Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூடியூப் பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: உத்வேகம் அளிக்கும் ஜல்லிக்கட்டுப் பாடல்கள்

 

 
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி
 
 

ஜல்லிக்கட்டு என்றால் என்ன? நாட்டு மாடுகள் என்றால் என்ன? அதை எதிர்க்கும் அமைப்புகளின் பின்னணி என்ன? இதை எதைப்பற்றியுமே தெரியாதவர்கள் செய்யும் விமர்சனங்கள் எவ்வளவு புரிதல்லற்றவை? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அல்ல இந்த அறிமுகம்.

அதை நீங்கள் காணப்போகும் இந்த வீடியோ உங்களுக்கு பாடலாகவும் நேர்காணல்களாகவும் சொல்லப்போகிறது.

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு உருவாகியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்த அலைகளின் எழுச்சி என்பது உண்மையில் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமான எழுச்சி இல்லை. தமிழகத்தின் அரசியல் எதிர்பார்ப்பு சார்ந்த எழுச்சியும்தான்.

இதுவரை, தமிழகம் அரசியல்வாதிகளாலும் சினிமா கவர்ச்சிகளாலும் அமுக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளின் எழுச்சியாகவே பார்க்கமுடிகிறது.

ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் மாநிலம் முற்றிலும் புதிய திசையைநோக்கி செல்லவேண்டுமென்ற வேட்கையையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மக்கள் போராட்டங்களின் வழியாகத்தான் பல்வேறு நாடுகளின் உண்மையான தலைவர்கள் உருவாகியுள்ளனர். நிழல்வீரர்களின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதையும் தமிழகத்திலும் ஒரு புது பாதை உருவாகும் நல்லகாலம் தென்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் இயற்றுவது மட்டுமல்ல இவர்களின் நோக்கம், ''இனி எங்களை யாரும் ஏமாற்றமுடியாது இதோ நாங்கள் விழித்துக்கொண்டோம். பெரிய தலைகள் சற்று தள்ளியிருங்கள்'' என்ற குரலையும் கேட்க முடிகிறது.

''இல்லை சார் இது காட்டாற்று வெள்ளம் கடலோடு போய் கலந்துவிடும்... மறுநாள் வேறுவேலையைப் பார்ப்பார்கள் என்கிறார்கள் வேறுசிலர். எது உண்மை?

'காலம் மாறிக்கொண்டிருக்கிறது, கருத்துகளும் மாறிக்கொண்டிருக்கின்றன' என்பதை அறியாதவர்களோ அவர்கள் என்று நீர்த்துப்போக வைக்கும் கருத்தாளர்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.

தான் கேட்டு, பார்த்து பிரமித்த இந்த 20 ஜல்லிக்கட்டு பாடல்களை யூடியூப்க்காக தொகுத்திருக்கும் பத்திரிகையாளர் தளவாய் சுந்தரம் தனது முகநூலிலும் அதை வெளியிட்டுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இந்த பாடல்கள், காட்சிரீதியாகவும் அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் வாயிலாகவும் தமிழரின் சங்ககால விளையாட்டைத் தெரிந்துகொள்ளும் உற்சாகமும் உத்வேகமும் அளிக்கக்கூடியவை.

இடைஇடையே சில நேர்காணல்கள், ''காளையை தண்ணியடிக்க விட்டா என்னாகும்? படுத்து தூங்கிடுங்க..! மாட்டைப் பத்தியே தெரியாதவங்கெல்லாம் மட்டையே தூக்கியடிக்கறவங்கலாம் கையெழுத்து போட்டா இது சாத்தியமாகுமா?'' என்று இந்த நாட்டுமனிதர்களின் வார்த்தைகள் சத்தியம்.

நாட்டு மாடுகளை அழிச்சிட்டா உலகின் மிகப்பெரிய நுகர்வுப் பிரதேசமான இந்தியாவில் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பண்டங்களை விற்பதற்காக, களம் இறங்க நேரம்பார்த்துக்கொண்டிருக்கின்றன. நாட்டு மாடு இனவிருத்திக்குக் காரணமான ஜல்லிக்கட்டுக் காளைகளை முதலில் அழிக்கவேண்டும் என்பதுதான் அதன் குறிக்கோள். வேறு வார்த்தைகள் தேவையின்றி சற்றே ஒதுங்குகிறேன். இனி நீங்களே 20 பாடல்கள் அடங்கிய வீடியோக்களைப் பாருங்கள்... தமிழ் நிலப்பரப்பின் தனித்துவத்தை உணருங்கள்...

 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உத்வேகம்-அளிக்கும்-ஜல்லிக்கட்டுப்-பாடல்கள்/article9492370.ece

  • 2 weeks later...
  • Replies 158
  • Views 29.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: வறுமையிலும் நேர்மை.. உந்துதல் காந்தி

 

 
 
 
gandhiji_004_3125383f.jpg
 
 
 

காந்திஜியின் வாழ்க்கையில் இருந்து உந்துதல் பெற்று உருவான குறும்படம் இது. இல்லாமை, வறுமை ஆகியவற்றை எதிர்த்து போராடவேண்டியது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது அவற்றை நேர்மையான வழியில் எதிர்கொள்வது என்பதுதான் இக்குறும்படம் சொல்லும் செய்தி.

