Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பம்

Featured Replies

20 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பம்
 

24 நாடுகள் பங்குபற்றும் 20 வயதுக்குட்பட்ட 19ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளன.

நியூஸிலாந்து, யுக்ரைன், ஐக்கிய அமெரிக்கா, மியன்மார் (குழு ஏ), ஆர்ஜென்டீனா, பனாமா, கானா, ஆஸ்திரியா (குழு பி), கத்தார், கொலம்பியா, போர்த்துகல், செனகல் (குழு சி), மெக்ஸிகோ, மாலி, உருகுவே, சேர்பியா (குழு டி), நைஜீரியா, பிறேஸில், வட கொரியா, ஹங்கேரி (குழு ஈ), ஜேர்மனி, ஃபிஜி, உஸ்பெகிஸ்தான், ஹொண்டுராஸ் (குழு எவ்.) ஆகிய 24 நாடுகள் ஆறு குழுக்களில் மோதவுள்ளன.

 

நடப்பு சம்பியன் பிரான்ஸ் இப்போட்டிக ளுக்கு தகுதிபெறாதமை விசேட அம்சமாகும்.

 

லீக் சுற்றில் 36 போட் டிகள் நடைபெறவுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் ஆறு இடங்களைப் பெறும் அணிகளும் அதி சிறந்த இரண்டாம் இடத்தைப் பெறும் இரண்டு அணிகளும் கால் இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

அதனைத் தொடர்ந்து அரை இறுதிகளும் பின்னர் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியும் 20 வயதின்கீழ் உலக சம்பியனைத் தீர் மானிக்கும் இறுதி ஆட்டமும் நடைபெறும்.

 

நாளைய தினம் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

நியூஸிலாந்து எதிர் யூக்ரெய்ன் (நோர்த் ஹாபர்)

 

ஐக்கிய அமெரிக்கா எதிர் மியன்மார் (நொர்த்லண்ட்),

 

ஆர்ஜன்டீனா எதிர் பனாமா (வெலிங்டன்),

 

கானா எதிர் ஆஸ்திரியா (வெலிங்டன்)

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10313#sthash.5FsEJH6X.dpuf

  • தொடங்கியவர்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

 

நியூ பிளைமவுத்: ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

 

நியூசிலாந்தில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, கானா, கொலம்பியா, போர்ச்சுகல் உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

 

நியூ பிளைமவுத் நகரில் நடந்த ‘இ’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில், நைஜீரியா அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அணி சார்பில் கேப்ரியல் ஜீசஸ் (4வது நிமிடம்), ஜுடிவான் (34, 82வது), போஸ்சிலியா (59வது) கோலடித்தனர். நைஜீரியா அணிக்கு சக்சஸ் (10வது நிமிடம்), யஹாமா (28வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

 

இங்கு நடந்த மற்றொரு ‘இ’ பிரிவு லீக் போட்டியில், ஹங்கேரி அணி 5–1 என்ற கணக்கில் வட கொரியா அணியை தோற்கடித்தது.

 

ஜெர்மனி வெற்றி:

கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி, பிஜி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 8–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி சார்பில் முக்தார் (34, 40, 89வது நிமிடம்) மூன்று கோல் அடித்தார். இங்கு நடந்த மற்றொரு ‘எப்’ பிரிவு ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணி 4–3 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.

 

வாங்கரையில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் மியாண்மர்–உக்ரைன், நியூசிலாந்து–அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. வெலிங்டனில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரியா–பனாமா, அர்ஜென்டினா–கானா அணிகள் விளையாடுகின்றன.

 

http://sports.dinamalar.com/2015/06/1433178883/juniorworldcupfootballbrazilgermany.html

  • தொடங்கியவர்

கொலம்பியா, உருகுவே வெற்றி

 

ஹாமில்டன்: உலக கோப்பை கால்பந்து (20 வயது) தொடரின் லீக் போட்டியில் கொலம்பியா, உருகுவே உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

 

நியூசிலாந்தில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, கத்தார், ஜெர்மனி உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஹாமில்டனில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில், கொலம்பியா, கத்தார் அணிகள் மோதின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜோவா ரோட்ரிக்ஸ் முதல் கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கத்தார் அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் கொலம்பியா அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

இங்கு நடந்த மற்றொரு ‘சி’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 3–0 என்ற கோல் கணக்கில் செனிகல் அணியை தோற்கடித்தது.

