Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை! சுமந்திரன் பொய் சொல்கின்றார்! சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? சுரேஷ் பிறேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை! சுமந்திரன் பொய் சொல்கின்றார்! சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? சுரேஷ் பிறேமச்சந்திரன்
 
sampantha_sumanthiran_suress.jpg
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இரா.சம்மந்தன் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்? என்பதை வெளிப்படுத்தினாலேயே கூட்டமைப்பின் பதிவு தொடர்பான சர்ச்சைகள் ஒரு அளவுக்கு நிறைவுக்குவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

 

 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்  என தெரிவித்திருக்கின்றார்.

கூட்டமைப்பு பதிவு பற்றிய பேச்சு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. ஆனாலும் இப்பதிவினை செய்ய முடியாது என்று தமிழரசுக் கட்சி பலகாலமாக சொல்லி வந்திருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைபை கட்சியாக பதிய வேண்டும் என்பதை இப்போது வலியுறுத்தி வருகின்றார்கள்.

குறிப்பாக தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சீ.க.சிற்றம்பலம் போன்றவர்களை குறிப்பிடலாம். இந்நிலையில் அண்மையில் கனடா சென்றிந்த தமிழரசு கட்சியின் பிரதி செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டது என கூறியிருக்கின்றார்.

உண்மையில் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் 3 கட்சிகள் இணைந்து தேர்தல் ஆணையகத்திற்கு ஒரு எழுத்துமூல அறிவித்தலை கொடுத்திருக்கின்றோம். அதாவது நாங்கள் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக செயற்படப் போகின்றோம் என்பது மட்டுமே அந்த எழுத்துமூல கடிதத்தில் இருக்கின்ற விடயமாகும்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் சம்மந்தர் கூறியிருக்கின்றார் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டும் என்று.

எனவே ஆளுக்கொருவர் மாறி மாறி பொய் கூறுவதை விடவேண்டும். நாம் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் நிலைப்பாடு என்ன என்பதையே கேட்கவிரும்புகிறோம் என்றார்.

இதேவேளை வடமாகாணத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் அழைக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது,

இவ்வாறான விமர்சனங்கள் எதற்காக வருகின்றன என்றால் எமக்குள் முதலில் ஒரு தொடர்பாடல் இல்லை.

முதலமைச்சர் தொடர்பாக பிரதமர் இவ்வாறான ஒரு கருத்து நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். எனவே அவருடைய நிகழ்வில் நாம் கலந்து கொள்ளப் போகிறோமா? இல்லையா? என்பது தொடர்பில் நாம் ஒரு கட்சி சார்ந்தவர்கள் என்றவகையில் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எம்மோடு யாரும் இது தொடர்பாக பேசவும் இல்லை.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்கள் விரும்பம் போன்றே பிரதமரின் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாகாணச பை உறுப்பினர்களும் கூட கலந்து கொண்டனர்.  எனவே அவர்களுக்கும் இவ்வாறான கலந்து ரையாடல் இடம்பெற்றிருக்கவில்லை. விடயம் தொடர்பாக பேசப்படவில்லை.

எனவே எதிர்காலத்திலாவது இவ்வாறான கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானங்களை நடத்துவது நிச்சயமாக அவசியமான ஒன்றாகும் என தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டது – சுமந்திரன் விளக்

 

 

tamilwin.com

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

filmrolle_ani.gif

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இதைதானே 3 நாளா நானும் மீரா அண்ணையும் கதைக்கிறம்.

இப்பென்ன புதுசா?

சுமந்திரன் பொய் சொல்லி இருந்தா விளக்கம் + மன்னிப்பு அவசியம்.

நீங்க குருவே ஆனாலும், மூக்கு எங்களுடையது :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் செய்த தேசிய தலைவரே உதை பதிவு செய்திட்டு போயிருக்கலாம். அவருக்கு முன்னால பம்பின சம்பந்தன்.. இப்படி புடுங்குப்படுவார் என்று தெரிஞ்சிருந்தா.. நிச்சயம் தலைவர் செய்திருப்பார்.  :)

இதை ஆதாரத்துடன் எடுத்தியம்ப கூடிய ஒருவர் எமது ஹரி அவர்களே (உறுப்பினர்)

 

முக நூலிலிருந்து.......

11052880_363377723854838_125007962881028

தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் - தந்தை செல்வா

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடியவரும், தமிழரசுக் கட்சியின் நிறுவனதும், அதன் தலைவருமான தந்தை செல்வா என அனைவருக்கும் அறிமுகமான எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 117ஆவது ஜனன தினம் இன்றாகும்.

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், தந்தை செல்வா எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் இவர் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதராகவும், காலத்தால் அழியாத பதிவாகியும் மரணத்தின் பின்னும் இன்றும் வாழ்பவர்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) இவர், ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.

இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 1950 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர்.

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

தந்தை செல்வாவினால் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழர்களை அடக்கி ஆழலாம் என நினைத்த சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட “தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமே இன்றும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என அழைக்கப்படுகிறது.

இதன் பின் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. தந்தை செல்வா அவர்கள் கூறிச் சென்ற முக்கிய வார்த்தைகளில் மிகவும் முக்கியமானது “அகிம்சை வழியில் போராடும் தமிழர்களுக்கான விடுதலையை தர சிங்கள அரசு மறுத்தால் எமக்கு அடுத்த இளைய சந்ததியினர் ஆயுதம் கொண்டு மீட்டெடுக்க நேரிடும்” என சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருந்தவர் தந்தை செல்வா அவர்கள்.

அவர் அன்று கூறியதோ போலவே தமிழர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழீழ தனியரசை உருவாக்கவும் என சில இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்குள் குதித்தனர். இருந்தும் ஒழுக்கம் இன்மை, சரியான தலைமைத்துவம் இன்மை, என்பவற்றால் சிதைந்து அழிந்துபோக தமக்கே உரித்தான கட்டுப்பாடு, ஒழுக்கம், இலட்சியம், தியாகம் எனும் உயரிய பண்புகளோடு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆயுதவழிப் போராட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து தமிழர்களின் காப்பரணாக “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு திகழ்ந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.