Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

தினேஷ் சந்திமால் விளாசல் 162 நாட் அவுட்: பரபரப்பான நிலையில் கால்லே டெஸ்ட்

 
 
அதிரடி சதம் கண்ட தினேஷ் சந்திமால் ஆக்ரோஷ கொண்டாட்டம். | படம்: ஏ.எஃப்.பி.
அதிரடி சதம் கண்ட தினேஷ் சந்திமால் ஆக்ரோஷ கொண்டாட்டம். | படம்: ஏ.எஃப்.பி.

கால்லே டெஸ்ட் போட்டியின் போக்கை தினேஷ் சந்திமாலின் அதிரடி 162 ரன்கள் மாற்றிப் போட்டது. இந்திய அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இலங்கை.

வெற்றி பெற 176 ரன்களுடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி மீண்டும் லோகேஷ் ராகுலை மலிவாக இழந்தது. அவர் 5 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தை தவறாக பின்னால் சென்று ஆடி எல்.பி.ஆனார். ஆட்ட முடிவில் ஷிகர் தவண் 13 ரன்களுடனும் இரவுக்காவலன் இசாந்த் சர்மா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.

2-வது இன்னிங்சில் 3-ம் நாளான இன்று 95/5 என்று இலங்கை சரிவு கண்ட நிலையில் இந்திய டி.ஆர்.எஸ். பிடிவாதம் அம்பலமாக திரிமானே, சந்திமால் இருவருக்கும் நாட் அவுட் தீர்ப்பு மோசமாக வழங்கப்பட ஆட்டத்தின் போக்கு மாறியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு புதிய கேப்டன் கோலிக்கு புதிய சவாலை அளித்தார் தினேஷ் சந்திமால், அவருடன் ஓரளவுக்கு திரிமானே, பிறகு ஜெஹன் முபாரக் ஆகியோர் இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து வெறுப்பேற்றியதோடு கடைசியில் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது.

நடுவர் தீர்ப்புகள் குறைந்தது 6 முறையாவது மோசமாக அமைந்ததை சுட்டிக் காட்ட முடியும். விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, சஹா, சந்திமால், லாஹிரு திரிமானே, மீண்டும் சந்திமால் ஆகிய தீர்ப்புகள் நடுவர்களின் தரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சந்திமால் 169 பந்துகளில் 19 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 162 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 100 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் களமிறங்கினார் சந்திமால். நடுவர் சாதகம் இருமுறை இவருக்கு இருந்தது என்றாலும் அது அவருடைய தவறல்ல, அதனை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் துல்லியமாக வீசிக் கொண்டிருந்த அஸ்வினின் லைன் மற்றும் லெந்த்தையே காலி செய்தார், ஸ்வீப் ஆடினார், எங்கு போட்டாலும் ஸ்வீப் ஆடினார், ஸ்வீப் ஆட முடியாது வீசினால் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினர், ஒரு முறை ஹர்பஜனை ரிவர்ஸ் ஸ்வீப்பில் கவர் திசையில் சக்தி வாய்ந்த சிக்சரையும் அடித்தார்.

திரிமானேவும் சாதக பலன்களை பயன்படுத்தி 44 ரன்களை எடுத்தார், ஆனால் சந்திமால் அளவுக்கு இவர் இந்திய வீச்சாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கவில்லை.

24 ஓவர்களில் இருவரும் 125 ரன்களை விளாசினர், அப்போது திரிமானே, அஸ்வின் பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக இன்று

காலை வந்தவுடன் பிரசாத், ஆரோனின் பவுன்சரில் வெளியேற, மேத்யூஸ், சங்கக்காரா இணைந்து 87 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகே சங்கக்காரா, மேத்யூஸ் ஆகியோர் முறையே அஸ்வின், மிஸ்ரா ஆகியோரிடம் அவுட் ஆனார்.

திரிமானே ஆட்டமிழந்த பிறகு ஜெஹன் முபாரக் இறங்கி சந்திமாலின் வழியை பின்பற்றி ஸ்வீப், மேலேறி வந்து ஆடுவது என்று அடித்து நொறுக்கினார். ஹர்பஜன் சிங் பந்து வீச்சு கடும் ஐயங்களைக் கிளப்புகிறது. பந்தில் போதிய பிளைட் இல்லை. பிட்ச் செய்யும் இடமும் எளிதாகவே உள்ளது. 17 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார், இவருக்கு பதிலாக பிராக்யன் ஓஜாவை அழைத்துச் சென்றிருந்தால் பலன் கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.

11 டெஸ்ட் போட்டிகளில் 17 ரன்களை சராசரி வைத்துள்ள முபாரக் இறங்கியவுடன் மேலேறி வந்து மிஸ்ராவை காலரிக்கு அனுப்பினார். சந்திமாலும் இவரும் இணைந்து 82 ரன்களைச் சேர்த்தனர். முபாரக்கிற்கு முதல் அரைசத வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் ஹர்பஜனிடம் அவுட் ஆனதற்கு அவர் வருந்திஹிருப்பார். 49 ரன்களில் அவர் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்குப் பிறகும் முன்னிலையை கட்டுப்பாட்டில் இந்தியாவால் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சந்திமாலின் அபார பேட்டிங் அமைந்தது. 7-வது விக்கெட்டுக்குப் பிறகு வீசப்பட்ட 83 பந்துகளில் அவர் 45 பந்துகளைச் சந்தித்து சேர்க்கப்பட்ட 65 ரன்களில் 52 ரன்களை பங்களிப்பு செய்தார்.

இந்தப் போட்டியில் முடிவுகள் கடினமாக அமைந்தால் நிச்சயம் இந்தியா டி.ஆர்.எஸ் எதிர்ப்பை கைவிடும் என்றே கருதப்படுகிறது.

