Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வலுச்சமநிலையும் எமது வரலாற்றுக் கடமையும்.

Featured Replies

தமிழீழத்தின் இராணுவ வலுச்சம நிலையில் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் கைத்தொழில் துறைகளின் முக்கியமும் நாம் இன்று எதிர்கொள்ளும் வரலாற்றுக் கடமையும்.

பொருளாதாரம்

ஒரு நாட்டின் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படையான விடையங்கள் முதலில். தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவுகள் செலவுகள் போலவே ஒரு நாட்டிற்கும் வரவுகள் செலவுகள் உண்டு. ஒரு நாட்டிற்கு வருமானங்களை உருவாக்கும் முக்கிய வழிகளாக பின்வருவனவற்றை கொள்ளலாம்

-1- (குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை உள்ள) மக்களிடம் இருந்து அறவிடப்படும் தனிநபர் வருமான வரிகள்,

-2- அந்த நாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள்,

-3- ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள்,

-4- சேவைகள் மற்றும் பொருட்கள் விற்கப்படும் போது அறவிடப்படும் வரிகள்,

-5- நாட்டின் இயற்கை வளங்கள் வர்த்தகப் படுத்துவதால் விற்க்கப்படுவதால் கிடைக்கும் வருமானங்கள்.

பொதுவாக தனிநபர் வருமான வரிகளிடம் இருந்து பெறப்படும் வருமானமானது, அந்த நாட்டில் வழங்கப்படும் மக்களிற்கான அடிப்படை அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், கல்வி, சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, நிவாரண உதவிகள், ஓய்வ+தியம் போன்றவற்றிற்கே போதுமானதாக இருப்பது இல்லை. எனவே ஒரு நாட்டை நடத்துவதற்கான பெருமளவு வருமானத்தை தருவது மேலுள்ள வழிகளில் கடைசி நான்குமே.

சிங்கப்ப+ர், யப்பான் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் மனிதவளத்திற்கும், கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான அடிப்படைக்காரணம் அவர்களிடம் ஏற்றுமதி செய்யவும் சந்தைப்படுத்தவும் இயற்கை வளங்கள் எதுவும் பெரிதாக இல்லை. எனவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தமது மனித வளங்கள் மூலமும், தொழிநுட்ப அறிவினாலும் கைத்தொழில் வல்லமையினாலும் அவற்றை நுகர்வுப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்கிறார்கள். இவ்வாறு ஒப்பீட்டளவில் குறைந்தவிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பொறுமதி சேர்க்கப்பட்டு இறுதி நுகர்வுப் பொருளாக மாற்றமடைவதற்கு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் அவற்றில் வேலை செய்ய தொழிலாளர்களும் தேவை. இவை நிறுவன வரிகள், வேலை செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கும் வருமான வரிகள், தொழிற்சாலைகளால் நிறுவனங்களால் கிடைத்த வேலை வாய்ப்பை கொண்ட சமூகத்தில் நடக்கும் சேவை மற்று பொருட்களின் விற்பனை வரிகள், செய்து முடித்த இறுதிப் பொருளை ஏற்றுமதி செய்யும் போது அறவிடும் வரிகள் என்று அந்த நாட்டிற்கான வருமானத்தை பலவழிகளில் அதிகரிக்கிறது பலப்படுத்துகிறது.

மறுமுனையில் வெறுமனே இயற்கை வளங்களை நேரடியாக சந்தைப்படுத்துவதில் ஏற்றுமதி செய்வதில் தங்கியிருக்கும் நாடுகளிற்கு மசகு எண்ணையை ஏற்றுமதி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளை உதாரணத்தில் கொள்ளலாம். இயற்கை வளங்கள் மூலம் நேரடியாக நாட்டிற்கு போதிய வருவாயை உருவாக்கிக் கொண்டாலும் அந்த பொருளாதாரத்தில் மனிதவளம், தொழிநுட்பம் கைத்தொழில் போன்றவை முக்கியம் அற்று இருபதால் உள்ள பலவீனங்கள் மிகவும் வெளிப்படையானது. எனவே தான் ஏற்றுமதியை மைய்யப்படுத்திய பொருளாதாரம் என்பது வளமான மக்கள் சமுதாயத்தை கொண்டிருக்கும் வெற்றிகரமான நாடுகளில் காணக் கூடியது. ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம் என்பதை எப்பவும் தொழிட்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்வது என்று அர்த்தத்தில் பார்க்கப்பட வேண்டியதில்லை. பிரித்தானியா சிங்கப்ப+ர் போன்ற நாடுகள் வணிக சேவைகளை (financial services) கவரும் நாடுகள். கணனி மற்றும் தொலைபேசி மூலம் உதவிகள் வழங்கும் சேவைகளிற்கு (call centers, back office outsourcing) இந்தியா பிலிப்பைன்ஸ் போன்றவை புகழ்பெற்றிருக்கின்றன. இவை எல்லாம் மனிதவளங்களை மட்டுமே மூலப்பொருட்களாக கொண்டு சேவைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளிற்கு உதாரணங்கள்.

இவ்வாறு நாடுகள் பல வழிகளில் தமது வருமானத்தை உருவாக்கி, பெருக்கி பலப்படுத்திக் கொள்கின்றன. இவற்றிக்கு மேலாக வேறு நேச நாடுகளின் சர்வதேச அபிவிருத்தி அமைப்புகளின் உதவித்திட்டங்கள் கடன்கள் என்று வேறு வழிகளிலும் வரவுகள் உண்டு. செலவுகள் என்று சுருக்கமாக முக்கியமானவற்றை பார்த்தால் நாட்டிலுள்ள மக்களிற்கான அடிப்படை நிர்வாக அலகுகளிற்கான செலவுகள், அபிவிருத்தித் திட்டங்கள், மற்றும் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான செலவுகள். ஆனால் யுத்தத்தில் ஈடுபடும் ஒரு நாடு தனது வருவாயில் கணிசமான அளவையோ அல்லது பெரும்பகுதியை பாதுகாப்பு செலவீனங்களிற்கு ஒதுக்குகிறது. இதுவே ஒரு யுத்தகாலத்திற்கான வரவுசெலவுத்திட்டத்தின் நோக்கம். இதில் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கான செலவீனம் என்பது எப்பொழுது முன்னுரிமை பெறுகிறது. இதையே இன்று சிறீலங்கா செய்கிறது. அதைத்தான் கடந்த காலங்களில் யுத்தத்தில் ஈடுபட்ட எல்லா நாடுகளும் செய்தன. அதையே தமிழீழமும் தன்னை பாதுகாத்துக் கொள்ள இன்று செய்ய வேண்டும். அதாவது ஒரு நாட்டின் எல்லைகளை தரையிலும், கடலிலும் வானிலும் பாதுகாக்க, அந்த நாட்டில் இயல்பு வாழ்க்கையை பேணவும் மக்களை பாதுகாக்கவும் என்ற தேசியபாதுகாப்பு என்பது அந்த நாட்டின் சுதந்திரம் இறைமை என்பவற்றினூடாக அந்த நாட்டின் இருப்பையே அர்த்தப்படுத்துவதாகும். அந்தவகையில் அந்த நாட்டின் பொருளாதாரமும் ஒரு யுத்தகாலத்திற்கு ஏற்ற பொருளாதார மறுசீரமைப்பு எழுச்சி மூலம் ஆயுதமாகிறது. வடஅத்திலாந்திக் பாதுகாப்பு கூட்டமைப்பின் போரியல் விதிகளின் படி பொருளாதாரம் ஒரு நாட்டின் ஆயுதம் மாத்திரமல்ல இன்னொரு நாட்டின் போரிடும் ஆற்றலை திறமையை நீண்டகாலத்திட்டத்தில் சிதைப்பதற்கு ஏற்ற ஒரு இலக்கு. எனவே ஆக்கிரமிப்பை முறையடித்து தமிழீழம் தன்னை பாதுகாத்துக் கொள்ள தனது பொருளாதார ஆயுதத்தை பலப்படுத்த வேண்டிய அதே நேரம் எதிரியின் பொருளாதார ஆயுதத்தை பலமிழக்கச் செய்ய வேண்டும்.

