Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்நாட்டு  போர்க்குற்ற விசாரணை ஜூனில் ஆரம்பம் - மைத்திரி

Featured Replies

article_1432106398-maithripala120.jpg

 

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு செம்டெம்பருக்குள் நிறைவடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தான் திட்டவட்டமாகக் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

 

'வில்பத்து சரணாலத்திலுள்ள காடுகளை அழிப்பது தவறாகும். எந்தவொரு காடும் அழிக்கப்படக் கூடாது. அதற்கு இடமளிக்கப்போவதுமில்லை. இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்பது உண்மை. அதற்காக காட்டுப் பகுதியை அதற்காகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது' என்றார். கடந்த அரசாங்கத்தின் காணி விவகாரம் தொடர்பான அதிரடிப்படையின் உத்தரவுக்கிணங்கவே வில்பத்துவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் கூறினார். -

 

http://www.tamilmirror.lk/146477#sthash.6DEMHs8V.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசாரணைக்குழுவுக்கு மாக்ஸ்வெல் பராக்கிரம தலைமை தாங்கி மீண்டும் கொட்டாவி விடுவார். :o

குரு  செப்ரம்பரில் கூடும் ஐ.நா, லங்காபுரியில்  உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியாளர்களால் சுயாதீனமான நடாத்தப்படுவதால் நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிக்கை  தாக்கல் செய்யப்பட வேண்டிய தேவை இல்லை என்றும், உள்நாட்டு விசாரணையே , நம்பகத்தன்மை உடையதாகவும் உள்ளது என்ற தீர்மானத்திற்கு வருவதற்கான நிகழ்ச்சி  நிரலே இந்த உள்நாட்டு விசாரணை  என்ற உள்குத்து வேலைகள். 

 

இந்தியாவும், அமெரிக்காவும் இதற்கான  பின்புல வேலைகளை பார்த்து கொள்ளும்....

 

சர்வேதேச சமூகமானது ஏகாதிபத்தியங்களுக்கு அருவருடி வேலை செய்யவே உள்ளதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கானது அல்ல என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்...  <_<

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

எனி எல்லாம் கொலை.. கொள்ளை செய்தவனே நீதிமன்றில் தன்னை நிறுத்தி தானே நீதிபதியா இருந்து.. தனக்கு தண்டனை தரட்டும். ஐநா.. அதுஇதென்னு எதுக்கு ஆயிரத்தெட்டு அமைப்பை வைச்சு மக்கள் வரிப்பணத்தை உருவி அதில உள்ளவைக்கு சம்பளம்.. கெளரவம் என்று செலவு செய்யனும். உதுகளை எல்லாம் கலைச்சு விடுவது நல்லது. ஐநா சோவியத் உடைவுக்கு பின் ஓர் அவசியமற்ற அமைப்பு. அதன் சொல்லை எவனுமே கேட்கிறதில்ல. அமெரிக்கா நினைச்சது தான் இப்ப உலகத்தில நடக்குது. :o:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon319_mahinda.jpg

சிங்கம் சிங்கிளா வரேக்கை செய்த அட்டூழியங்களை, இப்ப எல்லா சிங்கங்களும் இருக்கையில் விசாரணை . இது என்ன புலூடா

சிங்களம் சிங்களத்தை பாதுகாக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.