 

டுனிடினில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில், செர்பியா, உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் உருகுவேயின் பெரைரோ ஒரு கோல் அடித்தார். இதற்கு செர்பிய அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் உருகுவே அணி 1–0 என்ற கோல் கணக்கில் வென்றது.

 

இங்கு நடந்த மற்றொரு ‘டி’ பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோ அணி 0–2 என்ற கணக்கில் மாலி அணியிடம் தோல்வி அடைந்தது.

 

இன்று ‘இ’ பிரிவில் நடக்கும் லீக் போட்டியில் பிரேசில்–நைஜீரியா, வட கொரியா–ஹங்கேரி அணிகள் மோதுகின்றன. ‘எப்’ பிரிவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் ஜெர்மனி–பிஜி, உஸ்பெகிஸ்தான்–ஹோண்டுராஸ் அணிகள் விளையாடுகின்றன.

 

http://sports.dinamalar.com/2015/05/1433095897/soccerworldcup.html

  • தொடங்கியவர்

20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டம் மெக்ஸிகோவை அதிரச் செய்து மாலி வெற்றிபெற்றது
2015-06-01 10:40:07

நியூ­ஸி­லாந்தின் ஒட்­டாகோ விளை­யாட்­ட­ரங்கில் வெள்­ளி­யன்று ஆரம்பமான 20 வய­துக்­குட்­பட்ட ஐந்­தா­வது உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் குழு டி க்கான நேற்­றைய போட்டி ஒன்றில் பலம்­வாய்ந்த மெக்ஸி­கோவை முற்­றிலும் எதிர்­பா­ராத வித­மான ஆபி­ரிக்க நாடான மாலி 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

 

ஆரம்பம் முதல் 77ஆவது நிமி­டம்­வரை இரண்டு அணி­யி­னரும் கடு­மை­யாக மோதிக்­கொண்­ட­துடன் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டையும் என்ற எதிர்­பார்ப்பே அதி­க­ரித்து காணப்­பட்­டது.

 

எனினும் மாலி வீரர் ஹமிடோ மைகா (56 நி), மெக்­ஸிகோ வீரர்­க­ளான டியகோ காமா (65 நி.), எரிக் அகய்ரே (76நி) ஆகிய மூவர் சிவப்பு அட்டைகளுக்கு இலக்­கா­கினர்.

 

மெக்­ஸிகோ வீரர்கள் இருவர் வெளி­யேற்­றப்­பட்­டதை சாத­க­மாக்­கிக்­கொண்ட மாலி அணி, இரண்டு நிமிட இடை­வெ­ளியில் ஏ. ட்ராஓரே (77 நி.), டியூடொன்னே (79 நி) ஆகியோர் ஊடாக கோல்­களைப் போட்டு வெற்றியீட்டியது.

 

முத­லி­ரண்டு நாட்­களில் நடை­பெற்ற எட்டு போட்­டி­களில் குழு சியில் நடைபெற்ற போட்டி ஒன்­றி­லேயே இல­கு­வான வெற்றி ஒன்று பதி­வா­னது.

 

சென­க­லுக்கு எதி­ராக வைக்­காட்டோ விளையாட்­ட­ரங்கில் நேற்று நடைபெற்ற போட்­டியில் 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் போர்த்துகல் இல­கு­வாக வெற்­றி­யீட்­டி­யது.

 

போட்­டியின் முத­லா­வது நிமி­டத்தில் கோல் ஒன்றைப் போட்ட போர்த்­துகல் அடுத்த இரண்டு கோல்­களை உபா­தை­யீடு நேரத்­தி­லேயே போட்­டது.

