Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் செயற்பட வேண்டும் - சுரேஷ் பிறேமச்சந்திரன்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும்,உறுதியுடனும் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வல்வெட்டித்துறையில் அன்பேசிவம் அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட,வறிய குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்;:-

கிழக்கு மாகாணத்தின் எல்லைக்கிராமங்களை காப்பாற்றும் வகையில் எல்லைக்கிராம மக்களுக்காக அன்பே சிவம் தனது கைகளை ஏந்தியிருக்கிறது கடந்த காலங்களில் ஒரு குறிப்பிடக்கூடிய அளவுக்கு அவர்களின் உதவிகள் கிழக்கு மாகாணத்திற்கு சென்றடைந்திருக்கிறது.

அதேபோன்று வன்னி மண்ணில் முல்லைத்தீவில்,கிளிநொச்சியில் ஏனைய மாவட்டங்களில் அன்பே சிவம் அமைப்பினர் செய்து கொண்டிருக்கின்ற உதவிகள் கல்விக்கு அப்பால் சென்று போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சொந்தக் கால்களில் நிற்கவேண்டும்,தமது குடும்ப வாழ்ககையை அவர்கள் நடத்திக்கொண்டு போக வேண்டும் என்பதற்காக அவர்களின் சுய தொழில்களை ஊக்குவிக்குமுகமாகவும் வேறு பல உதவிகளையும் இந்த அமைப்பினர் செய்து வருகின்றார்கள்.

ஆரம்ப காலத்திலிருந்து இந்த நிறுனத்தை தெரிந்தவன் என்ற அடிப்படையிலும் ஆரம்பகாலத்திலிருந்து அவர்களுடன் கூடி செயற்படுகின்றவன் என்ற அடிப்படையிலும் சுவிசிலிருந்து இயங்குகின்ற இந்த நிறுவனமும் அதற்கு இடையறாத முயற்சியுடன் இயங்கும் நண்பன் சிங்கம் அவர்களின் முயற்சியும் தான் இந்த நிறுவனம் இவ்வளவு முன்னேற்றமடைவதற்கு காரணம் என நான் நம்புகின்றேன்.

எமது புலம்பெயர்ந்த உறவுகள் பனியிலும்,மழையிலும் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உழைத்து இந்த உதவிகளை எமக்கு செய்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாங்கள் அனைவரும் இங்கிருந்து கொண்டு புலம்பெயர்ந்த உறவுகள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களுக்கு பணம் ஆகாயத்திலிருந்து கொட்டுகின்றது என்ற பார்வை எம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. உண்மை அவ்வாறல்ல இவர்கள் 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டும். இவர்கள் வீடு வேண்டியிருப்பார்கள்,வாகனம் வேண்டியிருப்பார்கள் ஆனால் அவர்கள் சாகும் வரை அவற்றிற்கு பணம் கட்டவேண்டும் இவ்வாறு பல்வேறு துண்பங்களுக்கு மத்தியில் அவர்கள் மிச்சம் பிடித்துத்தான்  இங்கு உங்களுக்கு அனுப்புகின்றார்கள்.

அவர்கள் செய்கின்ற வேலையை இரண்டு மடங்காக்கினால் தான் உங்களுக்கு இங்கு பணம் வந்து சேரும். ஆகவே எமது உறவுகள் அனுப்பி வைக்கின்ற பணம் மிகமிக கஸ்ரப்பட்டு போரினால் பாதிக்கப் பட்ட எமது மக்கள் மீண்டும் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் எமது மக்கள் கல்வியில் உயர வேண்டும் என்பதற்காகவே அனுப்பி வைக்கப் படுகின்றது.