ஒரு போராட்ட குழுவாக கரந்தடி படையாக இருக்கும் பொழுது உள்ள செலவுகளிற்கும் மரபுவழி இராணுவமாக ஒரு தேசியத்தின் பாதுகாப்பிற்கான முப்படைகளை கொண்ட கட்டமைப்பாக இருக்கும் பொழுது உள்ள செலவுகள் வெறும் பராமரிப்பு நிர்வாகரீதியிலேயே பல மடங்காக அதிகரிக்கிறது. அடுத்து அந்த தேசியம் எதிர்கொள்கிற ஆபத்துகள், எதிரிகளின் வளங்கள் ஆயுத தளபாடங்கள் கருவிகள் போன்றவை அந்தத் தேசியம் முதலீடு செய்ய வேண்டிய பாதுகாப்பு கருவிகள் ஆயுத தளபாடங்களை தீர்மானிக்கிறது. அந்த வகையில் எதிரியின் வளங்களோடும் முதலீடுகளோடும் ஒப்பிடக்கூடிய அளவில் தன்னை பாதுகாக்க முயலும் நாட்டிடமும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இது முடியும் முடியாது என்ற தர்க்கங்களிற்கு அப்பாற்பட்டது ஏன் என்றால் இது அந்த நாட்டின் தேசியத்தின் இருப்பை உறுதி செய்யப்போவது என்றரீதியில் அந்த தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களால் அதை ஆதரிப்பவர்கள் நேசிப்பவர்களால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை. ஆனால் தமிழீத்தின் பெருளாதார வளங்கள் வருவாய் என்பது மக்கள் கொடுக்கும் உதவிகள், புலிகளின் முதலீடுகள் என்று மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. சிறீலங்காவின் 2006 இற்கான பாதுகாப்பு செலவீனம் 889மில்லியன் டொலர்கள். தமிழீழத்தின் பாதுகாப்பு செலவீனத்திற்கு சிறீலங்காவின் இராணுவ செலவீனத்தின் 1 வீதமான 8.8 மில்லியன் டொலர்களை சம்பாதிப்பதே மிகவும் கடினமான விடையம். இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த தொகைகள் வெறும் 1 வருடத்திற்கானது என்பதையும் ஒவ்வொரு வருடமும் இது போன்ற அளவிலான வளத்தை தொடர்ச்சியாக திரட்டுவது மிகவும் சிக்கலானது. தமிழீழத்தின் தற்போதைய மிகவும் வறுமையான பொருளாதார நடவடிக்கைகள் அங்குள்ள பொது மக்களிற்கான அடிப்படை நிர்வாக அலகுகளை பராமரிப்பதற்கான செலவுகளை நிவர்த்தி செய்யும் நிலையிலேயே இல்லை. எனவே தமிழீழத்தின் தேசிய பாதுகாப்பு நிதியம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் உதவிகளிலும் வெளிநாட்டு முதலீடுகளிலும் தான் முற்று முழுக்க தங்கியிருக்கிறது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமிழீழ தேசிய பாதுகாப்பு கட்டமைப்புகளை பேண தமிழீழத்தின் பாதுகாப்பு நிதியம் தொடர்ச்சியாக வலுவானதாக எதிரியின் வருடா வருடம் அதிகரித்து வரும் செலவீனங்களோடு ஒப்பீட்டளவில் பொருத்தமான நிலையில் தொடர்ச்சியாக போணப்பட வேண்டும்.

முதல் குறிப்பிட்டது போல் சிறீலங்காவின் பொருளாதாரம் என்னும் ஆயுதத்தை பலமிளக்கச் செய்ய வேண்டும் சமாந்தரமாக தமிழீழ தேசியத்தின் பொருளாதாரம் என்னும் ஆயுதத்தை வலுப்படுத்த வேண்டும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடாக சிறீலங்காவால் சுயமாக திரட்டக்கூடிய யுத்தகால பொருளாதார வளத்தையும் பிற நாடுகளிடம் இருந்து பெறும் உதவிகளையும் எம்மால் சம அளவில் ஈடு செய்வது இயலாத காரியம். எனவே எதிரிக்கும் எமக்கும் இடையிலான அந்த இடைவெளியை சிறீலங்காவின் சுய பொருளாதார நடவடிக்கைகளை இலக்காக வைத்து தண்டிப்பதால் தான் குறைக்க முடியும். சிறீலங்காவின் பொருளாதார ஆயுதத்தை அதன் மூலத்தில் திரட்டிக் கொள்ளும் இடங்களில் வழிகளில் தடைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வருவதன் மூலம் பலவீனப்படுத்தலாம். அடுத்தாக அவ்வாறு தடைகளைத் தாண்டிப் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை பயங்கரவாத அடக்குமுறை ஆயுதமாக மாறிய நிலையில் அழிக்கப்படுவது. இரண்டாவதை செய்ய இராணுவ முறையைப் பின்பற்ற வேண்டும் அந்தவகையில் அதை இலவசமாக செய்ய முடியாது. சிறீலங்கா தனது பொருளாதார ஆயுதத்தை திரட்டும் நிலைகளில் பலவீனமாக்கும் பொழுது அதற்கு தமிழ் தேசியம் கொடுக்கும் விலை இரண்டாவதான இராணுவ வழிகளை விட மிகவும் குறைந்தது. எனவே தான் புலம்பெயர்ந்தவர்கள் வீச்சுடன் சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் நீண்ட காலத்திட்டத்தில் உறுதியோடு இறங்குவது அவசியமானது.

