Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆணிவேர் நாயகி மதுமிதா வழங்கிய நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அண்மையில் வெளியாகிய 'ஆணிவேர்' திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அதன் கதாநாயகி மதுமிதாவை 'வஜ்ரம்' என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இனி பேட்டியிலிருந்து.......

aaniveraa1.jpg

மதுமிதா, முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எவ்வாறு தமிழ்த் திரையுலகில் அறிமுகமானீர்கள்?

நான் பிறந்தது ஹைதரபாத்தில, என்னோட தாய்மொழி தெலுங்கு. தமிழ்ல படங்கள் பண்ணுறதுக்கு முன்னாடி நான் தெலுங்கில் படங்கள் பண்ணிக்கிட்டிருந்தேன். என்னோட படங்களைப் பார்த்திட்டு பார்த்தீபன் சார் தன்னுடைய படத்தில் என்னை நடிக்க வைத்தார். அது குடைக்குள் மழை.

குடைக்குள் மழைதான் உங்களுடைய முதல் தமிழ்த் திரைப்படமா?

ஆமாங்க.

தாய்மொழி தெலுங்கு என்று சொன்னீர்கள், தமிழை நல்லா உச்சரித்து கதைக்கின்றீர்கள், எங்கு கற்றுக்கொண்டீர்கள்?

நான் குடைக்குள் மழை பண்ணும்போது பேசக் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் எழுதவும் வாசிக்கவும் கத்துக்கிட்டேன்.

மதுமிதா, நீங்கள் ஆணிவேர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றீர்கள். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முதல் வெண்திரைக் காவியம் அது. அதற்கு முதல் வந்த படங்கள் எல்லாம் பெரும்பாலும் வீடியோ படங்களாகத்தான் வெளிவந்திருக்கின்றன. நீங்கள் அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கின்றீர்கள். இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி அமைந்தது?

அது வந்தது எப்படின்னா, இயக்குனர் ஜான் சார் எனக்கு போன் பண்ணி, இப்படி ஒரு படம் பண்ணப்போகிறோம். நீங்கதான் இந்தப் பாத்திரத்தைப் பண்ணனும் என்றார். அதோட இதில் நல்லா நடிக்கிறதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கும் என்றார். என்னுடைய கதாபாத்திரத்தை அவங்க விளங்கப்படுத்தும்போது எனக்கும் பிடித்திருந்தது, நானும் படம் பண்றதுக்கு ஒத்துக்கிட்டேன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சனையைப் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

ஆமாங்க, ஆனால் முழுசா தெரியாது. எதோ கொஞ்சம் தெரியும். அங்கே போனதுக்கு அப்புறம்தான் முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கிறாங்க, அவங்க கஷ்டங்கள் எல்லாம் எனக்கு முழுசா தெரிய வந்தது.

நீங்கள் அங்கே எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த மக்களோடு பழகிய அனுபவங்களைப் பற்றி சொல்லுங்கள்.

நான், முதல் தடவை 15 இல் இருந்து 20 நாள்கள் அப்புறம் இரண்டாவது தடவை அதே மாதிரி 15 இல் இருந்து 20 நாள்கள் கிட்டத்தட்ட 40 நாள்கள் நான் தங்கியிருந்தேன். அந்த மக்களைப் பற்றி சொல்லணும்னா ரொம்ப அன்பான மக்களுங்க அவங்க. அந்த மாதிரி மக்களை நான் எங்கேயுமே பார்த்ததில்லை. அவங்க விட்டில ஒரு பெண் இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ அந்த மாதிரி என்னை பார்த்துக்கிட்டாங்க. அவங்களோட குடும்பத்துப் பெண்ணா நினைச்சு என்னை ரொம்ப அன்பா கவனிச்சுக்கிட்டாங்க. அவங்க எப்படின்னா.... நிறையப்பேருக்கு கை இருக்காது காலிருக்காது, ஆனா, தங்களுக்கு கை இல்லையே கால் இல்லையேன்னு வருத்தப் பட்டதில்லை. கை இல்லேனாலும் இன்னொரு கையால அவங்க வேலையை அவங்களே பார்த்துப்பாங்க. யாரோட உதவியையும் அவங்க எதிர்பார்க்கிறதில்லை. அது எப்படி அவங்களால முடியுது அப்படின்னு எனக்கு இன்னும் புரியவே இல்லிங்க.

