Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் மாபெரும் ஊடகப்படுகொலை தினம் : உதயன் குழுமத்தினால் அனுஸ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தின் மாபெரும் ஊடகப்படுகொலை தினம் : உதயன் குழுமத்தினால் அனுஸ்டிப்பு
98e5f5d4d43f0df0b65ba5dc17295bf8.jpg

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த அசாதாரண சூழலின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டனர்.

 
மேலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கான உதவி வழங்கும் திட்டம்,யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் 'உதயன் குழுமத் தலைவருமான' ஈ.சரவணபவனினால் ,இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
 
 
 
அத்துடன் ஊடக சுதந்திர தின நிகழ்வும் - கண்காட்சியும் யாழ்.பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
 
 
இன்று காலை 10.20 மணிக்கு நிகழ்வுகள், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் 'உதயன் குழுமத் தலைவருமான' ஈ.சரவணபவனின் தலைமையில் ஆரம்பமானது. முதலில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் - ஊடகப் பணியாளர்களுக்கான ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
 
 
ஈகச் சுடரினை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.கேசவராஜ், யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன், யாழ்.மாவட்ட உதவி அரச அதிபர் சா.சுதர்சன்,யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன், மற்றும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
 
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட உதயன் ஊடகவியலாளர் ரஜிவர்மன் மற்றும் உதயன் அலுவலகச் சாரதி பாஸ்கரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், கேலிச்சித்திர கலைஞர் பயஸின் குடும்பத்தினருக்கும், 'உதயன் குழுமத் தலைவரும்', யாழ்;. - கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனினால், நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
 
 
 
5677675656.jpg
 
569776454354.jpg
 
565656.jpg
 
5874255.jpg
 
56546567.jpg
 
56456455354.jpg
 
65534y564.jpg
 
57798956.jpg
 
4878867.jpg
 
46698089.jpg
 
788888.jpg
 
78666.jpg
 
78777.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=690604011802183657#sthash.cUihuvE8.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.