இந்த காலத்திற்கு சற்றும் பொருந்தாத கருத்தாயிற்றே என்ன சார் இது? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. அவசரப்படாதீர்கள். எந்த காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்கள் என்று சில இருக்கத்தான் செய்கின்றன. அது நவீன வாழ்க்கையில் உருவான நூதன மோசடிகளை விட அழகானவை. வலிமையானவை. அதிலும் குழந்தைகள் மனதில் தோன்றும் உயர்ந்த எண்ணங்கள் டொனால்ட் ட்ரம்ப் கட்ட நினைக்கும் தடுப்புச் சுவர்களையும் உடைத்தெறியும் வலிமைமிக்கவை.

பணம் பெருகப் பெருக நாம் ஒன்றும் ஒருநாளைக்கு பத்துவேளையாக சாப்பிடப் போவதில்லை. இறக்கும்போது சேர்த்துவைத்த எந்த கார்டனையும் எஸ்டேட்களையும் கூடவே எடுத்துச் சென்றுவிட போவதுமில்லை.

மத நல்லிணக்கம், மனிதநேயம், மக்கள் ஒற்றுமை என்றெல்லாம் பேசிவிட்டு மறுநாளே அதற்கு உல்டாவாக நடப்பதுதான் இன்றைய நாட்டு நடப்பு என்பது சிறிய விபத்துதான். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக நடந்துகொள்ளும் அரசியல்வாதிகளிடத்தில் மக்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள் என்பதுதான் உலக நியதி.

ஒரு டன் அளவுக்கு போதனை செய்வதை விட ஒரு அவுன்ஸ் அளவு பின்பற்றுதலே சிறந்தது என்றார் மகாத்மா காந்திஜி. இன்றைக்கும் உலகமெல்லாம் நேசிக்கும் ஒரே தலைவராக காந்திஜி விளங்குவதற்கு அவர் சாதனைகளைவிட சோதனைகளும் வாழ்க்கையும்தான் ஒரு முக்கிய காரணம் என்பதை அவரது வரலாறு சொல்கிறது.

ஒரு சிறு சம்பவம். காந்தியும் அவருக்கு உதவியாயிருந்த மகாதேவ் தேசாயும் மற்றும் சில நண்பர்களும் கத்தியவார் எனும் ஊருக்கு அங்கு நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். தன்னோடு தொடர்வண்டியில் வந்துகொண்டிருந்த தனது உதவியாளரிடம் இன்னும் எத்தனை டிக்கட்டுகள் கைவசம் உள்ளது எனக் கேட்க அவர் இன்னும் நிறைய உள்ளதாகக் கூறினார். ஆனால் அதன்பிறகு மோர்பி நகரில் வண்டிநிற்க யாருமே ஏறக்காணோம். அந்த டிக்கட்கள் அப்படியே இருந்தன. ''மோர்பி நகர் நண்பர்கள் நிச்சயம் வருகிறார்களா இல்லையா என சரியாக விசாரித்துக்கொண்டு இந்த டிக்கட்களை வாங்கியிருக்கலாம் இப்படி மக்கள் பணம் வீணாகிவிட்டதே'' என காந்தி வருந்தினாராம். சிறு சம்பவம்தான். இழப்பும் சிறியதுதான். ஆனால் ''மக்கள் பணம் ஆயிற்றே'' என்று கவலைப்படும் அந்த நேர்மை எவ்வளவு பெரியது.

இந்த சின்னஞ்சிறு படத்தில் வரும் சிறுவன் உண்மை, நேர்மை என்று நடந்துகொள்வது காந்திஜியின் உந்துதலையும் தாண்டி தற்செயலானதாகவும் இருக்கலாம். ஆனால் குறும்பட இயக்குநர் அண்டாலிப் அக்தர் இப்படத்தை இயக்க காந்தி உந்துதலாயிருந்திருக்கிறார் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நாலரை நிமிட குறும்படத்தில் நல்ல செய்தியை சொல்லும் வல்லமை அக்தரின் தேர்ந்த இயக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-வறுமையிலும்-நேர்மை-உந்துதல்-காந்தி/article9509027.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: கச்சா எண்ணெய் கழிவல்ல, பேராபத்து: மீனவரின் குமுறல்

 

 
 
 
ஊரூர் குப்ப செயலாளர் சரவணன்.
ஊரூர் குப்ப செயலாளர் சரவணன்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது அனைவருக்குமே தெரியும். இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்து படலமாகப் பரவியது. இதனால் ஏராளமான மீன்கள், ஆமைகள், கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் மரணித்தன.

அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமா? இல்லை. பிளாஸ்டிக், புகை, குப்பை என இயற்கையைத் துன்புறுத்துபவர்கள் நாமாக இருக்க, கடல் அன்னையின் புதல்வர்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர்.

மீனவர்கள் கைது, வார்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் என மீனவர்கள் அடி வாங்கிக்கொண்டே இருக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் தவிர்த்து, செயற்கையாகவும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் அகற்றுதலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீனவ மக்களின் தொழில் முடங்கிக்கிடக்கிறது.

இதுகுறித்த தன் கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார் ஊரூர் குப்ப செயலாளர் சரவணன்.