அந்த நாடு உங்களுக்கு எப்படி இருந்தது? நீங்கள் பல இயற்கை காட்சிகளை பார்த்திருப்பீர்கள். பல இடங்கள் போரினால் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உங்களுடைய பார்வைக்கு தமிழீழம் எப்படி இருந்தது?

ரொம்ப அழகான நாடுங்க அது! ஆனா பல இடங்கள் பாதிப்படைஞ்சிருக்கு, பல சுவர்கள்ல புள்ளட் பாஞ்ச அடையாளங்கள் இருக்கு. பல வீடுகள் இடிஞ்சிருந்திச்சு. இதையெல்லாம் விட்டுட்டு இயற்கையா அந்த இடங்களைச் சொல்லணும்னா ரொம்ப அழகான இடங்கள். ஆனா அந்த அழகைவிட பாதிப்புதான் அதிகமா இருக்கு.

நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து தமிழீழத்திற்குச் செல்லும் போது நிச்சயமாக கொழும்பு வழியாகத்தான் சென்றிருப்பீர்கள். கொழும்பிலோ அல்லது அங்கிருந்து செல்லும் வழியிலோ ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டனவா?

ஆமா, ஆமா செக்கிங் அதிகமாக இருந்தது. லக்கேஜை அடிக்கடி திறந்து காட்டச் சொல்றது. பாஸ்போர்டை அடிக்கடி செக் பண்ணுறது. இந்த மாதிரி எல்லாம் நடந்தது.

அங்கே இரண்டு அரசாங்கம் இருப்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். ஒன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றது தமிழீழ அரசாங்கம். நீங்கள் போய்த் தங்கியிருந்த வன்னி, கிளிநோச்சி போன்ற இடங்கள் தமிழீழ அரசாங்கத்தின்கீழ்தான் இயங்குகின்றன. அந்தத் தமிழீழ அரசின் நிர்வாகத்தைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

அந்த அரசாங்கத்தை பற்றி சொல்லணும்னா ரொம்ப திறமையானவங்க. எனக்கு படத்தில என்ன பாத்திரம்னா டாக்டர் நந்தாவை தேடுறதுக்காக போவேன். அவங்க கிட்ட நிஜமாவே அந்த மாதிரி காணாம போனவங்களோட ஃபைல்ஸ் நிறைய இருக்கு. ரொம்ப நல்லா அதை அவங்க நிர்வாகம் பண்றாங்க. எப்பையோ எங்கையோ காணாமா போனவங்க, போரினால் இறந்து போனவங்களோட ஃபைல்ஸ் எல்லாத்தையும் அவங்க நிஜமாகவே பத்திரப்படுத்தி வச்சிருக்கிறாங்க. அது மட்டுமில்லீங்க டிராஃபிக் கன்ட்ரோல் (Traffic Control), ஸ்பீட் ரெஸ்ட்ரிக்ஷன் (Speed Restriction) எல்லாத்தையுமே சரியா கவனிக்கிறாங்க. மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்திடக் கூடாதென்று கவனமா இருக்கிறாங்க. தீயணைப்பு, போலிஸ் எல்லாமே நல்லா பண்றாங்க. தங்களுக்காக ஒரு கவர்மென்டை உருவாக்கி இப்படி எல்லாம் பண்றதை யோசிக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

மதுமிதா நீங்கள் இப்போது தமிழ்த் திரைப் படத்துறையில் இருக்கின்றீர்கள். தமிழ்த் திரையுலகில் ஆணாதிக்கம் அதாவது Male Chauvinism இருக்கிறது என்று பெண்ணியவாதிகள் (Feminist) குற்றம் சாட்டுகிறார்கள்! கதாநாயகனை பிரதானப் படுத்தித்தான் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் ஆளுமையை வெளிப்படுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு என்பது அவர்களின் வாதம்!. நீங்கள் தமிழ்த் திரையுலகில் இருக்கும் பெண் என்ற வகையில் உங்களுடைய கருத்து என்ன?