பந்துவீச்சில் மீண்டும் அஸ்வின் 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிஸ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வருண் ஆரோனை இன்னும் கொஞ்சம் பாசிட்டிவாக பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால், நிச்சயம் சந்திமால் இதே தொடரில் இன்னொரு முறை இன்று ஆடியது போன்று அவ்வளவு அனாயசமாக ஆடிவிட முடியாது என்பதை எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/தினேஷ்-சந்திமால்-விளாசல்-162-நாட்-அவுட்-பரபரப்பான-நிலையில்-கால்லே-டெஸ்ட்/article7541085.ece

  • Replies 77
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மதிய உணவு இடைவேளை வரை 78/7 இந்தியா

  • தொடங்கியவர்

ஹெராத் சுழல் ஜாலம்: இந்திய அணி திணறல்

india sri lanka first test galle

காலே: காலே டெஸ்டில் இலங்கை அணியின் ஹெராத் ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறுகிறது. 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 183, இந்தியா 375 ரன்கள் எடுத்தன. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இதனையடு்தது 176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (13), இஷாந்த் (5) அவுட்டாகாமல் இருந்தனர். 

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. ஹெராத் ‘சுழலில்’ இஷாந்த் (10), ரோகித் (4) சிக்கினர். கோஹ்லி 3 ரன்களில் திரும்பினார். கவுசல் பந்தில் தவான் (28) வெளியேறினார். சகா (2), ஹர்பஜன் (1) ஏமாற்றினர். உணவு இடைவேளையின்போது, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே (18), அஷ்வின் (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

http://sports.dinamalar.com/2015/08/1439312336/indiasrilankafirsttestgalle.html

  • தொடங்கியவர்

இந்தியா  102/9

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா  63 ஓட்டங்களால் வெற்றி :)

ரங்கன ஹேரத் 7 விக்கெட்களையும்  kaushal 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்

இனி சொறி லங்கா சொறிஞ்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான் :grin:

 

:shocked::grin:

  • தொடங்கியவர்

IMG_1826_zpsarcvivsi.png

IMG_1824_zps6tcobwcp.png

IMG_1825_zpseefqq8qd.png

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!

 

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

c1.jpg

இந்தியா–இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 183 ரன்களும், இந்தியா 375 ரன்களும் எடுந்திருந்தன. 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2வது இன்னிங்சில் 82.2 ஓவர்களில் 367 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. இதில், சன்டிமால் 162 ரன்களுடன் (169 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதபின் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, எஞ்சி இருந்த ஆட்ட நேர முடிவில் லோகேஷ் ராகுலின் விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்து ஷிகர் தவான் 13 ரன்களுடனும் இஷாந்த் ஷர்மா 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இன்று துவங்கிய 4வது நாள் ஆட்டம் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. தவான்-28, இஷாந்த் ஷர்மா-10, ரோகித் சர்மா-4, கேப்டன் கோலி-4 என அடுத்தடுத்து விட்கெட்டுகள் விழுந்தது.

c2.jpg

இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 35  ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் தடுமாறியது. கடைசி வரை போராடிய ரகானே 36 ரன்களுடன் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். இதை தொடர்ந்து, இந்திய ரசிகர்களின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. இறுதியாக, இந்திய அணி 49.5 ஓவர்களில் 112 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஹெராத் 7 விக்கெட்டுகளை கைப்பறினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=51028

ஸ்ரீலங்கா  63 ஓட்டங்களால் வெற்றி :)

ரங்கன ஹேரத் 7 விக்கெட்களையும்  kaushal 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்

:shocked::grin:

ஆ... வடை போச்சே... ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தோற்றது மட்டற்ற மகிழ்ச்சி :grin:

சங்ககாராவின்  கடைசி மாட்ச் என்று விட்டு கொடுத்திட்டாங்கள் .

  • தொடங்கியவர்
112 ஓட்டங்களுடன் சுருண்டது இந்திய அணி; முதல் டெஸ்ட்டில் 63 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி
2015-08-15 16:53:26

இந்திய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

 

11603india-lanka-test2.jpg

 

காலி சர்வதேச அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு இரண்டாவது இன்னிங்கஸில். 176ஓட்டங்கள் தேவைப்பட்டன.

 

ஆனால், போட்டியின் 4 ஆவதுநாளான இன்று, ரங்கன ஹேரத்தின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய அவ்வணி 112 ஓட்டங்களுடன் சகல  விக்கெட்களையும் இழந்தது.



11603india-lanka-test1.jpg


இந்திய அணி சார்பில் இரண்hடவது இன்னிங்ஸில் அஜின்கியா ரெஹானே 36 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.


இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத் 48  ஓட்டங்களுககு 7 விக்கெட்களை வீழ்த்தினார். தரிந்து கௌஷால் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.


இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில இலங்கை அணி 183 ஓட்டங்களையும் இந்திய அணி 375 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில்  367 ஓட்டங்கைளப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில்  ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

 

11603lanka-india-test-3.jpg

 


3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 1:0 விகித்தில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி  எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

11603_INDIA-LANAK-TEST-4.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11603#sthash.Cp3O6WL3.dpuf

11234972_963610053701657_670068917384217

11891060_963652093697453_332247921650479

  • தொடங்கியவர்

சங்ககாராவின்  கடைசி மாட்ச் என்று விட்டு கொடுத்திட்டாங்கள் .

சங்ககாராவின் கடைசி போட்டி காலி  மைதானத்தில். அடுத்த டெஸ்ட்  கொழும்பு சரவணமுத்துவில் அதிலும் சங்ககாரா விளையாடுவார்.

அர்ஜுன் இன்று காலை இந்தியன் துடுப்பாட்டகாரர் பட்டபாட்டை பார்த்தால் இப்படி சொல்லமாட்டீர்கள்:)

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இந்திய வீரர்களுக்கு சிந்தனையில் தெளிவு இல்லை, மனதும் பலவீனம்: கோஹ்லி ஆதங்கம்
 
கொழும்பு: மனதளவில் பலவீனமடைந்ததுதான் தோல்விக்கு காரணம் என்று இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த அதிர்ச்சி தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
 
3வது நாளில் இலங்கை தனது 2வது இன்னிங்சில் 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், சண்டிமாலின் சதம் உதவியுடன், அந்த அணி 4வது நாளான இன்று இந்தியாவை 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
எங்களைத்தான் சொல்லனும்
இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து கேப்டன் கோஹ்லி கூறியதாவது: நாங்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. எங்களையேத்தான் சொல்லிக்கொள்ள வேண்டும். இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்தபோதே, அந்த அணியை சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒரு செஷன் மொத்த போட்டியையும் மாற்றிவிட்டது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்.
 
