Jump to content

வறுத்த சிக்கன் குழம்பு


Recommended Posts

sl3295.jpg

 

என்னென்ன தேவை?
 
சிக்கன் - அரைக் கிலோ
 
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
 
வர மிளகாய் - 8
மல்லி - 4 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - 3 இன்ச் அளவு
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - ஒரு கப்
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
எப்படி செய்வது?
 
சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். 
 
இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான வறுத்த சிக்கன் குழம்பு ரெடி. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த....  என்றால், மொறு... மொறு  என்றும்....
குழம்பு என்றால்... அந்த சிக்கின்,
ச்சீய்.....  அந்தக் கோழி ... மெதுவாயும், இருக்க வேணும்.

இது... "ரூ இன் வன்... சமையலா" :rolleyes:  :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர மிளகாய் என்றால் செத்தல் மிளகாய்தானே அதில் 8 போடணுமா? தாங்குமா இந்த உடம்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பில் மஞ்சள் தூளும் சேர்த்திருக்கினம், அதுதான் அந்திவானக் கலரில் அசத்துது...! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.