'நடுக்கடலில் பிடிக்கப்படும் வஞ்சிரம் வகைகளை வறுத்து உண்டு காண்பிக்கும் மீன்வளத்துறை அமைச்சர், கடலோரத்தில் செத்து ஒதுங்கும் மீன்களுக்கு என்ன பதில் சொல்வார்?' என்று கேட்கிறார் சரவணன். அரசு கச்சா எண்ணெயை பக்கெட்டுகளில் அள்ளி அகற்றும் முறையை விடுத்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் அவர், அணுக்கழிவுகளை அரசு என்ன செய்யும் என்றும் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்.

சூழலியல் மற்றும் அமைதிக்கான புகைப்படக்காரர்கள் குழு இதனை ஆவணப்படுத்தியுள்ளது.

அவரின் விரிவான பேச்சு அடங்கிய காணொலி இணைப்பு

 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கச்சா-எண்ணெய்-கழிவல்ல-பேராபத்து-மீனவரின்-குமுறல்/article9526424.ece?homepage=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சதையை மீறி வலியைப் பேசும் பாடல் வீடியோ

 
1_3133386h.jpg
 

எங்கும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், மூன்றாம் பாலினத்தவரின் நிலை மட்டும் மாறாமலேயே இருக்கிறது.

திருநங்கைகள் குறித்த மற்றுமொரு விழிப்புணர்வுப் படமா என்று பார்த்தால்,

''நியாயக் கூண்டிலே நம்மைக் காலம் தள்ளும் விதிப்படி

இவர்கள் கைகள் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடி''

என்ற வரிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

திருநங்கைகளின் வலியும், தனிமையும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லோரின் எதிர்பார்ப்பான திருமண வாழ்வின் மீதான அவர்களின் ஏக்கத்தையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். வழியில்லாமல், விருப்பமே இல்லாமல் அவர்களின் மீதான தொழிலாகத் திணிக்கப்பட்ட இரவு நேரக் காட்சிகள் நம்மைப் பதற வைக்கின்றன.

திருநங்கைகளோடு, ஆணாய் மாறும் திருநம்பிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமும் அழகாய்ப் படைக்கப்பட்டிருக்கிறது.

தன் இயல்புப்படி வாழ நினைக்கும் திருநங்கையர்களின் நிலை என்னவானது என்பதை வலி தந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. சந்தோஷ் நாராயணனின் இசை, குறும்படத்தின் உண்மைத்தன்மையை கூட்டுகிறது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் இதயம் சுடுகின்றன.

''அவர்கள் பாலை அவர்கள் சொல்ல

சர்க்கரை மட்டும் கலப்போம்

நாம் மனிதரே!''

உண்மைதானே?

காணொலியைக் காணுங்கள், கொஞ்சம் மனம் திறங்கள்:

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சதையை-மீறி-வலியைப்-பேசும்-பாடல்-வீடியோ/article9544784.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பழியிலிருந்து மீளத் துடிக்கும் சமூகத்தின் கதை

 

 
kalavu_kurumbadam_3136431h.jpg
 

'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வாசகம் இந்தியாவை உலகுக்கு புரியவைக்கும் தாரக மந்திரம். அது நம் இதயங்களாலும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதுதான் பிரச்சினை.

'களவு' குறும்படம் அதை ஒரு கோரிக்கையாகக் கூட வைக்கவில்லை. புரிதலுக்குத் தேவையான ஆழத்தை எளிதான காட்சிகளில் முன்வைத்துவிடுகிறது.

கணேசலிங்கம் ஷெண்பகம், சிவா, ரித்திஷ், நித்திஷ், சீனு, அபி ஆகியோரின் நடிப்பில் சுஜித் நா சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில், சுந்தர் சிவராமகிருஷ்ணனின் இசையில், ஆனந்த், ப்ரேம், ஆன்டனி அல்கந்தர், திங்க் ப்யூச்சர் ஸ்டூடியோஸ் உள்ளிட்டோர் பங்களிப்பில் இச் சின்னஞ்சிறு குறும்படத்தை உயரத்திற்கு கொண்டுசென்றுவிட்டார்கள்.

இதில் கூர்ந்து நோக்கும்போது பிடிபடும் விஷயங்கள் பெரிய விவாதத்துக்கு நம்மை அழைக்கின்றன. பல மதங்களின் கலவை, நான்கு பேர் கூடியுள்ள சமூகம்!

எல்லாம் சரி, ''இவன்தான் திருடியிருப்பான்'' என்று கண்ணைமூடிக்கொண்டு ஒருவர் மீது பழிபோடும் எண்ணம் எப்படி வருகிறது. நம் சமுகத்திலிருந்துதானே அது வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

தனித்த அடையாளங்களால் உருவாகும் சிக்கல்களுக்கு என்ன தீர்வு? அதன் வலிகள் வார்த்தைகளுக்குள் அடங்காது.

இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி ஒன்றேமுக்கால் நிமிடங்களில் நம் நெஞ்சை தைத்த கதையை நீங்களும் பாருங்களேன்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பழியிலிருந்து-மீளத்-துடிக்கும்-சமூகத்தின்-கதை/article9555031.ece

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

++

டிஸ்கி :

ராயல் சல்யூட் ரூ "மே 17" ...!!

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

++

டிஸ்கி :

ராயல் சல்யூட் ரூ "மே 17" ...!!

