Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டு இறைச்சி விருந்தும் தாலி களைதலும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசிய அறிவு இயக்கம்

நாள்: 10.04.2015

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாட்டு இறைச்சி விருந்தும் தாலி கழற்றுதலும்என்றதொரு நிகழ்வைப் பகுத்தறிவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் என்றால் திராவிடர்கள் என்றும், திராவிடர்கள் என்றால் ஆரிய எதிர்ப்பாளர்கள் என்றும், அத்தகையோரே உண்மைத் தமிழர்கள் என்றும் பரப்புரை செய்து அரசியல் களத்தில் வெற்றியும் பெற்று, ஆள்வினை ஏற்றுத் தின்று கொழுத்து இன்று உண்மைத் தமிழர்களின் வாழ்வியலுக்கு நேர் எதிர் நிலையை எடுத்துத் தாலியறுப்பது ஏன்?

காட்டு விலங்குகளை வேட்டையாடியும், இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட ஆடு, கோழி, பன்றிகளைக் கொன்று தின்றும் பன்னெடுங்காலம் பழகிப்போன உலக மாந்தர்களில், தமிழர்கள் பண்பு வழிப்பட்ட ஒரு தனித்த வகை இன அடையாளத்தோடு கூடிய மரபுவழிக் குடியினர் என்பது கருதத் தக்கது.

உழைத்த பகடுகளையும், பால் சுரந்த பசுக்களையும் அவை இயற்கையாக முதிர்ந்து சாகும் வரை வாழ விட்டு மண்ணில் புதைத்தனரேயன்றி, ஒரு போதும் அவற்றை தமிழர்கள் இறைச்சிக்காகக் கொன்றதும் இல்லை. அடிமாட்டுக்கு விற்றதும் இல்லை.

வளர்ப்பு யானைகள், நேர்ந்து விட்ட கோயிற் காளைகள், பாய்ச்சல் பழகிய மஞ்சிவெருட்டுக் காளைகள், உழவு மாடுகள், பந்தயக் காளைகள், பால் தரும் பசுக்கள், கன்றுகள், கழுதைகள், குதிரைகள், நாய்கள் என எதனையும் தமிழர்கள் கொன்று தின்றவர்கள் இல்லை.

ஆடு கோழிகளோடு கடல் உணவு, காய்கறி உணவு, புஞ்சையிலும் நஞ்சையிலும் பயிரிடப்பட்ட உணவு, பழங்கள், கிழங்குகள், கீரைகள் என்று பழகிப்போன தமிழர்கள் இன்னும் தங்களைத் திருத்திக் கொண்டு தமது ஊன்சுவை உணர்வு வெறியைத் தவிர்த்து முற்றாகப் புலால் மறுத்தும் கொலை தவிர்த்தும் வாழ வேண்டும் என்பதே வள்ளுவனின் அறிவுரை.

அந்த அறிஞனை ஆசானாக ஏற்றுக் கொண்ட தமிழ் இனம் எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் உயிர்க் கொலை செய்ய ஊக்குவிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது.

குறிப்பாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களைத் துடைத்து ஒழிக்கத் துடிக்கும் ஆரிய வைதிகம், தமிழ் மண்ணில் காலங்காலமாக நடத்தப்பட்டு வந்ததொழூஉப் புகுத்தல்என்ற மஞ்சுவெருட்டை உச்சநீதி மன்றத்தின் மூலமாகத் தடைசெய்து தமிழர் உள்ளங்களைப் புண்படுத்தியிருக்கிறது. இக்கால வேளையில் திராவிடர்கள் மாட்டிறைச்சி விருந்து ஏற்பாடு செய்வது தமிழர் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சுகிறது.

தமிழர்களை ஒழிப்பதில் திராவிடர்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? காளைகளை நீக்கிய தமிழர் வாழ்வு என்பது வரலாற்றுத் தொடர்ச்சியில்லாத நிலையை ஏற்படுத்திவிடும் என்பது உண்மை. காளைகளின் மீது கைவைக்கும் போது கயவாளிகளின் உண்மை முகம் வெளிப்படும் என்பதும் உண்மை. தமிழர் மரபில் ஒவ்வொரு காளையும் ஒரு தலைவனுக்கு இணையான பெருமையுடையது என்பதனை உணர வேண்டும்.

தமிழில் ஏறு என்ற சொல் மட்டுமே இலக்கிய வழக்கு. காளை என்ற சொல் உயர்திணை ஆண்மகனைக் குறிக்கும் சொல். அந்தச் சொல்லால் விலங்கைக் குறிப்பிடும் பேச்சு வழக்கு மரபைக் காப்பாற்றி வரும் தமிழர்கள் காளைகளை ஒரு போதும் பறி கொடுக்க மாட்டார்கள்.

