Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த மோடிக்கு சொன்ன இரகசியம்! – மவ்பிம

Featured Replies

 

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%

‘மோடியும் நானும் என்ன கதைத்தோம் என்று எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்’

இவ்வாறு தான் மகிந்த மோடியுடான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

உண்மையில் மோடி மகிந்தவிற்கு சொன்னதென்ன? மகிந்த மோடியிடம் சொன்னதென்ன..?’

 

இதை பற்றி அறிந்துக் கொள்ள அனைவரும் ஓர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இவ்வாறானதொரு ஆர்வம் ஏற்படுத்தற்கான காரணமாக அமைந்தது ‘என்னை இந்திய ரோ இரகசியபுலனாய்வு அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்புடன் சேர்ந்து தன்னை தோற்கடித்தது’ என்ற கருத்தை மோடி இலங்கை வரும் போது இந்திய ஊடகமொன்றிக்கு மகிந்த தெரிவித்திருந்தார். மோடி இது பற்றி அறிந்திருக்கவில்லை என்றும், இந்த இரகசிய அமைப்புக்கள் ஒரு வருட காலமாக இது பற்றி திட்டம் அமைத்து தன்னை தோற்கடித்தாக அந்த இந்திய ஊடகத்திற்கு மகிந்த தெரிவித்திருந்தார். இந்த விடயம்; மகிந்த – மோடியின் சந்திப்பின் மத்தியில் கொழும்பு அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பிரதான தலைப்பாக இருந்தது. மகிந்த மற்றும் மோடிக்கு இடையிலான சந்திப்பில் எந்தவொரு இந்திய அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்த சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயங்கள் இருவருக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டன.

 

இதற்கு முன்னர் மகிந்த மோடியை சந்தித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தெர்தலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவ்வேளையில் மகிந்த தம்மை சந்தித்த பலரிடம் மோடி தன்னுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மகிந்த இவ்வாறு நினைப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அவரது மகனான நாமல், பொலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் ஊடாக மோடிக்கு தகவல் அனுப்புகின்றார் என்ற நம்பிக்கையும் மகிந்த மனதில் இருந்துள்ளது. மகிந்த இந்திய-இலங்கை உறவுகள் தொடர்பாக வெளிநாட்டு அமைச்சையோ இந்திய உயர்ஸ்தானிகராயத்தையோ நம்பவில்லை. அவர் நாமல் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தார். சில சந்தர்பங்களில் நாமலும் தனது தந்தையிடம் மோடிக்கும் தனக்கும் இடையே தொடர்பிருப்பதாக காட்டி தன்னை முன்னிலைப்படுத்த முயற்சித்திருக்கலாம். இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களில் இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பாக தன் சகோதரரான பசில் ராஜபக்ச மீதே நம்பிக்கை வைத்திருந்தார். மகிந்தவுக்கு பின்னர் தலைமைத்துவத்தை பெறுவது தொடர்பில் பசில் மற்றம் நாமல் இடையே முரண்பாடுகள் ஆரம்பமானதை தொடர்ந்து இந்திய உறவுகள் தொடர்பாக கையாளும் நடவடிக்கைகளை நாமல் தன் கையில் எடுத்துக் கொண்டார். மோடி மகிந்தவுடன் இருப்பதாக மகிந்தவின் மகன் மகிந்தவிடம் சொல்லும் போது அதை நம்பாமல் இருக்க மகிந்தவுக்கு முடியாது.

 

ரோ அமைப்பின் மீது மகிந்த குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மோடியை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பது இதன் காரணமாகவும் இருக்கலாம்.

 

மகிந்த மற்றும் மோடிக்கிடையிலான சந்திப்பின் போது மைத்திரி அரசாங்கத்ததால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் விடுக்குப்படும் குற்றச்சாட்டுக்கள், தொந்தரவுகள் தொடர்பாக தெரிவித்து இவற்றை நிறுத்த மைத்திரி அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தாரோ என்று தெரியாது. ஏனென்றால் இன்று மகிந்தவின் பெரும் புலம்பலாக இந்த விடயங்களே இருக்கின்றது.

 

சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் 1980 ஆம் ஆண்டிலே தன் குடியுரிமையை ஜே.ஆர் அரசாங்கம் பறிக்க போவதாக இந்திய பிரதமர் இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.  தன் குடியுரிமையை பறிக்கப்படுவதை தடுப்பதாக ஜே.ஆர் அரசாங்கம் மீது அழுத்தங்களை கொடுக்கும் படி அவர் இந்திரா காந்தியிடம் தெரிவித்தார். இந்திரா காந்தி ஜே.ஆர் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்த போது அதை செவிமடுக்கவில்லை. பண்டாரநாயக்க அம்மையார் இந்திரா காந்தியுடன் தனக்கு காணப்பட்ட தனிப்பட்;ட உறவினை பயன்படுத்தியே இவ்வாறான கோரிக்கையை விடுத்தார். ஆனாலும் மகிந்தவுக்கும், மோடிக்கும் அவ்வாறானதொரு உறவு நிலை உண்டாகவில்லை.

