Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் - இந்தியா

Featured Replies

அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

India%20srilanka_CI.jpg

இலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்,அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும்  இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது

 தென்னிந்தியாவில்   குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட  பாக்கிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்காக இந்தியதேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் கோரிய அனுமதிக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை.

முன்னைய ராஜபக்ச அரசாங்கம் அதற்கு இணங்கவேயில்லை,புதிய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தேசிய புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் வடபகுதியில் ஜிகாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதையும்,அவர்களுக்கும் பாக்கிஸ்தானிற்கும் தொடர்புள்ளதையும் இலங்கை கருத்திலெடுக்கவேண்டும், என உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த விடயத்தினால் இலங்கை தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பு இந்தவிடயத்தில் என்ன உதவிகளை செய்யலாம் என்பது தெளிவில்லாமலுள்ளது. மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட  முகமட் சுலைமானை விசாரிப்பதற்காக இலங்கை செல்வதற்கும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

அவரை இந்தியாவிடம் ஓப்படைக்குமாறு புதுடில்லி விடுத்த வேண்டுகோள்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை.இந்த விடயத்தில் உறுதியளித்தபடி நடந்துகொள்வது இலங்கையை பொறுத்த விடயம்,எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118309/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதி மக்களுக்கு ஜீகாத் மூலம் இனி பிரச்சனை கொடுக்க இந்தியா முயற்சிக்கின்றது........புலிகள் மூலம் கொடுத்த தலையிடி போதது என்று இனி ஜீகாதிகள் மூலம்.....

  • தொடங்கியவர்

இலங்கையில் ஜிகாத்" இந்திய உளவுப் பிரிவு கூறமுதலே நாங்கள் கூறிவிட்டோம்: தடைசெய்யுங்கள்

 

indian--pothu-palasena.jpg

 

இந்­திய உளவுப் பிரி­வி­ன­ருக்கு முன்ப­தாகவே இலங்­கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்தோம். ஆனால் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் கண்­டு­கொள்­ள­வில்லை. இன்­றையஆட் ­சி­யா­ளர்­களும் கண்­களை மூடிக்­கொண்டே உள்­ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா. இனி­மே­லா­வது ''ஜிகாத்''தை தடை­செய்ய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென் றும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

 
இது தொடர்­பாக பொது பல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கையில், இலங்­கைக்குள் மெது­வாக ஊடு­ரு­விய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவி­ர­வாதம் இன்று நாடு முழு­வதும் வியா­பித்து விட்­டது. இன்று அவ்­வி­யக்கம் இந்­தி­யாவை அழிப்­ப­தற்கும் தாக்­கு­தல்­களை நடத்­தவும் திட்­ட ங்­களை தீட்டி வரு­வ­தா­கவும் இங்கு அவ்­வி­யக்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் இந்­திய உளவுப் பிரி­வினர் எமது நாட்­டுக்கு அறி­வித்­துள்­ளனர்.
 
இவ் அறிவிப்பை மதிக்­காமல் இருக்­க­லா­காது. எனவே, அர­சாங்­கமும் எமது உளவுப் பிரி­வி­னரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.