தமிழர்களின் உணவு முறையை ஒழுங்கு படுத்தி மென்மேலும் இயற்கையைச் சார்ந்து வாழ அறிஞர்கள் உதவ வேண்டுமேயன்றி, அரசியல் காரணங்களுக்காக அடாவடிச் செயலில் எவரும் ஈடுபடக்கூடாது. குறிப்பாக மாட்டிறைச்சி விருந்து நிகழ்ச்சியைக் கைவிட வேண்டும். அதற்காக அவர்கள் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தால் நல்லது.

தாலி கழற்றுதல் என்ற முயற்சியில், பெண்கள் அணியும் தாலி பற்றிய கருத்தினால் திராவிடர்கள் என்பார் பெண்களின் எந்த வகையிலான விடுதலையை விரும்புகிறார்கள் என்பது விளங்கவில்லை.

கழுத்தில் அழுக்கேறிய ஒரு நூலை மட்டும் அணிந்து கொண்டு கண்ணியமாக உழைத்து வாழும் எண்ணற்ற ஏழைப்பெண்கள் வாழும் இந்த நாட்டில் அந்த அடையாளத்தைப் பறித்து விட்டு மாற்று ஏற்பாடு செய்து தருகிறோம் என்று திராவிடர்கள் கூறுவது தமிழர்களின் அகவாழ்வைக் குறிவைத்துத் தொடுக்கப்படும் தாக்குதல் என்றே தமிழர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

தமிழர்களை இந்துக்கள் என்று கூறி ஏமாற்றும் ஆரிய வைதிகர்களையும், தமிழர்களைத் திராவிடர்கள் என்று கூறி ஏமாற்றும் வகையினரையும் ஒரே அளவு கோல் கொண்டு அளக்கத் தேவைப்படும் ஒரே கருத்தியல் தமிழ்த் தேசிய கருத்தியல் என்ற முடிவைத் தமிழ் இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டிய வேளை இது.

தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்கள் முற்று முழுதாக அவர்தம் அகவாழ்வின் செம்மையினால் ஆனவை. அகவாழ்வின் செம்மையினால் தன்னையும் தன் இனத்தையும் தன் இனத்தின் அறிவு மரபையும் உணர்ந்த எந்தத் தமிழனையும் தமிழர் அல்லாத எவனாலும் ஏமாற்ற முடியாது. முடிசார் நெறியோ, குடிசார் நெறியோ, எளிமையாகத் தமது அகவாழ்வை வடிவமைத்துக் கொண்டு அவ்வப்போது திமிர் பிடித்து அலைவோரைச் செருப்பால் அடித்துத் தரை மட்டமாக்கிய வரலாற்றின் அடிச்சுவட்டில் தான் தமிழ் மொழியும், தமிழ் இனமும் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஆரிய வைதிக அகவாழ்வு எப்படிப்பட்டது என்பதனை நன்கு அறிந்து ஆரிய வைதிக சம்பிரதாயங்களின்படி அவர்கள் காப்பாற்றுவதைத் தமிழர்கள் குறுக்கே விழுந்து தடுக்கவில்லை.

திராவிடர்களின் அகவாழ்வினைத் தமிழர் அல்லாத பிற திராவிடத்தாரின் அறநெறிச் சான்றுகளின் வழியே நன்கு அறிந்து அவர்கள் காப்பாற்றுவதையும் தமிழர்கள் குறுக்கே விழுந்து தடுக்கவில்லை.

தமிழர்களின் அகவாழ்வு எப்படிப்பட்டது என்பதனைத் தமிழர்களின் ஆற்றல்சார் தொல்லறிவின் வலிமையினால் உணர்ந்து கட்டிக் காப்பாற்ற அவர்கள் முயற்சிக்கும் போது எவரும் குறுக்கே விழுந்து தடுக்க வேண்டாம் என்பதுவே தமிழர்கள் முன்வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்பான் சிறு குழந்தையாக இருக்கும் போதே போருக்குத் தலைமையேற்றுச் செல்ல நேர்கிறது. அந்தக் குழந்தையின் கழுத்தில் தாலி அணிந்திருப்பது புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிக்கடி கழற்றாமல் ஆணோ பெண்ணோ அணியும் எந்த அணிகலனுக்கும் தாலி என்பது பொதுப்பெயர்.