 

ஏனைய போட்டி முடி­வுகள்

 

குழு சி: கொலம்­பியா 1- – கத்தார் 0

குழு டி: உரு­குவே 1 -- – சேர்­பியா 0


குழு ஏ: நியூ­ஸி­லாந்து 0- – - யூக்ரெய்ன் 0

குழு ஏ: ஐக்கிய அமெரிக்கா 2 - –- மியன்மார் 1


குழு பி: ஆர்ஜன்டீனா 2- – - பணாமா 2

குழு பி: கானா 1- – - ஆஸ்திரியா 1

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10347#sthash.3zNYfHWk.dpuf

  • தொடங்கியவர்

20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டம்; 7 நாடுகள் மாத்திரமே தோல்வி அடையாமல் உள்ளன
 

 

நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் நேற்றுவரை குழு ஏ யில் ஐக்கிய அமெரிக்கா, யுக்ரைன், குழு பி யில் கானா, அவுஸ்திரேலியா, குழு சி யில் போர்த்துகல், கொலம்பியா, குழு ஈ யில் பிரேஸில், குழு எவ் வில் ஜேர்மனி ஆகிய நாடுகள் தோல்வி அடையாத அணிகளாகத் திகழ்கின்றன.

 

இதேவேளை குழு ஏ யில் வரவேற்வு நாடான நியூஸிலாந்து, குழு பி யில் ஆர்ஜன்டீனா, குழு டி யில் உருகுவே போன்ற நாடுகள் இரண்டாம் சுற்றுக்கான தகுதியைப் பெறுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

 

நேற்றைய தினம் மேலும் நான்கு போட்டிகள் நடைபெற்றன.

 

குழு ஈ க்கான போட்டி ஒன்றில் வட கொரியாவை எதிர்த்தாடிய நைஜீரியா 4 –0 என்ற கோல்கள் அடிப்படையில் அமோக வெற்றிபெற்றது.

 

மற்றொரு போட்டியில் ஹங்கேரியிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட பிரேஸில் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

குழு எவ் விற்கான போட்டிகளில் ஹொண்டுராஸை முற்றிலும் எதிர்பாராத விதமாக 3 – 0 என பிஜி வெற்றிகொண்டதுடன் உஸ்பெகிஸ்தானை 3 – 0 என ஜேர்மனி இலகுவாக வெற்றிகொண்டது.

 

குழு நிலைப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளன.

 

ஜூன் 10, 11ஆம் திகதிகளில் இரண்டாம் சுற்றுகளும் 14ஆம் திகதி கால் இறுதிகளும் 17ஆம் திகதி அரை இறுதிகளும் 20ஆம் திகதி 3ஆம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10441#sthash.mmjiK2m2.dpuf

  • தொடங்கியவர்

உலக கால்பந்து: அர்ஜென்டினா ‘அவுட்’

 

வெலிங்டன்: உலக கோப்பை கால்பந்து (20 வயது) தொடரில் இருந்து அர்ஜென்டினா அணி வெளியேறியது.                       

நியூசிலாந்தில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பிரேசில், அமெரிக்கா, செர்பியா உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.     

                  

வெலிங்டனில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், அர்ஜென்டினா, ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதன்மூலம் 3 போட்டியில் 2 ‘டிரா’, ஒரு தோல்வி உட்பட 2 புள்ளிகள் மட்டும் பெற்ற அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஆறு முறை கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறாதது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.     

 

மற்றொரு ‘பி’ பிரிவு போட்டியில் கானா அணி 1–0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை தோற்கடித்தது. ‘பி’ பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடித்த கானா (7 புள்ளி), ஆஸ்திரியா (5 புள்ளி) அணிகள் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறின.   

  

‘ஏ’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5–1 என மியான்மர் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் அணி 3–0 என அமெரிக்காவை தோற்கடித்தது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த உக்ரைன் (7), அமெரிக்கா (6) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.    