நல்ல பவுலர்

ஆங்க்லோ மேத்யூஸ் அணிக்கு பெருமை சென்று சேர வேண்டும். ரங்கனா ஹீரத் சிறந்த பவுலர். அவர் இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடியிலேயே வைத்திருந்தார்.

மனதில் பலமில்லை
இந்த போட்டியில் தோற்க, எண்ணத்தில் தெளிவு இல்லாததும், மனதில் பலம் இல்லாததும்தான் காரணம். நெருக்கடியான கட்டங்களில் மனதில் பலம் வேண்டும். அதுதான் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு அழகு.
 
எண்ணத்தில் தெளிவு
இன்றைய தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டியது அவசியம். 170 ரன்களை துரத்திச் சென்றாலும், நமது எண்ணம் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
 
பார்ட்னர்ஷிப் வேண்டும்
பேசுவது எளிது, ஆனால் செய்வது கஷ்டம். சர்வதேச கிரிக்கெட் வீரரான பிறகு செயல்பாட்டில் அவசியம் கவனத்தை செலுத்த வேண்டும். போட்டியை வென்றெடுக்கும் பார்ட்னர்ஷிப்புகள் தேவை. அது இன்றைய போட்டியில் மிஸ் ஆகிவிட்டது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார். நெருக்கடியான நேரத்தில் தெளிவாக சிந்திக்க கூடியவர் என்று பெயர் பெற்றவர் டோணி. அவர் டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நடைபெறும் பெரிய டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்நிலையில் கோஹ்லி இவ்வாறு கூறியுள்ளார்.
 
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/we-lacked-mental-strength-says-kohli-after-shock-defeat-233432.html

இந்தியா தோற்றது மட்டற்ற மகிழ்ச்சி :grin:

சொறிலங்கா வென்றது தாங்கமுடியாத துக்கம் 

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இலங்கை வசம்

 
 

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

220129.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இத் தொடர் மிகமுக்கியம் வாய்ந்த  கருதப்பட்டது.

220105.jpg
இலங்கை அணியைப் பொருத்தவரையில் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் இப் போட்டியில் வெற்றி பெற்று அவருக்கு சிறந்த வழியனுப்புதலை வழங்க இலங்கை அணி வீரர்கள் எண்ணியிருந்தனர்.

 

அந்த வகையில் இலங்கை மண்ணில் இந்திய அணி கடந்த 22 வருடங்களாக எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றதில்லை எனவே இத் தொடர் இந்திய அணிக்கும் மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது.

220101.jpg

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி கடந்த 12 ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்தியுஸ் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

220133.jpg

அந்த வகையில் தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரியத் தொடங்கின.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

220107.jpg

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியுஸ் 64 ஓட்டங்களையும் திரிமன்னே  59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குமார் சங்கக்கார 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

220109.jpg

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ஓட்டங்களைப்பெற்றது.

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான் 134 ஓட்டங்களையும் அணித் தலைவர் விராட் கோலி 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

220119.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கௌஷல் 5 விக்கெட்டுகளையும் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 192 ஓட்டங்களால் பின்னிலை வகிந்த இலங்கை அணி போட்டியின் 2 ஆவது நாள் தேநீர் இடைவேளையின் பின்னர்  தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

220115.jpg

2 ஆவது இன்னிங்ஸிலும் இலங்கை அணி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

போட்டியின் 3 ஆவது நாளான நேற்றையதினம் இலங்கை அணியின் நடுத்தர துடுப்பாட் ட வரிசை இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது.

220121.jpg

இதில் டினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார  40 ஓட்டங்களையும் மெத்தியுஸ் 39 ஓட்டங்களையும் திரிமன்னே  44 ஓட்டங்களையும் ஜெகன் முபாரக் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணிக்கு பலமமைத்தனர்.

219995.jpg

இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ஓட்டங்களைப் பெற்றது.

220123.jpg

இந்திய அணி சார்பாக சுழலில் மிரட்டிய அஸ்வின்  4 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்திய அணிக்கு 176 என்ற இலகுவான வெற்றி இலக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி தனது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

220125.jpg
போட்டியின் 4 ஆவது நாளான இன்றைய தினம் இலங்கை அணியின் சுழல்பந்து வீரர் ரங்கன ஹேரத் தனது மாயாஜால சுழலில் இந்திய அணி வீரர்களை கட்டிப்போட்டார்.

இதேவேளை, போட்டியின் ஆரம்பமே இந்திய அணியின் கையோங்கியிருந்த நிலையில் போட்டியின் 4 ஆவது நாள் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் போட்டியை தம்பக்கம் திருப்பினர்.

219933.jpg

176 என்ற  இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பொடுத்தாடிய இந்திய அணி இலங்கையின் சுழலுக்கு தடுமாறி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

220003.jpg

இந்திய அணி சார்பாக 2 ஆவது இன்னிங்ஸில் ரஹானே 36 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுழலில் இந்திய அணியை கட்டிப்போட்ட ஹேரத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

219921.jpg

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களைப்பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்ட டினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.

220021.jpg

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

220127.jpg

இரு அணிகளுக்கும் இடையிலான முக்கியமானதும் சங்காவின் இறுதிப் போட்டியுமான 2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/08/15/இந்திய-அணிக்கெதிரான-முதல்-டெஸ்ட்-இலங்கை-வசம்

  • தொடங்கியவர்

இலங்கை செல்கிறார் ஸ்டூவர்ட் பின்னி

India, Sri Lanka, Test Series, Stuart Binny

கொழும்பு: டெஸ்ட் தொடரில் தடுமாறும் இந்திய அணியை மீட்க கர்நாடகாவை சேர்ந்த ‘ஆல்–ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னி, இலங்கை செல்கிறார்.      

