Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே இனியவனின் கஸல் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

வெண் 
முகிலின் நிலாவே ....
உன்னை அண்ணாந்து ....
பார்ப்பதுபோல் தான் ...
என் காதலும் .....!!!

காற்றில்லா பட்டம் ....
தள்ளாடி தள்ளாடி ...
விழுவதுபோல் என் ...
காதலும் விழுந்தது ....!!!

உனக்கு என்னில் ....
அக்கறையில்லை ...
அதுதான் நீ காதலில் ...
அக்கரையில் நிற்கிறாய் ....!!!
  +
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;836

  • Replies 219
  • Views 26k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பூவுக்குள் இருக்கும்... 
தேன் போல் நீ ....
மறைந்திருகிறாய் ....
நான் அலைகிறேன் ....!!!

கண்ணாம் பூச்சி ...
விளையாட்டை ....
காதலிலும்..... 
விளையாடுகிறாய் ....!!!

உன் கண்ணோடு....
என் கண் மோதுபட்டு ....
காயமடைந்து விட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;837

  • தொடங்கியவர்

என் இதய நரம்பு ....
முற்களாய் மாறுகிறது ....
நீ பூக்களின் மீது ....
தூங்குகிறாய் ....!!!

என் 
கண்ணில் நெய் ....
இருப்பதாய் நினைகிறாய் ....
இப்படி உருக்குகிறாய் ....!!!

காதலின் தோல்விக்கு ...
தண்டனை -உன்னை 
தலைகுனிந்து வாழ ...
வைப்பதே .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;838
  

  • தொடங்கியவர்

காதலில் நான் 
சூரிய உதயம் -நீ 
அந்திவானம் ....!!!

வறண்ட நதியில் ...
கப்பல் ஓட அலைகிறாய் ...
நான் எப்போது காதல் ...
மழை பொழியும் ....?
காத்திருக்கிறேன் ....!!!

உண்மை காதல் 
என்ற ஒன்று இருக்கவே ...
கூடாது என்று நினைத்து ...
விட்டாயோ ....?

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;839

  • தொடங்கியவர்

ஆடு புலி ஆட்டம்போல் ....
நம் காதல் -நீ அசைத்தால்   ...
வெளியேறிவிடுவேன் ....!!!

நம் 
காதல் இறந்துவிட்டது ....
நீ கண்ணீர் அஞ்சலி ...
செலுத்துகிறாய் ....!!!

சந்திரன் என்று ....
சூரியனை ....
காதலித்துவிட்டேன்.... 
எரிகிறது காதல் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;840

  • தொடங்கியவர்

பகலில் சந்திரன் ...
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!

என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!

நீ 
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;841

  • தொடங்கியவர்

நம் 
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!

காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!

உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;842

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உன்னைத்தான் 
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?

நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!

என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 848

  • தொடங்கியவர்

நான் 
காதலில் கண்ணாடி 
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!

நான் 
வெறும் கடிதம் 
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!

கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 849

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

சாமியை நினைத்ததை ....
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!

காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!

என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 850

  • தொடங்கியவர்

நீ 
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ 
வேஷமானவள்....!!!

ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல்  வரும் ....?

நீ 
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 851

  • தொடங்கியவர்

நீயும் கண்ணீரும் ...
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!

நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து  ....
தேடி அலைகிறேன் ....!!!

தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 852

  • தொடங்கியவர்

இறைவா எனக்கு ....
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி 
கயிற்றை பார்க்கமுன் ....!!!

நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!

நீ 
பாவமன்னிப்பு கேட்டபின் 
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 853

  • தொடங்கியவர்

சிரிப்பு ஆயுளுக்கு ....
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!

எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!

நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல் 
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 855

ஆரம்பத்தில் ...
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!

காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!

என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 854

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நான் 
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!

அழகில் 
தொடங்கிய காதல் 
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!

வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 856

  • தொடங்கியவர்

நீ 
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!

உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?

விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 857

நீ 
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான் 
உனக்காக ....
இறப்பவன் .....!!!

எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!

நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 858
 
  • தொடங்கியவர்

மறதியை மறந்து விட்டேன் ....
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!

நான் 
வெறும் கூடு ......
நீ 
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!

காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 859

அதிசயம் ...
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!

எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!

என்னை 
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 860

  • தொடங்கியவர்
உயிரே ....
நீர் எழுத்து கடதாசியாய்....
மாறிவிட்டாயா....?
எழுதும் கவிதைக்கு ...
தாக்கம் சொல்கிறாய் ....
இல்லையே ....!!!

உன்னை அழக்காக ....
வரைபடம் வரைந்தேன் ....
கிறுக்கல் சித்தரம் போதும் ....
என்கிறாயே ....!!!

இந்த ஜென்மத்தில் முடியாது ...
அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....
என்கிறாயே - நீ என்ன ராமனா ...?
இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 861
 
  • தொடங்கியவர்

உன் உயிராகவும்...... 
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!

என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!

காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 862

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

இரட்டை கதவை கொண்ட ....
நம் காதல் ஒற்றை கதவானது ....
யார் மூடுவது மற்ற கதவை ...?