போர் முடிந்ததன் பின்னர் அப்போதிருந்த ஜனாதிபதியிடம் நாங்கள் சொன்னோம் இரண்டு லட்சம் வீடுகள் கட்டப்படவேண்டுமென்று ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி சொன்னார் என்னிடம் வீடுகட்டுவதற்கு ஐந்து சதமும் இல்லை என்றார் அதற்குப் பின்னர் தான் ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்தது. அதே போல 94 ஆயிரம் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் இருக்கின்றன என்று கூறினோம் இன்று வரை எந்த அரசாங்கமும் இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக எந்த உதவியும் செய்யவில்லை.மாறாக இவர்ளுக்கெல்லாம் ஏதோ கிடைத்திருக்கின்றது என்றால் நிச்சயமாக புலம்பெயர் மக்களினுடைய உதவிகள் தான் என்பதை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த மாணவச் செல்வங்களிடம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால் இன்று நீங்கள் இங்கு வந்து இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள் நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்களின் கல்வி வளர்ச்சி மாத்திரமல்ல நீங்கள் இந்த சமுதாயத்திற்கு சரியான புதல்வர்களாக எதிர்காலத்தில் தமிழை இந்த மண்ணில் வேரூண்றச் செய்து நீங்கள் தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பண்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய சக்திகளாக வளரவேண்டும். வன்னியிலிருந்து வந்திருக்கிறீரகள், மலையகம்,கிழக்கு மாகாணம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருக்கிறீரகள் உங்கள் எல்லோருக்கும் வேறுபாடின்றி உதவிகள் கிடைக்கின்றன என்றால் அன்பேசிவம் எடுத்திருக்கின்ற முயற்சிக்காக நாங்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம்.

இந்த மண்ணில் எவ்வளவோ பாதிப்புக்கள் நடந்ததன் பின்னர் இந்த வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து நாங்கள் பேசுகின்றோம் என்றால் நான் நம்புகின்றேன் போருக்குப்பின்னர் இவ்வாறான ஒரு பொது நோக்கம் கருதிய நிகழ்வு இப்பொழுது தான் நடைபெறுகின்றது. அதற்காகவும் இந்த அன்பேசிவம் அமைப்பிற்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். நிச்சயமாக வல்வெட்டித்துறை வீரம் செறிந்த மண் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரையில் உறுதியுடன் போராடக் கூடியவர்கள் அவர்கள் என்றும் ஏதாவது சலுகைகளுக்கு பணிந்து போனவர்களல்ல.

இன்று நாங்கள் சிதறுண்டு போயிருக்கிறோம். உலகத்தில் புலம்பெயரந்து போய் சிதறுண்டு கிடப்பது வேறு ஆனால் நாங்கள் கொள்கை ரீதியாக சிதறுண்டு கட்டுக்கோப்பாக இருந்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டியவர்கள் கட்டுப்பாடின்றி வேறுபட்ட சூழலுக்குள் சிலர் தள்ளிக்கொண்டு போகின்ற நிலையினை நாங்கள் பார்க்கின்றோம்.ஏனென்றால் நாங்கள் பாரிய இழப்குக்களை சந்தித்ததன் பிற்பாடு தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இன்றும் எமக்கு முக்கிய தேவை என்னவென்றால் நாங்கள் கட்டுப்பாடுடனும் உறுதியுடனும் முன்னேறிச் செல்லப் போகின்றோமா? இல்லையா என்பது தான்.

ஆனால் பல தரப்புக்களிலிருந்து அரசாங்கம் எம்மை பிரித்தாழப்பார்க்கின்றது என்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றது. நாங்கள் உறுதியாக இருப்போமாக இருந்தால்,நாங்கள் கட்டுக்கோப்பாக இருப்போமாக இருந்தால் நாங்கள் உறுதியுடன் முன்னேறிச் செல்வோமாக இருந்தால் எங்களுக்குள் இருக்கின்ற அற்பத்தனமான விடயங்களைக் கைவிட்டு கொள்கை ரீதியாக ஒண்று படுவோமாக இருந்தால் எவராலும் எம்மை பிரித்தாழ முடியாது.

அது ராஜபக்ஷவால் முடியவில்லை எந்த அரசாலும் அதைச்செய்ய முடியவில்லை இந்த அரசு செய்யும் என நாங்கள் கனவு காணத்தேவையில்லை அதை செய்வார்கள் எப்பொழுதென்றால் நாங்கள் உறுதியாக ஒற்றுமையாக இல்லாவிட்டால் நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுத்தவர்களாக போய்விடுவோம்.

 ஆகவே உங்களுக்கு இந்த உதவிகளை செய்யக் கூடியவர்கள் அவர்கள் மனம் வருந்தி தமிழ் மக்களிடம் கேட்பது என்னவென்றால் நாங்கள் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் செயற்படவேண்டும் என்பதைத்தான் கேட்கிறார்கள். நாங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்த சமுதாயம் நாங்கள் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் அதைத்தான் எமது புலம்பெயரந்த உறவுகள் கோறிநிற்கின்றார்கள் எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நினைவில் கொண்டு செயற்படவேண்டும் என நான் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

http://www.pathivu.com/news/39024/57//d,article_full.aspx

சம்பந்தனையும் சுமந்திரனையும் ஓட சொல்லுங்கோடா .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.