தார் பூண்டு தாலி களைந்தன்றும் இலனே

பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே

[புறம் – 77: 6-7, செம்மொழி.வே.பசுபக் - 849]

அந்தக் குழந்தை அரசனாக வளர்ந்து திருமணம் ஆகியபின் மனைவியைப் பிரிந்து போருக்குச் சென்று நெடு நாட்கள் பாசறையில் இருக்கின்றான். குழந்தையில்லாத அவன் மனைவி தனது காதில் கழுத்தில் கைகளில் இருந்த அணிகலன்கள் அனைத்தையும் களைந்து விட்டு மூன்று அடையாளங்களை மட்டும் விட்டு வைத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று தாலியாகிய ஆரம். மற்றொன்று இடது மணிக்கட்டில் கட்டப்பட்டகடிகை நூல்எனும் காப்புக் கயிறு. மூன்றாவது சங்கு வளையல்கள்.

ஆரம் தாங்கிய அவர் முலை யாகத்துப்

பின் அமை நெடுவீழ் தாழத் துணை துறந்து

நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி

நெடு நீர் வார் குழை களைந்தெனக் குறுங்கண்

வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை

வலம்புரி வளையோடு கடிகைநூல் யாத்து

[நெடுநல்வாடை 136 – 142, செம்மொழி.வே.பசுபக் - 157]

மணமான இளம்பெண்வாழ்வரசிஎன்று அழைக்கப்படுகிறாள். அது ஒரு வழக்குச் சொல். ‘வாவரசிஎன்பது அதன் பயன்பாட்டு வடிவம். தமிழர் மரபில் வாவரசியின் அடையாளம்தாலிஎன்பதற்கு ஆராய்ச்சி தேவையில்லை. எவரது சான்றிதழும் தேவையில்லை.

வீரம் செறிந்த ஒரு புதல்வனைப் பெற வேண்டித் தவம் இயற்றும் இளம் தாய் ஒருத்தி தனது மேற்கைகளில் வைரமணியைப் பொதிந்து தைத்துக் கொண்டிருக்கிறாள் தாலியின் மாற்று அடையாளமாக என்பது உற்று நோக்கத்தக்கது.

நலம்பெறு திருமணி கூட்டு நல்தோள்

ஒடுங்கு ஈர் ஓதி ஒள்நுதல் கருவில்

எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து

சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்

காவற்கு அமைந்த அரசு துறை போகிய

வீறுசால் புதல்வன் பெற்றனை

[பதிற்றுப்பத்து – 74: 16-21, செம்மொழி.வே.பசுபக் - 472]

மணநாள் அன்று மணமகளின் கழுத்தில் மணமகன் மாலை சூட்டுவதே முதன்மையான இலக்கியச் சான்றாக உள்ளது. அவனே தாலி கட்டினானா? அவனே முடிச்சுப்போட்டானா என்றெல்லாம் தேடினால் அது விரிவான ஆய்வாக அமையும். அதற்குத் தமிழ் இடம் தரும்.

தொடியுடைய தோள் மணந்தனன்

கடிகாவுல் பூச்சூடினன்

தண்கமழும் சாந்து நீவினன்

செற்றோரை வழி தபுத்தனன்

நட்டோரை உயர்பு கூறினன்

வலியர் என வழிமொழியலன்

மெலியர் என மீக்கூறலன்

[புறம் – 239: 1-7, செம்மொழி.வே.பசுபக் - 903]

புறவாழ்வில் வெற்றிபெறும் ஒருவன் அகவாழ்வில் வெற்றிபெறப் படிக்கட்டு அமைத்துத் தருவதே திருமணம் என்ற அளவுகோல் என்பது தமிழர் மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மணநாளில் அவன் மணமகள் கழுத்தில் அணியும் மாலையானது வெந்நூல் கொண்டு கட்டப்பட்டது என்று தெரிகிறது. வாகைக் கவட்டிலையோடு அறுகம்புல்லின் பாவை சேர்த்துத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் மழை பெய்யும்போது அறுகம்புல் பூக்கும் என்றும், அந்தப் பூக்களைச் சேர்த்து வைத்திருந்து வாகை இலையோடு சேர்த்து மணமாலை தொடுத்தனர் என்றும் தெரிகிறது. மலரின் கதிர்நிலை அல்லது மலர்ந்த நிலையினையே பாவை நிலை, பூவை நிலை என்றெல்லாம் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

மென்பூ வாகைப் புன்புறக் கவட்டு இலை

பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்

தழங்கு குரல் வானின் தலைப் பெயற்கு ஈன்ற

மண்ணு மணியன்ன மா இதழ்ப் பாவைத்

தண் நறு முகையோடு வெந்நூல் சூட்டித்

தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி

[அகநானூறு 136 – 10-15, செம்மொழி.வே.பசுபக் - 697]

இப்பாடலி்ல் குறிப்பிடப்பட்டுள்ள பாவை என்ற சொல்கிழங்குஎன்று புரிந்து கொள்ளப்பட்டுப் பின்னாளில் மஞ்சள் கிழங்காக மாறியதும், வெந்நூல் மஞ்சள் கயிறாக மாறியதும் ஒருவேளை ஆரிய வைதிகத்தாரின் திருப்பணியாக இருக்கலாம்.

