Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பான மணிசங்கர் ஐயர்

Featured Replies

நெடுக்காலபோவான்! நான் எழுதியதை சரியாக கவனியுங்கள்.

"பாரதி பார்ப்பனியத்தை கைவிட்டு நல்ல மனிதராக இருந்தார்.

சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதி அவரது சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டார்."

இதிலேயே நாம் பார்ப்பனியத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாட்டில் தெளிவாக இருக்கிறோம் என்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

  • Replies 88
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! நான் எழுதியதை சரியாக கவனியுங்கள்.

"பாரதி பார்ப்பனியத்தை கைவிட்டு நல்ல மனிதராக இருந்தார்.

சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதி அவரது சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டார்."

இதிலேயே நாம் பார்ப்பனியத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாட்டில் தெளிவாக இருக்கிறோம் என்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

பிறப்பால் எழுவது சாதி என்பதையே முறியடித்தது ஒரு பிறப்பால் பிராமணனான பாரதி. அதாவது உங்கள் பாசையில் சொன்னால் பார்ப்பர்ணியன். அவர் பார்ப்பர்ணியத்தை கைவிட்டோரோ இல்லையோ என்பது இரண்டாம் பட்சம். ஆக பிறப்பால் உதிப்பதல்ல சாதி என்பது...யதார்த்தமானது. நீங்கள் சிலர் சாதியை பிறப்பின் மூலமாக்கி சாதி வெறிக்கான அத்திவாரத்தை அகற்றுவதில் இருந்து மறைமுகமாக தடையிட நினைக்கிறீர்கள் என்பது புலனாகிறது. :huh:

மதராசி..

பார்ப்பர்ணியம்..பார்ப்பணியன்

.இதில் வினைச்சொல்லே இல்லைசார். உங்களோடு குப்பத்துப் பாசை பேசினால் தான் புரியுமோ என்னமோ?! :huh:

சாதி பிறப்பால் வருகிறது என்று நான் சொல்லவில்லை.

இந்து மதம் சொல்கிறது. பகவத்கீதை, ரிக் வேதம், மனு தர்மம் என்று நிறைய வேதங்கள் சொல்கின்றன.

அதைத்தான் இந்து மதம் நடைமுறைப்படுத்தவும் செய்கிறது.

இதை நாம் சுட்டிக்காட்டுவதன் அர்த்தம், அதை ஆதரிக்கிறோம் என்பது அல்ல.

இந்து மதம் ஒழியட்டும் என்று நாம் கோசம் போடுவதன் முக்கிய காரணமே, இந்து மதத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வர்ணாச்சிரம தர்மம் என்று பல முறை சொல்லி உள்ளேன்.

இது நன்றாக உங்களுக்குப் புரிந்தும், புரியாத மாதிரி நடிப்பது அழகல்ல.

இங்கே நாம் வழக்காட வரவில்லை. வெற்றி பெறுவதற்கு. ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கு வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

ஆகவே கருத்துக்களை நேர்மையாக வையுங்கள். சரியாக விளங்கிக்கொண்டும் தவறான முறையில் திசை திருப்பாதீர்கள்

பாரதி என்ற ஒரு பிராமணனே இந்து மதத்தை எதிர்க்காமல் தன் சாதி நிலை என்பது ஒரு பொருளற்றது என்பதை நிறுவ முடிந்ததென்றால் ஏன் நீங்கள் இந்து மதத்தை மற்றும் மதங்களை அதனைச் சார்ந்த சமூகங்களை அழிப்பதனூடு இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆக உங்களின் கருத்து கிட்லரின் கருத்துப் போல் இல்லையா. தமிழர்களை இருப்பை அடையாளத்தையே அழிப்பதால் பிரச்சனை இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்பது போன்ற மகிந்தவின் சிந்தனை போல் இல்லையா?