அடுத்து ஒரு நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை பேணிப் பராமரிக்கக் கூடிய பொருளாதார வளத்தை நீண்ட காலநோக்கில் அந்த நாட்டில் வழமையாக நடக்ககூடிய பொருளாதார நடவடிக்கைள் மூலம் தான் திரட்ட முடியும். எனவேதான் பொருளாதாரம் என்பது தமிழீழ தேசிய பாதுகாப்பு கட்டமைப்பாக வழர்ந்துள்ள எமது தமிழீழத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க சர்வதேச மற்றும் பிராந்திய சக்த்திகளிற்கும் சிறீலங்காவிற்கும் ஒரு நன்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதமாகிறது. கூடவே வெளிநாடுகளில் புலிகளை தடை செய்வதால் இதை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அதாவது தற்பொழுது உள்ள தமிழீழத்தின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை கால இழுத்தடிப்பு மூலம் சிதைக்க முடியும் என்ற ஆபத்து உண்டு. இடைக்காலதீர்வில் நாட்டம் இல்லாது இருப்பதும் அது நோக்கிய நகர்வுகளை சர்வதேசமும் பிராந்திய சக்திகளும் திட்டமிட்டு குளப்பியதற்கு முக்கிய காரணமாகவும் இதை கொள்ளலாம். அதாவது இடைக்கால தீர்வில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை வரும் பொழுது அது தமிழ்தேசியம் தன்னை தக்க வைத்துக் கொள்ளுவதற்கான பொருளாதார தளத்தை பெற்றுவிடும். எனவே கால இழுத்தடிப்புகளை எதிர்கொள்ள கூடிய பலம் இருக்கும். அந்தவகையில் தமது போரிடம் ஆற்றலையும் வளங்களையும் பேணியபடி இறுதித் தீர்வை பேசித்தீர்ப்பதற்கு தேவையான காலத்தில் இறுதிவரை ஒரு பலமான நிலையில் இருந்தபடியே செலவிட முடியும். இன்று யுத்தநிறுத்தம் அமைதிப் பேச்சுக்கள் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு பொருளாதார தடைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை அற்ற சூழல், கடத்தல்கள், கொலைகள் என்ற கெடுபிடிகளோடு இனஅழிப்புகளோடு இந்த தீர்வு அற்ற சூழ்நிலையை அரசியல் வெறுமையை தொடராது புலிகள் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தமிழர்கள் மத்தியில் குரல்கள் ஒலிக்கின்றன. ஏன் இன்னமும் புலிகள் சர்வதேசத்தில் நம்பிக்கை இழக்கவில்லை, ஏன் பெறுமை காக்கிறார்கள். யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்ற வேண்டும் சிறீலங்காவின் பயங்கரவாதத்தை இராணுவரீதியில் முறையடிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலிக்கின்றன. அவ்வாறு செய்வது இன்றய தீர்வு அற்ற அரசியல் வெறுமையில் இருந்து அங்கீகாரம் அற்ற இராஜதந்திர சட்டரீதியிலான வெறுமைக்கு செல்வதாகத்தான் இருக்கும்.

அதாவது இன்று தீர்வு அற்ற அரசியல் வெறுமையில் இருந்து கொண்டு தீர்வு கேட்டு சர்வதேசத்தோடு இணைந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையிழந்து நாமாக தீர்வை இராணுவரீதியில் அடைய வேண்டும் என்கிறார்கள். எனவே அந்த தீர்வு ஆரம்பத்தில் சர்வதேசத்திற்கு ஏற்புடையதாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகிறது. சர்வதேசம் நாமாக தேடிக் கொள்ளும் தீர்வை ஏற்றுக் கொள்ளும் பொழுது தான் எமது தீர்விற்கான அதாவது சுதந்திர தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும். அதுவரை நாம் அந்த தீர்வை பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ளவதோடு மாத்திரமல்லாது அந்த இறுதி அங்கீகாரத்திற்காக சர்வதேச மட்டத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் இன்று நாம் தயாரா? தமிழர் தாயக பிரதேசங்களில் உள்ள மக்களின் தன்னிறைவு அடைய முடியாத தேவைகளை ஒரு அங்கீகாரம் அற்ற சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து பல வருடங்கள் வேண்டாம் சில வருடங்கள் ஆயினும் தொடர்ந்து வழங்குவதற்குரிய எழுச்சி எம்மிடம் வந்துவிட்டதா? அடுத்து அந்த இறுதி அங்கீகாரத்திற்காக உலகளாவியரீதியில் கருத்தியல் தளங்களை உருவாக்க தயாராக இருக்கிறோமா? மொன்ரிகினிரோ இவ்வாறான ஒரு வெறுமையில் இருந்தாலும் மேற்குலகின் முழு ஆதரவு இருந்ததால் அந்த வெறுமையில் இருந்து தன்னை பலப்படுத்தி அண்மையில் விடுவித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்த நிலையில் இன்னும் பல தேசியங்கள் உலகில் இருக்கின்றன, உதாரணத்திற்கு கொசவோ, ரிறான்ஸ்டெனிஸ்ர்றியா, தென் ஒஸ்ஸெற்றியா, அப்காசியா. கொசவே இன்றுள்ள இடைக்காலத் தீர்வோடு முழு அங்கீகாரம் அற்ற நிலையை வென்றெடுத்ததே முற்று முழுக்க மேற்குலகின் ஆதரவோடு தான். ஏனைய 3 தேசியங்களும் ரஸ்யாவின் முழு வெளிப்படையான ஆதரவுடன் தான் ஒரு சர்வதேச அங்கீகாரம் அற்ற இராஜதந்திர சட்டரீதியான வெறுமையில் பலவருடங்களாக இருக்கிறார்கள். இந்த தேசியங்களால் இவ்வாறு நீண்டகாலத்திற்கு தாக்குபிடிக்க கூடியதாக இருப்பதற்கு அவர்களை பொருளாதாரரீதியில் வேறு நாடுகள் ஆதரித்தது முக்கியமாகும். இப்படிப்பட்ட ஆதரவு எதுவும் அற்ற நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை மட்டுமே நம்பி தான் இன்று தமிழீழம் இருக்கிறது. அந்த சவாலை எதிர்கொள்ள கடமையை செய்து முடிக்க அவர்கள் தயாரா? அதற்கு முதலில் அப்படி ஒரு தேவை கடமை சவால் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன் பின்னரே அடுத்த நிலையான அதை நோக்கிய தயார்ப்படுத்தல் பற்றி சிந்திக்கலாம். நாம் இன்னமும் அந்த தயார்படுத்தலுக்கு முன் நிபந்தனையான அந்த தேவையை கடமையை இனங்கண்டவர்களாகவோ அதற்குரிய ஆரம்ப நிலை விழிப்புணர்வையே அடைந்துவிட்டதாக தெரியவில்லை.

