Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட சொந்த நிலங்களில் மீளக்குடியேற 993 குடும்பங்கள் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுவிக்கப்பட்ட சொந்த நிலங்களில் மீளக்குடியேற 993 குடும்பங்கள் பதிவு
9bee7005acc5605b52ee2a2712105d24.jpg
வலி. வடக்கு  மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டமொன்று இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 
இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக அரச அதிபர்  கருத்து தெரிவிக்கையில்,
 
இன்று இடம்பெற்ற குறித்த கூட்டம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் உடனடியாக அவர்களுக்குத் தேவையான தற்காலிக கொட்டகைகளை அமைப்பது  மற்றும் அவர்களது தேவைகள்  தொடர்பாகவுமே இன்றைய இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. 
 
இதுவரை விடுவிக்கப்பட்ட 1013 ஏக்கர் காணிகளில் 993 குடும்பங்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான இருப்பிடங்களை அமைப்பதற்கும் அத்துடன் நிரந்தரமான மலசலகூடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இவர்களிற்கு தேவையான வசதிகளை சிறிது சிறிதாக நாம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக இப் பிரதேசங்களில் உள்ள வீதிகளை தpருத்துவதற்கு பெருமளவான நிதி தேவைப்படுகின்றது. எனவே இவற்றை நாம் உடனடியாக மேற்கொள்ள முடியாது. மற்றும் இப் பிரதேசங்களில் வெடி பொருட்கள் இருப்பதாக சந்தேகப்படுகின்ற இடங்களை நாம் இராணுவத்தினர் மூலமோ அல்லது வேறு தனியார் நிறுவனங்களின் மூலமோ அவற்றை அப்புறப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 
 
இக் கலந்துரையாடலில் மPள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் வலி. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச செயலர், தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
6666666%284%29.jpg
 
7888%281%29.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=780324023008660213#sthash.gPUHIIpx.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

பலன் சிறிதாக இருந்தாலும் முயற்சி பாரட்டப்படவேண்டியது.

 

இன்னும் நிறைய செய்து முடிக்கவேண்டி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.