Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருட இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

வருட இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்கிறார் சம்பந்தன்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சனிக்கிழமை மாலை தமது முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தை நடாத்தி இருந்தார்கள்.

யாழ்.மருதனார் மட சந்தைக்கு அருகில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பரப்புரை கூட்டம் ஆரம்பமானது,

அக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

யாழில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளை உதறி தள்ளிவிட்டு ஏழு ஆசனங்களையும் TNAக்கு வழங்குங்கள்...

யாழில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளை உதறி தள்ளிவிட்டு ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள் வருட இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 
யாழ்.மருதனார் மடத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 
தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் நிரந்தரமானதும், எம்மை நாமே ஆழக்கூடியதுமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்கிறோம். அதனை இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் உணர்த்துவதற்கு தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கவேண்டும்.
 
தமிழர்கள் நாங்கள் ஒரு தனித்துவமான இனம். இந்த நாட்டில் நாம் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு தயார் இல்லை. சிலர் கூறுகிறார்கள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஆனால் அது ஒற்றையாட்சிக்குள் என்று அதனை நாங்கள் ஒருபோதும் ஒத்து க் கொள்ளப்போவதில்லை. நாம் இரண்டாம் தர பிரஜைகள் கிடையாது.
 
நாங்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் சிந்தித்து நடக்கவேண்டிய கால கட்டத்தில் நிற்கிறோம். கடந்த 10 வருடங்கள் மகிந்த ராஜபக்சவின் கொடுரமான ஆட்சி நடந்தது. 
 
அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சற்றேனும் விசுவாசம் உள்ளவராக இருந்திருக்கவில்லை. அவருடைய முழுமையான நோக்கமும், தமிழ் மக்களை அடக்குவ திலும், தமிழர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதிலுமே இருந்தது. 
 
இதனால் 10 லட் சம் மக்கள் நாட்டைவிட்டே வெளியேறினார்கள். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், படை நிர்வாகம், மற்றும் பொருளாதார முடக்கல், கலாச்சார சீரழிவு போன்றவற்றினால்,
தமிழர்களை பலவீனப்படுத்தவே நினைத்தார். 
 
 
ஆனால் மக்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தங்கள் வாக்குகளால் மாற்றத்தை உருவாக்கினார்கள். இதனால் பெ ரும்பான்மையின மக்கள் மத்தியிலும் ஒரு மனமாற்றம் உருவாகியிருப்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். 
 
ஆனால் அந்த மாற்றத்தின் மீது நாம் முழுமையான
நம்பிக்கையினை வைக்க முடியாது. நாம் தொடர்ந்தும் எங்கள் கருமங்களை செய்ய வேண்டும். 2011ம் ஆண்டு நாங்கள் அமெரிக்காவுக்கு சென்று பேசியிருந்தோம். இதன டிப்படையில் 2012ம் ஆண்டு அமெரிக்கா ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது
 
அதனை தொடர்ந்து 2013ம், 2014ம் ஆண்டுகளிலும்,
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில்  இவ்வருடம் சித்திரை மாதம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் ஒரு தீ ர்மானம் வரவிருந்த நிலையில் அது காலம் தாழ்த்தப்பட்டு செப்ரெம்பர் மாதத்தில் அந் த தீர்மானம் வெளிவரவுள்ளது.
 
அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள்,
முழுமையாக அமுல்ப்படுத்தப்படவேண்டும். சர்வதேச சமூகம் இன்றைக்கு இலங்கை தே சிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டும். என்பதில் உறுதியாக இருக்கின்ற து. காரணம் என்னவென்றால் அந்தளவுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற ஒரு இனம் அழிக்கப்பட்டிருக்கின்றது. அடக்கப்பட்டிருக்கின்றது. லட்சக்கணக்கில் மக்கள்,படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
 
இறுதிப்போரில் 70 ஆயிரம் மக்கள் படுகொ லை செய்யப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலைகள், நலன்புரி முகாம்கள், மீது தாக்கு தல் நடத்தப்பட்டிருக்கின்றது. மருந்து மற்றும் உணவு வருவதை தடுத்திருக்கின்றார்கள் சர்வதேச மனிதவுரிமை சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன. அதனை நாங்கள் நாடாளுமன்றத்திலும் பதிவு செய்திருக்கின்றோம்
 
நாங்கள் அவ்வாறு பதிவு செய்யும் போது அங்கிருந்த எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த இழப்புக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இந்த நிலமை மேலும் தொடரக்கூடாது. 
 
 
இடம்பெயர்ந்த மக்கள் தம து சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும். முல்லைத்தீவிலும், மன்னாரிலும்,
சம்பூர் மற்றும் வலி,வடக்கிலும் சிறியளவில் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். 
 
மக்களுக்கு வீட்டுவசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் முழுமையாக கிடைக்கவேண்டும். ஆட்சிமாற்றத்தின் பின்னர் பிரதமர் தலமை யிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிக பலம் இருந்திருக்கவில்லை.
 
ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரும் இந்த நிலமை நீடிக்க முடியாது. நாம் சரித்திரரீதியாக வாழ்ந்த தாயகத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் ம க்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும். அதனையே நாம் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கின்றோம்.
 