எனவே யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு நாடுகளிற்கிடையிலான இராணுவ வலுச்சமநிலை என்பது வெறும் 1 பரிமாண இராணுவ விடையம் சார்ந்தது அல்ல. அதில் பொருளாதாரம் முக்கிய பங்குவகிக்கிறது. அந்த பொருளாதாரத்தை வலுப்படுத்தி தக்கவைக்க அங்கீகரம் முக்கியமானது. பொருளாதார வளங்களை பேதிய அளவில் தேசிய பாதுகாப்பிற்கு என ஒதுக்குவது என்பது மட்டும் போதுமானது அல்ல. பாதுகாப்புத்துறையில் மாத்திரம் அல்ல எந்த துறையிலும் பொருளாதார வளங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள அத்தியாவசியமானது திறமையான அர்பணிப்புடனான மனிதவளங்கள். சிறீலங்காவிடம் தாராளமாக கிடைக்கும் பொருளாதார வளத்தை பயன்படுத்த அர்பணிப்பான மனிதவளங்கள் இல்லை என்பது பலவீனம் என்றால் தமிழீழத்திடம் அந்த அரிய விலைமதிக்க முடியாத மனிதவளங்களை பாதுகாக்ககூடிய பொருளாதார தொழில்நுட்ப ஆயுதவளம் இல்லை. அதாவது சனத்தொகையில் மிகவும் பலவீனமான தமிழீழம் நாட்டுப்பற்றுள்ள கண்ணியமான விலைமதிக்க முடியாத போராளிகள் தமது கடமையை குறைந்த உயிரிழப்புகளோடு ப+ர்த்தி செய்ய வைக்க முடியாது தவிக்கிறது. மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளங்களை வைத்துக் கொண்டு தொழில்நுட்பரீதியில் பலம் பெற சுயமுயற்சிகள் தான் ஒரே வழியாகிறது. அடுத்ததாக எமது தொழிநுட்ப மற்றும் கைத்தொழில்துறைகளின் பலவீனங்கள் பற்றி பார்க்கலாம்.

இயற்கை வளங்கள் மூலம் நேரடியாக நாட்டிற்கு போதிய வருவாயை உருவாக்கிக் கொண்டாலும் அந்த பொருளாதாரத்தில் மனிதவளம், தொழிநுட்பம் கைத்தொழில் போன்றவை முக்கியம் அற்று இருபதால் உள்ள பலவீனங்கள் மிகவும் வெளிப்படையானது

ஒரு -விளக்கபூர்வமான கட்டுரை - குறுக்காலபோவான்!

அந்த பலவீனங்களே - பணக்கார நாடுகளின் பலமாய் போயின!

மனிதவளம் ஒரு காரணம் -என்பதில் -பெரிதாய் உடன்பாடு இல்லாவிடிலும்...

தொழில் நுட்பம்- சுயவேலைத்திட்டம்..

போர் தவிர்ந்த - பலமுக ஆளுமை ...

எம் - தேச விடுதலையை பொறுத்தவரை!

" ஒரு - ஆயுத புரட்சியில் ஈடுபட்டு -அழிவு தன் இனத்தாலயே வரும்போது -

ஜன நாயகம் என்னு வித்தை காட்டி - உயிர் பிழைக்கிறார்கள்-

சரி அப்பிடி ஒரு நிலமை வந்தாலும் கோவமெல்லாம்- யார் மேலயிருக்கணும் -?

தமிழர் மேலதான் காட்டுறாங்க அது ஏன்?-

இனம்மேல பாசம் -உதாரணம்- ஜே-வி-பி!!"

எதிர்மறை - என்ன சொல்ல நாங்க எங்க பக்கதில இருந்து!

எல்லாருக்குமே தெரிந்ததுதான்!

ஈபிடிபி- அது - இது - சொறி சிரங்கு - என்னு நீளும்!!

ஒரு சிங்களவன் - தான் - தோற்றாலும்- சிங்களவன் பக்கமே சாய்வான்!

போகட்டும் -மேலே சொன்ன உங்க கருத்தில் -

நான் சொல்ல நினைத்தது ....

முயற்சிகள் - நிறைய இருந்தாலும் - முழுமைத்துவம் -ஒரு போதும் சாத்தியமாய் - இருக்காது என்பதே பலர் கருத்து!

பங்களிப்பில் பின்வாங்குவார்கள்!

  • தொடங்கியவர்

வர்ணன்

"போர் தவிர்ந்த - பலமுக ஆளுமை ..."

என்று என்னத்தை சொல்லவாறியள்? மேற்குலகில் உள்ள பல நாடுகளும் நாம் இன்று சந்திப்பதைவிட மோசமான கொடிய போர்களை தம்மீது திணிக்கப்பட்டபோது எதிர் கொண்டவர்கள் மாத்திரமல் தாமாகவே வளச்சுறண்டல்களிற்காகவும் நடத்தியவர்கள். இரண்டிலும் அவர்கள் வெற்றி பெற்று இன்றும் தனித்துவமான தேசியமாக நாடாக நிலைத்திருந்ததற்கு காரணம் அவர்களிடம் இருந்த எல்லோரும் தலைவர்கள் என்று பதவிக்கு அலையாது எட்டப்பர் கூட்டமாகாது ஒற்றுமையாக தமது இனத்தில் விசுவாசமாக இருந்தது. தம்மைத் தாமே ஆழவேண்டும் மற்றவரிற்கு அடிபணியக்கூடாது என்ற சுயமரியாதை. இன்னொருவருக்கு சொந்தமாக நாடு அமைத்து சுதந்திரமாக வாழமுடியும் என்றால் தம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை.

"மனிதவளம் ஒரு காரணம் -என்பதில் -பெரிதாய் உடன்பாடு இல்லாவிடிலும்..."

இதில என்னத்தில உடன்பாடில்லை? நீங்கள் என்னதை நம்புறியள் என்று சொன்னால் திருத்திக் கொள்ள அல்லது மேலும் விளக்கப்படுத்தி எழுத உதவியாக இருக்கும்.

வர்ணன்

"போர் தவிர்ந்த - பலமுக ஆளுமை ..."

என்று என்னத்தை சொல்லவாறியள்? மேற்குலகில் உள்ள பல நாடுகளும் நாம் இன்று சந்திப்பதைவிட மோசமான கொடிய போர்களை தம்மீது திணிக்கப்பட்டபோது எதிர் கொண்டவர்கள் மாத்திரமல் தாமாகவே வளச்சுறண்டல்களிற்காகவும் நடத்தியவர்கள். இரண்டிலும் அவர்கள் வெற்றி பெற்று இன்றும் தனித்துவமான தேசியமாக நாடாக நிலைத்திருந்ததற்கு காரணம் அவர்களிடம் இருந்த எல்லோரும் தலைவர்கள் என்று பதவிக்கு அலையாது எட்டப்பர் கூட்டமாகாது ஒற்றுமையாக தமது இனத்தில் விசுவாசமாக இருந்தது.