மனிதர்களுக்குள்ள மத உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளை மனிதர்களுக்கிடையேயான சமூகப் பலவீனக் காரணிகளை அப்புறப்படுத்துவது என்பதற்கு பாரதி போன்றவர்களின் வழிமுறையே பெரியார் போன்ற சமூக எதிர்ப்புணர்வு வெறியர்களின் வழிமுறியைக் காட்டினும் சிறப்பு. பாரதி நடைமுறைகளை ஒதுக்கினானே தவிர சமூகங்களை மக்களை ஒதுக்கவில்லை. அவை புரிந்து கொள்ளப்படும் போது எதிர்ப்புக்கள் அற்ற மாற்றங்கள் நிச்சயம் தோன்றும். அது அடுத்தவரின் உரிமைகளைப் பறிக்காத தன்மையானதாகவும் அடுத்தவரின் சுயமாற்றத்துக்கு சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கும். அதையே நாம் இங்கு வலியுறுத்துகின்றோம்,

அதைவிடுத்து இந்து மதத்தை ஒழிப்போம்..பிராமணர்களின் அடையாளத்தை ஒழிப்போம்..பார்ப்பர்ணியர்களை பார்ப்பர்ணியத்தை ஒழிப்போம் என்பதெல்லாம்..தமிழர்களின் இனப்பிரச்சனையைத் தீர்க்க தமிழர்களை ஒழிப்போம் என்ற சிங்களப் பேரினவாதத்தையே நினைவூட்டுகிறது. தமிழ் தேசியம் என்பது தமிழ் பேரினவாதமல்ல என்பதை தயவுசெய்து உங்களின் பகுத்தறிவுக்குள் புகுத்திக் கொள்ளுங்கள். :rolleyes:

Edited by nedukkalapoovan

நீங்கள் மீண்டும் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறீர்கள்!

மதம் என்பது ஒரு சித்தாந்தம். அதை இனத்தோடு ஒப்பிடக் கூடாது.

பார்ப்பனியத்தை சிங்கள பேரினவாதத்தோடு ஒப்பிடுவதுதான் சரி!

பேரினவாதத்தை ஒழிப்போம் என்று சொல்வதன் அர்த்தம் சிங்களவர்களை கொல்வோம் என்பது அல்ல.

பேரினவாதத்தை ஒழித்து இணைந்து வாழவும் சில தலைவர்கள் முயன்றார்கள்.

ஆனால் முடியவில்லை.

இப்பொழுது பிரிந்து செல்ல போராடுகிறோம்.

பார்ப்பனியத்தை ஒழிக்க, இந்து மதத்தை சிர்திருந்த பாரதி போன்றவர்கள் முயன்றார்கள். முடியவில்லை.

நாம் பிரிந்து செல்ல முயற்சிக்கிறோம்.

மதம் என்பதும் இனத்துவ அடையாளங்களுக்கான அம்சங்களில் ஒன்று. அதைக் கடைப்பிடிப்பது விடுவது மனித சுதந்திரம். மதத்தை ஒழிப்போம் என்பது அடுத்தவரின் உரிமையைக் கையெலெடுக்கும் செயல் போன்றது.

சிங்களவர்கள் பேசுவது பேரினவாதம் என்பது அவர்களால் தமிழர்கள் பாதிக்கப்படும் போது எப்படி ஆகிறதோ அப்படியே தமிழர்களால் சிங்களவர்கள் பாதிக்கப்படும் போதும் அது தமிழ் பேரினவாதமாகும். பிரிந்து செல்வது வேறு இனத்தை மதத்தை ஒழிப்போம் என்பது வேறு. பிரிந்து செல்வது அவரவர் தங்கள் உரிமைகளை தாங்களே தீர்மானிப்பதாக அமைக்கும். அடுத்தவர் உரிமையில் இன்னொருவரின் தலையீட்டைத் தவிர்க்கும். அங்கு ஒழிப்பு என்பது அவசியமில்லை. பிரிந்தால் இந்து சமயமும் வாழும்..சமயமற்ற நீங்களும் வாழ்வீர்கள். அதைச் செய்யுங்கள். ஒழிப்புப் பிரச்சாரம் அவசியமில்லை.

பிரிந்து உங்கள் வழியில் செல்லுங்கள். அடுத்தவரை துன்புறுத்தாமல்..அடுத்தவரின் உரிமையை பரிகசிக்காமல் இருங்கள். அதுதான் அடுத்தவரும் உங்களின் உரிமையில் தலையிடுவதை நிறுத்தும். உங்களைப் பிரிந்து போக வேண்டாம் என்று இந்துமதமோ பிராமண சமூகமோ பார்ப்பர்ணியமோ கட்டிப் பிடித்து வைத்திருக்கவில்லை. சிங்களவர்கள் போல பிரிய விடோம் என்று சொல்லவில்லை. தாராளமான சுதந்திரம் உண்டு பிரிந்து செல்லுங்கள். மதங்களை ஒழிப்போம் சமூகங்களைத் தகர்ப்போம் என்பதை நிறுத்துங்கள். அது அடுத்தவரின் உரிமையை ஒழிக்க முனைவதாகவே நோக்கப்படும். உலகில் மத உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பிரிந்து செல்வதற்கு முன்னர். :rolleyes:

இந்து மதம் குறித்து நான் உணர்ந்ததை சொல்லுகின்ற உரிமை எனக்கு உண்டு.