 

மிகவும் ஆழமான நேர்த்தியான பேச்சு.
திருமுருகன் காந்தி உங்கள், சமூக சேவை மென்மேலும் வீரியமாக எல்லாம் வல்ல இறைவன் துணை.

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: லட்சுமிகளின் எதிர்பார்ப்பு

 
1_3141290f.jpg
 
 
 

ஒரு பெண் எதை எதிர்பார்க்கிறாள்? பகட்டான ஆடையா, நகைகளா, வீடா, காரா, பணமா...? இவை எதையும் அல்ல. அன்புக்குரியவர்களிடம் இருந்து ஓர் அங்கீகாரத்தை, சின்ன தலையசைப்பை, புன்னகையை, செவிமடுத்தலை. இதைத்தான் இந்த குறும்படமும் சொல்கிறது.

லட்சுமி ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவி. இரு குழந்தைகளுக்குத் தாய். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், அச்சகம் ஒன்றில் அல்லாடுகிறான் கணவன்.

அவள் அணிந்திருக்கும் ஒரே நகை கம்மல்தான். அதிலும் கல் விழுந்திருக்க மாற்றித்தரச் சொல்லி கணவனிடம் கேட்கிறாள். அலுவல் பிரச்சனைகளுக்கிடையில் கணவன் கண்டுகொள்ளாமல் செல்ல, அச்சகத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. என்ன அது?

பின்னணி இசை எதுவும் கோர்க்கப்படாத சில இடங்கள், இயல்பான சத்தங்களால் கவனம் ஈர்க்கின்றன. பெண்ணின் மகத்துவம் பேசும் பாடல் வரிகள் குறும்படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவதைவிட அதை உணர்ந்த மனதுதான் பெரியது. பெண் எல்லாவற்றிலும், சிறந்தவைக்கு உரியவள். இதை உரியவர் உணர்ந்தால் போதும்; உலகம் மலரும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-லட்சுமிகளின்-எதிர்பார்ப்பு/article9575639.ece

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசை பாதுகாக்கும் தீர்மானங்களை தொடர்ந்து கொண்டுவரும் மேற்குலகம், துணை செய்யும் இந்தியா, இலங்கையை பாதுகாக்கும் சீனா-ரசியா-பாகிஸ்தான் என உலகின் வலுவான நாடுகள் ஓர் அணியில் நின்று இனப்படுகொலையை மறைக்க முயலுகின்றன.
146,679 தமிழர்கள் படுகொலைக்கான நீதியை நாம் வென்றாக வேண்டும்.
இந்த நீதியை நாம் பெற இயலாமல் போவோமெனில் , தமிழருக்கு எதிராக அநீதியை நிகழ்த்தும் துணிவை நம் எதிரிகள் பெற்றுவிடுவார்கள். கொலைகாரர்களை துணிந்து எதிர்த்திட களம் காணாவிட்டால் தமிழீழ தமிழரும், தமிழக தமிழரும் தொடர்ந்து இன்னல்களை சந்திக்க நேரிடும்.
பச்சைப்படுகொலைகளை ஈழத்தில் நிகழ்த்திய இலங்கையும், இந்தியாவும் தொடர்ந்து தமிழர்களுக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. இந்த கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வலிமை நமக்குண்டு. அப்படியாக இந்த கிரிமினல் கும்பல்களை தண்டிக்காமல் நமக்குள்ளாக பிளவுண்டு வலுவிழந்து நிற்பதே இந்த பொறுக்கி அரசுகள் நம்மை சுடுவதும், கொல்லுவதும், சித்திரவதை செய்வதும், தண்ணீர் உரிமையை மறுப்பதுமாக அயோக்கியத்தனம் செய்கின்றன.
இந்த கொலைகார கூட்டணிக்கு எதிராக ஒன்று திரள்வோம். நாம் ஒரு சர்வதேச இனம் என்பதையும், நாம் இந்த கும்பல்களை விட வலுவானவர்கள் என்பதையும் பதிவு செய்வோம்.
வர இருக்கும் அயோக்கிய தீர்மானங்களை அம்பலப்படுத்தி, எதிர்ப்பினை பதிவு செய்யும் போராட்டங்களை துவக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'அவள்'- இம்முறை உன் குரல் ஒலிக்கட்டும்!

 

 
ss1_3146223f.jpg
 
 
 

அரசு அலுவலகம் போலத் தென்படுகிறது அந்தச் சூழல். ஊழியர்கள் அங்குமிங்கும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் அங்குமிங்கும் நடக்க, அந்த இடமே சந்தைக்கடை போலக் காட்சியளிக்கிறது.

மேலாளர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர், யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார். வேறு மாதிரியான பழக்கவழக்கங்கள் (பாலியல் ரீதியில்) தொடர்பான உரையாடல் என்று தெரியவருகிறது. இடையில் தனக்கு 10 வயதில் மகள் இருப்பதையும் குறிப்பிடுகிறார். பின்னர் அவரின் கவனம் அங்கு பணிபுரியும் இளம்பெண் மீனாட்சி மேல் படுகிறது.

