Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் மக்கள் எதிர் கொள்ளும் பேராபத்தின் உண்மையை மக்களுக்குத் தெரியப் படுத்தியமைக்காக நன்றி

Featured Replies

Kind%20attention_CI.jpg

 

பேராசிரியர் தயா சோமசுந்தரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பெருந்தகையீர் வணக்கம்,
 
குடிநீர் கழிவு எண்ணெயால் மாசுபடுத்தப்பட்டதால் வலிகாமம் பகுதி மக்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினையின் பேசப்படாத விடயங்களையும் பாதிப்புப் பற்றி மக்களுக்கு உண்மை நிலை தெரியப்படுத்தப்படாதுள்ள நிலையையும் “வடஇலங்கையில் நடந்தேறும் பெரிய அளவிலான சூழல் இடர்” என்ற தங்கள் கட்டுரை  வெளிக் கொணர்ந்தது. இக்கட்டுரை 'கொழும்பு ரெலிகிறாவ்' இலும் (colombotelegrah.com)  'பூகோள தமிழ்ச்  செய்திகளிலும்'
 
(globaltamilnews.net)   முழுமையாக வெளிவந்தது. பங்குனி 9, 2015 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்  உதயன் தினசரியிலும் பிரசுரமாகியிருந்தது.  
 
வலிகாமம் பகுதி மக்களில் அனேகர் கிணற்று நீரை மாசுபடுத்திவரும் கழிவு எண்ணெய் பாதிப்புக்குரிய காரணத்தையும் அது தொடர்பான தகவல்களையும் தமது குடிநீரில் எண்ணெய் கலப்பதால் எத்தகைய பாதிப்பு வரும் என்ற தகவலையும் அறியாது இருக்கின்றனர். குடிநீரில் எண்ணெய் கலப்பதால் ஏற்படும் பாதிப்புக்குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்த மருத்துவர்கள் வடமாகாண சுகாதார அமைச்சால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடுக்கப்பட்டிருப்தாக அறிய முடிகிறது.
 
பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்கின்ற சாதாரண பிரஜை என்ற வகையில் வலிகாமம் மக்கள் எதிர் கொள்ளும் பேராபத்தின் உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தியமைக்காக முதற்கண் தங்களுக்கு நன்றி கூற விழைகின்றேன்.
 
பின்வரும் விடயங்களை  தங்களது கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.
 
1.   இந்த பேரழிவினை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பன பற்றி மக்களிற்கு அறிவூட்டப்படவில்லை. மாறாக, அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் தெளிவான தகவல் இல்லாமல், அங்கு ஆதாரமற்ற வதந்திகள், தவறான தகவல்கள், அனுமானங்கள், பிழையான கோட்பாடுகள், பயம் மற்றும் அமைதியின்மை என்பனவே இருக்கின்றன.
 
2.   அதிகாரம் மற்றும் செல்வாக்குள்ள தரப்பினர் மக்களிற்கு தேவையான முக்கியமான தகவல்கள் வெளியிடப்படுவதை தடுக்கின்றனர். தேசிய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மின்சார சபை, உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு அரசாங்க அமைப்புகள் போன்ற அரச நிறுவனங்களுக்கு  இந்த நடைமுறைகள் தொடர்பான விடயங்களை அங்கீகரிப்பதற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டிய முதற் பொறுப்பு இருந்தும், அவர்கள் தமது கடைமையைச் செய்யவில்லை.
 
3.   புகுஷிமா அழிவுகள், செர்னோபில் அணு பேரழிவுகள், போபால் விச வாயு கசிவு மற்றும் சூடான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வறட்சி போன்ற ஏனைய இடங்களில் நடந்த சுற்றுச் சூழல் பேரழிவுகளைப் போல இந்த மக்களும் பாதுகாப்பான சுற்றுச் சூழலை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படுமா?
 
என்பன முதலான பலவிடயங்களைத் தெரியப்படுத்தியிருந்தீரகள். அதேநேரம் தங்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பின்வரும் விடயங்கள் பற்றிய எனது அவதானிப்பை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.  தங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றனன்.
 
