Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரக் கதிரைக்குச் செல்லத் தயார் என்ற மஹிந்த ஊழல் விசாரணையை மறுப்பதேன்: அஜித் பேரேரா

Featured Replies

Ajith-Perera-300x185.jpg

 

தேர்தல் பிரச்சார காலத்தின்போது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்கவும், மின்சாரக் கதிரைக்குச் செல்லவும் தயாரென வீராப்புப் பேசிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் செல்லுவதற்குத் தயங்குவதேன் எனப் பிரதி வெளிநாட்டமைச்சர் அஜித் பெரேரா இன்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
 
 
“இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு ஆணையிடப்பட்டால் இந்நாட்டில் எந்தவொரு பிரஜையும் வருவதற்கு கடமைப்பட்டுள்ளனர். முடியாது என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
 
“இலங்கை அரசியல் யாப்பில் அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்றுதான் உள்ளதே தவிர வாக்குமூலம் எடுக்கவோ விசாரணை செய்ய முடியாது என்றோ கூறப்படவில்லை. அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடிகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய முடியும்.
 
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான வோட்டர்ஸ் எட்ஜ் வழக்கு தொடரப்பட்டபோது உயர் நீதிமன்றம் இருபது லட்சம் செலுத்துமாறு உத்தரவிட்டது. அவர் அப்பணத்தை செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாக்குமூலம் பெறவே வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்குப் பாரிய ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்,” என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.
 
அங்கு மேலும் உரையாற்றிய பிரதி வெளிநாட்டமைச்சர்அஜித் பெரேரா:-
 
“இலங்கையிலுள்ள மதகுருமார் உள்ளிட்ட அனைத்து மக்களினதும் தேவை 19ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்களின் நலன் கருதி, அரசியல்வாதிகளின் பலத்தைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை பிற்போடவே எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டனர்.
 
“பல்வேறு தடைகளை தாண்டி சட்ட சிக்கல்களைத் தீர்த்து பின்னர் பாராளுமன்ற விவாதத்திற்குக் கொண்டு வரும் போது, முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டதைக் காரணங்காட்டி குழப்பம் விளைவிக்கின்றனர்.
 
“ஏனெனில் ஒரு சிலருக்கு இரண்டு தடவை மட்டுமே ஜனாதிபதியாக ஆட்சி செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆறு வருட ஆட்சிக்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ஆணைக்குழு சுதந்திரமாக இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரச நிதியை பாதுகாக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
“இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக மொழிப் பிரச்சினையின்றி வாழ மொழிகளுக்கான ஆணைக்குழுவை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் 19ஆம் திருத்தச்சட்டதை பிற்போட ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதன் காரணமாக அவ்விவாதம் 27ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
 
“இந்நிலையை மாற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் 27ஆம் திகதி அச்சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும். அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தான் அதீத கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் நேர்மையானவர். அவரை நாம் நம்புகிறோம். அவர் அதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பார்,” என்றும் பிரதி வெளிநாட்டமைச்சர் அஜித் பெரேரா அங்கு தெரிவித்தார்.
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொள்கை உருவாக்கல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 

வடிவேலின் காமெடி பார்த்திருப்பார் என நினைக்கிறன் அதுதான் மகிந்த அண்ணாச்சி தெரியாம உளறிவிட்டார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.