Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபை உறுப்பினரின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து மோதல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபை உறுப்பினரின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து மோதல்:

[Monday 2015-05-11 20:00]
TNA-news-380-seithy.jpg

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா அவர்களின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

 

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்றைய தினம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமது கருத்துக்களை கூட்டமைப்பு உறுப்ரினர்கள் வழங்கிய போது தமது அங்கத்துவ கட்சிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

 

அந்த வகையில் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையபற்றிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈபிஆர்எல்எப் கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா உரையாற்றுகையில்..

  

நாம் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கூறியே வாக்குகளைப் பெற்று பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளோம். தேர்தல் முடிந்த பின்பு தனித் தனி கட்சியாக மக்களிடம் செல்லும் போது மக்கள் குழப்பமடைகிறார்கள். கூட்டமைப்பாக வருமாறு மக்கள் கூறுகிறார்கள். இதைத் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை கட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

 

இனியும் சாட்டுப் போக்குகளைச் சொல்ல வேண்டாம். இதே போன்று வடமாகாண சபைக்குரிய அலுவலகம் மாங்குளத்தில் நிறுவப்பட வேண்டும். இது தொடர்பில் மாகாண சபையில் பிரேரணை கூட கொண்டு வந்தோம். ஆனால் அது நடப்பதாக இல்லை. மாகாண சபையில் எமது கருத்துக்களை கேட்பதாக இல்லை. அங்கும் குழப்பமாக தான் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனியாவது நாம் மக்களுக்கு ஏதாவது செய்ய கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

 

இதன் பின் உரையாற்றிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய புளொட் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,

தற்போது ஆளுனர் உட்பட பிரதம செயலளார் மாற்றப்பட்டு விட்டனர். இதன் காரணமாக தற்போது நான் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்களும், அமைச்சர்களும் இனி மேடை சரியில்லை என கூற முடியாது. ஆகவே மிகுதிக் காலங்களில் நாம் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.

 

19 ஆவது திருத்த சட்டத்தில் எங்களைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிகப்பெரிய கவலையாகும். எழுத்து மூலமாக இல்லாவிட்டாலும் வாய் மூலமாகவேனும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது தற்போதுள்ள தேசிய அரசாங்கமாவது ஒரு வசனம் கூட எமக்கு திருப்தி படுத்துவதற்காக கூட சொல்லவில்லை.

 

இந்த நிலையில் கொஞ்ச நாளைக்கு இந்த அரசை விட்டு பிடிக்கலாம் என்ற அன்புக்கட்டளைகள் அல்லது கட்டளைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளால் எமக்கு வந்து கொண்டிருக்கின்றது.

 

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை மாற்ற வேண்முடும் எனக் கோரி மூன்று பாராளுமன்ற உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட ஒரு அமைச்சருமாக கையெழுத்து வைத்து ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர மாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு பிரேரனையை வட மாகாண சுகாதார அமைச்சரும் இவ் விடயம் தொடர்பாக கொண்டு வந்திருந்தார். இவ் விடயம் தொடர்பாக இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.

 

இங்கு கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், இதைவிட கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்களாக உள்ள மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு ஒரு அரசாங்க அதிபரை மாற்ற முடியாது என்றால் எப்படி எங்களது பிரச்சனையை தீர்க்கப் போகின்றீர்கள். நீங்கள் அரசாங்கத்துடன் பேசுகிறீர்கள். தொலைபேசியில் கூட அவர்களுடன் கதைக்க முடியும். தேசிய சபையிலும் இருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்களால் தீர்க்க முடியாது என்றால் எம்மை செயற்பட விடுங்கள். நாம் வீதியில் இறங்குகின்றோம்.