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 பவுலர்கள் ‘பார்முலாவை’ இந்திய கேப்டன் விராத் கோஹ்லி பின்பற்றுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது 6, 7வது இடத்தில் சிறந்த பேட்ஸ்மேன்கள் தேவை. தற்போது 6வது இடத்துக்கு சகா உள்ளார். ஆனால், 7வது இடத்துக்கு சரியான நபர் இல்லை. இதனால் தான் முதல் டெஸ்டில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், இந்தியா தோல்வி அடைய நேரிட்டது. 

இதையடுத்து 2வது டெஸ்டுக்கு(ஆக.,20–24)  புது வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. 7வது இடத்துக்கு ‘ஆல்–ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னியை களமிறக்க உள்ளனர். இவர் 16வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 3 டெஸ்டில் 118 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் எதுவும் வீழத்தவில்லை. இவர், ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக 2வது டெஸ்டில் இடம் பெறலாம். 

http://sports.dinamalar.com/2015/08/1439744343/IndiaSriLankaTestSeriesStuartBinny.html

  • தொடங்கியவர்

ஆக்ரோஷம் அவசியமா: கவாஸ்கர் காட்டம்

India, Sri Lanka, Test, Gavaskar, Cricket

புதுடில்லி: ‘‘இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் பேசுவதை நிறுத்திவிட்டு, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்,’’ என, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்தார்.      

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சின் முடிவில் 192 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதால் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.      

இதுகுறித்து இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: இந்திய அணியினர் ஆக்ரோஷமாக விளையாடுவோம், ஆவேசமாக ஆடுவோம் என பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். போட்டியில் முழுகவனம் செலுத்தி வெற்றி பெறுவதற்கு தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும். சிறந்த அணியை தேர்வு செய்வது, வீரர்களை சரியான இடத்தில் களமிறக்குவது போன்றவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுதல் அவசியம். இதேபோல, ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணியின் பலம், பலவீனங்களை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்ப விளையாட வேண்டும். அப்போது தான் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும். அதிரடியாகத்தான் விளையாட வேண்டும் என்பது முக்கியமல்ல. தேவைப்படும் நேரத்தில் தற்காப்பு ஆட்டமும் விளையாடலாம். எப்படி விளையாடினாலும், போட்டியின் முடிவில் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டுமே முக்கியம்.      

காலே டெஸ்டில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது என்று தான் கூறுவேன். ஏனெனில் முதல் இன்னிங்சின் முடிவில் 192 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் சோபிக்கத்தவறியது. இலங்கை அணியை 175 ரன்கள் முன்னிலை பெறச் செய்திருக்கக் கூடாது. இது சவாலான இலக்கு என முன்பே கூறினேன். ஒருவேளை 2வது இன்னிங்சில் நிதானமாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இத்தோல்வி இந்திய வீரர்களுக்கு நல்ல பாடமாக அமையும்.      

இதுபோன்ற தோல்விகள் வீரர்களிடம் மனதளவில் பாதிப்பை உண்டாக்கும். அப்போது கேப்டன் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் வீரர்களை ஊக்கப்படுத்தி தயார்படுத்துவது அவசியம். இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால், மீதமுள்ள 2 போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவர் என நம்புகிறேன்.       

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

http://sports.dinamalar.com/2015/08/1439744663/IndiaSriLankaTestGavaskarCricket.html

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட் தோல்வி பற்றி நேர்மையாக விவாதித்தோம்: ரவி சாஸ்திரி

 
 
சரா ஓவல் மைதானத்தில் பயிற்சிக்கு வரும் விராட் கோலி. அருகில் அணி இயக்குநர் ரவி சாஸ்திரி. | படம்: ஏ.எஃப்.பி.
சரா ஓவல் மைதானத்தில் பயிற்சிக்கு வரும் விராட் கோலி. அருகில் அணி இயக்குநர் ரவி சாஸ்திரி. | படம்: ஏ.எஃப்.பி.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆட்ட பாணியில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று அணி இயக்குநர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:

மனநிலைகள் அதே போன்றுதான் இருக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே ஆக்ரோஷ, வெற்றி பெறும் மனநிலையுடன் 2-வது டெஸ்டிலும் ஆடப்போகிறோம். கடைசியில் ஒரு தவறு செய்தோம் அவ்வளவே. இன்னும் கொஞ்சம் தொலைவு நாம் கடக்க வேண்டும்.

மொயீன் அலிக்கு எதிராக மேலதிக ஆக்ரோஷத்தை காட்டினோம், இங்கு அதற்கு மாறாக தடுமாற்றத்துடன் ஆடினோம், பழைய முறை கிரிக்கெட்டை ஆடினோம், மிகவும் தற்காப்பு உத்தியைக் கடைபிடித்தோம்.

சமச்சீர் தன்மையை எட்ட, சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், தன்னம்பிக்கையுடன் ஆடுவதே சிறந்த வழி. தடுத்தாடினால் எதிர்மறையாக ஆடுகிறோம் என்று அர்த்தமல்ல, தடுப்பு உத்தியும் கறாராக அமைந்தால் அதுவும் பாசிட்டிவ் ஆன அணுகுமுறையே.

தோல்விக்குப் பிறகு ஓய்வறையை விட்டு சில மணி நேரங்களுக்கு நாங்கள் வெளியே வரவில்லை. ஏனெனில் அனைவருமே மிகவும் வருந்திய நிலையில் இருந்தனர்.