தம்மைத் தாமே ஆழவேண்டும் மற்றவரிற்கு அடிபணியக்கூடாது என்ற சுயமரியாதை. இன்னொருவருக்கு சொந்தமாக நாடு அமைத்து சுதந்திரமாக வாழமுடியும் என்றால் தம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை.

"மனிதவளம் ஒரு காரணம் -என்பதில் -பெரிதாய் உடன்பாடு இல்லாவிடிலும்..."

இதில என்னத்தில உடன்பாடில்லை? நீங்கள் என்னதை நம்புறியள் என்று சொன்னால் திருத்திக் கொள்ள அல்லது மேலும் விளக்கப்படுத்தி எழுத உதவியாக இருக்கும்.

நான் சொல்ல வந்தது -உங்கள் கருத்திலையே இருக்கு -அதையே -அடையாளபடுத்தி இருக்கிறேன்!

உங்கள் கட்டுரையின் - தாக்கம் எல்லருக்கும் -விளங்க!!

அதை இப்பிடி :

ஒரு சிங்களவன் - தான் - தோற்றாலும்- சிங்களவன் பக்கமே சாய்வான்!

:unsure:

  • 1 month later...
  • தொடங்கியவர்

தொழில்நுட்பத் திறனும் கைத்தொழில்ற் பலமும்

முன்னய "எமது வரலாற்றுக் கடமை" என்ற பதிவில் பொருளாதார ரீதியில் எமது பலவீனம் பற்றியும் எதிரியின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதன் முக்கியம் பற்றியும் பார்த்தோம். அதாவது பெறுமதி மிக்க அர்ப்பணிப்புள்ள போராளிகளை காப்பாற்ற பொருளாதாரரீதியில் எம்மைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதே வேளை எதிரியை பொருளாதாரரீதியில் பலவீனப்படுத்த வேண்டியதன் தேவையையும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில்துறை என்பன எமது பெறுமதிமிக்க மனித வளங்களை காப்பாற்றிக் கொள்ள எவ்வாறு அவசியமாகிறது என்று பார்ப்போம்.

தொழில்நுட்பத்திற்கும் கைத்தொழிலிற்கும் என்ன வித்தியாசம்?

பலருக்கு பரீட்சயமான காரை எடுப்போம். காரின் தந்தையாக வருணிக்கப்படுபவர் கென்றி போர்ட். அவர் நிறுவியது தான் போர்ட் கார் நிறுவனம். கென்றி போர்ட் அறிமுகப்படுத்தியது கார் என்ற போக்கு வரத்துச் சாதனத்திற்கான அடிப்படைத் தொழில்நுட்பம் மற்றும் கொள்கைக் கரு (concept) என்பன. ஆனால் அவற்றை நடை முறையில் நம்பகத்தனமான முறையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் (அல்லது செலவில்) தயாரித்து வழங்குவதில் தம்மை நிலை நிறுத்தியவர்கள் யப்பானியார்கள். யப்பானியர்களின் வெற்றியின் அடிநாதம் அவர்களது கைத்தொழில்துறையின் பலம்.

தொழில்;நுட்பரீதியில் கொள்கைக் கருவூலமாக புதிதாக ஒன்றை நிறுவுவது என்பது ஒருவகையான சவால்களை கொண்டது. ஆனால் அவற்றை நடைமுறை வாழ்வின் சாவல்களை தீர்ப்பதற்கான தீர்வாக பரந்த அளவில் பயன்படுத்துவதற்கு ஏற்ற முறையில் வடிவமைத்து வெற்று காண்பது தான் கைத்தொழில்த்துறையின் பலமாகும்.

இந்த இரண்டுமே, அதாவது தொழில்நுட்பத் திறனும் கைத்தொழில்துறைப் பலமும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இரண்டாம் உலகமா யுத்தத்தை உதாரணமாக எடுத்தால் தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டாக யோர்மனியின் V2 rocket engine அயும் பாதுகாப்பான முறையில் தொடர்பாடல் செய்ய உதவிய Loreze உம் Enigma ciphering உபகரணம் என்பன. கைத்தொழில் பலத்தின் எடுத்துக்காட்டாக யுத்த களத்தில் சுட்டுவிழுத்தப்படும் விமானங்களின் எண்ணிக்கைக்கும் தாழ்க்கப்படும் கப்பல்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக அல்லது ஈடு செய்யக்கூடிய முறையில் தயாரிக்கும் திறனைக் கொண்டிருந்த அமொரிக்காவும் ஆகும்.

இதே போல் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் எதிரியோடு ஒப்பிடுகையில் தொழில்நுட்பரீதியில் பல பலவீனங்கள் நிறைவு செய்வதற்கு உண்டு. அது மாத்திரமல்ல கைத்தொழில்துறைரீதியில் பார்த்தால் சொந்தமாக எண்ணிக்கையில் தயாராகும் கண்ணி வெடிகள், எறிகணைகள் முதல் கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் வரை சவால்கள் உண்டு. முக்கியமாக கடலில் எமது மேலாதிக்கத்தை செலுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம். தாக்குதல்களில் சேதமாகும் இழக்கப்படும் கலன்களை அதே வேகத்தில் அல்லது அதை விடக் கூடி வேகத்தில் தயாரிக்க முடியுமா தரத்தைப் பேண முடியுமா என்பது எமது மரபுவழி கடற்பலத்தை நிர்ணயிக்கும். சேதங்களினதும் இழப்புகளினதும் அளவு தொழில்நுட்பத்திலும் தங்கியிருக்கிறது என்பது மேலதிகமாக கவனிக்கப்பட வேண்டிய விடையம். இவற்றிற்கு எமது தொடர்ச்சியான பொருளாதார பலம் சுயதயாரிப்பிற்குரிய மூலப்பொருட்கள் உதிரிப்பாகங்கள் சம்பந்தப்பட்ட வளங்களை பெற்றுக் கொள்வதற்குரிய வழங்கல்கள் என்பன முக்கியம். அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு கிடைக்கக் கூடிய அனைத்து வசதிகள் சலுகைகள் வளங்களை வைத்துக் கொண்டு இஸ்ரேலின் பூரண அனுமதியோடும் தொழில்நுட்ப உதவியோடும் Colombo Dockyards Ltd தயாரிக்கும் ஒரு Dorva அதிவேகத் தாக்குதல் படகிற்கு ஒரு வருடத்திற்கு மேல்லான காலம் தேவையாகிறது.