அகநானூறு குறிப்பிடும் இந்தத் திருமணம் ஆண்டு நாட்களைக் கட்டுப்படுத்தும் செம்மையான அறம் சார்ந்த ஆட்சியில் முறையாகத் தோன்றும் தைத் திங்கள் முழுநிலவின் முன் இரவில் நடந்த திருமணம் ஆகும். அந்த திருமணம் தைத்திங்கள் முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்ட விழாவின் 12-ம் நாளில் அமைந்தது என்பதும், அன்று நிலமகளாகிய திருமகளின் கணவனாக அரசன் வெற்றி வாகை சூடுகிறான் என்பதும் தமிழர்களின் வரலாற்று வழிப்பட்ட அரச ஆளுமை.

திருமணம் நடந்தேறிய அந்த முன் இரவின் எல்லையில் மணமகள், மணமகனிடம் ஒப்படைக்கப்படுகிறாள் என்ற பதிவு உற்று நோக்கத்தக்கது.

மழை பட்டன்ன மணல் மலி பந்தர்

இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்

தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்

உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!

[அகம் 136: 16-19, செம்மொழி.வே.பசுபக் - 697]

திருமணம் முடிந்த பின்னும் மண மக்களைச் சேரவிடாமல் பலப்பல சடங்குகளை வற்புறுத்தும் ஆரிய வைதிகச் சம்பிரதாயங்களைத் தமிழர் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு.

முல்லை நிலத்து ஆயர் நடத்திய திருமணம் கலித்தொகையில் வியந்து பேசப்படுகிறது. வீட்டைச் சுற்றி புதுமணல் இட்டு செம்மண் குழம்பினால் சுவரை மெழுகி அவரவர் தகுதிக்கு மனம் நிறைவாக நடத்திய விழாவே வதுவை அயர்தல் என்ற மண நிகழ்வு ஆகும்.

தருமணல் தாழப் பெய்து

இல் பூவல் ஊட்டி

எருமைப் பெடையொடு

எமர் ஈங்கு அயரும் பெருமணம்

[முல்லைக்கலி 114: 12-14, செம்மொழி.வே.பசுபக் 610]

சிலப்பதிகாரத்தில் கண்ணகி அணிந்திருந்தமங்கல அணிஎன்பது அவள் எப்போதும் கழற்றாமல் அணிந்திருந்த ஓர் அணிகலன் என்று தெரிகிறது.

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்

கொடுங்குழை துறந்து வடிந்து வீழ்காதினள்

[சிலம்புஅந்திமாலை 50-51, செம்மொழி.வே.பசுபக் - 1253]

தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்களில் கோயிலுக்கு நன்கொடையாகத் தரப்பட்ட அணிகலங்களின் பட்டியலில், ‘தாலிக்கொடிகுறிப்பிடப்பட்டுள்ளது (S.I.I. Vol.IV-V)

பெண்கள் தாலி அணிவதும் அணியாதிருப்பதும், ஆண்கள் தாலி அணிவதும் அணியாது இருப்பதும், அதனை ஏற்பதும், மறுப்பதும் பூனூல் அணிவது போன்ற ஒரு சாத்திரச் சடங்கு அல்ல. அது, அது பற்றிப் பேசுவோரின் அகவாழ்வின் நேர்மை பற்றியது.

கணவனைப் போருக்கு அனுப்பி விட்டு, அவன் வெற்றியோடு திரும்பி வரும் வரை நம்பிக்கையோடு காத்திருந்த தமிழ்ப்பெண்கள் கட்டிக்காத்த அக வாழ்வின் அடையாளமாகத் தாலி கருதப்படுகிறது.

என் புற்கை உண்டும் பெருந்தோள் அன்னே!

யாமே புறம் சிறை இருந்தும் பொன் அன்னம்மே!

[புறம் 84: 1-2, செம்மொழி.வே.பசுபக் - 850]

வரலாற்று வழிப்பட்ட தமிழர்களின் அகவாழ்வின் அடையாளமாக இன்று எஞ்சியிருப்பது ஒரு தாலிக்கயிறு மட்டுமே.

