Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரளிக்கப்படும் - கனேடிய தமிழ் காங்கிரஸ்

Featured Replies

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரளிக்கப்படும் - CTC:-



பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கனடாவின் முன்னணி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் ஒன்றாக கனேடிய தமிழ் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதாக பிரித்தானியாவின் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் வாக்கு உரிமையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ், ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர் என தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் வரவேற்றுள்ளதாகவும், இந்த சாதக மாற்றத்தை முன்னோக்கி நகர்த்தும் வகையில் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமென என வலியுறுத்தியுள்ளது.

காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போதல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தமிழர் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்த அளவிற்கு தீர்வு வழங்காத போதிலும், ஆரோக்கியமான மாற்றங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இணக்கப்பாடுகளில் தமிழர் தரப்பு ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் சில புலம் பெயர் அமைப்புக்கள் தமது அதரவை தெரிவித்து அண்மையில் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122699/language/ta-IN/article.aspx

 

“தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம். எமது இலக்கு 20 ஆசனங்களாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் தமிழ்த் ததேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்த இரவு விருந்தில் தொலைபேசி வாயிலாக பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த இரவு விருந்து மார்க்கம் நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் ஓகஸ்ட் 2 ஆம் நாள் மாலை இடம் பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) இன் ஆதரவாளர்கள், நண்பர்கள் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கைப் போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் இயக்குநர் அன்ரன் பிலிப், அம்பிகா நகை மாளிகை உரிமையாளர் திருமதி ஜெயா இன்பநாயகம், கனடிய தமிழர் பேரவைத் தலைவர் இரா. தவரட்ணசிங்கம், ஓம்காரானந்தா, நடேசபிள்ளை சுபதரன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இசை ஆசிரியர் கமலா சண்முகலிங்கம் அவர்களின் மாணவன் துஷாந்தன் சிறிஸ்கந்தராசா அவர்களால் தமிழ்மொழி வாழ்த்து, கனடிய தேசியப் பண் பாடப்பெற்றன.
tna_canada_1

tna_canada_2

tna_canada_3

tna_canada_4
தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இளைய இனிய உயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் பொதுமக்கள் நினைவாகவும் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்ட உறவுகள் நினைவாகவும் உலகளாவிய தமிழ் மொழிப் போராளிகள் நினைவாகவும் சில பொழுதுகள் அக வணக்கம் அனுட்டிக்கப்பட்டது.

அடுத்து வரவேற்பு நடனத்தை செல்வன் நிஷாந்தன் மற்றும் நடன ஆசிரியர் திருமதி வனிதா அவர்களின் மாணவிகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்று ததேகூ (கனடா) இன் பொதுச் செயலாளர் வி.எஸ். துரைராசா உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் தலைவர் கதிரவேலு குகதாசன் தலைமை உரை ஆற்றினார்.

தொடர்ந்து பேசிய இரா. சம்பந்தன்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. அதனை முடிக்க விரும்புகிறோம்.
tna_canada_5

tna_canada_6

tna_canada_7

tna_canada_8
எதிர்வரும் ஓகஸ்ட் 17 இல் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் ஆகும்.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 20 ஆசனங்களை ததேகூ ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு 20 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் போது எங்களால் வலுவான நிலையில் இருந்து அரசாங்கத்தோடு பேசமுடியும்.அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்தத் தேர்தலை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதுகிறோம்.”எமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக, ஒன்று பட்ட இலங்கைக்குள்ளே எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொள்ள முடியும்.IMG_1979IMG_1998IMG_1990
ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்து நிகழ்ச்சிக்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பிரச்சாரம் காரணமாக நிகழ்சியில் நேரடியாகக் கலந்து கொள்ளாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அடுத்து வடக்கு மாகாண சபை நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் ஸ்கைப் மூலம் உரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கிழக்கு மாகாண வேளாண்துறை அமைச்சர் கி. துரைராசசிங்கம் உரையாற்றினர்.

பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் பேசும் போது மூன்று முக்கிய விடயங்களை வற்புறுத்தினார்.

(1) இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சாதகமான நிலைமை ஓன்று உருவாகியுள்ளது. உலக நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் எமது பிரச்சனை தொடர்பாக நல்ல கவனம் எடுத்து இயங்கி வருகின்றார்கள். இது எமக்கு மிகவும் சாதகமான ஒரு போக்காகும்.

(2) இப்போதைக்குப் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை அதிகம் முன்னிலைப் படுத்தாது, தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்து, அவர்களின் பலத்தை நாடாளுமன்றத்தில் அதிகரித்து அவர்களது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த வேண்டும்.

(3) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் நாம் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். அதன் பொருட்டு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களைப் பலப் படுத்த வேண்டும்.