இந்த Dorva ஓடு மோதும் கடற்புலிகளின் தாக்குதல் படகுகளை எம்மால் முடிந்த அளவு தொழிநுட்பத் திறனோடு தயாரிப்பதற்கு பல்வேறு பட்ட தடைகள் மத்தியில் அங்கீகாரம் அற்ற நிலையில் பொருளாதார நெருக்கடியில் தயாரிக்க புலிகள் படும் கஸ்டங்களை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். முற்று முழுதாக அங்கீகரிக்கப்பட்ட நாடான இலங்கையின் கடற்படையின் ஆளணி வளங்கோடு ஒப்பிடுகையில் 1 அல்ல 10 தாக்குதல் படகுகளை இழந்தாலும் அதை ஈடு செய்ய எடுக்கும் காலத்திற்கும் எமது நிலமையில் ஒரு தாக்குதல் கலனையும் பயிற்சி பெற்ற திறமையான அர்ப்பணிப்புள்ள போராளிகளை இழப்பதாலும் வரும் தாக்கத்தையும் சற்றே சிந்தியுங்கள். இங்கு இழந்த கலனை ஈடு செய்யவோ சேதமாக்கப்பட்டதை திருத்துவதற்கோ எடுக்கும் நேரம் என்பது களத்தில் எமது பலவீனமாக மாறும் விடையமாகும். அதாவது நாம் கடற்புலிகளின் படகுகளை பார்த்து தொழில்நுட்பரீதியில் பெருமைப்படலாம் இவை எமது சொந்தத் தயாரிப்பு என்று. ஆனால் அவற்றின் நடைமுறைரீதியான பாவனையில் களமுனைப் பங்களிப்பு என்று வரும் பொழுது அவற்றை வேண்டிய எண்ணிக்கையில் தேவையான நேரத்திற்குள் தயாரித்து வழங்கும் கைத்தொழில் பலமும் முக்கியமாகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அந்தப் பலத்தை வழங்குவதற்குரிய தகுதியும் கடமையும் புலம்பெயர்ந்தவர்களிடம் தான் உண்டு.

அடுத்து எமது தொழில்நுட்ப பலவீனங்கள் பற்றிப் பார்க்கலாம்.

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்

தொடர்பாடல்

எந்த ஒரு படைத்துறைக்கும் அத்தியாவசியமானது தனது பிரிவுகள் மீது கட்டளைகளை பிறப்பிப்பது கட்டுப்பாடு மற்றும் தொடர்பாடல்களை பேணுவது மற்றும் எதிரிகள் பற்றிய உளவுத் தகவல்கள் சேகரிப்பது (C3I). அதாவது இங்கு எல்லாவற்றிக்கும் மனிதவளரீதியில் முக்கியமாக இருப்பது தொடர்பாடல். அதுவும் பாதுகாப்பான முறையிலான நீணடதூர (தலமையகத்துடனான கட்டளைப்பீடத்துடனான) மற்றும் குறுந்தூர களமுனைத் தொடர்பாடல்கள். தமது தொடர்பாடல்களை முடிந்தவரை பாதுகாப்பாக பேணிய படி எதிரியின் தொடர்பாடல்களை கேட்டு அறிந்து கொள்ளுவது என்பது போர்க் களத்தின் சவாலும் யதார்த்தமுமாகும். சங்கேத மொழியில் தொடர்பாடல் நடத்துவது என்பது சமர்களின் அழுத்தங்களின் மத்தில் தொடர்பாடலில் ஈடுபடுபவர்களின் திறமையையும் பொறுமையையும் பலமாக சோதிப்பதுடன் தவறுகள் நிறைந்தது. அடுத்தாக இந்த சங்கேத முறையை உபகரணத்தின் மூலம் தன்னிச்சையாக வசனங்கள் சொற்பதங்களை தாண்டி எழுத்து நிலையில் செயற்படுத்துவது தான்(ciphering). இதன் ஒரு வடிவம் தான் இரண்டாம் உலகமா யுத்தத்தில் யோர்மனியினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது தகவல் அனுப்புபவர் அதன் எழுத்துக்களை தகவல் பெறுனருடன் உடன் பட்டுக் கொண்ட குறித்த ஒரு முறையில் மாற்றி அமைத்து அனுப்பப்படுகிறது. பெறுனர் தனக்கு மட்டுமே தெரிந்த அந்த முறையின் மூலம் மீள அந்த தகவலை ஒழுங்கமைத்து அறிந்து கொள்கிறார். எழுத்து வடிவில் உள்ள தகவலை பாதுகாப்பதில் ஆரம்பித்து பேச்சு வடிவில் உள்ள (analog) தகவலை scrambling மூலம் பாதுகாக்கும் முறை பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. தகவல் எவ்வாறு பெறுனருடன் உடன்பட்ட முறையில் மாற்றி (அல்லது குழப்பி) அனுப்பப்படுகிறது என்பதை தீர்மானிப்பது ஒரு கணித சமன்பாடு (ciphering scheme). அதை குத்துமதிப்பாக பல முறை முயற்சி செய்து (trial & error) கண்டு பிடிப்பதை எவ்வளவு கடினமாக்க முடியுமோ அந்தளவிற்கு அந்த முறை (ciphering scheme) பாதுகாப்பானது. அதாவது எமது தொடர்பாடலை முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும் அதே வேளை எதிரியின் பாதுகாப்பான தொடர்பாடலை உடைத்து தகவலை அறிய வேண்டும். கணிதத்தில் விழுந்து கட்டி சமன்பாடுகளை தீர்த்து காபொ உயர்தர பரீட்சை முதல் பல்கலைக்கழகம் வரை வெற்றி வாகை சூடி பெருமை அடையும் நாங்கள் இதில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். இதன் மூலம் நாம் இழந்த போராளிகள் கண்ட அழிவுகள் குலைந்து போன திட்டங்கள் என்று நீண்ட பட்டியல் கொண்டவை. மிக அண்மைய உதாரணமாக முகமாலை முன்னரங்க பகுதியில் குறிப்பிடத்தக்க சமர்கள் எதுவும் நடக்காத ஒரு நாளில் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் அக்பர் அய் கூறலாம். எதிரியின் எறிகணை வீச்சில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான போராளியை இழந்ததற்கு காரணம் என்ன? எதிரியின் அதிஸ்டமா? எமது துர்அதிஸ்டமா? அந்த மாவீரனின் சாதகப்படி கெட்டகாலமா? இல்லை கடவுள் எம்பக்கம் இல்லை என்று பிராயச்சித்தம் செய்ய வேண்டுமா? தொடர்பாடலை ஒட்டுக் கேக்கும் எதிரி யார் எங்கு நிக்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறான் (signal intellegence). அதற்கு குரலையும் (voice recognition) தொடர்பாடல் அடையாளத்தைம் (call sign)பயன்படுத்துகிறான். அதன் பின்னர் குறித்த இலக்கு பேசும் தொடர்பாடல் கருவியின் வான் அலைகளை (radio frequency) வைத்து இலக்கின் தற்போதைய இடத்தை அண்ணளவாக மதிப்பிடக் கூடியதாக இருக்கிறது( radio direction finder). அது எறிகணை வீச்சு எல்லைக்குள் இருக்கு என்றால் அந்த மதிப்பிடப்பட்ட இலக்கை மைய்யமாக வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த அவலம் 2002 போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னரான காலம் முதல் தொடர்கிறது.