அந்தக் கயிற்றில் ஒட்டியிருக்கும் குன்றிமணித் தங்கத்தைக் குறிவைத்துக் கடைதிறந்து காத்திருக்கும் மார்வாரிகள், கற்சிலைகளுக்குத் தங்கத்தால் தாலியைத் தொங்கத் தொங்கக் கட்டிவிட்டு மணியடித்துத் தட்டு ஏந்தும் ஆரிய வைதிகம், ஏழைப்பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் தருவதாகக் கூறிவரும் தமிழக அரசு, இவர்களது வரிசையில் தாலி அறுக்கும் சிங்களவன், கருவறுக்கும் மலையாளி, கதவு அடைக்கும் கன்னடன், சுட்டுக் கொல்லும் தெலுங்கன், கழுத்தறுக்கும் வடவன், குழிபறிக்கும் பார்ப்பனன் ஆகியோருடன் தாலி கழற்றும் திராவிடன்!

பந்தல் கட்டும் முறையில் தாலிகட்டு என்பது ஒரு தொழிற்சொல். தமிழர்களின் தச்சு மரபு அந்தச் சொல்லை அதன் மேற்பொருளில் இன்னும் காப்பாற்றி வருகிறது. அது கழற்றக் கூடிய கட்டு அல்ல. ஒருமுறை கட்டினால் அதனை அறுத்துத்தான் அகற்ற வேண்டும். தாலி என்பது தமிழ்ச்சொல்லின் ஒலிப்புபொருண்மை இவற்றோடு தொடர்புடையது. தாலி கழற்றுதல் என்று கூறுவதே தமிழில் தன் முரண்பாடு. தாலி களைதல் என்பது அறுத்துக் களைதலாகும்.

ஆக, திராவிடர்கள் களைய வேண்டியது தாலியை அல்ல. திராவிடக் கருத்தியலை. ஆரிய வைதிகர்களைத் திருத்துவதும் அவர்களுக்குத் தீட்சை தருவதும் தமிழர்களின் வேலை இல்லை. திராவிடர் பட்டியலில் தமிழர்கள் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்த எவருக்கும் உரிமை இல்லை. அவரவர் மன சாட்சிக்குத் தாம் தமிழர் என்று தெரிந்தால் தமிழ்த் தேசியக் கருத்தியலை வடித்தெடுக்க முன் வருவதே உண்மைத் தமிழர்களின் அறிவு நேர்மையாகும்.

....ooo000OOO000ooo...

  • தொடங்கியவர்

http://DK holds thaali removal event, before HC stay

DK holds thaali removal event, before HC stay

Dennis S. Jesudasan & Sruthisagar Yamunan

14AprDSJ01-DK-c_15_2374138f.jpg
A woman dicards her ‘thali’ at an event organised by Dravidar Kazhagam in Chennai on Tuesday.
21 couples participate in the programme; beef-eating ceremony cancelled after stay order is communicated to party leaders

In a quick turn of events on Tuesday, the Dravidar Kazhagam advanced the thaali removal event at Periyar Thidal here by a few hours and managed to conduct the programme before a Division Bench of the Madras High Court stayed it.

However, the beef-eating ceremony called for by DK had to be cancelled after the stay order of the court was communicated to its leaders by the police.

Justice D. Hariparanthaman, had on Monday, quashed a ban order imposed by the Chennai police on both the event and allowed its conduct. This was overturned by a special sitting of the Division Bench consisting of Justice Satish K. Agnihotri and Justice K. Venugopal at the former’s residence.

As information came that petitioners were moving the special bench for a remedy against the event on Tuesday morning, DK functionaries were quick to arrange for the programme at 7 am. Originally, the event was scheduled for 10 am.

Twenty one couples participated in the programme before DK president K. Veeramani. When the police communicated the stay order issued by the division bench, DK functionaries asked the large crowd gathered at the Periyar Thidal to disperse peacefully.

Saranyan

Only 21 ppl removed. Also all papers need to change headline to - Only 21 people removed thali.Even if you allow for whole year also not many will do. Need to check whether those 21 people were really married. Ideally these kind of groups (DK) who were destroyed (Justice party's second birth) already should be ignored

Badri

How stupid!! But this is what you would expect from DK.. when there are other burning issues.. the state is suffering from power crisis, all the industries closing down, serious lag in education, water problems, infrastructure crumbling, caste violence all over..inted of addressing all these issues, ignorant fools hold such event.. if u want to create a rational, casteless society, address the route which is quality education..instead of focussing on improving education, taking quality education to every remote village of TN, these people, address irrelevant , superficial issues

Shekar

1) " A late night delivery and infantile mortality the next morning " 2) " A stay on a stay on a ban " Which one will be a more suitable title for a research paper on jurisprudence in Tamilnadu ?

