திற்கு மூன்று தடைவைகளாக ஆறு வருடத்திற்கு). மக்களின் சுகாதாரத்திற்கும் சூழலிற்கும் ஏற்படும் அதிக ஆபத்துக்களினை கருத்தில் கொண்டு, இந்த மாசுக்கள் உருவாகும் மூலத்தை பற்றி விசாரணை செய்து அதற்கான பரிகார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதில் ஈடுபட்ட நிறுவனங்கள் சட்ட ரீதியாக தாம் என்ன செய்தார்கள் அதை எங்கே செய்தார்கள் என்பது பற்றி வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமானதாகும். மாசுள்ள சாத்தியமான பகுதியில் தோண்டி அல்லாது துளைப்பானால் துளையிட்டு மாசுக்களின் மூலம் அறியப்பட வேண்டும். எனவே தான், மேலும் மாசுக்கள் பரவுவதை தடுக்க முடியும். இருந்தபோதிலும், அதிகாரம் மற்றும் செல்வாக்குள்ள தரப்பினர் மக்களிற்கு தேவையான முக்கியமான தகவல்கள் வெளியிடப்படுவதை தடுக்கின்றன. தேசிய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மின்சார சபை, உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு அரசாங்க அமைப்புகள் போன்ற அரச நிறுவனங்களுக்கு  இந்த நடைமுறைகள் தொடர்பான விடையங்களை அங்கீகரிப்பதற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டிய முதற் பொறுப்பு இருந்தும், அவர்கள் தமது கடைமையைச் செய்யவில்லை. ஆனால், சுன்னாகம் தெற்கு விவசாயிகளின் சங்கங்கள் தமது நீர் எண்ணையினால் மாசுபட்டிருப்பதை அவதானித்ததுடன், அது பற்றி 2010 ஆம் ஆண்டு அரசாங்க அதிபரிற்கு கடிதமும் எழுதினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு சிறிது பின்னர், அந்தப் பகுதியில் அமைந்திருக்கும் கலைவாணி சனசமூக நிலையத்தினர், தமது பிரதேசத்தில் நீரில் ஒரு வித விரும்பத்தகாத நாற்றம் ஏற்படுவதாகவும் எண்ணெய் மாசு காணப்படுவதாகவும் முறைப்பாடு செய்திருந்தனர். விளைவாக, நீர் வள சபையினர் நீர் விநியோகிப்பதற்கு சுன்னாகத்திலிருந்து நீர் எடுப்பதை நிறுத்தியிருந்தனர். நீர் வள சபை தலைவரால் 2012 ஆம் ஆண்டு நீரில் எண்ணெய் கலப்பது பரவிவருவதால் ஏற்படும் சூழல் தாக்கங்கள் பற்றி எச்சரித்த போதும் அதனை இலங்கை மின்சார சபையினர் புறக்கணிக்கத்தனர். அத்துடன் இதனால் நீர் வள சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இருந்தபோதும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் மற்றும் உள்ளூர் சிவில் அமைப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரே, நோதேன் பவர் என்ற நிறுவனத்தின் தொழிற்பாடுகள் நீதிமன்ற ஆணையுடன் நிறுத்தப்பட்டு எண்ணெயினால் நீர் மேலும் மாசடைதல் தடுக்கப்பட்டது.  மிகவும் காலங்கடந்த ஒன்று என்றாலும் கூட சிவில் சமூகத்தின் போராட்டத்திற்கு பின்னர், அதிகாரிகள் நோர்வே நாட்டு நிபுணர்களையும் தேசத்தை கட்டும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினையும், ராடரை பயன்படுத்தி எண்ணெய் மாசுக்கள் உருவாகும் மூலத்தை கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து அறிக்கையிடும் படி பல்வேறு தேசிய பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலுள்ள நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் இவர்கள் கூறப்பட்டுள்ளார்கள்.  

வரலாற்றுரீதியான கந்தரோடை தொல்பொருள் சான்றுக்கமைய, மக்கள் வலிகாமம் பகுதியில் நூற்றாண்டுகளாக தரமான எப்போதும் வற்றாத நிலத்தடி நீர் வளத்தினை குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் மற்றும் பிற தேவைகளிற்கும் பயன்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். நீர் வள சபையானது யாழ்க்குடாநாட்டில் நான்கு நிலத்தடி நீர்த்தேக்கங்களை குறிப்பிடுகின்றது. அதில் சுன்னாகம் நல்ல கண்ணாடி போன்ற தெளிவான தரமான நீர் வளம் உடைய இடமாகும். இப்படியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீர் வளம் பாரிய அளவில் மாசடைந்து போவது வேதனையானதே. இப்படி மாசடைந்த நீரினை பருகினாலோ அல்லது பயன்படுத்தினாலோ மக்களிற்கும் ஏனைய சகல உயிரினங்களிற்கும் ஆபத்து ஏற்படப்போகும் நிலையில், இந்த மண்ணின் எதிர்காலம் என்னவாகப்போகின்றது?