வீச்சு எல்லை (range) மற்றும் இலக்கு நோக்கிய வழிநடத்தல் (guidence) மற்றும் துல்லியம் (accuracy/precision)

மனிதவளங்களிற்கு தொடர்பாடல் முக்கியம் போன்று ஆயத வெடி பெருள்ரீதியில் முக்கியமானது இலக்கை குறிதவறாது எதிரி சுதாகரிக்க முதல் வேகமாக அடைந்து அழிவை ஏற்படுத்துவது. அதாவது ஏவும் தூரம் (range), வேகம் (speed), இலக்கை சரியாக அடையும் துல்லியம் (accuracy) என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. எதிரியின் வீச்சு எல்லைக்கு வெளியில் பாதுகாப்பாக நின்று எதிரியை தாக்குவதாயின் எதிரியின் ஆயுத வீச்சு எல்லையை விட நீண்ட வீச்சை கொண்ட ஆயுதத்தை பயன்படுத்துவது தான். இந்த அடிப்படையில் தான் 23 மிமீ எறிகணைகளை கொண்ட கடற்புலிகளின் படகுகளோடு மோதுவதற்கு 30மிமீ எறிகணைகளை பொருத்துவதற்கு முயற்சிக்கிறது சிறீலங்கா கடற்படை. கடற்ப்புலிகளிடம் 23மிமீ பயன்பாட்டிற்கு வரமுதல் குறைந்த இழப்போடு சிறீலங்கா கடற்படையை தாக்கி அழிக்க முற்று முழுதாக நம்பியிருந்தது வெடிமருந்துகளோடு சொன்ற உயிர் ஆயுதங்களைத் தான். இன்றும் கடற்புலிகள் கொண்டுள்ள 23மிமீ ஆயதத்திற்கு அப்பால் சிறீலங்கா கடற்படையின் Dorva மற்றும் Super Dorva அதிவேகத்தாக்குதல் கலன்களோடு ஒப்பிடுகையில் பல பலவீனங்களை கொண்டது. அவற்றில் சில

-1- உச்ச வேகம் (maximum speed)

-2- இடப் பெயர்ச்சி செய்யும் நீர் அதாவது பாரத்தின் அளவு (displacement). இது ஆழ்கடல் சமர்களில் முக்கியம் பெறுகிறது

-3- தொடர்பாடல் கருவிகளின் எல்லை, அதன் பாதுகாப்பு (range & security of communication)

-4- RADAR இன் வீச்சு எல்லை அதன் பாதுகாப்பான நம்பிக்கையான (anti jam) செயற்பாடு

இவை எமது போராட்டம் ஆண்டாண்டு காலமாக தினம் தினம் தொழில்நுட்பரீதியில் எதிர் கொள்ளும் பலவீனங்களில் சிறு உதாரணங்களே. இவற்றை ஈடு செய்ய போராளிகள் தம்மை வருந்தி களமாடுகிறார்கள், உயிரிழப்புகளையும் அங்கவீனங்களையும் சந்திக்கிறார்கள். அதாவது என்ன விலை கொடுத்தாவது குறிக்கோளை அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் போராடுகிறார்கள். எனவே வெற்றிகளும் எதிரியின் இழப்புகளும் எமது ஆயத தொழில்நுட்ப பலத்தின் மேலாதிக்கத்தின் வெளிப்பாடுகள் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 30மிமீ முலம் தனது மேலாதிக்கத்தை உறுதி செய்ய முடியாவிட்டால் சிறீலங்கா கடற்படை அடுத்து படியாக உள்ள எறிகணைக்கோ அல்லது ஏவகணைக்கோ (தூரத்தின் அளவு ஒரு எல்லையை மீறும் பொழுது இலக்கு தவறாமல் இருக்க fire control radar guidence சேர்க்கப்பட்டு உயர் கலிபர் ஆயதமாகவோ அல்லது ஏவகணையாகவோ (guided missile) மாற்றம் பெறும்) செல்லும். அதன் மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயலும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமாக வருடத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பாதுகாப்பு செலவீனங்களிற்கு ஒதுக்கும் ஒரு நாட்டினால் அவை எல்லாம் முடியுமான விடையங்கள். அதை உடனடியாக ஆயுத தொழில்நுட்பரீதியில் கடற்புலிகளால் எதிர்கொள்ளுவது என்பது இயலாத காரியம். அதுவரை உயிர் ஆயுதங்களும் அதிகரித்த உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரித்த அளவில் தொடரும். அதாவது எதிரியோடு இந்த ஆயதப்போட்டி என்பது தொடர்ச்சியானது. ஒரு முறை தற்காலிக சமநிலையை அடைந்து விட்டது பற்றி அளவிற்கு மிஞ்சி அலட்டிக் கொள்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. எமது கடமை எம்மை நம்பி எமக்காக தமது வாழ்கையை அர்ப்பணித்து போராடுபவர்களிற்கு எதிரியோடு ஆயுதப் பலப் போட்டியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பொருளாதார தொழில்நுட்ப உதவிகளே வழங்குவதே. எமது ஆய்வுகளும் கண்ணோட்டங்களும் தாயகத்திலுள்ள மக்களினதும் போராளிகளினதும் வாழ்வையும் சாவையும் நிச்சயிக்கும் இந்த வரலாற்றுக்கடமை பற்றிய யதார்த்தத்தை மக்களிற்கு தொடர்ச்சியாக அறிவுறுத்துவதாக இருக்க வேண்டும்.

இன்று புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் போராட்டத்திற்கான தமது பங்களிப்பு பற்றி மிகவும் திருப்த்திகரமான மனநிலையும், புலிகள் மிகவும் பலமாக இருக்கிறார்கள் என்ற கற்பனையும் புலிகளின் பொறுமை முடிவிற்கு வந்து முழு அளவில் யுத்தம் மூழும் பொழுது மின்னல் வேக தாக்குதல்களில் எல்லாம் சில நாட்களிலோ கிழமைகளிலோ முடிவிற்கு வந்து விடும் அதன் பின்னர் சுதந்திர தமிழீழத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணச் சீட்டு வேண்டுவது தான் மிச்சம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அது 2 மணத்தியால திரைப்படத்திற்கு பொருத்தமான திரைக்கதையாக இருக்கலாம் ஆனால் நிஜ வாழ்வில் நடக்கும் எமது போராட்டத்திற்கு அல்ல.