அதுவும் என்னுடைய இனம் அறியாமையில் மூழ்கிக் கிடப்பதாக நான் கருதுகின்ற பொழுது, அதை சுட்டிக் காட்டுகின்ற உரிமை எனக்கு உண்டு.

நீங்கள் உதாரணம் காட்டிய பாரதியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்து, இந்து மத வேதங்களையும், பார்ப்பனர்களையும் எதிர்த்து நின்றார்.

ஆயிரம் கடவுள்களை வணங்குவதை கேலி செய்தார்!

திருவள்ளுவர் பார்ப்பனர்களை கடுமையாக சாடினார்.

யாரும் பேசாமல் தன்பாட்டில் போகவில்லை.

உங்கள் கருத்தை மறுதலிக்கவும் கவனத்தில் எடுக்காமல் விடவும் ஏனையவர்களுக்கும் உரிமை உண்டு. தங்கள் மத உணர்வுகளை கேலி செய்வதை கண்டிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையில் தலையிடும் வகையிலான கருத்துப்பகிர்வுகளை உங்களின் கருத்தாக மட்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அதைச் சுட்டிக்காட்டும் போது கவனத்தில் எடுப்பதும் அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

அறியாமை என்பதை இன்னொரு அறியாமையால் அகற்ற முடியாது. புனை கதை ஒன்றை இன்னொரு புனைகதையால் மாற்றிவிட முடியாது. எதையும் அறிவியல் ரீதியாக அடுத்தவர்களை நோக்கி முன் வைக்க வேண்டுமே தவிர ஒழிப்போம் அழிப்போம் என்பவை எல்லாம் அநாவசியமான சாத்தியப்பாடற்ற சொற்பதங்கள். அடுத்தவர்களா உணர்ந்து மாற்றங்களை உண்டு பண்ண வேண்டுமே தவிர ஒழிப்போம் கோசத்துக்காக தங்களை மாற்ற வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. மாற்றங்கள் வர வேண்டின் அறிவியல் பூர்வமான விளக்கங்களும் அவற்றின் சமூக நன்மைகளும் சொல்லப்பட வேண்டும். இங்கு சமூக ஒழிப்பு எல்லோ கோரப்படுகிறது.

பாரதி பூணூலை மிதிக்கவில்லை மதித்தார். தான் அணியாத போவதை மற்றவரிடத்தில் திணிக்கவில்லை. சொன்னார். அடுத்தவருக்கும் அணிவிக்க நினைத்தார். அந்த வகையில் கடவுள் தொண்டுக்கு எல்லோரும் உரித்துடையவர்கள் என்றார்.

ஒரே கடவுளைத்தான் பல வடிவங்களில் வணங்குகின்றனர். விஞ்ஞானத்தில் இதே கடவுளுக்கு ஒரு வடிவம் இருக்கும் மெஞ்ஞானத்தில் அதற்கு இன்னொரு வடிவம் இருக்கும். அஞ்ஞானவாதிகளுக்கு வடிவமே இல்லாமல் இருக்கும். அது அவரவரின் சிந்தனையின் போக்கில் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாது. அது தனிமனித உரிமைப் பறிப்பு. தவறுகள் சுட்டிக்காட்டப்பலாமே தவிர தவறுகளை அச்சுறுத்தி திருத்த முடியாது. அவர்களா உணர்ந்து திருந்த வேண்டும். அதற்கான அனுமதிதான் அவசியம். ஒழிப்பு அழிப்பு பதங்கள் பாரதூரமான அடுத்தவர் உரிமை மீறலுக்கு வகை செய்கின்றன. அவையே பிரச்சனைகளின் மூலங்கள். அவையே நாசியத்தின் வழி முறைகள். நமக்கு தமிழ் நாசியமோ..தமிழ் பேரினவாதமோ அவசியமில்லை. தமிழ் தேசியம் என்ற அழகான அனைத்து இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதோடு தமிழர்களின் உரிமைகளை தமிழர்களே தீர்மானிக்கும் வகையினதும் அது அமைய வழிகாட்ட வேண்டும் அதுவே அவசியம்.

