Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத் எக்நெலிகொடவை கடத்திய இருவர் கைது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கடத்திய இரண்டு பேரை காவல் துறையினர் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிகவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தமக்கு இந்த தகவல் கிடைக்கப் பெற்று உள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகீத் எக்நெலிகொட கடத்தப்பட்டிருந்தார்.

பிரகீத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த இருவரும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய பிரதேசத்தில் கடத்தப்பட்ட எக்நெலிகொட மின்னேரிய இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பிரகீத்தை இரண்டு இராணுவ கேர்ணல்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் இந்த கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122678/language/ta-IN/article.aspx

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களான இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

2012 ஜனவரி மாதம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டார்.

அவரைக் கடத்திச் சென்று மின்னேரியா இராணுவ முகாமில் இரண்டு கேணல் தர அதிகாரிகளிடம் ஒப்படைத்த இரு தமிழ் புலனாய்வாளர்களே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரகீத் எக்னெலிகொடவை மின்னேரிய இராணுவ முகாமில் வைத்து பொறுப்பேற்ற இரண்டு, கேணல் தர அதிகாரிகளும் இன்று கைது செய்யப்படுவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடத்தலின் போது,  கடத்தல்காரர்கள் கடைசியாக பக்கமூன பகுதியில் இருந்து தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் இந்த கடத்தில் வழிவகாரம் பற்றிய முழு விபரங்களும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.http://www.pathivu.com/news/42086/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரோ, கொம்மானோ, பூனை வெளிய வரவல்லே போகுதாம். 

லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கடத்திய இரண்டு பேரை காவல் துறையினர் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிகவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தமக்கு இந்த தகவல் கிடைக்கப் பெற்று உள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகீத் எக்நெலிகொட கடத்தப்பட்டிருந்தார்.

பிரகீத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த இருவரும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய பிரதேசத்தில் கடத்தப்பட்ட எக்நெலிகொட மின்னேரிய இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பிரகீத்தை இரண்டு இராணுவ கேர்ணல்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் இந்த கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122678/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிரகீத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழனை வைத்து சிங்களவனை கடத்துவது,சிங்களவனை வைத்து தமிழனை கடத்துவது......இதுதான் அதிகாரம் உள்ள அரசு 

ஊடகவியலாளர் பிரகீத் கடத்தல் – உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இருவர் சிக்குகின்றனர்

AUG 08, 2015 | 0:45by கார்வண்ணன்in செய்திகள்

Prageeth Ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவரிடம் அடுத்த சில நாட்களுக்குள் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும், இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமையவே இராணுவ உயர் மட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் இருவரும், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் இராணுவப் பிரிவில் இயங்கியவர்களாவர்.

இவர்களிடம் நடத்தப்பட்டுள்ள ஆரம்பக் கட்ட விசாரணைகளில், கடந்த 2010 ஜனவரி 24ஆம் நாள்- அதிபர் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, ராஜகிரிய பகுதியில் வைத்து எக்னெலிகொட கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட பின்னர் அவர் வடமத்திய மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடத்தல் இடம்பெற்ற காலத்தில், எக்னெலிகொட ஒப்படைக்கப்பட்ட வடமத்திய மாகாண இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு உயர் அதிகாரிகளிடமே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.