சுன்னாகம் அனல் மின்பிறப்பாக்க நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் உள்ள நீரில் தடித்த மிதக்கும் எண்ணெய் படலம் இருப்பது வெற்றுக் கண்ணிற்கே தென்படுகின்றதென்றால், நுண்காட்டி மூலம் நோக்குகையில் அது அப்பகுதியில் முழு நிலத்தடி நீரினையும் மாசுபடுத்தியிருப்பதாகவே தென்படும். நீர் வள சபை தற்செயலாக, ஏற்றுக்கொள்ள முடியாத அளவு அதிகப்படியாக நைத்திரேற்றுக்கள் (0.01mg/L இற்கு மேலாக) சில கிணறுகளில் உள்ள நீரில் இருப்பதை கண்டறிந்துள்ளது. இதற்கு காரணம் விவசாயத் தேவைகளுக்காக செயற்கை உரங்கள் அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதாகும். நிலத்தடி நீர் எண்ணையினால் மாசடைவதால் ஏற்படும் ஆபத்துக்களைப் போல் அல்லாது, அதிகப்படியான நைத்திரேற்றுக்களால் ஏற்படும் ஆபத்துக்களான இரத்த கோளாறுகள் உள்ளிட்ட உடலிற்கு ஆபத்தான பலவற்றை பற்றி நன்கு அறியப்பட்டே இருக்கின்றது.  இயற்கை சுரண்டல் மற்றும் துரித கதி வளர்ச்சிகளால் அதாவது மனிதனால் உருவாக்கப்படும் அழிவுகள் இன்றைய நவீன உலகில் மிகப்பொதுவான தொன்றாகிவிட்டது.

புகுஷிமா அழிவுகள், செர்னோபில் அணு பேரழிவுகள், போபால் விச வாயு கசிவு மற்றும் சூடான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வறட்சி போன்ற ஏனைய இடங்களில் நடந்த சுற்றுச் சூழல் பேரழிவுகளைப் போல இந்த மக்களும் பாதுகாப்பான சுற்றுச் சூழலை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படுமா? தெற்கில் கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியாவில் நிகழ்ந்ததைப் போல நீர் மாசடைவது தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி அமைதியான முறையில் வலிகாம பகுதி மக்கள் எதிர்ப்பார்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். இப் பகுதி மக்களை வெகுவாக அச்சுறுத்தும் பிரச்சனையான நீர் மாசடைவதற்கான மூல காரணியை உடனடியாக கண்டறிந்து அதனை நீண்டகால நோக்கில் தீர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சிலவற்றிற்கு நீர் வழங்கும் பாரிய ஊர்திகள் மூலமாக நல்ல சுத்தமான நீர் தற்போது வழங்கப்பட்டு வருவது நல்லதொரு அறிகுறியாகும். எனினும், இதனை அனைத்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கும் விரிவாக்க வேண்டும்.

குடிப்பதற்கும், கழுவுவதற்கும், குளிப்பதற்கும், சமைப்பதற்கும் மாசடைந்த நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆபத்துக்கள் குறித்தும் நூல்களில் உள்ளவற்றையும் வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களினால் கிடைக்கப் பெற்ற அனுபவங்களையும் ஆய்ந்து அறிந்து அவற்றைப் பற்றி மக்களிற்கு அறிவிக்கவும் எச்சரிக்கவும் வேண்டும். இதனால் மக்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களிற்காகவும் அனுபவித்த துன்பங்களிற்காகவும் அவர்களிற்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த எண்ணெய் மாசு தொடந்து நீரில் பரவாமல் இருப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால உத்திகளை நோக்கியும், இதற்கான தீர்வினை மேற்கொண்டு நீரின் தன்மைய முன்னர் இருந்தது போன்ற நல்ல நிலைக்கு கொண்டு வருவதை நோக்கியதானதுமான ஆரம்பப் படிகளை உடனடியாகவும் அவசரமாகவும் அதி சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117242/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.