Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

"கிழக்கு கடற்கரை சாலை"


Suresh

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

andanan150.jpg

இங்கிலீஷ் படம் மாதிரி சேஸிங் ஸீன் - "கிழக்கு கடற்கரை சாலை" பற்றி தயாரிப்பாளர்

ஸ்ரீகாந்த், பாவனா, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ், கஞ்சா கருப்பு, முத்துகாளை நடிக்க எஸ்.எஸ்.ஸ்டேன்லி இயக்கும் படம் கிழக்கு கடற்கரைசாலை.மொத்தப் படமும் சென்னை டூ பாண்டிச்சேரி சாலைகளில் படமாக்கியிருக்கிறார்கள்.

பாடல் காட்சிகள் மட்டும் மூணாறு, ஆழியார் பகுதிகளில் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஹீரோக்களை பிரதானப்படுத்துகிற மாதிரி தலைப்பு வைத்து படங்கள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்... இதென்ன கலாட்டா? விசாரிக்கலாம் என்று போனால் இயக்குனர் ரீ ரெக்கார்டிங்கில் பிஸியாக இருப்பதாக தகவல் வந்தது.

பெரிய தயாரிப்பாளர்களே தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மொத்தப் படத்தயும் முடித்திருகிறார் அறிமுக

தயாரிப்பாளர் ஆர்.எஸ்.அந்தணன். பட ரிலீசுக்கான பரபரப்புக்கு நடுவே..நமக்காக கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்.

"தயாரிப்பாளரா பெரிய அனுபவம் கிடையாதே தவிர...பத்திரிகையாளரா, பத்திரிகை தொடர்பாளரா பதினைந்து ஆண்டுகளா சினிமாவில் இருக்கேன்.ஒரு படம் பண்றதுல உள்ள கஷ்டம்.. அதிலுள்ள பிரச்சினைகள் என்னங்கிறது எனக்கு நல்லாவே தெரியும்.

அதனால படம் தொடங்கறதுக்கு முன்னாடியே பக்காவா ப்ளான் பண்ணிட்டு அப்புறம்தான் படத்தை ஆரப்பிச்சோம். சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. நினைச்சதைவிட பட்ஜெட்டும் அதிகமாகிடுச்சு..

பட தயாரிப்புக்கு வந்தபிறகு இதுகூட இல்லேன்னா எப்படி! அதையெல்லாம் தாண்டி படம் ரொம்ப நல்லா வந்திருக்கு..எனக்கு அதுபோதும்." என்று முதல் பட அனுபவத்தைச் சொன்னார் அந்தணன்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் அவரே தொடர்ந்தார்.

"சின்ன வயசிலேருந்து சினிமான்னா...அதுக்கப்புறம்தா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெரியாத்தனமாக இந்தப்படத்தினைப்பார்த்தேன். கடி, செமக்கடி. ஒரே ஒட்டமாக ஒடி வந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவலுக்கு நன்றி கந்தப்பு அவர்களே.

Posted

இந்தப்படத்தை தியட்டரில பாக்கப்போய் நொந்து போனன் இதை டவுன்லோட் பண்ணினால் உங்கட பாண்ட்வித் தான் வீணாகும் சுத்த உதவாக்கரை படம்

Posted

நீங்கள் இப்படி சொன்னப்புறமும் பார்ப்பமா..... நன்றி

Posted

இப்படத்தினை திரையரங்கில் பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்தே படம் நன்றாக இருக்கவில்லை. இடைவேளையின் போது தமிழக இளைஞ்சர், தொலைபேசியில் அப்படத்துக்கு வராத நண்பரிடம்' மச்சான் நீ தப்பிட்டாய்' என்று சொன்னது கேட்டது. உங்கள் எதிரிகளினைப்பழிவாங்க நினைத்தால் அவர்களை இந்தத் திரைப்படத்துக்குப் போகச் சொல்லுங்கள்.

Posted

ஏன் இது படம் எடுப்பவர்களுக்கு புரிவதில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.