Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனை விம்பிள்டன் சாம்பியனாக்கிய மகேஷ் பூபதி!

Featured Replies

சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனை விம்பிள்டன் சாம்பியனாக்கிய மகேஷ் பூபதி!

விம்பிள்டனில் ஒன்றல்ல... மூன்று சாம்பியன் பட்டங்களை தட்டிவந்திருக்கிறது இந்திய படை. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், ஜூனியர் இரட்டையர் போட்டியில் சுமித் நாகல் என ஒரே நேரத்தில் மூன்று இந்தியர்களும் சாம்பியன் பட்டத்தை அள்ள, இந்திய டென்னிஸ் உலகமும், ரசிகர்களும் உற்சாகத்தில் மிதிக்கிறார்கள்.

சானியாவின் நம்பர் ஒன் கனவு!

மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்தபிறகு சானியா மிர்ஸாவுக்கு வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. இந்த ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஆட ஆரம்பித்த பிறகு மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றதோடு உலகின் நம்பர் ஒன் ஜோடியாக ரேங்கிங்கிலும் முதலிடம் பிடித்தார்கள். இந்தகூட்டணியின் முதல் கிராண்ட்ஸ்லாம் அதுவும் விம்பிள்டன் வெற்றி இது. 'இவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் தொட முடியாது’ என்கிற அளவுக்கு இந்த விம்பிள்டனில் சானியா - மார்ட்டினா ஜோடி அரை இறுதிப்போட்டி வரை ஒரு செட் கூட தோற்காமல் நேர் செட்டிகளில் வெற்றிபெற்று வந்தது. இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் இணையான மார்ட்டினா- சானியா ஜோடி, உலகின் நம்பர் 2 இணையான மகரோவா- வெஸ்னியா ஜோடியை எதிர்கொண்டது.

sum3.jpg

இதில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மூன்றாவது செட்டில் 2-5 என பின்தங்கியிருந்து பிறகு தொடர்ந்து 5 கேம்களை வென்று சாம்பியன் பட்டத்தைப் பிடிக்க சானியா- ஹிங்கிஸுக்கு இரண்டரை மணி நேரம் ஆனது. விம்பிள்டன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற மகளிர் இரட்டையர் போட்டி இதுதான்.

''ரசிகர்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கே  இது மிகவும் திரில்லிங்கான போட்டியாக இருந்தது. நம்பர் ஒன்/ நம்பர் 2 வீராங்கனைகள் மோதும்போது களத்தில் டென்ஷன் எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். எதிர் வீராங்கனைகள் ஒரு பாயிண்ட் எடுக்க வேண்டும் என்றாலும்கூட அவர்கள் போராடித்தான் எடுக்க வேண்டும். எந்த பாயிண்டையும் ஈஸியாகக் கொடுத்துவிடக்கூடாது என்று பேசிகொண்டுதான் நானும், மார்ட்டினாவும் களத்தில் இறங்கினோம்.

எப்போதுமே தோல்வியடைந்தால் சரியாக விளையாடவில்லை என்று சொல்லிவிடுவார்கள். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் கற்றுகொள்ள வேண்டிய முதல்பாடமே நம்மைவிட எதிரில் ஆடியவர்கள் சிறப்பாக விளையாடியதால்தான் நாம் தோற்றோமே தவிர நாம் மோசமாக விளையாடவில்லை என்கிற பாசிட்டிவ் எனர்ஜி வேண்டும். மூன்றாவது செட்டில் இன்னும் இரண்டு பாயிண்ட்டுகள் அடித்தால் எதிர் அணி வெற்றிபெற்றுவிடும். ஆனால் நாங்கள் வெற்றிபெற வேண்டுமானால் இன்னும் 5 கேம்கள் அதாவது 20க்கும் மேற்பட்ட பாயிண்டுகள் வேண்டும் என்கிற நிலை வந்தது. அப்போது என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். இதுவரை எப்படி விளையாடினோமோ அதேப்போல் கவனம் சிதறாமல் முழு எனர்ஜியுடன் விளையாட வேண்டும் என்பதுதான். அதை சரியாக செய்தோம். சாம்பியன் பட்டம் கிடைத்துவிட்டது. இதற்கு மேல் நான் கடவுளிடம் கேட்க வேறு ஒன்றும் இல்லை. இத்தனை ஆண்டுகள் இந்த விம்பிள்டன் வெற்றிக்காகத்தான் காத்திருந்தேன். அந்தத் தருணம் வந்துவிட்டது. ஆனால் அதை எப்படிக் கொண்டாடுவது என்று இப்போது புரியவில்லை'' என்று படபடக்கிறார் சானியா மிர்ஸா!