              

சிக்கலில் நியூசி.,: தொடரை நடத்தும் நியூசிலாந்து அணி ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மற்ற பிரிவுகளில் 3வது இடம் பிடிக்கும் அணிகள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433523141/FIFAWorldCupU20FootballArgentina.html

  • தொடங்கியவர்

ஜூனியர் உலக கால்பந்து: பிரேசில், ஜெர்மனி ‘ஹாட்ரிக்’ வெற்றி

 

நியூபிளைமவுத்: உலக கோப்பை கால்பந்து (20 வயது) தொடரில் பிரேசில், ஜெர்மனி அணிகள் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து, ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறின.     

நியூசிலாந்தில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, போர்ச்சுகல், உருகுவே உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.     

 

நியூபிளைமவுத் நகரில் நடந்த ‘இ’ பிரிவு லீக் போட்டியில், பிரேசில், வட கொரியா அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே நைஜீரியா, ஹங்கேரி அணிகளை வீழ்த்திய பிரேசில் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.   

  

மற்றொரு ‘இ’ பிரிவு லீக் போட்டியில் நைஜீரியா அணி 2–0 என ஹங்கேரியை தோற்கடித்தது. இதன்மூலம் 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 6 புள்ளிகளுடன் நைஜீரியா அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.     

 

ஜெர்மனி வெற்றி: கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி அணி 5–1 என ஹோண்டுராஸ் அணியை வென்றது. முன்னதாக பிஜி, உஸ்பெகிஸ்தான் அணிகளை வீழ்த்திய ஜெர்மனி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்து ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.     

 

மற்றொரு ‘எப்’ பிரிவு  போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி 3–0 என பிஜி அணியை தோற்கடித்தது. உஸ்பெகிஸ்தான், ஹோண்டுராஸ், பிஜி அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்றன. இருப்பினும் கோல் அடிப்படையில் உஸ்பெகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.     

 

நியூசி., வாய்ப்பு: ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாவது இடம் பிடித்த அணிகளில் இருந்து 4 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதன்படி நியூசிலாந்து (ஏ பிரிவு), மாலி (டி), செனகல் (சி), ஹங்கேரி (இ) அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றன. ஹோண்டுராஸ் (எப்), அர்ஜென்டினா (பி) அணிகள் ‘நாக்–அவுட்’ வாய்ப்பை இழந்து வெளியேறின.

 

 

http://sports.dinamalar.com/2015/06/1433689533/FIFAU20WorldCupFootballBrazilGermany.html

  • தொடங்கியவர்

20 வயதின் கீழ் உலக கிண்ண கால்பந்தாட்டம்: இறுதி 16 அணிகள் தெரிவு
 

 

நியூ­ஸி­லாந்தில் நடை­பெற்­று­வரும் 20 வயதுக்­குட்­பட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்­டி­களின் இரண்­டா­வது சுற்றில் விளை­யா­ட­வுள்ள 16 நாடுகள் தெரிவா­கி­யுள்­ளன.

 

லீக் சுற்றின் கடைசி நான்கு போட்­டிகள் நேற்றைய தினம் நடை­பெற்­ற­போ­திலும் ஏற்கனவே சில நாடுகள் இரண்டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யி­ருந்­தன.

 

நேற்­றைய போட்டி முடி­வுகள்:

குழு எவ் ஜேர்­மனி 5 – - ஹொண்­டுராஸ் 1


குழு எவ். உஸ்­பெ­கிஸ்தான் – 3 - பிஜி 0

குழு ஈ நைஜீ­ரியா 2 –  - ஹங்­கேரி 0


குழு ஈ பிரேஸில் 3 –  - வட கொரியா 0

இப் போட்டி முடி­வு­களை அடுத்து இரண்டாம் சுற்று நொக் அவுட் போட்­டிகள் பின்­வ­ரு­மாறு அட்­ட­வ­ணைப் ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 

பிரேஸில் எதிர் உரு­குவே, நியூ­ஸி­லாந்து எதிர் போர்த்­துகல், ஆஸ்­தி­ரியா எதிர் உஸ்­பெ­கிஸ்தான், யூக்ரெய்ன் எதிர் செனகல்.