தோல்வி ஒரு வலிதான், ஆனால் நாங்கள் நேர்மையாக விவாதித்தோம், பிரச்சினைகளுக்கு பின்னால் நாங்கள் ஒளிந்து கொள்ளவில்லை. சாக்குபோக்குகள் கிடையாது. மற்ற தோல்விகளை விட இது காயப்படுத்துகிறது ஏனெனில் டெஸ்ட் முழுதும் ஆதிக்கம் செலுத்திவிட்டு கடைசியில் தோல்வி என்பது காயம் ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் இத்தகைய தோல்விகளிலிருந்து வேகமாக பாடம் கற்றுக் கொள்ள முடியும். அடுத்த சில தினங்களில் மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

வெற்றிக்கு நெருக்கமாக வந்திருக்கிறோம், ஒரு வெற்றி போதும், அதுவே பிற வெற்றிகளுக்கு தொடக்கமாக அமையும்.

சரியான அணிக்கலவை ஏற்பட சில காலங்கள் பிடிக்கும், ஆனால் அணிக்கு நிச்சயம் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் தேவை. ஸ்டூவர்ட் பின்னி அந்த இடத்துக்கு தகுதியானவர் என்றே நினைக்கிறேன்”

இவ்வாறு கூறினார் சாஸ்திரி.

http://tamil.thehindu.com/sports/முதல்-டெஸ்ட்-தோல்வி-பற்றி-நேர்மையாக-விவாதித்தோம்-ரவி-சாஸ்திரி/article7553823.ece

  • தொடங்கியவர்

நாளை பாரிய மாற்றங்களுடன் களமிறங்குமா இந்தியா?

நாளை பாரிய மாற்றங்களுடன் களமிறங்குமா இந்தியா?

 

 
 
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் முதல் மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்தியும் இந்திய அணி தோற்றது இரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

176 ஓட்டங்கள் என்ற இலக்கை எடுக்க முடியாமல் இலங்கையிடம் இந்தியா வீழ்ந்தது.

மேலும் முதல் டெஸ்டில் சதம் அடித்த ஷிகார் தவான் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு பாதிப்பே. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

நாளைய டெஸ்டில் ராகுலுடன் தொடக்க வீரராக முரளி விஜய் ஆடுவார். அவர் முழு உடல் தகுதி பெற்றுவிட்டாரா? என்பது தெரியவில்லை. 5 பந்து வீச்சாளர்கள் திட்டம் முதல் டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் 2வது டெஸ்டில் 4 பந்து வீச்சாளர்கள், 7 துடுப்பாட்ட வீரர்களும் களம் இறங்குவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் துடுப்பாட்ட வீரர்கள் என்ற முறையில் களம் இறங்கினால் தான் புஜாராவும், ரோகித் சர்மாவும் இடம்பெறுவார்கள். ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதேபோல ஹர்பஜன்சிங்கின் பந்துவீச்சும் காலி டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் நாளைய டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட அணியில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

துடுப்பாட்டத்தில் வீராட் கோலி, ரகானே ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கைக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இந்த டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதால் அவருக்கு வெற்றிக் களிப்புடன் விடை கொடுக்கும் எதிர்பார்ப்பு இலங்கைக்கு உள்ளது.
  • தொடங்கியவர்

பதிலடி கொடுக்குமா இந்தியா: இன்று இலங்கையுடன் 2வது மோதல்

India, Sri Lanka, Colombo Test

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில், இந்திய அணி எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.                                                       

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று கொழும்புவில் உள்ள சாரா ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.                                                

துவக்கம் குழப்பம்: முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றபோதும், இந்திய வீரர்கள் வெற்றியை நழுவவிட்டனர். அணிக்கு துவக்கமே பிரச்னையாக உள்ளது. முரளி விஜய் காயத்தால் (தொடை பின்பகுதி) அவதிப்படுவதால் முதல் போட்டியில் விளையாடவில்லை. இவர் பயிற்சியில் ஈடுபட்டதால், இன்று விளையாடுவார் என நம்பப்படுகிறது. தவான் காயத்தால்(வலது கை)விலகியது பின்னடைவு.                         

கோஹ்லி நம்பிக்கை: மற்றொரு துவக்க வீரர் லோகேஷ் ராகுல் (7,5) கடந்த போட்டியில் சொதப்பினார். ரோகித் சர்மாவின் (9,4) செயல்பாடும் ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் இவருக்குப்பதில் இன்று புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கடந்த முறை சதம் அடித்த கேப்டன் கோஹ்லி நம்பிக்கை தருகிறார்.  இவருக்கு ரகானே கைகொடுத்தால் மட்டுமே இமாலய இலக்கை எட்ட முடியும். பின் வரும் சகா, அஷ்வின் தங்கள் பங்கிற்கு ரன் குவிப்பில் ஈடுபடுவது அவசியம். வாய்ப்பு கிடைத்தால், ஸ்டூவர்ட் பின்னி ‘ஆல்–ரவுண்டர்’ பணியை கச்சிதமாக செய்ய வேண்டும்.                                     

அஷ்வின் அசத்தல்: கேப்டன் கோஹ்லி, ஐந்து பவுலர்கள் ‘பார்முலா’வில் உறுதியாக உள்ளார். சுழற்பந்துவீச்சில் அஷ்வின் (10) அசத்துகிறார்.  அமிஸ் மிஸ்ராவும் தன் பங்கிற்கு விக்கெட் வீழ்த்துவது பலம். பின்னி இடம்பெறும் பட்சத்தில், ஹர்பஜன் இடம் கேள்விக்குறிதான். வேகப்பந்துவீச்சில் இஷாந்த், ஆரோன் ஓரளவு கைகொடுக்கின்றனர்.       