நம்ம சொசைட்டியே அந்த மாதிரிங்க, நான் சொல்றது இங்க, இந்தியாவில சொசைட்டியே அந்த மாதிரித்தான். அதனால படங்களையும் அந்த மாதிரியே எடுத்திருக்கிறாங்க. இப்பவும் எடுத்துக்கிட்டு இருக்கிறாங்க. இருந்தாலும் சில படங்கள்ல பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க. இப்போ நாங்க வெஸ்டேர்ன் மூவி பார்த்தோம்னா பெண் போலீஸ் மாஃபியா கூட்டத்தை தேடிக் கண்டுபிடிக்கிற மாதிரி எடுத்திருப்பாங்க. அவங்களோட சண்டை போடுற மாதிரி எல்லாம் காட்டியிருப்பாங்க. இங்க அப்படி எடுத்தால், உண்மையாகவே அப்படி பெண்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுறது குறைவா இருக்கும். சொசைட்டியிலேயே ஆணாதிக்கம் இருக்கிறதால அந்த மாதிரி படங்கள் வருவது குறைவா இருக்கு.

நீங்கள் ஈழத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

அதைப் பற்றி நினைக்கும் போது எனக்கே பிரமிப்பா இருக்குங்க. பெண்களால இப்படி எல்லாம் பண்ண முடியுமான்னு நான் ஆச்சரியப் பட்டேன். சில பெண்களை நான் பார்தேன், அவங்களுக்கு நெஞ்சுக்கு பக்கத்தில புள்ளட் பாஞ்சிருக்கும். அதை எடுத்தா அவங்க உயிருக்கு ஆபத்து, அதனால அதை அப்படியே வச்சுக்கிட்டு வாழுறாங்க. பிரமிப்பா இருக்குங்க. அங்க வாழ்ற பெண்கள் ஆண்களுக்கு சமமா மட்டும் இல்ல, இன்னும் மேல கூட சொல்லலாம். even better than men. போராடுறதில மட்டுமல்ல வேலை செய்யுறதிலையும் நல்ல திறமையைக் காட்டுறாங்க.

தற்பொழுது வேறு என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

பட்டாசுன்னு ஒரு படம் பண்றேன், அப்புறம் பரியமுடன் சிவான்னு ஒரு படம் பண்றேன்.

மற்ற படங்களைப் போல் இல்லாமல் ஆணிவேர் என்ற படம் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டது. உங்களை எடுத்துக் கொண்டாலும், நீங்கள் நடித்த 'இங்கிலிஷ்காரன்' போன்ற திரைப்படங்களை நான் பார்த்திருக்கின்றேன். மற்றப் படங்களை விட ஆணிவேரில் உங்கள் நடிப்பாற்றல் அதிகமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக டாங்கியால் நசுக்கப் பட்ட மக்களைப் பார்த்து நீங்கள் மிரண்டுபோய் பதறி அழும் காட்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மிக அற்புதமாக நடித்திருக்கின்றீர்கள்.!

ஆமாங்க எனக்கு ஞாபகம் இருக்கு, ரொம்ப தாங்க்ஸ். அதற்குக் காரணம் எங்கள் இயக்குனர் ஜான். எனக்கு நல்லா அதை விளங்கப் படுத்தியிருந்தாங்க. அது மட்டுமில்லாமல் அந்த இடத்துக்கு போன உடனே எனக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது. அந்த நடிப்பு இயற்கையா வந்ததுன்னு சொல்லலாம்.

படமே மிக எதார்த்தமாக வந்திருக்கிறது!

ஆமா, அதிலும் குறிப்பா இந்த சீன் எடுக்கும் போது எனக்கு நிஜமாவே அந்த மக்கள் சாகடிக்கப் பட்டது ஞாபகம் வந்திரிச்சு!

அப்படி என்றால் மற்றப் படங்களில் நடித்ததற்கும் ஆணிவேரில் நடித்ததற்கும் மிகப் பெரிய வேறுபாட்டை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்!