 

இதன் பின் உரையாற்றிய ஈபிஆர்எல்எப் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுதம் வடமாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன்,

இங்கு உரையர்றிய வடமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ லிங்கநாதன், கௌரவ தியாகராசா போன்றோர் மாகாண சபையிலும் கூட்டமைப்பிலும் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கூறியிருந்தார்கள். அதாவது சுயகட்சி விமர்சனம் ஒன்றை பகிரங்கமாக செய்திருந்தார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த நிலைகளுக்கு காரணம் எமக்குள் உள்ள பிரச்சனைகளே. அதாவது கூட்டமைப்பு கட்சியாக ஒன்றிணைந்து செயற்படாததே காரணம். கூட்டமைப்புக்குள் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள்.

 

ஆனால் அது அடிமட்டத்தில் இருந்து ஒரு கட்சியாக, அமைப்பாக ஒன்றிணைந்து செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டால் கூட்டமைப்பு தற்போதுள்ள பல சவால்களையும் தடைகளையும் வெற்றி கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். தமிழ் மக்களோ அல்லது நாமோ போட்டி அரசியல் நடத்தவில்லை. அதற்கான நேரமும் இது இல்லை. இது எமது உரிமைக்கான போராட்டம். இதில் ஒன்றினைந்து செயற்பட வேண்டியது அவசியம். எமது உரிமையை பெற்ற பின் பிரிந்து நின்று தனிதனிக் கட்சிகளாக செயற்படுகள். மக்கள் யார் தேவை, யார் தேவை இல்லை என தீர்மானிக்கட்டும் எனத் தெரிவித்தார்.

 

இதன் பின் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,

எமக்கு என்று ஒரு பண்பாடு இருக்கிறது. இங்கு நடைபெறவது ஒரு வரவேற்பு நிகழ்வு. இந்த நிகழ்வுக்கு பொருத்தமில்லாத விடயங்களை நாம் பேசக் கூடாது. கல்வியாலளர்கள் இங்கு குழுமியிருக்கும் இடத்தில் மாகாணசபைக்குள்ளும், கட்சிக்குள்ளும் பேசப்பட வேண்டிய விடயங்களை இந்த இடத்தில் பேசுவது பொருத்தமில்லை. அது சங்சலமானது.

 

நான் இருக்கும் இடத்தில் இப்படியான நிகழ்வுகளில் எமது தலைமைகளை பற்றி பேசுவது மனதுக்கு கஸ்ரமானது. எமது கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு எமது தீர்மானங்களை எதிர்த்து மைத்திரிக்கு ஆதரவான தேர்தல்கள் முடிவுகளை புறக்கணித்தவர்தவர்களும், தேர்தலுக்கு வேலை செய்யாது மௌனமாக இருந்தவர்களும் இருக்கின்றார்கள்.

கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக வேறு நபர்களுடனும் போய் கதைத்தவர்களும் உள்ளார்கள். இப்படி பல விடயங்கள் இருக்கின்றன.

 

அவை பற்றி இதில் பேச பொருத்தமில்லை. மாகாணசபையில் 30 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அங்கு பேசப்பட வேண்யெவற்றை இங்கு பேசி பயனில்லை எனவும் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது வடமாகாணசபை உறுப்பினராக பதவியேற்றுள்ள எம்.பி நடராஜா அவர்கள் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்.

 

அவருக்கு முன்னரே மாகாணசபை உறுப்பினர் பதவி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இருப்பினும் நான் முன்னர் கூறியது போன்று மிகவும் விருப்பத்துடன் அவருக்கு இந்த பதவியை வழங்கியுள்ளோம். அவர் மலையக வம்சாவளி மக்களின் கல்வியை இங்கு உயர்த்த பாடுபட வேண்டும் என்றார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தனது உரை முடிந்து சென்றதும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண சபை உறுப்பினராக தற்போது பதவியேற்றுள்ள எம்.பி.நடராஜா அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக கடும் இழுபறிக்கு பின்னரே இன்று இந்த நிலைக்கு வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு என சுழற்சி முறை ஆசனம் வழங்கப்பட்ட போதும் இவருடைய 6 மாதத்தினை முன்னைய உறுப்பினர் எடுத்து விட்டார். இவருக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியிலும் ஒரு பகுதி நிதியை அவர் செலவு செய்து விட்டார். இவரும் பின்னால் வரும் உறுப்பினரின் காலத்திலும் பணத்திலும் பங்கு போட வேண்டி வரும். இவ்வாறு கடும் இழுபறிக்கு மத்தியிலேயே போராடி இந்த பதவியை பெற வேண்டியிருந்தது எனத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி உறுப்பினரும் வடமாகாண சுகாதார அமைச்சருமான