கிளம்பும் சங்ககரா: இலங்கை அணிக்கு இது முக்கியமான போட்டி. ‘சீனியர்’ வீரர் சங்ககரா, இப்போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து விடை பெறுகிறார். இவருக்கு வெற்றியுடன் பிரியாவிடை தர சக வீரர்கள் காத்திருக்கின்றனர். கேப்டன் மாத்யூஸ் நம்பிக்கை அளிக்கிறார். சண்டிமால் அசத்தல் ‘பார்மில்’ உள்ளார். முதல் போட்டியில் ஆட்டத்தின் போக்கை மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மற்றபடி முபாரக், திரிமான்னே ரன் குவிப்பில் பங்கு எடுக்கலாம்.                                                             

ஹெராத் மிரட்டல்: ‘சுழல்’ வீரர் ஹெராத் கடந்த முறை மிரட்டினார். இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்திய இவர், இந்திய அணியின் தோல்விக்கும் வித்திட்டார். இவருடன் கவுசல் கைகோர்த்து அசத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர் நுவன் பிரதீப் காயத்தால் (தொடை பின்பகுதி) அவதிப்படுவதால், சமீரா அணிக்கு திரும்பலாம்.

மழை வருமா

கொழும்புவில் மழை பெய்ய80 சதவீத வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், போட்டிக்கு இடையூறு ஏற்படலாம்.                                     

இதுவரை.....                  

இம்மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 4 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. இலங்கை அணி 2ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது.                  

ஆடுகளம் எப்படி                  

கொழும்பு மைதானம் பொதுவாக வேகத்திற்கு சாதகமானது. இது இன்றும் தொடரலாம்.                                     

கோஹ்லி நம்பிக்கை

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ கடந்த காலத்தை பற்றி நாங்கள் சிந்திக்க மாட்டோம். முதல் போட்டியில் சந்தித்த தோல்வியில்  இருந்து மீண்டு எழுச்சி பெறுவோம். ஒவ்வொரு வீரரும் திறமையை வெளிப்படுத்தி, சிறப்பாக செயல்படும் வேட்கையுடன் உள்ளோம்,’’ என்றார்.      

உணர்ச்சி அதிகம்       

இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் கூறுகையில்,‘‘ பல ஆண்டுகளாக இலங்கை பேட்டிங்கின்  முதுகெலும்பாக சங்ககரா உள்ளார். இவர் ஓய்வு பெற உள்ளதால், எங்களுக்கு இது உணர்ச்சிகரமான போட்டி. ஒவ்வொரு வீரரும், விளையாட்டு வாழ்வின் கடைசி கட்டத்தில் தங்களது நினைவாக எதையாவது நிலை நிறுத்தி செல்வர். இதன்படி, சங்ககரா இப்போட்டியில் சதம் அடிப்பார் என நம்புகிறேன். இவரை வெற்றியுடன் வழியனுப்புவோம்,’’ என்றார்.

Kumar-Sangakkara-M%281%29.jpg

ஓய்வு பெறும் சங்ககரா                              

 

இலங்கை அணியின் வியக்கத்தக்க வீரர் சங்ககரா, 37. விக்கெட்கீப்பர்– பேட்ஸ்மேனான இவர், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் ( ஜூலை 5, 2000), டெஸ்ட் (ஜூலை 20, 2000) போட்டிகளில் அறிமுகமானார். இரண்டு போட்டிகளும் காலே மைதானத்தில் நடந்தன. இதுவரை 133 டெஸ்ட் (12, 350 ரன்), 404 ஒரு நாள் (14, 234), 56 ‘டுவென்டி–20’ (1382) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு உலக கோப்பை (டுவென்டி–20) கோப்பை வென்று தந்ததுடன், ‘டுவென்டி–20’ போட்டியில் விடை பெற்றார். உலக கோப்பை தொடருடன் (2015, 50 ஓவர்) ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். இன்று துவங்கும் கொழும்பு போட்டியுடன், சர்வதேச அரங்கிலிருந்து விடை பெறவுள்ளார்.             

* டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்குப்பின் (12), அதிக இரட்டை சதம் அடித்த வீரர் (11) என்ற பெருமை உடையவர்.             

* தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் இவர்தான் டெஸ்டில் அதிக ரன் (12, 350) குவித்துள்ளார்.             

* டெஸ்டில் அதிக சதம் (38) அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.             

* இன்று துவங்கும் போட்டியில் சங்ககரா சதம் அடித்தால், தனது கடைசி டெஸ்டில் சதத்தை பதிவு செய்த 34வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெறுவார். இதற்கு முன், தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (எதிர்– இந்தியா, 2013) கடைசி டெஸ்டில் சதம் அடித்தார்.   

http://sports.dinamalar.com/2015/08/1440005468/IndiaSriLankaColomboTest.html

  • தொடங்கியவர்

இந்தியா துடுப்பாட்டம்

இந்தியா துடுப்பாட்டம்

August 20, 2015  09:48 am

 
 
 
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பி.சாரா ஓவல் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் இறுதி சர்வதே டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
 
 

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது

 
 

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 40 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

sanga_8.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதில் காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியிடம் 63 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பி.சரவணமுத்து விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தப் போட்டியுடன் இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/08/20/இலங்கைக்கு-எதிரான-2-ஆவது-டெஸ்ட்-இந்திய-அணி-2-விக்கெட்டை-இழந்தது

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிராக லோகேஷ் ராகுல் அபார சதம்!

 

கொழும்பு :இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் லோகேஷ் ராகுல் சதமடித்து அசத்தினார்.

rahul.jpg

கொழும்பு  சாரா மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. ராகுலுடன் களமிறங்கிய தொடக்க வீரர்  முரளி விஜய் டக் அவுட்டானார். 12 ரன்னை எட்டுவதற்குள், இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தது. ரஹானே 4 ரன்களில் வீழ்ந்தார். அடுத்து ராகுலுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி, இலங்கை பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேகரிக்கத் தொடங்கியது. லோகேஷ் ராகுல் 94 பந்துகளில் அரை சதம் அடித்தார். விராட் கோலி 78 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ரோகித் களமிறங்கினார். ஆனால் ராகுல் தொடர்ந்து இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்து சதமும் கண்டார். இதில் 13 பவுண்டரிகளும்  ஒரு சிக்சரும் அடங்கும். ராகுல் அடித்த 2வது சதம் இதுவாகும்.