காதல் மூறெழுத்தாய் ....
இருப்பதுதான் தவறு ....
கவலையும் மூன்றெழுத்து ....!!!

காதலிப்பது கடினமில்லை ....
காதலை சொல்வது கடினம் ...
அதைவிட கடினம் ....
காதலோடு இறப்பது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 864

 

tw_blush:tw_blush:

 

இப்போதுதான் புரிகிறது ....
நான் உனக்காக பிறக்கவில்லை .....
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

எழுதப்பட்ட காதல் ....
காவியங்களும் காப்பியங்களும் ...
போதும் இதற்குமேல் ....
எவராலும் அழமுடியாது ....
நாம் மனத்தால் பிரிவோம் ....!!!

காதலர்கள் நல்ல நடிகர்கள்....
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 863

 

tw_blush:tw_blush:

 

சிரித்து வாழவேண்டும் ....
காதலுக்கு இது பொருந்தாது ....
அழுதுவாழ்வதே காதல் ....!!!

நானும் ஞானிதான் ....
உள்ளே இருக்கும் உன்னையே ...
தினமும் தியானம் ....
செய்கிறேன் ....!!!

நான் முதல் தோற்றதும் ....
இறுதியில் தோற்றதும் ...
உன்னிடம் தான் ....
காதல் உனக்கு வராதத்தால் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 865

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

தேவதையே ..... 
உன்னிடம் பெறும் வரத்தை .... 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் ....!!! 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 
என்னவளைபோல்....!!! 

ஒவ்வொரு 
கருணைச்செயலும் 
காதல் தான் .!!! 
ஒவ்வொரு கொலையும் 
காதல் தோல்விதான் ...!!!

 

கே இனியவன் - கஸல் 01

காதல் 
இருதலை எறும்பு 
காதல் வனப்பு 
காதல் எதிர்ப்பு 

உன் ஏக்கம் 
உனக்கு வாழ்க்கை 
எனக்கு வலி 

காதலித்தது ...
வாழ்வின் வசந்தம் 
நிலையில்லாதது 


கஸல் தொகுதி -02

உன் 
காதல் எதிர்பார்ப்பு... 
என் 
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!


உன் வார்த்தை 
வலியானது-எனக்கு 
சுகமானது 


உனக்காக தினமும் 
காத்துக்கொண்டு 
நிற்கிறேன் 
ஏக்கம் தானே காதல் 


கஸல் தொகுதி -03

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எப்படி விலக்க முடியும்

நீ என்னை
ஒதுக்க ஒதுக்க
என் கவிதை
ஓங்குகிறது

நானோ -உன்
ஆணிவேர்
எப்படி விலக்க முடியும்


நான் உனக்காக...
காத்திருந்த மணி....
என் ஆயுள் முறையும் ....
நேரமடி ....!!!

கே இனியவன் - கஸல் 04

  • தொடங்கியவர்

நான் அழகை இழந்தேன்

உன்னால் உடைந்த
இதய சில்களை 
கொண்டு -காதல்
வீதி அமைக்கிறேன் ....
இடையிடையே ...
குத்துகிறது ....!!!

வலிதான் காதலின்
முதலீடு.....
கண்ணீர்தான் காதலின் 
வருமானம் ....!!!

என்று நீ என்னை
காதலித்தாயோ
அன்று முதல் -நான்
அழகை இழந்தேன் ....!!!

கே இனியவன் - கஸல் 05

  • தொடங்கியவர்

மண்
பானை தண்ணீரும் 
காதலும் ஒன்றுதான் ....
குளிர்மையாது ....
அதிகமானால் ....
ஆபத்தானது .....!!!

காதலில் அழகு ...
சந்தோசம் ...
எச்சரிக்கை ....
சந்தேகம் ....!!!

நீ 
என் அருகே...
வந்தாலும்....
சென்றாலும்...
ஒன்றுதான்....
காதல் நினைவு...
வேண்டும்..... 
நீயல்ல.....!!!

கே இனியவன் - கஸல் 06

 
 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்றோ ஒருமுறை .....
என்னை நீ திரும்பி ....
அழைப்பாய் .....
உன் மூச்சு நான் ....!!!

பிரிந்துவிட்டாய்
சந்தோசம் ....!!!
நினைவில் நிற்கிறாய்
சந்தேகம்.....!!!
மீண்டும் வருவாயோ ...?

பிரிந்தது வேறு ....
பிரிப்பது வேறு....
நீ பிரிந்தாயா ....?
என்னை பிரித்தாயா ....?

கே இனியவன் - கஸல் 07

பூந்தோட்டத்துக்கு
ஏன் போகவேண்டும் 
பூவாக நீயிருக்கையில்...?

உடைந்த ....
கண்ணாடியாய் ......
உன் முகம் -அதிலும் ...
கண்ணீருடன் ...!!!


உன் நினைவு....
காயமுன் வந்துவிடு....?
கனவிலோ.....
நிஜத்திலோ ..!!!

கே இனியவன் - கஸல் 08

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.