எமது போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே இன்றுவரை எதிரியோடு ஒப்பிடுகையில் எமது மிக மோசமான தொழில்நுட்ப வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய போராளிகள் தமது திறமையாலும் சாதுரியத்தாலும் உயிர்களையும் அங்கங்களையும் கொடுத்துப் போராட்டத்தை வெற்றிப்பாதையில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது எமது பலவீனங்கள் மனிதவளத்தால் ஈடு செய்யப்படும் அவலம் தொடர்கிறது. இது புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில்நுட்ப பொருளாதாரரீதியில் வெற்றிகரமான நிலையில் உள்ள எம்மவர்கள் வெட்கித்தலை குனிய வேண்டிய கேவலமான விடையம். எம்மை ஆயுத தொழில்நுட்பரீதியில் பலப்படுத்த புலம் பெயர்ந்தவர்கள் தமது அறிவியல் பொருளாதார பங்களிப்பை செய்வது மிக அவசியமாகிறது. எமக்கு பலமாக இருக்க வேண்டும் என்பது ஒரு தெரிவு அல்ல அத்தியாவசியமானது. அந்தப் பலத்தை ஆயுத - தொழில்நுட்பம் மூலம் நிலைநிறுத்தும் வரை நாம் பலவீனமானவர்களே.

We are out numbered by our neighbours. The only way to survive in this hostile middle east is to develop those technologies that will give us some qualitative edge upon the number.

- Istrale's ex- Head of IDF R&D

Edited by kurukaalapoovan

மிகப் பயனுள்ள ஆளமான சிந்தனைகளை உடைய கட்டுரை.அடுத்ததாக எவ்வாறான தொழில் நுட்பங்கள் தந்திரோபாய ரீதியாக (strategic technologies) முக்கியமானவை என்பதையும், அவற்றை எங்கனம் நாம் உள்வாங்கலாம் என்பது பற்றியும் எழுதுங்கள். புலத்தில் உள்ள தொழில்நுட்பவியலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் எங்கனம் தமது பங்களைப்பை நல்கலாம் என்றும் எழுதுங்கள். பலருக்கு விருப்பம் இருந்தும் ஒரு ஒருங்குபட்ட நெறிப்படுத்தல் இல்லாமை முக்கியமான ஒரு பிரச்சினை. இதில் நம்பிக்கை , ஊடுருவல், தொடர்பாடல் என்பதுவும் ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது.

அருமையான கட்டுரை குறுக்ஸ்

  • தொடங்கியவர்

நாரதர்

இதுக்கு மிஞ்சின விபரங்கள் எனக்கு எழுத தெரியாது. சம்பந்தப்பட்டவை தான் கவனம் எடுக்க வேணும்.

தொழில்நுட்ப திறமையும் அறிவு எந்தளவிற்கு பயனுள்ளதாகவும் இருந்தாலும் அரசியல் தெளிவில்லாத ஆதரவு கோசம் ஒரு நாள் இலகுவாக குடைசாயும் ஆபத்து கொண்டது. அத்தோடு ஊடுருவலும் பெரிய பிரச்சனை.

எனது நோக்கம் தற்பொழுது பொதுவாக இருக்கிற மாயை தவறு. எமது இறுதி இலட்சியத்தை அடைய பொருளாதார தொழில்நுட்ப ஆயுத ரீதியில் பயணிக்க வெகு தூரம் இருக்கு செய்வதற்கு எவ்வளவோ இருக்கு. அவை எல்லாம் செய்து முடிக்கும் வரை இறுதிப்போர், சுதந்திர பிரகடனம், எல்லைகள் பற்றிய உடன்பாடு, அங்கீகாரம் என்பன எல்லாம் கானல் நீர்தான்.

அதுவரை தமிழர்களின் உயிர்கள் விலையாக கொடுத்த படி அந்த கானல்நீர் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

பூச்சாண்டி காட்டிறதை விட்டுட்டு இன்றே தேவைகளை கடமைகளை உணர்ந்து ஒற்றுமையாக செயற்படத் தொடங்கினாலே 10 வருடங்கள் என்பது ஒரு மிகைப்படுத்த முடியாத காலம். ஆனால் இன்று நாம் மிதக்கும் கற்பனை நிலையில் இருந்து கணக்கு பார்த்தால்...

Edited by kurukaalapoovan

உந்த மாயை உருவாக்கியதில் புலத்தில் உல்ள ஊடகங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன.

இவை தம்மை மாற்றிக்கொள்ளாதவிடத்து புலத்தமிழர்களை குறை சொல்வதில் பயன் இல்லை.ஊடகங்களே கருத்துருவாக்கத்தில் பாரிய பங்களிப்பைச் செய்கின்றன.தேவைகளை சரியாக இனங்காட்டுவது இந்த ஊடகங்களினால் செய்யப்பட வேண்டிய விடயம்.அதன் மூலம் தான் புலத்தவரை தேவைகள் நோக்கி ஈர்க்க முடியும்.ஈர்க்கப்படவர்களை நெறிப்படுத்த ஒரு அமைப்பு அவசியம்.புலத்தில் இவ்வாறான சுயாதீனமான ஒரு கட்டமைப்பு இல்லாததும் ஒரு குறை பாடே.டெக் போன்றவை இருந்தாலும் இவற்றின் வினைத்திறனும் நோக்கமும் சிறு தொழில், சிறு முயற்சிகளாக மட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது.

பரந்தளவில் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்படுவது அவசியம்.வன்னி டெக் போன்ற முயற்ச்சிகள் தொடர்ந்து செய்யற்பட வேண்டும்.வன்னி டெக்கின் விரிவாக்கம் மற்றத் தொழில் நுட்பத் துறைகளையும் உள்வாங்க வேண்டும்.வன்னி டெக்கின் பின் புலத்தில் இருக்கும் தமிழ்த் தொழில் நுட்பவியலாளர் அமைப்பு எல்லா நாடுகளிலும் விரிவாக்கம் பெற்றால் பயன் உள்ளதாக இருக்கும்.

  • தொடங்கியவர்

அய்யோ!

டெக், வன்னிடெக் போன்றவர்களை இதுக்குள்ளை கொண்டுவராதேங்கோ. அவர்கள் civilian application பற்றித்தான் செய்ற்படுகினம். அவர்களிற்கு பிறகு தேவையில்லாத பிரச்சனை.

இராணுவ பயன்படுகள் பற்றிய தொழில்நுட்பம் என்பது முற்றிலும் வேறுபட்ட கட்டமைப்பினால் கைய்யாளப்பட வேண்டியது. அதற்குரியவர்களை உள்வாங்குவது பற்றிய சிக்கல்கள் பெரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.