 

ப.சத்தியலிங்கம் உரையாற்றுகையில்,

காட்டாச்சி மாற்றப்பட்டதன் மூலம் தற்போது மாகாணசபை கொஞ்சம் செயற்படக் கூடியதாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

 

வடமாகாண சபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சி பிரதிநிதியுமாகிய இ.இந்திரரஜா உரையாற்றுகையில்,

கல்விசார் உத்தியோகத்தர்கள் சிலர் என்னிடம் வந்து இடமாற்றத்தை நிறுத்தி தருமாறு கோருகின்றனர். சட்டத்திற்கு முரணாக என்னால் அப்படி செய்ய முடியாது. நாம் தான் இடம்மாற்ற செய்ய வேண்டும் என கோருகின்ற போது அதை நிறுத்துமாறு கோர முடியாது எனத் தெரிவழத்தார்.

 

இதன் பின் உரையாற்றிய ரெலோ கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதிரை என்பது முற்கள் நிறைந்தது. இதில் பலர் போட்டியிட விரும்புவர். ஆனால் நாம் பெறும் கஸ்ரங்கள் நமக்கு தான் தெரியும்.

 

இந்த மேடையில் தற்போது இடம்பெற்ற பிரச்சனைகளும் கருத்துக்களுக்கும் உங்களுக்கு நன்றாக விளங்கியிருக்கும். இந்த நிலை தான் கட்சிக்குள் இருக்கிறது. இருப்பினும் அதைப் பற்றி பேச இது பொருத்தமான நேரமில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை இவ் உரைகளை சபையில் இருந்த இந்திய துணைத்தூதர் ரி.மூர்த்தி மற்றும் மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்ததையும் கூட்டமைப்பு பதிவு விவகாரம், தலைமைகள் ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறிய சந்தர்ப்பங்களில் சபை கைதட்டல்களால் நிறைந்திருந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்
இவ் உரைகளை சபையில் இருந்த இந்திய துணைத்தூதர் ரி.மூர்த்தி
இவர் உங்க என்ன செய்யிறார்?

இந்த நிலையில் கொஞ்ச நாளைக்கு இந்த அரசை விட்டு பிடிக்கலாம் என்ற அன்புக்கட்டளைகள் அல்லது கட்டளைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளால் எமக்கு வந்து கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்பு தலைமைகள் சொறிலங்கா அரசின் செம்பு தூக்கிகளாக மாறி கனகாலம். இவர்களை இன்னும் நாம்பினால், தமிழ் மக்களுக்கு கட்டி இருக்குற கோமணமும் மிஞ்சாது. அடுத்த தேர்தலில் இந்த செம்பு தூகிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். அடுத்த தேர்தலுக்கு கிட்டவா இவை மீண்டும் மக்களின் வாசலுக்கு வந்து கும்பீடு போட்டு வாக்கு கேட்பினம், அப்ப அவிட்டுவிடும் புளுகை பார்த்தல், ஒரு 4 வருசத்திலை தமிழ் பிரதேசத்தை சிங்கபூர் மாதிரி மாறிவிடுவம் எண்ட மாதிரி இருக்கும், ஆனால் தேர்தலுக்கு பிறக்கு ஆக்களை பார்ப்பது கடினம். மீண்டும் அடுத்த தேர்தலுக்கு கிட்டவா அவர்கள் மக்களின் கண்ணில் தென்படுவினம்.இந்த சுழற்சி அப்பிடியே தொடரும். வாக்கு போடவன் நாடு ரோட்டிலை. :( 

இவர்கள் தாங்களும் மக்களுக்கு ஒண்டும் செய்ய மாட்டினம், செய்ய விரும்புகின்ற ஆக்களையும் விட மாட்டினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.