Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளுக்கு உணவு கிடைக்கும்வரை உண்ணாவிரதம்

Featured Replies

உறவுகளுக்கு உணவு கிடைக்கும்வரை உண்ணாவிரதம்

2003586185953862438_rs.jpg

யாழ்கள உறவுகளே,

எங்கள் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசாங்கம் திட்டமிட்டு பட்டினி போட்டு அழித்து வருகின்றது.

இதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றன.

போர்க்களத்தில் புலிகள் வீறு கொண்டு போராடுகின்றனர்.

அரசியலில் கூட்டமைப்பினர் உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர்.

ஈழத்திலும் சரி புலத்திலும் சரி தமிழர்கள் நாம் என்ன செய்கிறோம்.

எமக்கு துன்பம் ஏற்படும் போது எப்போதும் மாற்றனை குறை கூறுகின்றோம்.

எதிரி என்றுமில்லாதவாறு பாரிய அளவில் தமிழின அழிப்பை ஆரம்பித்துள்ளான்.

"எனக்கு பாதுகாப்பில்லை", "குடும்பச் சூழ்நிலை", "பண உதவி செய்தோம்" என்று கூறி எம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்வது அல்லது எமது பங்களிப்பை நாம் மட்டுப்படுத்திக் கொள்வது இறுதியில் எம்மினத்தை அழிவிலிருந்து காக்குமா?

அழிவுதான் எங்களுக்கு இறுதித் தீர்வா?

முயன்றால் முடியாதது எதுவுமில்லை, இயன்றவரை முயன்று பார்ப்போம், இல்லையெனில் முயன்ற திருப்தியுடன் சாவோம்.

அதற்கு முதற்படியாக நான் ஒரு சுய கட்டுப்பாட்டை பேண தீர்மாணித்துள்ளேன்.

பட்டினியால் தமிழ் மக்களை சாகடிக்கும் இந்த போக்குவரத்து தடை அகற்றப்படும் வரை என் ஒரு நேர உணவையாவது (இரவில்) கைவிடத் தீர்மாணித்துள்ளேன்.

இது அந்த மக்களின் வேதனையை நான் மேலும் உணர வழிவகுக்கும். அந்த ஒரு நேர உணவாவது உணவின்றி துடிக்கும் அந்த ஏழை மக்களுக்கு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

என்னுடன் இணைய விரும்புபவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.

நன்றி.

நல்லதொரு முயற்சி. ஆனால் இதை வெளியுலகத்திட்கு தெரிய படுத்துவதால் தான் ஏதாவது வழி கிடைக்கும். நமக்குள் நாமே வேதனை பட்டுகொள்வதில் பலன்கள் குறைவே.

  • தொடங்கியவர்

நல்லதொரு முயற்சி. ஆனால் இதை வெளியுலகத்திட்கு தெரிய படுத்துவதால் தான் ஏதாவது வழி கிடைக்கும். நமக்குள் நாமே வேதனை பட்டுகொள்வதில் பலன்கள் குறைவே.

கருத்துக்கு நன்றி...

இதனை நான் வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு செயற்பாடாக கருதவில்லை.

வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேறுவழிகளில் ஏற்கனவே நிறைய செய்தாகிவிட்டது.

வரவர அதில் நம்பிக்கையும் குறைந்து வருகின்றது. எமது விடுதலையை நாம் தான் வென்றெடுக்க வேண்டும்.

எமது பக்கம் நீதியும் நியாயமும் நேர்மையும் இருப்பதால் மட்டும் இன்றைய உலகம் எமக்கு உண்மையாக உதவப்போவதில்லை. பலம் இருந்தால் மட்டுமே அவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பார்கள்.

அண்மைய உலக நடப்புக்களையும் இன்றைய இந்தியப் பிரதமரின் அறிக்கையைப் பார்த்தாலே அது உங்களுக்கு நன்கு புரியும்.

முதலில் நாங்கள் அனைவரும் உளமார ஒன்றினைந்து முயற்சி செய்ய வேண்டும்.