ஆணிவேர், அங்க நடந்த சம்பவங்களை வைத்து நாங்கள் எடுத்த படம். மற்ற படங்கள் உண்மையான கதையில்லை. இங்கிலிஷ்காரனோ, குடைக்குள் மழையோ நிஜக் கதையில்லை. அவங்களா கற்பனை செய்து எடுத்தது. ஆணிவேர் அந்த மாதிரி படம் இல்லை அதனால Natural performance பண்ண வேண்டிய தேவை இருந்தது. எங்களோட இயக்குனர் ஜான் அந்த விஷயத்தில் ரொம்ப உதவியா இருந்தாங்க. ஒவ்வொரு சீனும் எடுக்கிறதுக்கு முன்னாடி ரொம்ப நல்லா விளங்கப் படுத்தியிருந்தாங்க. அதை விளங்கப் படுத்த வேண்டிய தேவை கூட இருக்காதுங்க. நிஜமாகவே அந்த மக்களைப் போய்ப் பார்த்து அவங்க கூட பழகினதுக்கு அப்புறம் இயற்கையாகவே அந்த உணர்வு வந்திடும் என்று நான் நினைக்கிறேன்.

ஆணிவேர் போன்று வாய்ப்புக்கள் வந்தால் ஈழப் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?

கண்டிப்பா நடிப்பேன். அப்படி வர்றது என்னோட அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். கடவுளால கொடுக்கப் படுற வாய்ப்பு அது. எல்லாருக்கும் கிடைக்காது.

ஈழப்போராட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிற ஒரு போராட்டம். முதல் 20 ஆண்டுகள் காந்திய வழியிலும் அதன்பின் இன்று வரை, ஏறக்குறைய 30 ஆண்டுகளாக ஆயுதப் பேராட்டமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மக்கள், பெரும்பாலும் நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது விழுக்காடு மக்கள் விடுதலையை விரும்புகின்றார்கள். அந்த மக்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் ?

எனக்கு என்ன சொல்லணும், என்ன செய்ய முடியும் எதுவும் தெரியல. நான் கடவுளா இருந்தா இதை மாத்தியிருப்பேனோ அப்படின்னு கூட எனக்குத் தோணும். நான் சராசரி மனுஷியா இருக்கிறதால ஒண்ணும் பண்ணமுடியலையேன்னு வருத்தமா இருக்கு. நான் அடிக்கடி நியூஸ் கேட்டுக்கிட்டே இருப்பேன். இப்ப கூட சமீபத்தில நிறையப் பேர் செத்துப் போயிருக்கிறாங்க. நாங்க அங்க போய், அவங்க கூட பழகி அவங்களோட இருந்திட்டு திரும்பி வந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிஞ்சவங்க கூட அடிபட்டிருக்கிறாங்க. இதை எல்லாம் நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நான் தமிழீழ மக்களுக்கு என்ன சொல்லிக்க விரும்புறேன்னா, நீங்க செய்யிறது சரி உங்க விடுதலைக்காக போராடுறீங்க. மத்தவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறேன்னா அவங்களுக்கு உதவி செய்யலேன்னாலும் பரவாயில்லை, ஆனா அந்த மக்களுக்கு எந்தக் கெடுதலையும் செய்யாதீங்க. அவங்களை அமைதியாக வாழவிடுங்க. இதைத்தான் நான் சொல்லிக்க விரும்புறேன்.

நல்லது மதுமிதா உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. மற்றும் ஒரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்வோம். நன்றி வணக்கம்.

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆணிவேர் மதுமிதாவின் கறுத்துக்களினை யாழில் இணைத்தமைக்கு நன்றிகள் . ஆணிவேர் பற்றிய மேலதிகத்தகவல்கள், கருத்துக்களினைப்பார்க்க http://www.yarl.com/forum3/index.php?showtopic=14036

Posted

படம் கட்டாயம் பார்க்க வேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட இன்னமும் பார்க்கவில்லையா..?

Posted

நாளை தானே ஆரம்பம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னர் இந்த நடிகை வேறு மாதிரி (போராட்டத்திற்கு எதிரா) பேட்டி குடுத்த மாதிரி எங்கேயோ வாசிச்ச ஞாபகமா இருக்கு... சரியா தொரியவில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
    • தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
    • இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.