Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காப் படையினரின் கெடுபிடிக்கும் இழுத்தடிப்புக்கும் மத்தியில் வாகரைக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன

Featured Replies

சிறிலங்காப் படையினரின் கெடுபிடிக்கும் இழுத்தடிப்புக்கும் மத்தியில் வாகரைக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

- பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 29 ழேஎநஅடிநச 2006 12:04

மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தொடர்ந்து சிறிலங்காப் படையினர். அனுமதி மறுத்ததனால் அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவிலும் மருத்துவப் பிரச்சனைகளாலும் நாளாந்தம் பேரவலத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், தமிழீழ நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன அரச அதிபரிடமும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, ஐ.நா குழு (ரு N) ஆகியவற்றுக்கு மக்களின் நிலையை தொடர்ந்து எடுத்து கூறியதன் பயனாக இன்று காலை 8.00மணியளவில் தமிழீழ நிர்வாக சேவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இலங்கைப் போர்நிறுதத்க் கண்காணிப்புக்குழு, மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினரின் வழித்துணையுடன் படையினரின் கெடுபிடிகளுக்கும் இழுத்தடிப்புக்களுக்கும் மத்தியில் பெரும் சிரமப்பட்டு ஒரு தொகுதி உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் வாகரைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்ச்சி வைத்தியத்துக்கு பயந்து கொஞ்ச சாமன் என்டாலும் உள்ள விடுறாங்களே.

பட்டினியின் விழிம்பில் பரிதவித்த எங்கள் உறவுகளுக்கு உணவு எடுத்துவர உதவிய அனைத்து கரங்களுக்கும் நன்றிகள்

21_11_06_vaharai_idps.jpg

பாலின்றி தவித்த பச்சிளம் பாலகர்க்கு சேவை நோக்கம் கொண்டு உதவிய அனைத்து இரக்கமுள்ள இதயங்களுக்கும் நன்றிகள்.

i-3.jpg

நன்றியுடன்,

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியே ஏ9 விதியாலையும் யாழ்குடா மக்களுக்கு உணவு அனுப்பினால் நல்லாய் இருக்கும்

ஒருக்கா வாகரைக்கு உணவு அனுப்பினால் போதாது, தொடர்ந்து அனுப்ப வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உணவுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற 81 பாரஊர்திகள் வாகரை சென்றன சிறிலங்கா இராணுவத்தின் மாங்கேணி முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஐ.நா. அனைத்துலக மற்றும் உள்ளூர் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 81 பாரஊர்திகள் இராணுவ முற்றுகையில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பகுதிச் செல்ல அனுமதிக்கப்பட்டன.

வாகரைக்கு அனுப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் அடங்கிய மேலும் பல பாரஊர்திகள் இராணுவ எல்லையைக் கடக்க இன்னமும் காத்திருக்கின்றன என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்த 38,000 தமிழ் மக்கள் இராணுவத்தின் முற்றுகையினால் கதிரவெளி, வாகரைப் பகுதிகளில் உணவின்றி பசியினால் வாடுகிறார்கள்.

இந்த மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவம் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

கடந்த ஒக்ரோபர் 27ஆம் திகதி முதல் இந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன. எறிகணை வீச்சுத் தாக்குதல்களை காரணங்காட்டி இந்தப் பகுதிக்கு உணவுப் பொருட்கள் செல்லவிடாமல் தடுப்பதாக சிறிலங்கா இராணுவத்தின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பட்டினியால் வாடும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டுமென கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளனர்.

-புதினம்

முன்பே உணவு சென்றிருந்தால் வயதான மாதுவின் உயிரினைக்காப்பாற்றி இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

sorry first of all because i don't have tamil fonts yet.National leaders speech works out finally.god bless those who is bring food and medications.OF cause god blesed those who affected.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கொண்டு செல்லப்பட்டவற்றில் இலங்கையரச படைகள் அனுமதித்தவைகளில் பெரும்பான்மை கூடாரங்களாகும். இன்றும் அவர்கள் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக சிங்களப் பாதுகாப்பு அமைச்சு, விடுதலைப்புலிகள் கஜாவத்தை முகாம் மீது தாக்க முனைவதாகவும், தாங்கள் பாதுகாப்பு நிலையெடுப்பதாகவும் அதிகாலையில் அறிவித்திருக்கின்றது.

சொல்லப் போனால் இன்றைக்கு மிகுதிப் பொருட்களைச் செல்ல விடாது நடத்தப்படும், கைங்காரியமே இதுவாகும். வழமையாகப் புலிகள் தாக்குதல் நடத்துவதால் தான் அனுப்ப முடியவில்லை என்று சிங்கள அரசு சொல்வதால், நேற்று செஞ்சிலுவை, போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் எல்லைக் கோட்டுப்பகுதியில் நின்று அவதானித்தால் சிங்களப் படைகளால் ஒண்டும் செய்ய முடியவில்லை.

எனவே, இன்று அதிகாலையே இவ்வாறன பொய்யைக் கிளப்பி, செஞ்சிலுவைச் சங்கத்தினை அப்பகுதிக்குள் போகவிடாமலே செய்ய முனைகின்றது. இதன் மூலம் தடுக்க முயற்சிக்கின்றது.

இறைவா.. எம் மக்கள் செய்த பாவம் என்னவோ? மேற்குலகில் இருக்கும் நாம் இப்படி வாழும்போது தாயகத்திலோ 100 வருட இடைவெளியில் வாழ்கிறார்களே. இது எப்படி நியாயம்?

:lol:

...Wars teach us not to love our enemies, but to hate our allies...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.