1. // யாழ்ப்பாணத்தில் நல்லாட்சிக்கான உதவியாக வெளிப்படைத் தன்மையான சர்வதேச நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்தில், பல சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஈய மாசுக்கள் (அத்துடன் இன்னும் சில பார உலோக மாசுகளும்) நீரில் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். எனினும், நீர் வளச் சபையின் அறிக்கைகளின் படி, நீர் மாதிரிகளில் எந்தவொரு பார உலோக மாசுக்களும் காணப்படவில்லை. //
 
என்ற தகவல் சரிபார்க்கப்பட வேண்டும். ஏனெனில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நீதிமன்றுக்கு சமர்ப்பித்த தனது ஆய்வறிக்கையில் 50 கிணறுகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் 4 கிணறுகளில் ஈயமானது அனுமதிக்கத் தக்க அளவிலும் உயர்வானதாக இருந்ததை வெளிப்படுத்தியிருந்தது.
 
2.  // யாழ்ப்பாணத்திற்கு தேசிய மின் வழங்கல் வழி மூலம் (லக்சபான) மின் வழங்கப்படாத காலத்தில், அதாவது அனல் மின் உற்பத்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் பெறப்பட்ட காலத்தில் அதில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகள் பம்பிகளால் சுற்றுப்புறத்திற்கு பாய்ச்சப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடைமுறையானது, 1950 களின் பிற்பகுதி தொடக்கம் 1973 வரை (அதாவது, லக்சபான மின்சாரம் கிடைக்காமல் இருந்த காலப்பகுதியில்) மற்றும் யுத்த காலத்தில் லக்சபான மின்சாரம் தடைப்பட்டிருந்த காலத்திலும் நடைமுறையில் இருந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு //
 
1958 முதல் 1990 கள் வரை நிலத்திலே எண்ணெய் விடப்பட்டிருக்க வில்லை என்று ஓய்வுபெற்ற பொறியிலாளரான ஞானலிங்கம் தெரிவிக்கிறார். கழிவு எண்ணெய் கண்ணாடித் தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.
 
(// It is possible this process may have been practiced from the late 1950’s Ceylon Electricity Board up to 1973 //
This statement has errors. In that period all waste oils were sold to Glass factories and other industries which had blast furnaces to be used mixed with Kerosene to burn for the processes. - Ganalingam)
 
3.  // சுன்னாகம் தெற்கு விவசாயிகளின் சங்கங்கள் தமது நீர் எண்ணையினால் மாசுபட்டிருப்பதை அவதானித்ததுடன், அது பற்றி 2010 ஆம் ஆண்டு அரசாங்க அதிபரிற்கு கடிதமும் எழுதினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. //
 
சுன்னாகம் தெற்கு விவசாயிகள் சம்மேளனம் தமது நீர் எண்ணையினால் மாசுபட்டிருப்பதை 2008 ஆம் ஆண்டு அரசாங்க அதிபரிற்கு கடிதமூலம் தெரியப்படுத்தி உரியநடவடிக்கை மேற்கோள்ளக் கோரியிருந்தனர்.  தங்களது கட்டுரையில் 2010 என்று இடம்பெற்றுள்ளமை 2008 என்று வரவேண்டும். இக்கோரிக்கையயைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் இலங்கை மின்சாரசபைக்கு எழுதிய கடிதம் இத்தகவலை உறுதிப்படுத்துகிறது. (Fig.1 Below)
 
தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல வலிகாமத்திலுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியான பாதிப்பை எதர்நோக்கி உள்ள நிலையில் 34000 பேர் பாதிக்கப்பட்டதாக அரச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றமை மக்களுக்கு எற்பட்டுள் பாதிப்பின் உண்மை நிலையை மறைப்பதாக உள்ளது.
 
இவ் விடயம் தொடர்பில் தங்களின் தொடர்ச்சியான கரிசனையை  வேண்டி நிற்கிறேன்
 
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து மக்கள் நலன்கருதி உளவியல் சூழலியல் மனித உரிமைகள் தொடர்பாக செயல்பட்டுவரும்  

 

பேராசிரியர் தயா சோமசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர்களூக்கு அன்பான ஆதரவும் நன்றியும். நல்வாழ்த்துக்களுடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.