Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி ஆட்சியில் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி ஆட்சியில் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு - ரணில்

ra.jpg

 "சிறுபான்மையினரை அரவணைத்துக் கொண்டு மைத்திரி அரசு தொடர்ந்து பயணிக்கும். இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.'' இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். 

 
"2009ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய போர் நிறைவடைந்த போதும், மக்களின் பிரச்சினைகள் ஓய வில்லை. அதற்குப் பதிலாக இனவாதம் தழைத்தோங்கியுள்ளது. 
 
இவற்றுக்கு மைத்திரி அரசில் தீர்வு காணப்படும். தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் செயற்பட எமது அரசு நடவடிக்கை எடுக்கும்.'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 22ஆவது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
 
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தையும், வறுமையை ஒழிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி? திட்டத்தையும் வலுவூட்டும் நோக்குடன் இந்த சிரார்த்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
 
கொழும்பு, அளுத்கடை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரேமதாஸ சிலைக்கு அருகாமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட இரங்கல் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உட்படப் பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
 
அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, "பொதுமக்களுக்காகவே பாடுபட்ட மக்களின் பிரச்சினைகளை நன்குணர்ந்த ஒரு சிறந்த தலைவன் என்ற பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு உண்டு. அவர் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகள் வரும்வரை பார்த்துக்கொண்டிருப்பவர் அல்லர். 
 
பிரச்சினைகளைத் தேடிச்சென்று தீர்வு வழங்கிய ஒரு சிறந்த தலைவன். இவர் பொதுமக்கள் மத்தியில் சிறுபான்மையினருக்கு நெருக்கமான மற்றும் சிறுபான்மையினருக்கு பல சேவைகளை ஆற்றிய தலைவராகவே இன்னும் அடையாளங் காணப்பட்டு வருகிறார்.
 
பிரேமதாஸவின் 22ஆவது சிரார்த்த தினம் தொடர்பில் அவரது மனைவி என்னிடம் கலந்துரையாடியபோது, ""பிரேமதாஸ உயிரிழந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்ற நிலையில், அவரது சிரார்த்த தின நிகழ்வில் ஜனாதிபதி ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் தடவை'' எனக் குறிப்பிட்டார். அந்த முதல் ஜனாதிபதியாக நான் இருப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
 
ரணசிங்க பிரேமதாஸவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உள்ளன. அவரிடமிருந்து பெற்ற நல்ல படிப்பினைகளைக்கொண்டு நாம் எமது எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்'' என்றார்.
 
தொடர்ந்து பிரதமர் உரையாற்றுகையில், "தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், பறங்கியர் என எந்த இனமாக இருந்தாலும் நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்களைப் பார்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ. 
 
இனவாதத்திற்கும், தீவிரவாதத் திற்கும் எதிரான அவர், நாட்டின் இனவாதத்தை ஒழிக்க கடுமையாகப் பாடுபட்டார். தமிழ் மக்களுக்காகப் பெரிதும் பாடுபட்ட ஒரு தலைவராக இவர் விளங்கினார். அக்காலத்தில் எதிரியாக விளங்கியது வறுமையே. 
 
எனவே, அதனை ஒழிக்கும் வகையில் தமிழ், சிங்கள மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். அந்தவகையில், பிரேமதாஸ ஆரம்பித்துவைத்த நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 
 
2009ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய போர் நிறைவடைந்தபோதிலும், மக்களின் பிரச்சினைகள் ஓயவில்லை. அதற்குப் பதிலாக இனவாதம் தலைத்தோங்கியுள்ளது.
பிரேமதாஸவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு மைத்திரி அரசில் தீர்வு காணப்படும். 
 
தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு எதிர்க்காலத்தில் செயற்பட எமது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.