Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஆயுத எழுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

..21. மார்ச் 2015 ...லண்டனில் ஆயத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்.  அனைவரும் வருக

10649706_10202637026446603_5522541470279

அப்ப தமிழ் ஈழத்தில ஆயுத எழுத்து எப்ப?  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10484162_10202660383750521_6116580065075

10410099_10202660384390537_326578201597711083866_10202660390950701_798219766126710981816_10202660392790747_266007881333711037776_10202660395110805_4457585314301

Edited by நிழலி
ஒரு படம் நீக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Balan tholar

• லண்டனில் நடைபெற்ற “ஆயுதஎழுத்து” நாவல் வெளியீடு

10941873_1562857460652647_28077119184536

• லண்டனில் நடைபெற்ற “ஆயுதஎழுத்து” நாவல் வெளியீடு

லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம்(21.03.2015) தமிழ்மொழி செயற்பாட்டகம் சார்பில் இரு நிகழ்வுகள் நடைபெற்றன.

ுதலாம் அமர்வாக சார்ல்ஸ் தலைமையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் சமூக நிலைமைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து பலவேறு பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர் கணேசன் அவர்கள் முக்கிய உரையாற்றினார்.

இரண்டாவது அமர்வாக வாசுதேவன் அவர்கள் தலைமையில் சாத்திரி அவர்களின் “ஆயுதஎழுத்து” நூல் அறிமுகம் இடம்பெற்றது. சாம்பிரதீபன் மற்றும் சபேசன் ஆகியோர் நூல் அறிமுகவுரை நிகழ்த்தினார்கள். மேலும் அறிமுகவுரை நிகழ்த்தவிருந்த நளீமா காதர் அவர்கள் எதிர்பாராதவிதமாக வரமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. நூல் ஆசிரியர் சாத்திரி அவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வாசுதேவன் தனது தலைமையுரையில் தானும் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகவும் இந்த “ஆயுதஎழுத்து” நாவலில் சாத்திரி குறிப்பிடும் சம்பவங்கள் மற்றும் நபர்கள் பலவும் தனக்கு தெரிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் புலிகளின் போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றார். இறுதியாக, புலிகள் நடத்திய போராட்டம் மக்களுக்கான போராட்டம் அல்ல என்றும் அது அவர்களது அதிகாரத்திற்காக நடந்த போராட்டம் என்றார்.

சாம்பிரதீபன் தனது உரையில் இந்த நாவலில் சாத்திரி குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் 100வீதம் உண்மையாயின் புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு மாபெரும் சாபம் என்றும் அல்லாது சாத்திரி குறிப்பிட்டிருப்பது 100வீதம் பொய் ஆயின் சாத்திரி தமிழ் மக்களுக்கு ஒரு சாபம் என்றும் குறிப்பிட்டார்.

சபேசன் தனது உரையில் புலிகளின் தவறுகளை வெறுமனே அவர்களின் தவறாக அணுகாமல் அந்த நேரத்து தமிழ் சமூகத்தின் குணாம்சமாகவே அதனை பார்க்க வேண்டும் என்றார். மேலும் புலிகளின் 25 வீத கொலைகள் நடைபெற்ற போது உடன் இருந்த ராகவன் போன்றோர் 75 வீதம் கொலைகள் நடைபெற்றபோது இருந்த சாத்திரி போன்றோரை எதிர்ப்பது விந்தையானது என்றார். ராகவன் மற்றும் சிலர் இலக்கியவிழாவில் சாத்திரி உரையாற்ற முனைந்தபோது அதனை தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இறுதியாக பார்வையாளர்களின் கருத்து பரிமாற்றங்களுடன் நிகழ்வு முடிவுற்றது

 

அண்ணை நீங்களா அந்த சாத்திரி?

