Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்­டை­விட்டு வெளியே­றிய தமி­ழர்­களை அழைக்­க­வேண்­டிய பொறுப்பு அர­சுக்­குள்­ள­து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த கால­கட்­டத்தில் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது.

sumanthiran1_10.jpg

 

இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பு­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். சிறி­மா-­சாஸ்திரி ஒப்­பந்­தத்­துக்கும் யுத்­தத்தில் தமிழ் மக்கள் வெளி­யே­றி­ய­மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்­பு­ப­டுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

 

யுத்த கால­கட்­டத்தில் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் கடந்த முப்­பது ஆண்­டு­களில் யுத்­தத்தால் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் இந்த நாட்­டுக்கு அழைத்து வர­வேண்டும். இந்த மக்கள் தமது உயிரை பாது­காத்துக் கொள்ளும் நோக்­கி­லேயே அக­தி­க­ளாக வெளி­யே­றி­னார்கள். ஆகவே யுத்­த­கா­ல­கட்­டத்தில் வெளி­யே­றிய மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைத்­து­வ­ர­வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது.

 

அதேபோல் இன்று இரட்டை பிர­ஜா­வு­ரிமை கொடுக்க வேண்­டிய கோரிக்­கை­களை எல்லாம் அர­சாங்கம் அங்­கீ­க­ரித்­துள்ள நிலையில் புலம்­பெயர் தமிழ் மக்­களை நாட்­டுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்று தெரி­விப்­பது நியா­ய­மான கருத்­தாக நாம் கரு­த­வில்லை. இவ்­வா­றான கருத்­துக்கள் முழு­மை­யாக இன­வா­தத்தை பரப்­பு­வ­தா­கவே நாம் கரு­து­கின்றோம். கடந்த அர­சாங்கம் இன­வா­தத்தை கக்­கி­ய­மையின் கார­ணத்­தி­னா­லேயே இன்று மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் இந்த அர­சாங்­கமும் இன­வா­தத்தை கையாள்­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல.

 

மேலும் சிறி­மா-­ – சாஸ்திரி ஒப்­பந்தம் மூலம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை வேறு விட­ய­மாகும். இரண்டு நாடு­க­ளி­னதும் அன்­றைய அர­சாங்­கங்­களின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் மூலம் நடை­பெற்ற சம்­ப­வங்­களும் யுத்­தத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்­ததும் ஒன்­றாக முடி­யாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர்.

 

சொத்­துக்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து தமது நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். மக்களுக்கு மீண்டும் அவர்களது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/articles/2015/06/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%88%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%C2%AD%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%C2%AD%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களில் பலர் போரை சாக்குபோக்காக வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தவே புலம்பெயர்ந்தனர். இதனை உறுதிப்படுத்த மிக அண்மையில் கனடாவில் வந்திறந்ங்கிய கப்பலில் மக்கள் அளித்த வாக்குமூலங்கள் மட்டுமே போதுமானவை. இந்நிலையில் 80 களில் பெரும்பாலும் வடகிடக்கில் இளைஞர்கள் அவதிப்பட அல்லது இயக்கங்களில் இணைந்துகொள்ள தென்னிலங்கையில் வாழ்ந்த பலர் அதைவைத்து புலம்பெயர்ந்து தமது வளங்களைப் பெருக்கிக் கொண்டனர். உண்மையான பாதிக்கப்பட்ட மக்களில் வெகுசிலரே புலம் பெயர்ந்து இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உள்நாட்டிலேயே இருக்கின்றனர். வேறுசிலர் தமிழகத்தில் அகதி என்ற அடிப்படையில் திறந்தவெளிச் சிறையில் இருக்கின்றனர். இலங்கையில் தமக்கு உயிருக்கு அச்சம் இருக்கு எனச் சொல்லி அசைலம் அடித்தவர்கள் வதிவிடம் கிடைத்த மறுகணமே இலங்கைக்குப் பறந்து பாதுகாப்பாக புலத்துக்குத் திரும்பியது வரலாறு மட்டுமல்ல தற்போதைய நிகழ்வும் கூட.

அது நிற்க, இங்கு சுமந்திரன் குறிப்பிட்டது உயிரச்சத்தினால் புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே, வசதி வாய்ப்புக்களை நாடிப் புலம்பெயர்ந்தவர்களை அன்று. உயிரச்சத்தினால் புலம் பெயர்ந்தவர்கலால் கூட மீண்டும் திரும்ப முடியாது. பெரும்பாலும் அவர்கள் வாழும் நாடுகளில் தம்மை நிலைநிறுத்தியிருப்பர். ஆக இலங்கைக்கு மீண்டும் வந்து வாழ விரும்பும் ஒரு சில மக்கள் கூட்டத்தையே சுமந்திரன் கருதியிருந்தார் என நாங்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளாலாம். இதை விடுத்து இவ்வாறு சுமந்திரன் சொல்லுவது புலம்பெயர் அன்பர்களின் பலமென்று அவர்கள் கருதுவார்களாயின் அது அறியாமையேயன்றி வேறன்று!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தேர்தலுக்கு வெளிநாட்டில் தமிழர்களிடம் உண்டியல் குலுக்கத்தான். வேறு எந்த நல்ல நோக்கமும் இந்தப் பேச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் முடிய சம்பிக்கவோடு சேர்ந்து சொறிலங்கா கிரிக்கெட்டை ரசிக்கவும் தயங்கார் இவர். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.