பியூனை அழைத்து, ''நம் மடோனாவைக் கூப்பிடு!'' என்றும் கூறுகிறார். வந்துநிற்பவரிடம் அவர் கேட்கும் கேள்விகள் 'ஏ'க ரகமாய் இருக்கின்றன. கவனமாய் அலுவல் சம்பந்தமாய் மட்டும் பேசுகிறார் மீனாட்சி. அதைக் கண்டுகொள்ளாதவரின் கண்கள் வேறெங்கோ மேய்கின்றன. என்ன செய்தார் மீனாட்சி?

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதுகுறித்த புள்ளிவிவரங்கள் நம்மை அதிரவைக்கின்றன. அலுவலகத்தில், பேருந்தில், கடையில், திரையரங்கில், கூட்டத்தில், ஏன் வீட்டிலே கூட அத்துமீறல் தொடர்கிறது. இதற்கெல்லாம் என்னதான் வழி? கதையின் நாயகி மீனாட்சியைப் பாருங்கள்.

அவரைப் போலவே உங்களின் குரலையும் உயர்த்துங்கள். அப்போதும், மீனாட்சி வெறுமனே நடிக்காதே என்று அவர் பசப்பியது போல நடக்கக்கூடும். கவலை கொள்ளாதீர்கள், தடுக்கச் செல்ல முயன்றவரைத் தடுத்து நிறுத்தும் பெண் போல ஒருவர் துணைக்கு வருவார்.

இந்த முறை எழுவது உங்களின் சுயமரியாதையாக இருக்கட்டும்!

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அவள்-இம்முறை-உன்-குரல்-ஒலிக்கட்டும்/article9596073.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தூய்மைக்கேட்டை விரட்டச் சொல்லும் 'அடையாளம்' குறும்படம்

 

 
 
adaiyalam_3146207f.jpg
 
 
 

நாம் வாழும் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்... நமது சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கவேண்டும். இதனால் நமது குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்கிறது மூன்றரை நிமிடக் குறும்படமான 'அடையாளம்'.

நமக்கு வரும் பெரும்பாலான நோய்கள் நம்மைச்சுற்றியுள்ள சுகாதாரக் கேடுகளால்தான் உருவாகிறது. கிராமங்களில் கழிப்பறை உபயோகிக்கும் விழிப்புணர்வற்ற நிலை ஒருவகை சுகாதாரக் கேடு என்றால் நகரங்களில் கண்ட இடத்தில் கழிவுப்பொருள்களை கொட்டுவதும் நகரப்பெருக்கத்தினால் கழிவுநீர் செல்ல உரிய கால்வாய்கள் அமைக்காததும் பெரும் சுகாதாரக்கேட்டை உருவாக்கி வருகின்றன.

இக்குறும்படத்தில் முக்கியமானதாக நாம் உணர்வது குழந்தைகள் சக குழந்தைகளிடம் அவமானப்படுவது. குழந்தைகள் எல்லாம் கூடி விளையாடும்போதுகூட பேதங்கள் சுற்றுத்தூய்மைப் பற்றியதாகவே இருக்கிறது... ''டேய் பால் டாய்லெட்ல விழுந்துடிச்சிடா இதுக்குத்தான்டா உங்க தெருவுக்கெல்லாம் விளையாட வர்றதில்லை.''

இதுமட்டுமில்லை. ''இங்கே பெயிண்டர் செல்வராஜ் வீடு எங்கிருக்குதுங்க...?'' ''இப்படியே ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா பெரிய சாக்கடை வரும்... அதுல ரைட் திரும்புனா பெரிய குப்பமேடு இருக்குது.. அதுக்கு பக்கத்துலதான் அவரு வீடு....'' ''தாத்தா இந்த பசங்க வீடெல்லாம் குப்பமேட்லதான் இருக்கு... இவங்களுக்குத் தெரியும் கூப்பிட்டுப் போங்க தாத்தா....'' என முகவரிசுட்டிக் காட்டுவதும்கூட தூய்மைக்கேட்டை குத்திக்காட்டும் அடையாளமாக அமைந்துவிடுவதை போகிறபோக்கில் கூர்மையான வசனங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் இதெல்லாம் அரசாங்கத்தின் பணிகள் அல்லவா? கழிப்பறை வசதிகூட இல்லாத குழந்தைகளுடன் விளையாட வருவதற்கே சலித்துக்கொள்ளும் நிலையில் மக்களை அப்படியே வைத்திருப்பதில் யாருடைய பங்கு அதிகம் போன்ற கேள்விகள் எழுவதை தடுக்கமுடியவில்லை.

தெருக்குழந்தைகளாகவும் பகுதி மக்களாகவும் வருபவர்கள் இயல்பாக நடித்துள்ளார்கள். தெளிவான ஒளிப்பதிவு, யதார்த்தமான காட்சிகள், சின்னச்சின்ன்ன ப்ரேம்களில் காட்சிப்படுத்தல்கள், கூர்மையான வசனங்கள் என இயக்குநர் எஸ்.ராஜாவின் இயக்கம் பாராட்டத்தகுந்ததாக அமைந்துள்ளது.

மக்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு குழந்தைகள் மனதில் பதிகிற விதமாக மாற்றங்களை உருவாக்கமுடியும் என மூன்றரை நிமிடத்திற்குள்ளாகவே காட்சிகளை அமைத்துள்ள விதம் எப்படி என்பதை நீங்களும் பாருங்களேன்.