தற்போது இந்திய அணி 219 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ராகுல் 105 ரன்களுடனும் ரோகித் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=51252

  • தொடங்கியவர்

IMG_1881_zpsyjy8kukb.jpg

  • தொடங்கியவர்

ராகுல் சதம், கோலி, ரோஹித் சர்மா அபாரம்: இந்தியா 319/6

 
  • இந்திய தொடக்க வீரர் கே.எல். ராகுல் சதம் எடுக்க பாய்ந்து கிரீஸை ரீச் செய்கிறார். | படம்: ஏ.எஃப்.பி.
    இந்திய தொடக்க வீரர் கே.எல். ராகுல் சதம் எடுக்க பாய்ந்து கிரீஸை ரீச் செய்கிறார். | படம்: ஏ.எஃப்.பி.
  • ரோஹித் சர்மா புல் ஷாட் ஆடுகிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.
    ரோஹித் சர்மா புல் ஷாட் ஆடுகிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.

கொழும்புவில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தன் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசியில் ரோஹித் சர்மா 79 ரன்களுக்கு அஞ்சேலோ மேத்யூஸிடம் எல்.பி.ஆனார். ஓரிரண்டு அவுட் ஸ்விங்கர்களை வீசிய பிறகே ஒரு பந்தை உள்ளே கொண்டு வரும் ஒரு சாதாரண உத்தியைக் கணிக்க முடியாமல் எல்.பி.ஆகி வெளியேறினார் ரோஹித். ஆனால் கடைசியில் இவர் சிலபல ஷாட்களை ஆடினார். மொத்தம் 132 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா அதில் 5 பவுண்டரிகளையும் 3 அருமையான சிக்சர்களையும் அடித்து ஓரளவுக்கு அபாயகரமாக திகழ்ந்த நிலையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் விதமாக ஒரு சிம்பிள் பொறியில் சிக்கி கடைசி ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.

விஜய், ரஹானே சோபிக்காததால் ஏற்பட்ட பின்னடைவு:

டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்ததன் காரணம் கடந்த டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்சில் 112 ரன்களுக்குக் காலியாகி தோல்வியடைந்ததால்தான் என்று தெரிந்ததே தவிர இந்தப் பிட்சைப் பார்த்து எடுத்த முடிவாகத் தெரியவில்லை.

முரளி விஜய் காயத்துக்குப் பிறகு ஆடினார். முதல் ஒரு மணி நேரத்துக்கு பிட்சில் பவுன்ஸ் இருக்கும் என்ற கணிப்புக்கேற்பவே பிட்ச் இருந்தது. தம்மிக பிரசாத்தும், சமீராவும் அருமையாக வீசினர், குறிப்பாக சமீராவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றே கூற வேண்டும், சீராக அவர் 140-142 கிமீ வேகத்தில் வீசி பேட்ஸ்மென்களை தடுமாறச் செய்தார்.

முதல் 2 பந்துகளை அவுட் ஸ்விங்கராக முரளி விஜய்க்கு வீசிய பிரசாத், 4-வது பந்தை, பந்தின் தையலில் பட்டு உள்ளே ஸ்விங் ஆகுமாறு வீச நன்றாக முன்னங்காலை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போட்டிருந்தால் அவுட் சந்தேகமாக இருந்திருக்கும், ஒரு அரைகுறை தடுப்பாட்டம் ஆட பந்து கால்காப்பை தாக்கியது நடுவர் கையை உயர்த்தினார். ரன் எடுக்கும் முன்னரே விஜய் அவுட்.

அடுத்ததாக ரோஹித் இறங்குவார் என்று பார்த்தால், அவரது இடத்தைத் தக்க வைக்கும் முயற்சியோ என்னவோ தெரியவில்லை, ரஹானே இறங்கினார். அவர் 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரசாத்தின் அருமையான அவுட் ஸ்விங்கருக்கு பேட்டைக் கொண்டு சென்று எட்ஜ் ஆக 3-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

12/2 என்ற நிலையில் கோலி, ராகுலுடன் இணைந்தார், ராகுலுக்கு ஒரு பந்தை ஆஞ்சேலோ மேத்யூஸ் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி நேராக்க பந்து ராகுல் மட்டையின் விளிம்பில் பட்டு கல்லிக்கும், பாயிண்டுக்கும் இடையே சென்றது, இந்நிலையில் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடியில் இருந்தனர்.

நிமிர்த்திய ராகுல் - கோலி கூட்டணி:

இவர்கள் இருவரும் செட்டில் ஆவதற்கு முன்னதாக நிரம்பவும் பதட்டத்துடன் ஆடினர், துஷ்மந்தா சமீரா 3-ம் பவுலராக அறிமுகமானவுடன் ராகுலுக்கு பிரச்சினைகள் கொடுத்தார், ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை அவர் கட் செய்ய பந்து கல்லி திசைக்கு நேராக ஜெஹன் முபாரக்கிடம் கேட்சாகச் சென்றது அவர் நழுவ விட்டார்.

ஆனால் சமீராவை 3 பவுண்டரிகள் அடித்தனர் ராகுலும், கோலியும், அதில் நேர் டிரைவ் ராகுலின் டெக்னிக்கை அறிவுறுத்தியது, கோலி புல்ஷாட்டில் பவுண்டரி அடித்தார்.

பந்தில் பளபளப்பு மறைய மறைய ராகுலும் கோலியும் வசதியாக ஆடத் தொடங்கினர். இடையில் கோலிக்கு ஒரு வலுவான எல்.பி முறையீடு எழுப்ப பட்டது, பிரசாத் பந்து ஒன்று கோலியின் கால்காப்பை தாக்கியது. ரங்கனா ஹெராத் வந்தவுடன் கோலி மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு அருமையான சிக்சரை அடித்தார். டிரேட் மார்க் எக்ஸ்ட்ரா கவர் டிரைவ்வையும் கோலி ஆடத் தொடங்கியிருந்தார்.

