Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல்

Featured Replies

மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியானது பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 
131204005708_sp_microplastic_336x189_bbc
'பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல்
 
ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள், மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் மிதப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள், பைகள் மற்றும் பாட்டில்களே இப்படி மிதப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் ஒன்று திரண்டு, உலக கடல் வளத்தின் ஒரு வீதத்திற்கும் குறைவான கடற் பிரதேசமான மத்தியதரைக்கடல் பகுதியை மிகப்பெரிய அளவில் மாசடையச் செய்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
 
சிப்பிகளுக்குள்ளும் பிளாஸ்டிக்
 
அந்தக் கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்தும், பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக வட ஐரோப்பிய கரையோரங்களில் வளர்ந்த சிப்பி வகை உயிரினங்களின் வயிற்றிலும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காண்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மத்திய தரைக்கடலின் பௌதீக செழிப்பையும், அதன் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவத்தையும், இந்த பிளாஸ்டிக் கழிவுககள் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஸ்பெய்ன் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த அரை நூற்றாண்டாகவே, பிளாஸ்டிக் பரவலாக பெருமளவில் பாவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அது நிலத்தில் மட்டுமல்லாது கடல் வளத்தையும் மாசுபடுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் மேலாண்மை உக்திகளுக்கான அவசர தேவையும் எழுந்துள்ளது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 
இந்தியப் பெருங்கடல், வட மற்றும் தென் அட்லான்டிக் கடல், வட மற்றும் தென் பசுபிக் கடல், ஆகியவற்றிற்கு இடையே தொடர்ந்து நடக்கும் கடல் நீரோட்ட சுழற்சியில் எந்த அளவுக்கு இந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்திருக்கிறதோ அதற்கு சமாந்திரமான அளவுக்கு மத்திய தரைக் கடலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
 
இதேவேளை, பெருந்தொகையான பிளாஸ்டிக் குப்பைகள், வங்காளவிரிகுடா, தென் சீனக் கடல், மற்றும் ஆர்க்ட்டிக் பெருங்கடலில் இருக்கும் பேரன்ட்ஸ் கடலிலும் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய தரைக்கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் 80 வீதத்திற்கும் அதிகமானவை ஐந்து மில்லிமீட்டருக்கும் சிறிய அளவிலானவை என சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆய்வறிக்கை, இந்த பிரதேசத்தில் குவிந்திருக்கும் இவ்வளவு பெரிய பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து ஆய்வாளர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 

மத்தியதரை கடல் என்ன உலகம் முழுக்க பிளாஸ்டிக் கழிவினால் தான் நிரம்பி இருக்குது. 
plastic-pollution-coastal-care-norway-58

Boat-sea-plastic-krichim.jpg

sea-of-garbage-2.jpg

plastic-pollution-la.jpg
Boat-dam-krichim.jpgplastic-pollution-coastal-care-584x388.j

Northamerica-litter.jpg

Creek-Manilla.jpg

Creek-Manilla.jpg

bali-trash-05.jpg

படஉதவி :http://plastic-pollution.org/


இயன்ற அளவு பிளாஸ்டிச்கை பாவிப்பதை குறைக்கவேண்டும்

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

 பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மறு சுழற்சி மூலம் அவற்றைப் பயனுள்ளதாக்க வேண்டும்....!
 
கடலிலோ, மலைகள் மீதோ பிரயாணம் செய்பவர்களும் மீளவும் அவற்றை உரிய இடத்தில் கொண்டுவந்து போட வேண்டும்....!


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நவநாகரீக உலகிற்கு பக்க விளைவுகள் இல்லாத நம்மவர் படைப்புகள் முன் உதாரணமாக இருக்கட்டும்.  :)
 
8d7f4df5-bd71-44a1-9771-643d156ce72c_zps    b42cfce0-4e85-4ff8-965e-7af2f098cbf4_zps  ab7f58bc-ca32-4070-bfaa-fdba1401b7f0_zps    27b95d8f-4c4d-4afd-b99f-025a8e80e780_zps    30211966-0910-4d4b-b292-bf4eb9919487_zps  404b7d4a-b56a-4ea8-95e5-57e86973d1cc_zps  24c62f8f-e2d3-4a9b-922e-beb95fa286c4_zpsad0e017b-7490-4f7a-b736-7df784298a7c_zps
 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் வேலை செய்த காலங்களில்

எந்த துறைமுகத்துக்கு போனாலும் எத்தனை நாள் நின்றாலும் எவ்வளவு தான் குப்பை கழிவு மூடைகள் இருந்தாலும் பின் பக்கத்தில் அடுக்கி அடுக்கி வைக்கப்படும்.

கப்பல் வெளிக்கிட்டு அந்த நாட்டு எல்லையைக் கடந்து சர்வதேச கடல் எல்லைக்குள் பிரவேசித்ததும் அத்தனையும் தூக்கி நடுக்கடலில் வீசப்படும்.

 

அந்த நேரமே எமது கப்பல் மட்டுமா உலகம் முழுவதும் ஓடும் கப்பல்களில் இருந்தும் இதைத் தானே செய்கிறார்கள்.ஒரு காலத்தில் கடல் எல்லாம் குப்பையாலேயே மூடப்பட்டுவிடும் என்று எண்ணிய நாட்களும் உண்டு.

கடலில் உள்ள மீன்களுக்கும் சாப்பாடு வேண்டும் தானே உள்ள மீன்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்துவிடும் என்று என்னையே நான் சமாதானம் செய்த காலங்களும் உண்டு.

 

இப்போ இந்த செய்தியை பார்த்ததும் பழையவற்றை மீண்டும் பார்க்கிறேன்.

கப்பலில் வேலை செய்த காலங்களில்

எந்த துறைமுகத்துக்கு போனாலும் எத்தனை நாள் நின்றாலும் எவ்வளவு தான் குப்பை கழிவு மூடைகள் இருந்தாலும் பின் பக்கத்தில் அடுக்கி அடுக்கி வைக்கப்படும்.

கப்பல் வெளிக்கிட்டு அந்த நாட்டு எல்லையைக் கடந்து சர்வதேச கடல் எல்லைக்குள் பிரவேசித்ததும் அத்தனையும் தூக்கி நடுக்கடலில் வீசப்படும்.

 

அந்த நேரமே எமது கப்பல் மட்டுமா உலகம் முழுவதும் ஓடும் கப்பல்களில் இருந்தும் இதைத் தானே செய்கிறார்கள்.ஒரு காலத்தில் கடல் எல்லாம் குப்பையாலேயே மூடப்பட்டுவிடும் என்று எண்ணிய நாட்களும் உண்டு.

கடலில் உள்ள மீன்களுக்கும் சாப்பாடு வேண்டும் தானே உள்ள மீன்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்துவிடும் என்று என்னையே நான் சமாதானம் செய்த காலங்களும் உண்டு.

 

இப்போ இந்த செய்தியை பார்த்ததும் பழையவற்றை மீண்டும் பார்க்கிறேன்.

எவ்வளவு காலம் வேலை செய்தீர்கள்?

இந்த மீன்களை உண்டால் கான்செர் வர வாய்ப்புண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.