நீங்கள் காண விரும்பும் மாற்றத்தை உங்களிடமிருந்து தொடங்குங்கள் என்ற காந்தியின் கூற்றுதான் இப்படத்தின் அடிநாதம்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-தூய்மைக்கேட்டை-விரட்டச்-சொல்லும்-அடையாளம்-குறும்படம்/article9595972.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி :

நியுஸ்18தமிழ்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'சாயம்'- மிச்சம் இருக்கும் விவசாயிகளுக்காக!

 

 
 
1_3149922f.jpg
 
 
 

பழைய 100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இருக்கும் விவசாயம் மறைந்து (!) புதிதாய் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் இஸ்ரோவின் மங்கள்யான் அமர்ந்திருப்பதாகத் தொடங்குகிறது குறும்படம். பார்த்துக் கொண்டிருக்கும் நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

ஒரு விவசாயி. அவரின் மகனும், மருமகளும் விவசாயக் கடனை அடைக்க முடியாமல் இறந்துபோக, தனியாய்ப் பேரனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அழுக்குகளைத் தன் பேரனிடம் பகிர்ந்து ஆறுதல் அடைவது அவரின் வழக்கமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருந்த நுண்ணரசியலும் இதில் அடக்கம். அப்போது ''நல்லது பண்ணா போலீஸ் அடிப்பாங்களா தாத்தா?'' என்னும் சிறுவனின் கேள்வி சமூகத்தை நோக்கிச் சொடுக்கும் சாட்டையடி.

'அடுத்த நாட்டை நம்பிப் பிழைப்பவனை நம்பற பொண்ணுக நம்ம நாட்டுல நாத்து நடறவங்களை நம்பறதில்லை', ,மொதல்ல கீழே என்ன நடக்குதுன்னு பாருங்க; அப்புறமா ராக்கெட்ல போயிக்கலாம்', 'பசிக்கு எவனும் பணத்த திங்கமுடியாது கண்ணு!', 'விவசாயம் பண்றது தப்பாய்யா?' என்ற வசனங்களின் கூர்மை நம் மனதைக் கிழித்தெறிகிறது.

வங்கி அதிகாரியே நிலத்தை விற்றுக் கடனை அடைக்கச் சொல்லும் அவலம் இங்குதான் நடக்கிறதா? கசப்பான உண்மை நெஞ்சில் அறைகிறது.

'கடனைக் கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை' என்பதைச் செய்தியாகக் கடந்துவிடும் நாம், என்றாவது அவர்களின் குடும்பத்தின் நிலையை எண்ணிப் பார்த்திருக்கிறோமா? மூன்று வேளை சோறு போடும் அவர்களைப் பற்றி ஒரு வேளையாவது யோசித்திருக்கிறோமா? இனியாவது யோசிப்போமா?

'ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த இளைஞர்கள், இல்லையில்லை ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டிய இளைஞர்கள் விவசாயிகளுக்கும் ஏதாவது செய்வீர்களா?'- கைகூப்பிக் கேட்கும் சிறுவனின் குரலில் ஒளிந்திருக்கும் ஏக்கமும், வழியும் கண்ணீரும் உரியவர்களைச் சென்று சேருமா?

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சாயம்-மிச்சம்-இருக்கும்-விவசாயிகளுக்காக/article9611674.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அதிரவைக்கும் பெண் சிசுக்கொலைகள்!

 

 
1_3149073f.jpg
 
 
 

மாறி வரும் சமூகத்தில் ஆணுக்கு இணையாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால் பதித்துவிட்டனர். ஆனால் இன்னும் பெண் சிசுக்கொலைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் கருச்சிதைவு செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இன்னும் ஏராளமான பெண் சிசுக்கொலைகள் மகாராஷ்டிரத்தில் நடந்துவருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 1095 பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

அங்கே பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய ஏஜெண்டுகள் உதவுகின்றனர். மருத்துவருடன் ரகசியத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஏஜெண்ட், என்ன குழந்தை என்பதைக் கண்டறியும் பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்கிறார். அவை அனைத்தும் குறியீட்டு முறைமைகளிலேயே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

மருத்துவர் 'கணபதிபாப்பாமோரியா' என்று சொன்னால் ஆண் குழந்தை, 'தேவி 'என்று கூறினால் பெண் குழந்தை. '9-வது வார்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்றால் [9 என்ற எண் g(irl) என்ற எழுத்து வடிவில் இருப்பதால்] பெண் குழந்தை. '6-வது வார்டுக்கு' என்றால் [6 - b(oy) பையன்] ஆண் குழந்தை. இதுபோன்ற இன்னும் சில சமிக்ஞைகள் நம்மை அதிர்ச்சியில் தள்ளுகின்றன.

இவை அனைத்தையும் உள்ளடக்கியுள்ள குறும்படம் உங்கள் பார்வைக்கு...

யாருக்கும் தெரியாமல் என்ன குழந்தை என்று பரிசோதனை செய்ய, ஏஜெண்டுகளுக்கு அளிக்க, அபார்ஷன் தொகை என ஒரு பெண் குழந்தையைக் கொல்ல செலவழிக்கும் தொகையையும், அதை மறைக்க எடுக்கும் முயற்சிகளையும் அவளைப் போற்றி வளர்க்கச் செய்யலாம் அல்லவா?