இந்து மதத்தை அனுட்டிப்பவர்களை நாம் மதிக்கிறோம். பார்ப்பர்ணியர்களை அவர்களின் சித்தாந்தங்களை மதிக்கின்றோம். ஆனால் எமக்கு அவசியமற்றவை என்று கருதுபவற்றை நாம் புறக்கணித்து நடக்கின்றோம். அதுவே அடுத்தவர் உரிமையில் தலையிடுவதைத் தவிர்த்து எமது உரிமைகளூடு எமது தனித்துவங்களை அடையாளப்படுத்திட உதவும். அதைவிடுத்து பார்ப்பர்ணியம் அழிப்பதால் மட்டுமே தமிழர்கள் சாதிய ஒழுங்குகளை அழிப்பார்கள் என்பது தமிழர்களை பகுத்தறிவற்ற வன்முறைவாதிகளாகக் காட்டும் செயலே. தமிழர்களுக்கு அநாவசியமானவற்றைத் தமிழர்கள் புறக்கணிப்பதை விடுத்து ஒழிப்போம் அழிப்போம் அதன் மூலம் தமிழர்களைத் திருத்துவோம் காப்போம் என்பதெல்லாம் சமகால உலகியல் ஒழுங்குக்கு ஒத்துவராத செயற்பாடுகள். அவை பகுத்தறிவின் வெளிப்பாடுகளும் அல்ல. :rolleyes:

பாரதி சூத்திரர்களுக்கு பூணூல் அணிவித்ததன் மூலம் வேதங்களை மிதித்தார்.

அன்றைய காலகட்டத்தில் பாரதி செய்தது ஒரு மாபெரும் புரட்சி.

இன்றைக்கு நாம் செய்வது எதுவுமே இல்லை.

பாரதியின் புரட்சியின் பொழுதும் பார்ப்பனியத்தை கடைப்பிடிக்கின்ற பார்ப்பனர்களின் மனம் புண்படத்தான் செய்தது.

அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், மாற்றங்களை கொண்டுவர முடியாது.

கண் முன்னால் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயல்கிற பொழுது, அவனுடைய உரிமை என்று பேசாமல் போக என்னால் முடியாது

பேசாமல் நீங்களும் அவருடன் சேர்ந்து அதைச் செய்யுங்கள். அதுவும் உங்கள் உரிமைதானே. அதைத்தான் இங்கு வலியுறுத்தி வருகிறீர்கள்.

வேதங்களை மிதிக்கவில்லை. வேதங்களால் வரையப்பட்ட வரைபுகளை விரிபுபடுத்தினார். அல்லது நெகிழ்வித்தார் என்பதே சரியானது. வேதங்களை அனுஷ்டிக்க விரும்பவனை அனுஷ்டிக்க அனுமதிப்பதே அவனின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும். விரும்பாதவனை அனுஷ்டிக்க கோருவது அவனின் உரிமைப்பறிப்பாகும். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு எனிக் கருத்துப்பகருங்கள்.

பாரதியின் நடவடிக்கைகள் சில பார்ப்பர்ணியரின் மனம் புண்பட நடந்திருக்கலாம். ஆனால் அவர்களை ஒழிக்க கட்டளை இடவில்லை. சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை மட்டுமே தன்னை உதாரணமாக்கி கோர விளைந்தார். அது அவசியமான அணுகுமுறை. மற்றவர்களை முட்டாள்கள் அறிவிலிகள் என்றாக்கி தன்னை பகுத்தறிவாளன் என்ற தோறணையில் அவர் அணுகவில்லை. எல்லோரையும் சமனாக மதித்து தேவையான மாற்றங்களுக்குரிய சிந்தனைகளை விதைத்தார். விமர்சிக்க வேண்டியவற்றை விமர்சித்தார். எந்த சமூகத்தையும் ஒழிக்க வேண்டும்..அடையாளம் தொலைக்க வேண்டும் என்று கோரவில்லை. மதத்தை பின்பற்ற வேண்டாம் என்றவில்லை. அவரே ஒரு சக்தியின் பக்தனாக இருந்தார். அந்த வகையில் அவரது சிந்தனைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. பெரியாரின் அணுகுமுறைகள் இன்றும் விமர்சனத்துக்குரியனவாகவே உள்ளன. அவை இப்போ காலத்துக்கு ஒவ்வாதவையும் ஆகிவிட்டன. உலகம் அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்க முனைந்து கொண்டிருக்கும் வேளையில் அடுத்தவரின் உரிமைகளைப் பறிக்க பகுத்தறிவு வளர்ப்பதாகச் சொல்வது வேடிக்கையானது. பலாபலனற்றது. :rolleyes:

பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்

பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்

யாரானா லுங்கொடுமை .........................