 

அதிகாரிகள் இல்லாமல் மகிந்த மோடியை சந்தித்து ரோ அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இவ்வாறதொறு முட்டாள் காரியத்தை முன்னாள் ஜனாதிபதி பிறேமதாசவும் செய்திருக்கின்றார். ரஜீவ் காந்தி தோற்று வி.பி.சிங் அரசாங்கம் பதவிக்கு வந்த பொழுது அப்போது ஜனாதிபதியாய் இருந்த ரனசிங்க பிறேமதாச வெளிநாட்டு அமைச்சர் ரன்ஜனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். இவரிடம் இலங்கையில் அக்காலத்தில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படை செய்த சில நாசகார வேலைகள் தொடர்பாக சில இரகசிய புகைப்படங்களையும் கொடுத்தனுப்பியிருந்தார். ரஞ்சன் வி.பி சிங்கை சந்தித்து இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய அமைதிப்படையினர் தமிழ் யுவதிகளை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தும் காட்சிகளைக் காட்டும் புகைப்படங்களை காட்டிய போது அவர் கோபம் கொண்டுள்ளார். அயல் நாட்டு வெளிநாட்டு அமைச்சர் ஒருவர் தன் நாட்டு இராணுவத்தினரை தன் முன்னிலையில் அவமானப்படுத்துவதை அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட அவர் சந்திப்பின் இடையில் தான் தனது இராணுவத்தினரை நம்புவதாக சொல்லி எழுந்துச் சென்றுள்ளார்.

 

இந்திய புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து மோடி அறியமாட்டார் என்று மகிந்த சொல்லும் கதையை நம்பும் அளவிற்கு மோடி ஒன்றும் முட்டாள் இல்லை. இந்திய புலனாய்வுப்பிரிவு இந்திய பிரதமர் மற்றும் அரசின் தேவைகளுக்கு ஏற்பவே நடந்து வருகின்றது. இது தொடர்பாக பொலிவுட் திரைப்படம் ‘டி-டே’ சொல்கின்றது. இத்திரைப்படத்தில் பாகிஸ்தானில் ஒழிந்திருக்கும் இந்தியாவின் மும்பை குண்டு வெடிப்பின் பிரதான சூத்திரதாரியை பிடித்து வருவதற்கான நடவடிக்கையொன்றை இந்திய புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் திட்டமிடுகின்றார்கள். சிலவேளைகளில் இந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தால் பாகிஸ்தான் உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை முன் வைக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் தங்கள் எதிர்பை தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் இந்திய பிரதமரின் விசேட பிரதிநிதியுடன் இந்த நடவடிக்கை தொடர்பில் இந்திய புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் கலந்துரையாடுகின்றனர். பெரும்பாலான அதிகாரிகள் இந்த நடவடிகைக்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதை அடுத்து, இந்த நடவடிக்கையை திட்டமிட்ட அதிகாரி தனித்து விடப்படுகின்றார். பிரதமரின் விசேட பிரதிநிதியும் பெரும்பாலானோரின் கருத்துக்கு தலை சாய்க்கின்றார். நடவடிக்கையை திட்டமிட்ட அதிகாரியை ஆசுவாசப்படுத்தும் நோக்கில் தனது வாகனத்தின் அருகில் அழைத்துச் செல்லும் பிரதமரின் விசேட பிரதிநிதி அந்த அதிகாரியின் செவிக்கு அருகே வந்து, ‘நாங்கள் வெளிநாடுகளுடன் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடல்ல. ஆனால் அதை நீங்கள் செய்ய முடியும். தோல்வியடைந்தால் அது எங்கள் நடவடிக்கையல்ல. உங்களுடைய வேலை, நீங்கள் வீட்டுக்கு போக வேண்டிவரும்’ என்று கூறுகின்றார்.

 

இதில் இருந்து தெரியவருவதாவது பிரதமர் அறியாமல் புலனாய்வுப் பிரிவு செயற்படாது என்பதமாகும். இன்னொன்று 2017 ஆம் ஆண்டு வைக்க வேண்டிய தேர்தலை 2015 ஆண்டு வைக்க தீர்மானித்தது இந்திய புலனாய்வுப்பிரிவன்று, மகிந்தவே. மைத்திரிபாலவை பிரதமர் ஆக்க கூடாதென திர்மானித்தது புலனாய்வுப்பிரிவினர் அல்ல மகிந்தவே. மோடி இந்தியா திரும்பிய பின்னர் தனக்கு முஸ்லிம்களின் வாக்குக்களை இல்லாமல் செய்த பொது பல சேனாவை சந்தித்து சொன்ன விடயம் தன்னை தோற்கடித்தது நோர்வே மற்றும் மேற்கத்தைய புலனாய்வு அமைப்புக்கள் என்று.

 

பொதுபல சேனா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் பொழுது ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதூர்தீன் பொதுபல சேனாவின் செயற்பாட்டாளர்களை கைது செய்யும்படி சொல்லியிருந்தார்கள். அவர்கள் பிடிகப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதூர்தீன் மகிந்தவை விட்டு போயிருக்க மாட்டார்கள். அவர்களை கைது செய்ய கூடாதென தீர்மானித்தது இந்திய புலனாய்வுப்பிரிவல்ல மகிந்ததான்.

 

இந்த விடயங்களை பார்க்கும் பொழுது மகிந்தவை தோற்கடித்திருப்பது மகிந்ததான். மகிந்த – மோடிக்கிடையிலான சந்திப்பு நடந்தது 15 தொடக்கம் 20 நிமிடங்களுக்குள்தான்.

 

 

‘நீங்கள் உங்களையே அழித்துக் கொண்டு என்னுடைய புலனாய்வுப் பிரிவினரை குற்றம்சாட்ட வரவேண்டாம்….’

 

இப்படி சொல்லித்தான் மோடி மகிந்தவடனான சந்திப்பை முடித்துக் கொண்டாரோ தெரியாது.

 

மவ்பிம பத்திரிகைக்காக – உபுல் ஜோசப் பிரனாந்து

தமிழ்லீடருக்காக தமிழில் ஜீவிதன்

http://tamilleader.com/?p=47833

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.