 

ஐக்­கிய அமெ­ரிக்கா எதிர் கொலம்­பியா, சேர்பியா எதிர் ஹங்கேரி, கானா எதிர் மாலி, ஜேர்மனி எதிர் நைஜீரியா.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10472

  • தொடங்கியவர்

காலிறுதியில் பிரேசில்–போர்ச்சுகல்

 

ஹாமில்டன்: ‘பிபா’ உலக கோப்பை (20 வயது) கால்பந்து தொடரின் காலிறுதியில் பிரேசில், போர்ச்சுகல் அணிகள் மோதவுள்ளன.

 

நியூசிலாந்தில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரேசில், உருகுவே அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. பின், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் பிரேசில் அணி 5–4 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

 

மற்றொரு போட்டியில் போர்ச்சுகல், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய போர்ச்சுகல் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

 

மற்ற இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஜெர்மனி (1–0, எதிர்–நைஜீரியா), உஸ்பெகிஸ்தான் (2–0, எதிர்–ஆஸ்திரியா) அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தன.

 

ஹாமில்டனில் வரும் ஜூன் 14ல் நடக்கவுள்ள காலிறுதியில் பிரேசில், போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. மற்ற காலிறுதிப் போட்டிகளில் ஜெர்மனி – மாலி (இடம்–கிறைஸ்ட்சர்ச்), அமெரிக்கா – செர்பியா (இடம்–ஆக்லாந்து), உஸ்பெகிஸ்தான் – செனகல் (இடம்–வெலிங்டன்) அணிகள் மோதுகின்றன.

 

http://sports.dinamalar.com/2015/06/1434026614/FIFAJuniorWorldCupBrazilPortugal.html

  • தொடங்கியவர்

ஜூனியர் உலக கால்பந்து: பைனலில் பிரேசில்

 

கிறைஸ்ட்சர்ச்: ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு பிரேசில் அணி முன்னேறியது. அரையிறுதியில் செனகல் அணியை தோற்கடித்தது.

நியூசிலாந்தில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த அரையிறுதியில் பிரேசில், செனகல் அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த பிரேசில் அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. செனகல் அணியின் கோரியா (5வது நிமிடம்) ஒரு ‘சேம் சைடு’ கோல் அடித்தார். பிரேசில் சார்பில் மார்கஸ், பாஸ்சிலியா, ஜார்கே தலா ஒரு கோல் அடித்தனர்.

 

இதன்மூலம் பிரேசில் அணி ஜூனியர் உலக கோப்பை தொடரில் 9வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய 8 பைனலில், 5 முறை (1983, 85, 93, 2003, 2011) வெற்றி பெற்று கோப்பை வென்ற பிரேசில் அணி, 3 முறை (1991, 95, 2009) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434525789/JuniorWorldCupFootballBrazilSenagal.html

  • தொடங்கியவர்

இறுதி ஆட்டத்தில் பிரேஸில்,சேர்பியா
 

20 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஃபீஃபா உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதி ஆட்­டத்தில் விளை­யா­டு­வ­தற்கு பிரே­ஸிலும் சேர்­பி­யாவும் தகு­தி­பெற்­றுள்­ளன.

இதற்கு முன்­னோ­டி­யாக நியூ­ஸி­லாந்தின் க்றைஸ்ட்சேர்ச் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற முத­லா­வது அரை இறு­தியில் செனகலை எதிர்­கொண்ட பிரேஸில் 5 – 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இல­கு­வாக வெற்­றி­யீட்­டி­யது.

இளையோர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டம் உட்­பட ஐந்து தட­வைகள் உலக சம்­பி­ய­னான பிரேஸில், நேற்­றைய அரை இறு­தியில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆதிக்கம் செலுத்­தி­யது.