...........................................................................

பிள்ளைக்குப் பூணூலா மென்பான் - நம்மைப்

பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்

கொள்ளைக் கேசென்.........................

...........................................................................

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறுஞ்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

...........................................................................

...........................................................................

நாயும் பிழைக்கு மிந்தப் - பிழைப்பு;

நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;

பாயும் கடிநாய்ப் போலீசுக் - காரப்

பார்ப்பானுக் குண்டிதிலே பீசு

இது பாரதியின் பாட்டு. "மறவன் பாட்டு" என்ற தலைப்பில் பாரதி எழுதியது. இதில் பல பகுதிகள் பார்ப்பனர்களால் அழிக்கப்பட்டுவிட்டன

பாரதி சென்ற நூற்றாண்டுக் கவிஞன். பார்ப்பர்னர்கள் அழித்துவிட்டனர் என்று ஊளையிடத் தேவையில்லை. தேடியே கண்டிடலாம்.

இதில் எங்கும் பார்ப்பனர்களை ஒழிக்கச் சொல்லவில்லை. அவர்களின் சில சமூகத்துக்கு ஒவ்வாத செயல்களை கண்டு வருந்தி பாரதி வடித்திருக்கிறான் கவி. இதற்கும் நீங்கள் என்ன பார்ப்பர்ன எதிர்ப்புச் சாயம் அடிக்கிறீர்களோ?! :lol::rolleyes:

பாரதி அளவிற்கு நாம் கூட பார்ப்பனர்களை வையவில்லை என்பதை சொல்வதற்குத்தான் இதை இணைத்தேன்.

நானும் பார்ப்பனர்களை அழிக்கச் சொல்லவில்லை. பார்ப்பனியத்திற்கும் பார்ப்பனர்களுக்கு உள்ள வேறுபாடு குறித்து ஆயிரம் தடவைகள் விளங்கப்படுத்தியாகி விட்டது.

அவர்கள் பார்ப்பனியத்தை விட்டு, பார்ப்பனர் எனற் வர்ண அடையாளத்தை விட்டு நல்ல மனிதர்களாக இருந்தால் போதும்.

அப்படி இல்லாத பொழுது அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.

ஒழிப்பு ஒதுக்கி என்ற நிலைக்கு மாறி இருப்பதே வரவேற்கத்தக்கது.

எனி இந்த ஒதுக்கியை கவனித்தால் பார்ப்பர்ணன் என்ற அடையாளத்துக்காக அவர்களை ஒதுக்கின் அவர்கள் ஏதேதோ சொல்லி உங்களை ஒதுக்கவும் நீங்களே இடமளிக்கின்றீர்கள். ஆக பார்ப்பர்னரை விட நீங்களே இன்னும் ஒதுக்கும் சிந்தனையைக் காவித் திரிகிறீர்கள். அவர்களை விட நீங்களே ஆபத்தானவர்கள்.

நாம் இதில் தெளிவாகச் சொல்கின்றோம் பார்ப்பர்னன் என்ன சித்தாந்தங்களை வைத்திருந்தாலும் எமக்கு அவை அவசியமில்லை என்றால் புறக்கணிக்கலாம். அதற்காக அவர்களை ஒழிக்க ஒதுக்க கோருவது அவர்களின் உரிமைகளைப் பறிப்பது போன்றது. அவர்களா சிலவற்றை உணர அவர்களுக்கு தகவல் சொல்லலாம். மாறுவதும் விடுவதும் அவரவர் உரிமை. அதில் அடுத்தவர் தலையிட முடியாது. அதேபோல் பார்ப்பர்னர்கள் தங்கள் பார்ப்பர்ணிய சிந்தனைகளை திணிக்கவும் முடியாது. திணிப்பது கண்டால் அச்சிந்தனைகளைப் புறக்கணித்துச் செல்ல வேண்டியதே தவிர பார்ப்பர்ணியர்களை அவர்களின் சிந்தனைக்காக ஒதுக்கு என்பதெல்லாம் நடைமுறை உலகுக்கு சாத்தியப்படாத சமாச்சாரங்கள். மாற்றங்கள் உங்களில் வர வேண்டுமே தவிர அடுத்தவரில் அதை எதிர்பார்க்கப்படுவதிலும்....! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.