அல்லது வெவ்வெறே சாத்திரிகளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்,

மேற்கு லண்டன், ஹரோ பக்கம் உள்ள கடைகளில் உங்கள் புத்தகத்தை போடுவீர்களா? வாங்கிப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

|| புலிகளின் 25 வீத கொலைகள் நடைபெற்ற போது உடன் இருந்த ராகவன் போன்றோர் 75 வீதம் கொலைகள் நடைபெற்றபோது இருந்த சாத்திரி போன்றோரை எதிர்ப்பது விந்தையானது என்றார். ராகவன் மற்றும் சிலர் இலக்கியவிழாவில் சாத்திரி உரையாற்ற முனைந்தபோது அதனை தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.|||

 

 

வில்வித்தை காரன் புகுந்து விளையாடுகிறார் என்று மட்டும் தெரிகிறது. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்,

மேற்கு லண்டன், ஹரோ பக்கம் உள்ள கடைகளில் உங்கள் புத்தகத்தை போடுவீர்களா? வாங்கிப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

 

ஆயுத எழுத்து நாவலை லண்டனில் இப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் .விலாசம் .

317 High Street North , Eastham , London , E12 6SL , phone number is 07817262980..உங்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைப்பார்கள் .தொடர்பு கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  அப்ப எப்போது நீங்கள் எல்லாரும் கத்தி கப்பாட்டாவுடன் தெருவில இறங்கிப் போராடப்போறியள். ஐயா புலிகள் எல்லாரும் சமூக விரோதிகள் என்கிற ரேஞ்சில மைக்கில கதறுறார் இனிமேல் புலிக்கொடி பிடிச்சுக்கொண்டு புலம்பெயர் தேசத்துத் தெருவில திரிஞ்சவை எல்லோரும் வீடுகளுக்க பதுங்கவேண்டியதுதான். நான் அகதி அந்தஸ்துக்கேட்க இன்னுமொரு தேசத்தை உலக வரைபடத்தில தேடப்போகிறன்.

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து  லண்டன்... நூல் விமர்சனம்  சாம் பிரதீபன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நூல் அறிமுக விழாவிற்கு வருவார் என்று துண்டுப் பிரசுரங்களுடன் வந்திருந்த தேசம்நெற் ஜெயபாலன் சாத்திரி காய்வெட்டியதால் சுடுதண்ணி பட்ட பூனையாட்டம் நிலைகொள்ளாமல் இருந்தார்.

தேசம்நெற் துண்டுப்பிரசுரத்தில் இருந்த சாத்திரியை நோக்கிய கேள்விகள். இதற்கெல்லாம் சாத்திரி வந்திருந்தாலும் பதில் தரமாட்டார் என்று ஜெயபாலனுக்குத் தெரிந்துதான் இருக்கும்..

சாத்திரியிடம் சில கேள்விகள்

1. ஒரு மனித உயிரைக் கொல்வது தவறு என்கின்ற உணர்வு உங்களுக்கு எப்போது வந்தது?

2. தமிழீழ விடுதலைப் புலிகளில் மரண தண்டனை வழங்கும் அதிகாரத்தில் இருந்த நீங்கள் எதற்காக அந்த அமைப்பில் இருந்து வெளியேறி ஐரோப்பா வந்தீர்கள்?

3. ஐரோப்பாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்காக மிக ஆக்ரோசமாகச் செயற்பட்ட நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மிக மோசமாக பாதிக்கக் கூடிய உண்மைகளை சொல்ல முன்வந்தது ஏன்?

4. உங்களுடைய உண்மைகளை அறிவதில் ஆர்வமாக இருக்கக் கூடியவர்கள் இயல்பாக இலங்கையர்கள். அந்த உண்மைகளைச் சொல்வது என்ற முடிவுக்குப் பின் அதனை ஏன் தமிழகத்தை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற ஊடகத்தை தெரிவு செய்தீர்கள்?

5. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவருடைய தலைமைத்துவம் பற்றியும் உங்களுடைய தற்போதைய அபிப்பிராயம் என்ன? இந்த அபிப்பிராயம் உங்களுக்கு குறிப்பாக எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது?

6. உங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்டவர்களுக்காக நீங்கள் என்ன பிராயச்சித்தம் செய்கிறீர்கள்?

7. நீங்கள் செய்த கொலைகளை வெளிப்படுத்துகின்ற துணிச்சல் எவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டது?

8. 2006 முதல் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் குறிப்பாக 2009இல் பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் மரணத்துக்கு உங்களுடைய பங்களிப்பும் இருப்பதை உணர்கிறீர்களா?

9. இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பாக உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

10. நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றியடைந்து இருந்தால் ஆயுத எழுத்து வெளிவந்திருக்குமா? இந்நூலை இன்று வெளியிடுபவர்களை நீங்கள் எவ்வாறு அணுகி இருப்பீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.