Govindarajan Venkitaraman Managing Director, India at Spirax-Sarco Engineering

K. Veeramani & his party workers can follow anything they want. Whether they wear a thali, wedding ring or nothing it's their choice. No issues on that. However, I do not agree their open display of removing thali which hurts the sentiments of people who believe in that. This is not their right. I can follow whatever I want. But I cannot act in a manner which insults another person in some way or the other. The honourable court was right in stoping this nonsense. There is space for everyone in this country. Through such acts, Veeramani & his party wants to show to the people that they are still active little realizing that the current generation do not bother about them. Living as partners is also becoming legal in many countries. It's happening even in India, of late. It's high time Veeramani comes up with some serious socio economic initiatives rather than singing the same old song forever. No one notices him except the media. V. Govindarajan

S.Leelavathy

I cherish my 'THALI". I put kumkum on it every after prayers. That is my will and pleasure. All males have a right to tie the knot and make it as a precondition to the marriage engement. Can it not be left to the choice of the female individuals? I wish let the gents can be away from this kind of demonstrations or agitation. If the gents do not want to dominate on women, by tying a THALI , let them also be away from ladies and allow them to have their own free will to prewail. If it is their intention or ideals are to start a great movement or awareness, it can be before a good gathering of ladies. Perhaps at forthcoming Madurai Meenakshi Amman Thirukkalyanam, or Samayapuram or any other Mariammon temple feastivals or where large gathering of female devotees may converge for offering their prayers in places like Srirangam, Palani, etc. For all movements will not get support at the start. But it must be peaceful and calm

Kilikkaadu

Why in a hurry?Ludicrous.Condolences for those who lost their thalis..They cannot wait for the Highcourt order staying the order of a single judge..Bovine are more fortunate.They were saved..

E.S.Chandrasekaran

Should a married woman wait for a function to be organised in dispensing with the thali, a traditional symbol, in the Hindu marriage ,rather than not accepting it when it was tied on her by her hubby? I am sure cheap politics is played on such persons by the insular political parties who try to seek and do things for political gains. I pity the woman who has been made a scapegoat.I wonder whether her hubby and the family would approve of her conduct in hurting the Hindu sentiments. No doubt freedom of speech and expression has been distorted beyond redemption.Hats off to The Hindu in exposing the cheap politics.! E.S.Chandrasekaran,38/26 Karnan st,Mogappair west,Chennai-600037

Raj V

Parties like DK waste their and others' time by such non-issues. Matters like thali are things that will be ans should be best decided by individuals. Morever these parties do not have guts to oppose any superstition in faiths other than Hindus.

http://tamil.oneindia.com/news/tamilnadu/dk-s-thali-removal-festival-224662.html

சந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட தி.கவினர்!

சென்னை: பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே... தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dk-s-thali-removal-festival-224662.html

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article7104708.ece

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | படம்: க.ஸ்ரீபரத்
elangovan_2183459h.jpg
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | படம்: க.ஸ்ரீபரத்
 
திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் சிவசேனாவின் வெறியாட்டத்தை அனுமதித்தது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தை நடத்தக் கூடாது என்பதில் ஆளும் கட்சியினர் காவல்துறையினரின் துணையோடு பல்வேறு உத்திகளை கையாண்டு வந்தனர். இப்போராட்டத்துக்கு அனுமதி அளித்தால் சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மேல்முறையீட்டு மனு மூலம் அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் கூறி நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்க தடையாணை பெறப்பட்டது.

இதை உறுதிபடுத்துவதற்காகவே காவல்துறையினரின் துண்டுதலின் பேரில் பல்வேறு இந்துத்துவா அமைப்பினர் மற்றும் சிவசேனா கட்சியினர் திட்டமிட்டு பெரியார் திடலுக்கு உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு எதிராகவே இத்தகைய வன்முறை நடந்திருப்பது வெட்கக் கேடானதாகும். பெரியார் திடலில் வன்முறை நிகழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சிவசேனா கட்சியினர் வந்த ஆட்டோவில் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கடப்பாரை, கத்தியல் போன்ற கொலைவெறி ஆயுதங்கள் இருந்ததாகவும் அதை போலீசார் கைப்பற்றியதாகவும் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளன.