உணவு இடைவேளையின் போது ராகுல் 39, கோலி 48. உணவு இடைவேளைக்குப் பிறகு பிரசாத் பந்தை ஒரு அருமையான ஆஃப் டிரைவ் அடித்து அரைசதம் கண்டார். இடையிடையே கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தில் தடவவே செய்தார். அப்படிப்பட்ட ஒரு பந்து எட்ஜ் ஆக ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது, தப்பித்தார் கோலி. கோலி அரைசதம் கண்ட பிறகு சிறிது நேரம் அவரை இலங்கை பவுலர்கள் முடக்கினர்.

இந்தக் கட்டத்துக்குப் பிறகு பிரசாத்தை ஒரு ஓவரில் 2 பவுண்டரிகளையும், ஹெராத்தை அவரது டிரேட் மார்க் எக்ஸ்ட்ரா கவர் டிரைவையும் கோலி அடித்தார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 164 ரன்களைச் சேர்த்த போது இலங்கைக்கு என்ன செய்வதென்று தெரியாத தருணத்தில் 107 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த கோலி தனது விக்கெட்டை பரிசாக அளித்தார். ஹெராத் பந்து அவ்வளவாக ஷார்ட் பிட்ச் அல்ல. ஆனால் பின்னால் சென்று கட் செய்ய முயன்றார் கோலி, இவர் பின்னால் வருவதைப் பார்த்தவுடனேயே மேத்யூஸ் முதல் ஸ்லிப்பில் நகரத் தொடங்கினார், அதாவது கோலி எட்ஜ் செய்யப் போகிறார் என்பதை சரியாகவே கணித்தார் மேத்யூஸ்.

ரோஹித் தடுமாற்றத்துடன் தொடங்கி பிறகு ஆதிக்கம்:

கோலி ஆட்டமிழந்தவுடன் ரோஹித் சர்மா களமிறங்கினார், ஹெராத் அவரை படுத்தினார், சிலி பாயிண்ட் இருந்திருந்தால் 2-வது பந்தே காலியாகியிருப்பார்.

ஆனால் அதன் பிறகு தடுப்பாட்டம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தார் ரோஹித் சர்மா, ஏறிவந்து எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் பிறகும் மேலேறி வந்து அதே ஓவரில் மிட் ஆஃபில் ஒரு கிளீன் சிக்சரையும் அடித்தார் ரோஹித் சர்மா.

தேநீர் இடைவேளையின் போது ராகுல் 98 ரன்களுடனும் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் இருந்தனர். இந்தியா 206/3 என்று இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ராகுல் ஒரு ரிஸ்கான 2 ரன்களுடன் 180வது பந்தில் சதம் கண்டார். இதில் 12 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடங்கும்.

ஆனால், அதன் பிறகு 108 ரன்களில் அவர் சமீராவின் வைடு பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார், மிகவும் மோசமான ஷாட், டாப் எட்ஜ் எடுத்து சண்டிமாலிடமே கேட்ச் ஆனது. இடையில் லாங் ஆன் பீல்டர் இருந்தும் ரோஹித் சர்மா தைரியமாக இன்னொரு சிக்சரை அடித்தார்.

ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கி, இந்த தரப்பு உயர்மட்ட கிரிக்கெட்டுக்கு தான் லாயக்கில்லை என்பதை நிரூபித்தார், சரியான தடுப்பாட்டமும் இல்லை, தன்னம்பிக்கையான அடித்து ஆடும் திறனும் இல்லை. கிரீஸில் அவரை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தனர் இலங்கை பவுலர்கள். ஏனெனில் அவரே அவுட் ஆகி விடுவார் என்று அவர்களுக்கு தெரிந்தது. கடைசியில் ஹெராத் பந்தை தப்பும் தவறுமாக ஆடி லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சஹா இறங்கி பாசிட்டிவாக 3 பவுண்டரிகளை விளாசினார். ரோஹித் சர்மா தனது அரைசதத்தை எடுத்து முடித்தார். 81-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட பிரசாத் வீசினார், ஷார்ட் பந்து ஒன்றை ரோஹித் அருமையாக புல் ஆடி சிக்ஸருக்கு விரட்டினார் இந்தியா 300 ரன்களை எட்டியது. மீண்டும் ஒரு சாதாரண பந்து அமைய அதனை பவுண்டரி அடித்தார் ரோஹித்.

பிரசாத்தின் அடுத்த ஓவரிலும் ரோஹித் 2 பவுண்டரிகளை அடித்தார். நன்றாக தன்னம்பிக்கையுடன் ஆடிய தருணத்தில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் மேத்யூஸின் சிம்பிள் உத்திக்கு எல்.பி. ஆகி வெளியேறினார், 2, 3 அவுட் ஸ்விங் பிறகு ஒரு இன்ஸ்விங் அவ்வளவுதான் ரோஹித் கதை 79 ரன்களில்முடிக்கப்பட்டது, முதல் நாள் ஆட்டமும் முடிந்தது. இந்தியா 319/6, சஹா 19 நாட் அவுட்.

இலங்கை அணியில் ஆஃப் ஸ்பின்னர் கவுஷால் 23 ஓவர்களில் 82 ரன்கள் கொடுத்து ஏமாற்றமளித்தார். ஹெராத் 21 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் சரிசம விகிதத்தில் சவாலாகத் திகழ்ந்தனர்.

http://tamil.thehindu.com/sports/ராகுல்-சதம்-கோலி-ரோஹித்-சர்மா-அபாரம்-இந்தியா-3196/article7561967.ece

  • தொடங்கியவர்

முதல் இன்னிங்ஸில் இந்தியா 393 ஓட்டங்கள்!

முதல் இன்னிங்ஸில் இந்தியா 393 ஓட்டங்கள்!

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 393 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்திய அணி சார்பில் ராகுல் 108 ஓட்டங்களையும் சர்மா 79 ஓட்டங்களையும், கோலி 78 ஓட்டங்களையும் ஷா 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஹேரத் 4 விக்கெட்களையும் பிரசாத், மெத்திவ்ஸ், சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=71871

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.