Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலா என்ற பகீரதி: முழுமையான பின்னணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலா என்ற பகீரதி: முழுமையான பின்னணி!

10406596_351659458372621_505766925546761

பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட முருகேசு பகீரதி என்ற பெண் அவரது எட்டு வயது குழந்தையுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட விடயம் இப்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் உயர்மட்ட தளபதியொருவரை கைது செய்துவிட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டிருக்க, தமிழ் ஊடகங்கள் வேறுவிதமாக செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான அடக்குமுறை அல்லது ஆட்சிமாறிய பின்னரும் நிலைமைகள் மாறவில்லையென அவை கூறுகின்றன.

இந்த அரசியல் விளையாட்டுக்குள் நுழையாமல், கைதான பகீரதியின் பின்னணிகளை மட்டும் அலசுவதே நமது நோக்கம்.

கைதான முருகேசு பகீரதி என்பவர் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் அமைப்பை சேர்ந்தவர். இன்னும், வெளிப்படையாக சொன்னால், விபத்தொன்றில் சிக்கும்வரை அவர் கடற்புலிகளின் மகளிர் உயர்மட்ட தளபதியாகவே இருந்துள்ளார். அவர் கடற்புலிகளில் நிலா என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

நிலா 1990களின் முற்பகுதியில் விடுதலைப்புலிகளில் இணைந்து கொண்டார். அவரது மூத்த சகோதரியும் விடுதலைப்புலிகளில் முக்கியமான உறுப்பினராக இருந்தவர். பதஞ்சலியென அடையாளப்படுத்தப்பட்ட அவர், விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் ஆரம்பகால போராளி. விடுதலைப்புலிகள் இரண்டு பவுண் தங்கம் வாங்கிய காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களில் பதஞ்சலிதான் கையெழுத்திட்டிருந்தார்.

புலிகளின் கடற்புலிகள் அணியில் அங்கயற்கண்ணி நீரடிநீச்சல் பிரிவு உருவாக்கப்பட்ட சமயத்தில் அதன் உயர்மட்ட பொறுப்புநிலைகளில் ஒன்றில் நிலா அமர்த்தப்பட்டார். செயலூக்கம் மிக்க போராளியான அவர் விரைவிலேயே முழு கடற்புலிகளின் மகளிர்படையணி தளபதியாக மாறினார்.

1997- 2000 வரையான காலப்பகுதிதான் ஈழப்போர்க்களத்தில் கடற்புலிகளின் பொற்காலம். அ்தக்காலப்பகுதியில்த்தான் நிலா கடற்புலிகளின் மகளர்படையணி தளபதியாக பதவியிலிருந்தார்.

கிளிநொச்சியின் கரடிப்போக்கில் தற்போது வசிக்கும் அவரது குடும்பம் நல்ல கல்விப்பின்னணியை கொண்டது. தந்தை பற்றிய தகவல்களை உறுதிசெய்து கொள்ள முடியவில்லை. தாயார் தமிழ் ஆசிரியைாக இருந்தார். அரசசேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், விடுதலைப்புலிகளின் காயமடைந்த போராளிகள் கல்விகற்ற நவம் அறிவுக்கூடத்தில் அவர் கல்வி கற்பித்தார்.

நிலா கடற்புலிகளின் மகளிர் தலைமையை வகித்த காலப்பகுதியில் தற்கொலைத் தாக்குதல்களை வழிநடத்தியிருந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அது பற்றி இந்த பகுதியில் எதனையும் கூறாமல் தவிர்த்து விடுகிறோம்.

1999 இல் நிலா விபத்தொன்றில் சிக்கினார். படகொன்றை கரையேற்றிய போது, அவர் தவறி விழுந்தார். அவருக்கு மேலாக படகின் ஒரு பகுதி ஏறிச் சென்றுள்ளது. அதனால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவத்தின் பின்னர் அவர் முறைசார்ந்த போராளியாக செயற்படவில்லை. சில காலத்தை மருத்துவத்திற்கும், பெருமளவு காலத்தை ஓய்விலுமே செலவிட்டார்.

நீண்டகாலம் முறைசார் போராளியாக இல்லாமலிருந்தது அவரை பெருமளவில் அ்த அமைப்பிலிருந்து வெளியேற்றி விட்டது. முக்கியமாக அவர் மனதளவில் வெளியேறியிருந்தார். ரணில்- பிரபா உடன்பாட்டு சூழல் பெருமளவான போராளிகளின் மனங்களில் ஏற்படுத்திய மாற்றம், நிலாவிலும் ஏற்பட்டிருக்கலாம். அவரை வெளிநாட்டில் திருமணம் செய்து அனுப்ப பெற்றோர் முடிவு செய்தனர்.

எனினும், அமைப்பில் அதற்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்ட போது, அவரிற்கு மேலதிக சிகிச்சை செய்யப் போவதாக அனுமதி பெற்று இலங்கையை விட்டு வெளியேற்றியிருந்தனர். இவரது கணவரான ஜெயகணேஸ் என்பவரும் விடுதலைப்புலிச் செயற்பாட்டாளர் என அரசு தரப்பு கூறுகிறது. பிரான்சில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தை சுயாதீனமாக எம்மால் உறுதி செய்ய முடியவில்லை. திருமணமான சில காலத்திலேயே ஜெயகணேஸ்- பகீரதி தம்பதியினர் விவாகரத்தாகிவிட்டனர்.

முன்னாள் முக்கியஸ்தர் என்றளவில் அவர் பற்றிய பெரிய பிரதிமையை அரசு உருவாக்கலாம். எனினும், அவர் பொதுவாழ்வில் இணைந்து பலவருடங்களாகிவிட்டது என்பதே உண்மை

http://pagetamil.com/?p=24395

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பாகீரதி போன்று புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வாழும் முன்நாள் போராளிகளுக்கு இது ஒரு நல்ல பாடம். அதுபோக பாகீரதி ஆயுதம் ஏந்திய இராணுவத்துடன் மட்டும் போர்புரிந்த ஒரு போராளி என்றும் அவரின் சேவைகாலத்தில் சாதாரண பொது மக்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்கவில்லை என்றும் கொண்டால் நிச்சயமாக விடுதலை செய்யப்பட வேண்டியவர். அத்துடன் அவர் பிரான்ஸ் நாட்டின் பிரஜை. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஏறத்தாழ ஆறு வருடங்களின் பின்னரும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இனங்களுக்கிடைலான இணக்கப்பாடும் சுபீட்ச்சமும் ஏற்படுமா என்று மக்கள் ஏங்கும் இந்தக் காலக்கட்டத்தில் முன்னாள் விடுதலை போராளிகளை கண்டறிந்து வேட்டையாடுவதை இலங்கை அரசு தொடர்ந்தும் செய்கிறது என்றால் அதுபோன்ற நடவடிக்கைகள் தமிழர் மத்தியில் நல்ல சமிக்ஜைகளை காட்டப் போவதில்லை. என்ன நடந்தாலும் தமிழரை பொறுத்தளவில் அவர்களும் இராணுவ போற்குற்றவாளிகளையும் இன அழிப்புக்கு காரணமாயிருந்த கடந்தகால அரச தலைமைகளையும் அரசியல்வாதிகளையும் தொடர்ந்து சென்று வேட்டையாடவேண்டும் என்ற செய்தியைத்தான் அது சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.