லியாண்டரின் 16வது கிராண்ட்ஸ்லாம்!

''எனக்கு இப்போது 42 வயது. இது என்னுடைய 33 வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி. வெற்றிபெற்றால் என்னுடைய 16வது கிராண்ஸ்லாம் பட்டமாக இருக்கும்'' என்று ட்வீட் தட்டிவிட்டுத்தான் விம்பிள்டன் மைதானத்துக்குள் நுழைந்தார் லியாண்டர் பெயஸ். கலப்பு இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் ஜோடியான அமெரிக்காவின் மைக் பிரையன்/பெத்தானி மெட்டக் ஜோடியை அரை இறுதிப்போட்டியில் 6-3, 6-4 என்கிற நேர்செட்டில் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது

sum1.jpg

லியாண்டர்- மார்ட்டினா ஜோடி. ''மகளிர் இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும் இரண்டரை மணி நேரம் நடந்த மிகவும் கடுமையானப் போட்டி என்பதால் மார்ட்டினா ஹிங்கிஸ் மிகவும் சோர்வாக இருந்தார். இருப்பினும் இரவு தூங்கச்செல்லும்முன்பு அடுத்தநாள் ஆட்டத்தைப் பற்றி என்னிடம் கொஞ்ச நேரம்பேசிவிட்டு, காலையில் சீக்கிரமே எழுந்து பயிற்சிக்கு வந்துவிட்டார். வெற்றிகிடைத்துவிட்டது என்று சோர்வடைபவர்கள் அல்ல, அடுத்த வெற்றிக்காக ஓடுபவர்கள்தான் உண்மையான சாம்பியன்ஸ். மார்ட்டினாவின் இந்த அடக்கம் எனக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்தது. அவருக்கு இன்னுமொரு சாம்பியன் பட்டத்தை வென்று பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. வெற்றி என்பது மட்டுமே எங்களுடைய குறிக்கொளாக இருந்தது. அதனால் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினோம். போட்டி முடியும்வரை எதிர் அணியால் இரண்டே பாயிண்ட்கள்தான் எடுக்கமுடிந்தது'' என்று உற்சாகமாகப் பேசுகிறார் லியாண்டர் பெயஸ்.

''வயது ஒருபக்கம் கூடிக்கொண்டே இருக்க வெற்றிகளும் கூடிக்கொண்டே போகிறது. இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. ஃபிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன். என்னுடைய மகள்தான் எனக்கு குரு. அவள் டென்னிஸ் போதும் என்று சொன்னால் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன்'' என்று சொல்லிவருகிறார் லியாண்டர்.

சூப்பர் ஜூனியர் சுமித்!

சானியா மிர்ஸா, லியாண்டர் என சீனியர்களின் வெற்றி ஒருபக்கம் இருக்க, சத்தம் இல்லாமல் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சுமித் நாகல். விம்பிள்டன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் வியட்நாம் வீரர் ஹோஹாங்குடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சுமித் நாகல் ஹரியானா மாநிலம் ஜிஜார் மாவட்டத்தை சேர்ந்தவர். சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனான 17 வயதான சுமித், இந்திய டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதியின் வளர்ப்பு.

mah.jpg

10 வயதில் மகேஷ் பூபதியின் டென்னிஸ் பயிற்சி முகாமில் சேர்ந்த சுமித்தை தன்னுடைய ஜூனியராகத் தத்தெடுத்திருக்கிறார் மகேஷ் பூபதி. ''கடந்த ஏழு ஆண்டுகளாக சுமித்தின் பயிற்சிக்கான செலவுகள், போட்டிக்கான செலவுகள் என அனைத்தையும் ஸ்பான்சர் செய்தது மகேஷ் பூபதிதான். அவன் எந்தெந்த போட்டிகளில் விளையாட வேண்டும், எதில் விளையாடக்கூடாது என எல்லாமே மகேஷ் பூபதியின் திட்டப்படிதான் நடந்தது. இந்த விம்பிள்டன் போட்டியில் அவன் சாம்பியன் பட்டம் வெல்வான் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சுமித்தின் கடவுள் மகேஷ் பூபதிதான். இந்த வெற்றியை முழுக்க முழுக்க மகேஷ் பூபதிக்கு அர்பணிக்கிறோம்'' என்று நெகிழ்ந்திருக்கிறார் சுமித்தின் தந்தை.

சாம்பியன்ஸுக்கு சல்யூட்!

http://www.vikatan.com/news/article.php?aid=49607

  • கருத்துக்கள உறவுகள்

டென்னிஸ் ரசிகர்கள் பெருமைப் படலாம்...!

நன்றி நவீனன்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.