மும்பையில் தமிழர்களை அடித்து துன்புறுத்தி விரட்டப்படுவதை செயல்திட்டமாக கொண்டு செயல்பட்டு மறைந்த பால்தாக்கரேவின் கட்சியான சிவசேனாவுக்கு தமிழகத்தில் கிளை அமைத்து வகுப்புவாத வெறிச் செயலில் ஈடுபடுவதை அனுமதிப்பதை விட அவமானச் செயல் தமிழக மக்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒருவர் தாலி அணிவதும், அகற்றிக் கொள்வதும் அவரவர் தனிமனித விருப்பமும், உரிமையுமாகும். இக்கருத்தை ஆதரித்து பரப்புரை செய்ய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பெரியார் திடல் வளாகத்திற்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சி முடிந்து வெளியூர் செல்ல முயன்ற 10-க்கும் மேற்பட்ட திராவிடர் கழக தொண்டர்கள் நேற்றிரவு பெரியார் திடலுக்கு வெளியே வந்த போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் வகுப்புவாத பா.ஜ.க. ஆதரவு போக்கையே வெளிப்படுத்துகிறது.

இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்த மண்ணில் வகுப்புவாத, பிற்போக்கு சக்திகள் வேரூன்றி தலைதூக்க முயற்சிப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இச்செயல்கள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.

சில தினங்களுக்கு முன்பு இதே பிரச்சினைக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி ஊடக அலுவலகம் தாக்கப்பட்டது. எழுத்தாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதையே இத்தொடர் நிகழ்வுகள உணர்த்துகின்றன.

எனவே, தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஒரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

http://www.dailythanthi.com/News/State/2015/04/15041820/Dravidian-AssociationConductedFestival21-womenDali.vpf

logo2.PNG

வியாழக்கிழமை , ஏப்ரல் 16, 2015

திராவிடர் கழகம் நடத்திய விழாவில் 21 பெண்களுக்கு தாலி அகற்றம் கோர்ட்டு தடையை சட்டப்படி எதிர்கொள்வோம் என கி.வீரமணி பேட்டி
கருத்துகள்
 
மாற்றம் செய்த நாள்:
புதன், ஏப்ரல் 15,2015, 4:18 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஏப்ரல் 15,2015, 4:18 AM IST
201504150418034621_Dravidian-Association

சென்னை,

திராவிடர் கழகம் நடத்திய விழாவில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த கோர்ட்டு தடைவிதித்தது. அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி

திராவிடர் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில், பெண்களுக்கு தாலி அகற்றும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுகறி விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியது.

ஆனாலும் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று திராவிடர் கழகம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது, அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தனிநீதிபதி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்து, இருதரப்பு வாதத்தையும் விசாரித்து நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை திராவிடர் கழகம் சார்பில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

21 பெண்கள் தாலியை அகற்றினர்

நிகழ்ச்சியில், தாலி அகற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்திருந்த பெண்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் 21 பெண்களுக்கு தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியதுமே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, அரங்கை திராவிடர் கழக நிர்வாகிகள் மூடி வைத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ஓசூர் வனவேந்தனின் மனைவி கண்மணி முதலில் வந்து தாலியை அகற்றிக்கொண்டார். இதையடுத்து, ஆவடியை சேர்ந்த ராணியம்மாள், திருத்துறைபூண்டியை சேர்ந்த கலைவாணி, நாகை மாவட்டத்தை சேர்ந்த கமலா, தஞ்சை ரெட்டி பாளையத்தை சேர்ந்த பாக்கியம், ஈஸ்வரி சிவா, வடசென்னையை சேர்ந்த நிர்மலா பாலன், விமலாதேவி வாசு, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சங்கீத கிருஷ்ணமூர்த்தி, கோபிச்செட்டிப்பாளையம் சுமா சிவகுமார் ஆகியோர் உள்பட 21 பேர் தாலியை அகற்றி கொண்டனர்.

புதிய மஞ்சள் கயிறு...

பெயர் வாசிக்க வாசிக்க கணவன்-மனைவி மற்றும் குழந்தைகள் மேடைக்கு வந்தனர். அங்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்பு, ‘யாருடைய தூண்டுதலும் இல்லாமல், மனப்பூர்வமாக தான் இதை செய்கிறேன்’ என்று கூறி, பெண்கள் தங்கள் கழுத்தில் இருக்கும் தாலியை தாங்களாகவே கழற்றினார்கள்.