அடுத்து சிறப்புரை வழங்கிய நக்கீரன் சனவரி 8 இல் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தினால் எந்தவித நன்மையும் இல்லை எனச் சிலர் சொல்கிறார்கள்.ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணியுங்கள் ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் வித்தியாசம் இல்லை. பெயரில்தான் வித்தியாசம் என்று சொன்னவர்கள்தான் ஆட்சி மாற்றத்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள்.ஆட்சி மாற்றம் காரணமாக வலிகாமம் வடக்கில் 6382 ஏக்கர் நிலத்தில் 1,033 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.சம்பூரில் 816 ஏக்கர் காணி சொந்தக்காரர்களுக்கு மீளக் கொடுக்கப்பட்டுள்ளது. 237 ஏக்கர் கொண்ட முகாமை கைவிட்டு வேறு இடத்துக்குப் போக கடற்படை ஒத்துக் கொண்டுள்ளது.மலையகத் தமிழர்களுக்கு இந்த அரசு முதன் முறையாக வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்காவிட்டாலும் நிம்மதியாக மூச்சு விட அவர்களால் முடிகிறது.

வெள்ளைவான், கழிவு எண்ணெய், கிறீஸ் பூதம் இப்போது இல்லை. பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்ட பொலீஸ் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுள்ளன.சம்பந்தன், சுமந்திரன் போன்ற அறிவாளிகள், சட்டம் படித்தவர்கள், சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்வர்கள் எமது அரசியலுக்கு தலைமை தாங்குவதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும். “வடக்குக்கும் கிழக்குக்கும் பாலமாக விளங்கும் சம்பந்தன் ஐயா காலத்தில் வாழ்வதையிட்டு நான் பெருமைப் படுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட பன்னாட்டு தமிழ் உறவு மன்றத்தின் நிறுவனர் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்களுக்கும்
இரவிச்சந்திரன் சுவாமிஜி அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர்.

அடுத்து ததேகூ (கனடா) இன் துணைச் செயலாளர் முருகேசு தியாகலிங்கம் பேசினார். நன்றியுரையை வீரசுப்பிரமணியம் ஆற்றினார்.tna_canada_9

tna_canada_10

tna_canada_11

- See more at: http://www.canadamirror.com/canada/47303.html#sthash.Nv38s1Yg.dpuf

இவர்கள் ஆதரவு வேண்டாமல்  இருப்பதுதான் நல்லது .பிற்காலத்தில் அதை வைத்தே கடை திறந்துவிடுவார்கள் .

கூட்டமைப்பை எதிர்த்து படத்தில் இருக்கும் ஒருவரின் தந்தையும் தேர்தலில் நிற்கின்றார் இன்னொருவரின் தம்பியும் தேர்தலில் நிற்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன், தமிழ் தேசிய  கூட்டமைப்பு...
கஜேந்திர குமாரின், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை, இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன்... தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு, பிரச்சாரம் செய்ய... பலர், விடுமுறை எடுத்து, 
தாயகம் சென்று.... "அனல் பிரச்சாரத்தில்" ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள்.  
அவர்களின் தகவல்களின் படி.... நான்கு தொகுதிகளுக்கு மேல், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லும் என்று, சற்று முன் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.

த .தே .மு நிலவரம் கலவரமாய் இருக்காம் சொல்ல சொல்ல கேட்டார்களோ இனி வீட்டில் இருந்து கொறட்டை விடட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கனடாவில் இருந்து கொண்டு ஊர் அரசியல் பேசிற ஆக்களை கனடா அரசாங்கம் அகதி அந்தஸ்தை.. பாஸ்போட்டை கிழிச்சிட்டு.. ஊருக்கு அனுப்பினால் தெரியும்.. இவையின் ஆதரவு நிலைப்பாடுகளின் தார்ப்பரிம். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.. எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு கேட்டது கருடா செளக்கியமான்னு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கனடாவில் இருந்து கொண்டு ஊர் அரசியல் பேசிற ஆக்களை கனடா அரசாங்கம் அகதி அந்தஸ்தை.. பாஸ்போட்டை கிழிச்சிட்டு.. ஊருக்கு அனுப்பினால் தெரியும்.. இவையின் ஆதரவு நிலைப்பாடுகளின் தார்ப்பரிம். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.. எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு கேட்டது கருடா செளக்கியமான்னு. :grin:

நெடுக்ஸ்....
அரசியல் வேறு... வாழ்வாதாரம் வேறு.
அரசியலுக்குள்.... விளையாட்டாக கூட, இப்படி சொன்னால்... அவர்கள், பதறிப் போவார்கள்.
ப்ளீஸ்... நீங்க, அவர்களின் அடி மடியில்... கை வைக்காதீர்கள்.Smiley Smiley:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.