அது எழுந்தமானமாக இல்லாமல் எம்மை வருத்தியாவது அதில் மிகவும் முயல வேண்டும்.

அப்போது புதிய வழிகள் நிச்சயம் தென்படும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இது எனக்கு இரண்டாம் நாள். ஆரம்பத்தில் எனது வீட்டில் கூட கேலியாக பார்த்தனர். வீட்டுச் செலவு பாதியாக குறையும் என்று கூறிப் பரிகசித்தனர்.

இங்கே களத்தில் கூட சிலர் இதனை கேலியா கருதியிருக்கக் கூடும். எவரும் கருத்துக்களை பதியாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால் நான் எனது இந்த முயற்சியை இங்கு பதிந்தமைக்கு காரணம் நிச்சயம் இதனை வாசிக்கும் ஒரு சிலராவது இதை பற்றி சார்பாக சிந்திப்பார்கள் என்பதனால் தான்.

நிச்சயம் சிலர் சிந்தித்திருப்பார்கள், சிலர் நடமுறைபடுத்தியிருக்கவும் கூடும்.

நான் செயற்பாட்டில் அதிகம் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டிருக்கிறேன். வந்தேன், வாசித்தேன், கருத்தெழுதினேன் என்பதுடன் நின்று விடாது தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்.

எனது தற்போதைய சூழலில் என்னால் செய்யக் கூடியதை உச்ச அளவில் செய்ய முயற்சிக்கிறேன்.

தனி மரம் தோப்பாகாது. ஆனால் பல தனிமரங்களே தோப்பாகின்றன.

எனது இந்த முயற்சி ஒரு சிறு ஆரம்பமே. இதனை கைக்கொள்ளும் சிலர் தமது சக்திக் கேற்ப நிச்சயம் தம்மாலியன்ற உச்ச பங்களிப்பை வழங்கத் தூண்டும் ஒரு படிக்கல்லாவே இதைக் கருதுகிறேன்.

அன்புடன்

உண்மையில் உங்களது செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள். உயர்ந்த எண்ணம்.

சாணக்கியன் மிகச்சிறந்த விடயம் தன் இனத்தில் தன் மண்ணில் ஆழ்ந்த அன்புள்ளவனுக்கே இவ்வுணர்வு பொங்கும். அதை நாம் உம்மில் காண்கின்றோம்.

அதுமட்டுமல்ல நீங்கள் போட்டுள்ள படம் சொல்லும் செய்தி யதார்த்தை சொல்வதாக அமைகின்றது. இலங்கையரசின்குறியும் காத்திருக்கும் கழுகின் குறிதான். வாழ்த்துக்கள்

நல்ல ஒரு முயற்சி...வாழ்த்துக்கள்...ஆனால

உங்களுடைய முயற்சி பாராட்டுதற்குரியது என் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு உங்களுடன் இணைந்து நானும் ஒருவேளை உணவை பிறக்கணிக்கிறேன் இன்றிலிருந்து

கண்ணீரோடு எனது நன்றிகள். வாழ்த்துக்கள்

நானும் எனது காலை உணவை ஒருவாரமாக நிறுத்தியிருந்தேன.

;ஆனால் என்னால் பகிரங்கமாக அதை செய்யமுடியாது முடிந்தால் அதைச்செய்ய தயங்கமாட்டேன்.(நான் தமிழீழத்திற்கு பக்கத்து நாட்டுத்தலைநகரில் கலவிகறகிறேன்) நீங்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களாயின் ஒருநாளெனிலும் உங்கள் நாட்டு உயர்மட்டங்கள் அறியத்தக்க வகையிலோ ஐ.நா பிரதிநிதிகள் அறியத்தக்க வகையிலோ உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உங்கள் விரதம் பலன் தரலாம். தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.

நல்ல முயற்சி நானும் உங்களுடன் இணைகிரேன் சாணக்கியன்

இருந்தால் மட்டும் போதுமா? அதை வெளி உலகிற்கு உணர்ந்த வேண்டாமா?