தாலி அகற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் புதிய மஞ்சள் கயிறு தாலியை அணிந்து வந்திருந்தனர். தாலி அகற்றும்போது, பெண்கள் சிரித்து கொண்டே தான் தாலியை அகற்றினார்கள். மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்களாக இருந்தவர்களும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

திருத்துறைபூண்டியை சேர்ந்த கலைவாணி தனது கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பேசும்போது, ‘தாலி ஒரு பெரிய விஷயம் இல்லை. எல்லோருமே அதனை கழற்றிவிடலாம்’ என்றார். அவருடைய கணவர் சித்தார்த்தன் பேசும்போது, ‘எனது மனைவியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருமணத்தின் போது அவரது கழுத்தில் தாலி கட்டினேன்’ என்றார். தாலி அகற்றியதில் பெரும்பாலானோர் கூறும்போது, ‘பெண்களின் அடிமை சின்னமாகவே தாலியை கருதுகிறோம்’ என்று சொன்னார்கள்.

தங்க தாலியை...

திருச்சி சிறுகனூரில் 135 அடி உயர பெரியார் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதை மேம்படுத்துவதற்காக, சங்கீதா கிருஷ்ணமூர்த்தி, விமலா வாசு, சுமா சிவகுமார் ஆகியோர் தங்களுடைய தங்க தாலியை நன்கொடையாக வழங்கினார்கள்.

மேலும் சிலர் தங்களுடைய தங்க தாலியை பெரியார் கல்வி நிதிக்காக நன்கொடையாக வழங்கினார்கள். வேறு சிலர் தங்களுடைய தாலியை கொண்டு சென்றனர்.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு கி.வீரமணி, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து பெரியார் திடலில் உள்ள அரங்கில் டாக்டர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது.

கோர்ட்டு இடைக்கால தடை

ஆனால் அதற்குள் தாலி அகற்றும் நிகழ்ச்சி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது என்ற அறிவிப்பு வந்தது. இதையடுத்து, கோர்ட்டு உத்தரவை ஏற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைவரையும் அமைதியாக திரும்பி செல்லுமாறு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

அதன்பின்னர், அனைவரும் அமைதியாக பெரியார்திடலில் இருந்து கலைந்து சென்றார்கள்.

பின்னர் கி.வீரமணி நிருபர்களை அழைத்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒத்த கருத்துடையவர்கள்...

டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவில் ஒத்த கருத்துடையவர்கள், தாலி அகற்ற விருப்பம் உள்ளவர்கள், பெண்களின் அடிமை சின்னம் என்று நினைப்பவர்கள் தாராளமாக தாலி அகற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்றும், மாட்டுக்கறி விருந்தில் கலந்துகொள்கிறவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தோம்.

இந்த நிகழ்ச்சிகள் நடத்த அறிவிப்பு கொடுத்தது முதல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்த பெண்களை ஆபாசமாக, கொச்சைப்படுத்தி வார்த்தைகளால் திட்டினார்கள். இப்படி புகார்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல், ஏராளமானோர் பதிவு செய்தார்கள்.

இதற்கு தடைவிதிக்க என்மீது வழக்கு தொடர்ந்தார்கள். அதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை செய்யாமலேயே அவர்களாகவே என் மீது சில வழக்குகள் போட்டு உடனடியாக இந்த நிகழ்ச்சிக்கு தடைபோட வேண்டும் என்று தடையை நேற்று முன்தினம் (12-ந் தேதி) கொடுத்தார்கள்.

சட்டப்படி எதிர்கொள்வோம்

உடனடியாக நாங்கள் அதற்கு பதில் கொடுத்தோம். அதில் உங்கள் தடை முறையல்ல. சட்ட விரோதமானது. நாங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் பிரச்சினைகள் வராது என்று தெரிவித்தோம். தனிநீதிபதி முன் நடந்த விசாரணையில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு கொடுக்கவும் அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவுப்படி, இன்று காலை தாலி அகற்ற வந்திருந்தவர்களில் 21 தம்பதிகளுக்கு மேல் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து நிகழ்ச்சிக்கு தடைபோடுகிறோம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எனவே நாங்கள் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டோம். அடிப்படை நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

தமிழக அரசு அம்பேத்கர் விழாவுக்கு தடைவிதித்து இருக்கிறார்கள். சட்டப்படி எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட குமபல்களில் படகு தள்ளாடுது.. அதுக்காகத்தான் இத்தனை நாடகம்!! கட்டுரை சொல்வதுபோல மாட்டிறைச்சி உண்பது எம் வழக்கமாக இருந்ததில்லை.. இந்தக் கூட்டத்துக்கு தலையில் பனி.. நாக்கில் சனி.. :o:D

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.unmaionline.com/new/1939-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html

தாலியின் சரித்திரம் - முனைவர் தொ. பரமசிவன்

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.

நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.

தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.

நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.

எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.

புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)

இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

s5.jpgகி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.

அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.