நாம் ஒரு தனித்துவமான மக்கள் கூட்டம். ஐ.நா ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள அந்த ஒப்பந்தத் தில் நாம் கலை, கலாச்சாரம், பண்பாடு, மற்றும் மொழி மற்றும் தனித்துவமான வாழ் விடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இனம் எமக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது எ ன்பதை அதன் ஊடாக ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
 
இதன் ஊடாக சகல வழிகளிலும் எம்மை நாமே ஆழகூடிய அதிகாரம் கொண்ட எமது இறமை அடிப்படையி ல் சமஸ்டி முறையிலான சுயாட்;சி அதிகாரம் வேண்டும். அது தமிழர்களின் உரிமை அதனை யாரும் மறுக்க முடியாது. 
 
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கும் ஒரு பெரும்பான்மையின கட்சி கூறியிருக்கின்றது. அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் என ஒற்றையாட்சி என்பது என்ன? பெரும்பான்மை ஆட்சி நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழவேண்டுமா? அவ் விதமான ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வு எப்படி? ஒருமித்த நாட்டுக்குள் நாங்க ள் சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் எங்கள் நியாயமான அரசியல் அபிலாசைகள், நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் வல்லமை எமக்கு இருக்கவேண்டும். 
 
இந்நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகூடிய அதிகார பகிர்வு என கூறுபவர்களை தமிழ் மக்கள் நாங்கள் நிராகரிக்கவேண்டும். அது உங்கள் கடமை. இதேபோன்று மற்றொரு கட்சி போட்டியிடுகின்றது. அவர்கள் வெற்றிலையை விட்டுவிட்டு இப்போது வீணைக்குவந்துவிட்டார்கள். 
 
தமிழ் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது மகிந்தாவுடன் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாக்கு கேட்கிறார்கள். இதேபோன்று இன்னொரு கட்சியும் கேட்கிறது. ஒரு இடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எனவும் இன்னொரு இடத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
 
உன்மையில் கட்சியின் பெயர் என்ன? அவர்களுடைய கட்சி ஆரம்பத்தில் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டது. டீ.எம்.சேனநாயக்கா காலத்தில் அமைச்சுப் பதவி வகித்தவர்கள். அவர்கள் இப்போது ஒருதேசம் இரு நாடு என கூறுகிறார்கள். 
 
நாம் ஒரு தனித் துவமான தேசிய இனம் அதில் சந்தேகம் இல்லை. ஒரு நாட்டுக்குள் நாம் தீர்வை காண விரும்புகிறோம். ஆதனை விட நாமே சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் இருந் து வருபவர்கள் எங்களையே சந்திக்கின்றார்கள். மற்றவர்களை சந்திக்கவில்லை.
 
எனவே யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களையும் எமக்கு கொடுங்கள் ஏனைய கட்சிகளை உதறி 
தள்ளுங்கள். அதன் ஊடாகவே அரசியல் தீர்வை அடைய முடியும். என தெரிவித்தார்.
 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வருட இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்கிறார் சம்பந்தன்

சிங்களவன் ஏதோ தமிழ்ச்சனத்திட்டை கடன் வாங்கின மாதிரியெல்லோ சம்பந்தம் நாள்க்கணக்கு வைச்சு வெடி விடுது :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2016 இல் இருந்து 2015 கடைசி என்று வந்திட்டு ..

இனிஎன்ன, 
போற போக்கில எலெக்சனுக்கு முதல் நாளே தீர்வு வந்திடும் போல கிடக்கு..


மக்கள்ஸ் கவனம் கிடைக்கிற சந்தர்பத்தை தவற விடப்படாது ... இதைவிட்டால் திரும்ப சம்பந்தர் ஐயா வார 5 வருடம் எடுக்கும்..கவனம் கவனம் பார்த்து புள்ளடியை வெட்டுங்கோ...


இப்படிக்கு, 
புலம் பெயர் புண்ணாக்ஸ். 

இந்தக்களத்தில் முக்கிய ஒரு சில பதிவுகளை கள உறவுகள் தேர்தல் செய்திகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்வதாலுமோ கண்டுகொள்ளவில்லை.முதலாவது முக்கிய செய்தி பாரதியின் சிங்களத்தீவுக்கான பாலமமைத்தல் என்பது;இலங்கை அரசின் அனுமதியில்லாமல் நிறைவேறிய திட்டம்.அமெரிக்காவின் திட்டத்தை இந்தியா நிறைவேற்ற அதை உலகவங்கி அனுமதிக்க திட்டம் நிறைவேறியது.இதற்கான எதிர் பாதுகாப்பு திட்டம்தான் அம்பாந்தோட்டை கப்பல் கட்டும் தளம்.இது ஒரு புறமிருக்க கூட்டணி பெறுவார்களோ பேசித்தீர்பார்களோ பேசினாலும் பேசாவிட்டாலும் மேற்குலகிற்கு மங்கள சமரவீரா எதை வாய் மொழிந்தாரோ சத்தியம் செய்தாரோ அதை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.அல்லது மேற்குலகு நிறைவேற்றும்.துடை இறைச்சிக்காகப் பங்கு போடும் களமாகிவிட்ட இலங்கை.அண்மையில் சீனாவுக்கு கூட இந்து சமுத்திரத்தில் உரிமையிருப்பதாகச் சொல்லிகொண்டது.இனிமேல் உள் நாட்டு அரசியலானது செல்லாக் காசு.மஹிந்தாவானாலும் மைத்திரியானாலும் உள் நாட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தமே உண்டு.அதை கூட்டணி தனதாக்கி கொள்ள விரும்புகின்றதா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.