போட்­டியின் 5ஆவது நிமி­டத்தில் செனகல் வீரர் ஆண்டா கொரேயா பந்தை திசை திருப்ப விளைந்து அதனை சொந்த கோலாக்கி பிரே­ஸி­லுக்கு ஒரு கோலை தாரை வார்த்தை  அடுத்தே பிரே­ஸிலின் ஆதிக்கம் வெளிப்­பட ஆரம்பித்­தது.

இனாம் கோல் கிடைத்த அடுத்த இரண்­டா­வது நிமி­டத்தில் பிரே­ஸிலின் இரண்­டா­வது கோலை எம். கில்­ஹேர்மி போட்டார். 19ஆவது நிமி­டத்தில் பொச்­சி­லி­யாவும் 35ஆவது நிமி­டத்தில் ஜோர்­ஜேயும் 78ஆவது நிமி­டத்தில் மீண்டும் கில்­ஹேர்­மியும் கோல்­களைப் போட்­டனர்.

 

சேர்­பி­யா­வுக்கு இறுக்­க­மான வெற்றி

 

நோர்த் ஹார்பர் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இரண்­டா­வது அரை இறுதி ஆட்­டத்தில் மாலி­யிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட சேர்­பியா 2 –1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

 

இப் போட்­டியின் நான்­கா­வது நிமி­டத்தில் சேர்­பியா சார்­பாக ஸிவ்­கோவிக் முத­லா­வது கோலைப் போட்டார்.

 

35 நிமி­டங்கள் கழித்து மாலி சார்­பாக வை. கொனே கோல் நிலையை சமப்படுத்­தினார்.

 

இதனைத் தொடர்ந்து இரண்டு அணி­யி­னரும் கடு­மை­யாக மோதிக்­கொண்ட போதிலும் போட்டி 90 நிமி­டங்­களைப் பூர்த்தி செய்­த­போது கோல் நிலை 1– 1 என சம­மாக இருந்­தது.

 

இதனை அடுத்து மத்­தி­யஸ்தர் மேல­திக நேரத்தை வழங்­கினார்.

 

போட்­டியின் 101ஆவது நிமி­டத்தில் சப்­பொன்ஜிக் கோல் போட அதுவே சேர்பியாவின் வெற்றிக் கோலாக அமைந்­தது.

 

இந்த வீரர் போட்­டியின் 60ஆவது நிமி­டத்தில் மாற்று வீர­ராக களம் நுழைந்தவராவார்.

 

மூன்றாம் இடத்தைத் தீர்­மா­னிக்கும் மாலி, செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டியும் பிரேஸில், சேர்பியா அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டமும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10674#sthash.Dso77wTN.dpuf

  • தொடங்கியவர்

ஜூனியர் உலக கோப்பை: செர்பியா சாம்பியன

 

 

FIFA  World Cup final Brazil  Serbia football

ஆக்லாந்து: நியூசிலாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலை வீழ்த்தி, செர்பிய அணி கோப்பை வென்றது.

‘பிபா’ சார்பில் 20 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்தில் நடந்தது. இதன் பைனலில் பிரேசில், செர்பிய அணிகள் மோதின. இதில் 5 முறை கோப்பை வென்ற பிரேசில் அணி, இம்முறை செர்பியாவை எளிதாக சாய்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக செர்பிய வீரர்கள் கடும் சவால் கொடுக்க முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் (70வது நிமிடம்) மான்டிக் ஒரு கோல் அடிக்க செர்பியா முந்தியது. அடுத்த சில நிமிடத்தில் (73வது) பிரேசிலின் பெரைரா ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 1–1 என, சமன் ஆனது. போட்டி முடிவில் இரு அணியும் சமமாக (1–1) இருந்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. போட்டி முடிய இரு நிமிடம் இருந் போது (118வது) செர்பிய வீரர் மாக்சிமோவிச் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

முடிவில், 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செர்பிய அணி, சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1987ல் ஏற்கனவே கோப்பை வென்ற இந்த அணி, தற்போது இரண்டாவது முறையாக சாதித்தது.

http://sports.dinamalar.com/2015/06/1434786597/FIFAWorldCupfinalBrazilSerbiafootball.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.