Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு உருவாக்கிய ஜனநாயக வெளியில் அடிவருடிகள்: வட மகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட்

Featured Replies

கூட்டமைப்பு உருவாக்கிய ஜனநாயக வெளியில் அடிவருடிகள்: வட மகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட்
 
arnold_001.jpg
கிளிநொச்சி அக்கராயன், ஸ்கந்தபுரம் பொதுச்சந்தை வளாகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இலக்கம் 10ல் போட்டியிடுபவருமான சி.சிறீதரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

 

இதில் கலந்து கொண்ட வடக்கு மகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் உரையாற்றுகையில்,

நாம் முக்கியமானதொரு தேர்தலை எதிர்கொண்டு நிற்கின்றோம்.

இந்தநிலையில் கடந்த காலங்களில் திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்த எம் மண்ணில் பல்வேறு இராணுவ அழுத்தங்கள் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், எமது மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் களம் இறங்கினர்.

பல தடைகளையும் தாண்டி கடந்த இன்று கடந்த ஜனவரி 8ம் நாளுக்குப் பிறகு ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பின், எம்மால் எமது மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக வெளியில் இன்ற பல்வேறு அடிவருடிக் கூட்டங்கள் களம் இறங்கியுள்ளதை பாருங்கள்.

சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான சூழல் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை சிதைப்பதற்கு இந்த அடிவருடிகள் முனைகின்றனர் என தெரிவித்தார்.

 

இங்கு உரையாற்றிய தமிழரசு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன்,

எமது மக்களை வகைதொகையின்றி கொன்றொழித்த சிங்கள ஏகாதிபத்தியின் இனவாத வடிவமான மகிந்த ராஜபக்சுவுடன் கைகோர்த்து நின்று,

எமது மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக ஐ.நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட எமது இனத்துக்கு சாதகமான தீர்மானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் செய்த கூட்டம்,

இன்று எமது மக்களின் தியாகங்களை விலைபேசி தேர்தலில் பங்கெடுக்கின்றன.

நாம் இம்முறை சகல அடிவருடிக் கூட்டங்களையும் இந்த தேர்தலில் வேரோடு அகற்றுகின்ற கைங்கரியத்தை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

akarayan_meeting_001.jpg

akarayan_meeting_002.jpg

akarayan_meeting_003.jpg

akarayan_meeting_004.jpg

akarayan_meeting_005.jpg

akarayan_meeting_006.jpg

akarayan_meeting_007.jpg

akarayan_meeting_008.jpg

akarayan_meeting_009.jpg

 

http://www.tamilwin.com/show-RUmtyITYSVmtzJ.html

 

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற கட்சிகளை விட கூட்டமைப்புக்கு சனம் அதிகம் வருகுது போல......

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற கட்சிகளை விட கூட்டமைப்புக்கு சனம் அதிகம் வருகுது போல......

akarayan_meeting_003.jpg

ஸ்ரீதரனின் கூட்டம் என்ற படியால், சனம் வந்திருக்கலாம்.
சம் சும்.... வைத்த கூட்டம் என்றால், சனம் எட்டியும் பார்த்திருக்காது.
மேலேயுள்ள விளம்பர பதாகையில்.... மாவையின் படம் உள்ளது.  கள்ளர் இரண்டு பேரின் படம்... மிஸ்ஸிங்.
சொந்தச் செலவில் சூனியம் வைக்கக் கூடாது என்பதை... ஸ்ரீதரன் நன்கு புரிந்து வைத்துள்ளார்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

akarayan_meeting_003.jpg

ஸ்ரீதரனின் கூட்டம் என்ற படியால், சனம் வந்திருக்கலாம்.
சம் சும்.... வைத்த கூட்டம் என்றால், சனம் எட்டியும் பார்த்திருக்காது.
மேலேயுள்ள விளம்பர பதாகையில்.... மாவையின் படம் உள்ளது.  கள்ளர் இரண்டு பேரின் படம்... மிஸ்ஸிங்.
சொந்தச் செலவில் சூனியம் வைக்கக் கூடாது என்பதை... ஸ்ரீதரன் நன்கு புரிந்து வைத்துள்ளார்.:grin:

சம்பந்தனையும் சுமந்திரனையும் ஜாடிக்கு ஏற்ற மூடி என்றால் அது மிகையாகாது.

இரண்டும் ஈழத்தமிழனுக்கெண்டு வந்து வாய்ச்சுதுகள். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.