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அதிரவைக்கும்-பெண்-சிசுக்கொலைகள்/article9607741.ece

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: இறப்பில் சிரிப்பு - கண்ணீர் தருணம்!

 

 
1_3151972f.jpg
 
 
 

சிரிக்க வைப்பது என்பது மாபெரும் கலை. அதிலும் துன்பத்தில் இருந்துகொண்டு மற்றவர்களை மகிழ்விப்பது என்பது ஆகப்பெரும் சாதனை. அதை அத்தனை அழகாய் நிகழ்த்தி இருக்கின்றனர் வாழ்க்கையின் கடைசி நாட்களில் இருக்கும் சிலர்.

முதுமையையும், நோயையும் ஒரு சேரக்கொண்டிருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஆனால் இவர்கள் அப்படி இல்லை.

தனது காமெடிகளுக்குச் சிரிக்காமல் சோகத்துடன் உற்றுப் பார்க்கும் பார்வையாளரைப் பார்த்துக் கேட்கிறார் அவர். ''ஏன் சிரிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு இருமல் கூட இல்லையே, என்னைப் பாருங்கள், நுரையீரல் புற்றுநோயுடன் சிரித்துக் கொண்டிருக்கிறேன்''.

வாழ்க்கைப் பயணத்தின் இறுதி நாட்களில் இருப்பவர்களுக்காகவும், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியவர்களுக்காகவும் வார்க்கப்பட்ட ஒரு குறும்படம் இதோ உங்களுக்காக.

சமூகத்தில் அதிகம் பேசப்படாதவைகளில் மரணமும் ஒன்றாக இருக்கிறது. இளமையில் அதைப் பற்றி யோசிப்பதில்லை என்பதால் பேசுவதில்லை. வயோதிகத்தில், இறப்பின் மீதுள்ள பயத்தால் அதைப்பற்றிப் பேசுவதில்லை.

தங்களது இறுதி நாட்களில் இருக்கும் மனிதர்களுக்கு, நாட்டின் தலைசிறந்த காமெடி பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வலிநிவாரண பராமரிப்பு சங்கம் (Indian Association of Palliative Care) இந்த நிகழ்ச்சியைத் திட்டமிட்டு, முன்னெடுத்து நடத்தியுள்ளது.

என்னைப் போன்ற பலருக்கு சிரிப்பு நிகழ்ச்சியைப் பார்த்து முதல் முறையாக அழுதது இதைப் பார்த்த பிறகாய் இருக்கும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-இறப்பில்-சிரிப்பு-கண்ணீர்-தருணம்/article9622861.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: உங்கள் குழந்தைகளிடம் இது பற்றி சொல்லி இருக்கிறீர்களா?

 
nivin1_3158180f.jpg
 
 
 

செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பாலியல் வன்கொடுமை செய்தி அதுவும் சிறார் மீதான பாலியல் வன்கொடுமை செய்தி இடம்பெறாத நாளே இல்லையென்று கூறும் அளவுக்கு அந்த வக்கிரம் நம் சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.

அதன் விளைவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதுபோல் சமூக அவலங்களில் இருந்தும் நம்மை காக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் தந்துள்ளது.

முக்கியமாக நம் பிள்ளைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா என்ற சந்தேகம் நம் ஒவ்வொருவருக்கும் எழுகிறது. அதுவும் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களிடம் இந்தத் தவிப்பு அதிகப்படியாகவே இருக்கிறது.

எனவே, நம் பிள்ளைகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது நமது கடமை. அதைத்தான் இந்த வீடியோ பதிவில் சொல்லியிருக்கிறார்கள்.

கேரளாவின் நட்சத்திர நடிகரான நிவின் பாலி, குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பதை சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் ஒவ்வொரு குழந்தையும் தன்னை பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள சில ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார்.

'நோ' சொல்லுங்கள், அந்த இடத்திலிருது ஓடுங்கள், நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் சொல்லுங்கள்... (NO..GO.. TELL..) இவையே அவர் முன்வைக்கும் மூன்று ஆலோசனைகள்.

இந்த வீடியோவைப் பாருங்கள்..

 

இதில் சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைகள் ஏற்புடையதே. ஆனால், துள்ளித்திரிந்து விளையாட வேண்டிய குழந்தைகளுக்கு பாலியல் ஆபத்துகள் அதிகரிக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பது எவ்வளவு வேதனையான உண்மை.

இந்த வீடியோவில் ஆண் பிள்ளைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் பரவலாக தெரிந்தது பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர் என்பது. ஆனால், அதற்கு நிகராகவே ஆண் குழந்தைகளும் அத்துமீறல்களுக்கு ஆளாகின்றனர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உங்கள்-குழந்தைகளிடம்-இது-பற்றி-சொல்லி-இருக்கிறீர்களா/article9663169.ece

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: கேழ்வரகில் தயாரிக்கப்படும் பெங்களூரு பீர்!

 

 
TH23BEER_3158849f.jpg
 
 
 

பெங்களூருவில் இயற்கை முறையில் விளைந்த கேழ்வரகைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அங்கு கேழ்வரகைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுகிறது. இதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பெங்களூரு பீர் சங்க தலைமை பணியாளர் ரோஹித்.

