Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் 60 வீடுகளை கையகப்படுத்தி பாரிய இராணுவ முகாம்

Featured Replies

camp_8020_CI.JPG
 
வலி.வடக்கு வறுத்ததலைவிளான் கிராமசேவையாளர் பிரிவில் மக்களின் 60 வீடுகளை கையகப்படுத்தி இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைத்துள்ளனர்.
 
கடந்த 1975 ம் ஆண்டு குடியேற்ற திட்டத்தின் கீழ் 2 அரை பரப்பு காணி வழங்கப்பட்டு அங்கு 99 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. பின்னர் 1986ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து இருந்தனர்.
 
பின்னர் 1989ம் ஆண்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மக்கள் திரும்பினர். அவ்வேளை ஜேர்மன் நாட்டின் நிதியுதவியின் கீழ் 99 குடும்பங்களுக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டன.
 
அந்த வீடுகளில்  6 மாத காலம் கூட அவர்கள் வாழவில்லை. மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர்.
 
அன்று இடம்பெயர்ந்த மக்கள் 25 வருடகாலம் கழித்து கடந்த 11 ம் திகதியே மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி இருந்தனர். அவ்வேளை அவர்களின் வீடுகளில் சில வீடுகள் முற்றாகவும் சில வீடுகள் பகுதிகளவிலும் இடித்து அழிக்கப்பட்டு இருந்தது.
 
அத்துடன் 99 வீடுகளில் 39 வீடுகளே விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் வந்துள்ளது ஏனைய 60 வீடுகளையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி சுமார் 46 ஏக்கர் காணியில் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைத்துள்ளனர்.
 
அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலையே வாழ்ந்து வருகின்றார்கள்.
 
அதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் விவசாய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதனால் அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்தும் கூலி வேலைக்கு செல்லவேண்டிய நிலையிலையே உள்ளனர்.
 
  • தொடங்கியவர்

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை சுரேஸ் - எஸ்.சஜீவன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்

 

jaff_8025_CI.JPG

 

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
 
கடந்த 25 வருடகாலமாக 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தது அதில்  கடந்த 11ம் திகதி 590 ஏக்கர் நிலப்பரப்பு மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது.
 
அவ்வாறு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களையே இவர்கள் இன்றையதினம் சென்று பார்வையிட்டு இருந்தனர்.
அத்துடன் அங்கு துப்பரவு பணிகளில் ஈடுபட்டு இருந்த காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடி, அவர்களது பிரச்சனைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அரசு விடுவித்ததாக அறிவித்த காணிகளில் இராணுவத்தினர் மீண்டும் முகாம்களை அமைக்கின்றனர் இந்த செயற்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சாளருமான சுரேஸ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று வலிகாமம் வடக்கு பகுதியில் அண்மையில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை பார்வையிட்டு அங்கு வந்திருந்த மக்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார் அவர் தொடர்ந்து அங்கு குறிப்பிடுகையில்:- வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களிண் காணிகள் அரசு அறித்ததைப் போன்று முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இருப்பினும் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவு காணிகளில் 100 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தினர் இரண்டு பாரிய முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்த இராணுவ முகாம்கள் அந்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட வேண்டும் அரசாங்கம் இந்த நிலப்பகுதி எல்லாவற்றையும் சேர்த்துத்தான் 1000 ஏக்கர் என குறிப்பிட்டிருந்தது எனவே இராணுவம் அங்கிருந்து வெளியேறினால் தான் மக்கள் அங்கு குடியேற முடியும் இப்போது இராணுவ முகாம் அமைந்துள்ள இடங்களுக்கு உரித்துடைய மக்கள் உரும்பிராயிலும், கோப்பாயிலும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அந்தப்பகுதிகள் விடுவிக்கப்படவேண்டும். இராணுவத்தினர் காணிகளை விடுவிக்கின்ற பொழுது தங்களது முகாம்களை,சோதனைச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றுகின்றபொழுது பாரிய வேலிகளை அமைக்கின்றனர் இவ்வாறு திட்டமிடாமல் அமைக்கப்படும் வேலிகளினால் மக்களுக்குச் சொந்தமான வீடுகள் ஒருபக்கமும் கிணறுகள் மலசலகூடங்கள் இன்னொரு பக்கமும் பிரிக்கப்பட்டுள்ளது இராணுவத்தின் இந்த செயற்பாடுகளினால் மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற முடியாமல் உள்ளது மக்களின் வீடுகள்,தோட்டங்கள் என்பவற்றிற்கு குறுக்காக எந்தவித முன்யோசனையுமின்றி இராணுவத்தினர் வேலிகளை அமைத்து வருகின்றனர். ஆகவே அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிக்கும் பொழுது இவ்வாறான விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் மக்களின் வீடுகள் விடுவிக்கப்படும் போது அவர்களுக்கான வீதிகள் மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் இராணும் தான்தோன்றித்தனமாக வேலிகளை அமைக்கும் போது அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படுகின்றது. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளை இராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. பாதைகளை உள்ளடக்கி இராணும் வேலிகளை அமைக்கின்றது இதனால் மக்களுக்கு போக்குவரத்திற்கான பாதைகள் இல்லாத சூழல் இருக்கின்றது எனவே நான் இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கூடாக ஜனாதிபதி,பிரதமர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது காணிகளை ஊடறுத்து வேலிகள் அமைக்கப்படும் பொழுது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுகின்றனவா என்பதைப் பாருங்கள் வீதிகளை எந்தக் காரணமுமின்றி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் விடாமல் மக்கள் பாவணைக்குத் திறந்துவிடுங்கள் என நாம் கேட்கின்றோம் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருப்பதால் 200 வரையான குடும்கங்கள் தொடரந்தும் முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர் எனவே இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் மீள் குடியேற்ற அமைச்சர் இந்த விடயங்களை கவனத்திலெடுத்து மிகுதி நிலங்களையும் விடுவிக்கவேண்டும் என இந்த சந்தரப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் https://www.facebook.com/premachandran.kandiah/videos/vb.1126057432/10205643056932158/?type=2&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.