  • தொடங்கியவர்

கருத்தெழுதிய, இணைந்து கொண்ட மற்றும் கருத்தேதும் கூறாது மெளனமாகவே தங்களை இணைத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

அன்று மேலே இணைக்கப்பட்ட கருத்துப்படத்திற்கு கீழே உள்ள இன்றைய செய்தி விளக்கவுரையாக அமைந்துள்ளமை துரதிர்ஸ்டவசமானது.

வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் படையினராலும் துணை இராணுவக்குழுக்களாலும் பறிமுதல்.

மட்டக்களப்பு சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வாகரைப் பிரதேசத்திற்கு எடுத்துச் சென்ற உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை சிறிலங்காப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வாகரைப்பிரதேசத்திற்கான் போக்குவரத்துக்களை தடை செய்த சிறிலங்காப் படையினர் சர்வதேச நிறுவனங்கள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல தடைவிதித்துள்ளனர்.

இன்று காலை 9.00மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் மட்டக்களப்பு அரச அதிபரினால் ஏழு பார ஊர்திகளில் உணவுப் பொருட்களும் ஒரு நோயாளர் காவுவண்டி மருந்துப் பொருட்களும் வாகரைப் பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டன இன்று காலை 9.00மணிக்கு வாகரைநோக்கிப் புறப்பட்ட இப்பாரஊர்திகள் பகல் 1.00மணிவரை மாங்கேணி படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பிற்பகல் 4.00மணியளவில் மாங்கேணி படைமுகாமில் வைத்து சிறிலங்காப் படையினரும் துணை ஆயுதக் குழுவினரும் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டு மேற்படி பாரஊர்திகளை மட்டக்களப்பிற்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

- சங்கதி

வாகரைப் பிரதேசம் ஆக்கிரமிக்கும் வரை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பமுடியாது - சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு

மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் நிர்வாக பகுதியான வாகரைபகுதியை சிறீலங்கா படைகள் ஆக்கிரமிக்கும் வரை தமிழ்மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்ல சிறிலங்கா இராணுவம் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை வாகரைப்பகுதிக்கான அவசர அத்தியாவசியப்பொருட்களை அனுப்புவதற்கு மகிந்த ராஐபக்ஸ உறுதியளித்ததையடுத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் 35000 மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வாகரைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் மாங்கேணி படைமுகாமில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் திருப்பியனுப்பப்பட்டமை யாவரும் அறிந்ததே

இது குறித்து தற்போது கருத்து தெரிவித்திருக்கும் சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டுபகுதியான வாகரை பகுதியை ஆக்கிரமிக்கும் வரை தமிழ்மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல சிறிலங்கா இராணுவம் அனுமதிக்காது என சூளுரைத்துள்ளது.

-பதிவு

நல்ல ஒரு முயற்சி...வாழ்த்துக்கள்...ஆனால
  • தொடங்கியவர்

வாகரைக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதாக இராணுவம் கூறுகின்றது???

Food Convoy Enters LTTE Held Areas

2006-11-20 03:56:23

New_2_4.jpg

BATTICALOA: FOURTEEN VEHICLES with dry rations, five ambulances and forty-one stranded civilians in Government controlled areas of VAKARAI began to enter LTTE held areas across Government roadblocks Monday (20) afternoon following an understanding that has been made between the Security Forces and a consortium of Non Governmental Organizations.

Forty one civilians including twenty nine women and nine children awaiting to enter into un-cleared areas were also accompanied by the ICRC and SLMM officials on the basis that the same consortium were expected to bring back those stranded in LTTE held areas into Government controlled areas.

The continuous disruption of the flow of goods by the LTTE after intensifying their attacks on the surrounding MANKERNY and KADJUWATTHE areas in the past few days, caused problem of food shortages in VAKARAI areas prompting the public to leave and enter Government controlled areas.

http://www.army.lk/morenews.php?id=3361

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.