''70% கேழ்வரகு மற்றும் 30% பார்லி கொண்டு இந்த பீர் உருவாக்கப்படுகிறது. இனிப்புக்காக வெல்லத்தையும் இதில் சேர்க்கிறோம்'' என்கிறார்.

கேழ்வரகு மற்றும் இதர தானியங்கள் கொண்டு பீர் தயாரிக்கப்படுவது முதல்முறையல்ல. பண்டைய காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளிலும், நேபாள் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் இந்த முறை வழக்கத்தில் இருந்தது.

பொதுவாகவே வெளிநாட்டு பானமான பீரில், இந்தியச் சுவையைப் புகுத்த பழங்கள், காய்கறிகள், நறுமணப் பொருட்களைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்த சுவாரஸ்யமான தொகுப்பைக் காண:

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கேழ்வரகில்-தயாரிக்கப்படும்-பெங்களூரு-பீர்/article9667736.ece

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரேசன் கார்டு WTO சிக்கல் : தோழர் திருமுருகன் உரை ..

nam.jpg

 

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: '13+' குறும்படம்- அவர்களுக்காக மட்டும்தானா?

 

 
s_3161629f.jpg
 
 
 

பெண்கள் மீதான வன்முறை எப்போது தொடங்கப்பட்டிருக்கும்? எந்த ஆண் மகனால்(!) ஆரம்பிக்கப்பட்டிருக்கும்? யாருக்கும் பதில் தெரியாது.

பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறையும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் எல்லா விதமான அடுக்குகளுக்கும் இதே நிலைதான்.

உயர் தட்டு, மத்தியதரம், ஏழ்மை நிலை என மூன்று நிலைகளில் உள்ள பெண்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாகத் துன்புறுத்தல்களை வெவ்வேறு வழிகளில் எதிர்கொள்கிறார்கள். மார்பகங்களை எப்படி நீக்குவது என்று துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஒருவர் கூகுளில் தேடுகிறார்.

உச்சகட்டமாக மன அழுத்தம் தாங்காமல், ஒரு பெண் தற்கொலை முடிவுக்கே செல்கிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது? காணுங்கள் இந்தக் காணொலியை.

வசனங்களே இல்லாமல் காட்சிகளின் வழியாக வலியைக் கடத்தி இருக்கிறார் இயக்குநர் மோகன். நடந்ததை குடும்பத்தில் சொல்லத் தயங்கி, தனக்குள்ளே உழன்று, குற்றவாளியை சுதந்திரமாக உலவ அனுமதிக்கக் கூடாது; உற்ற துணை இருந்தால் எந்த துன்பமும் தீரும் என்று சொல்லாமல் சொல்கிறது '13+'.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-13-குறும்படம்-அவர்களுக்காக-மட்டும்தானா/article9684002.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: வெள்ளித்திரை தேடலை ஒரே ஷாட்டில் முன்வைக்கும் 'டேக் ஒன் ஷாட் ஒன்' குறும்படம்

 

 
one_take_one_shot_3165613f.jpg
 
 
 

எந்தத் துறையிலும் முயற்சி என்ற சொல்லுக்கு மிகப்பெரிய அர்த்ததங்கள் உண்டு. அதிலும் திரைத்துறையில் அதற்கான அர்த்தமே வேறு. அதை தெளிவாக வரையறுத்துவிடவும் முடியாது. முயற்சியா? உழைப்பா? முயற்சிக்கான உழைப்பா? முயற்சிக்கான உழைப்போடு ஒவ்வொரு சினிமா கம்பெனியாக படியேறுவதற்குத் தேவையான அலுப்பே இல்லாத ஆர்வமா? ஆர்வம் இருந்தும் தகுந்த அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் பொறுமையா? தனது திறமை ஒருநாள் நிச்சயம் இந்த உலகம் புரிந்துகொள்ளும் என்று இலவு காத்த கிளியாக வெட்டுவெட்டு என்று வாழ்க்கை கிளைகளின் மேல் அமர்ந்து காத்துக்கொண்டிருப்பதா? என்று முடிந்தமுடிவாக இதுதான் என்று வரையறுத்துவிட முடியாது.

கலை மூவிஸ்க்காக 'டேக் ஒன் ஷாட் ஒன்' என்ற இந்த ஆறரை நிமிடக் குறும்படம் இந்தமாதிரி ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது. அதேநேரத்தில் தெளிவாக சொல்லிவிடுகிறது. பொட்டென்று நெற்றியில் அடித்ததுபோலவும் சொல்லும் இயக்குநர் இறைநகர் ஆதியின் முயற்சியும் நமக்குப் புரிகிறது.

இப்படத்தில் நடித்திருக்கும் ஆதேஷ்பாலாவே இக்குறும்படத்தை தயாரித்துள்ளார். திரைத்துறையில் இயங்கிவரும் தனது மதிப்புக்குரியவர்களின் வாழ்த்தையும் திரைத்துறையில் தனக்கு முன் பணியாற்றிய தந்தையையும் பணியாற்றிவரும் தாயையும் மூன்றரை நிமிடங்களில் நினைவுகூர்கிறார். அந்த மூன்றுநிமிடங்களோடு சேர்த்து தனது தயாரிப்பில் உருவான 'டேக் ஒன் ஷாட் ஒன்' குறும்படத்தையும் இணைத்து 10 நிமிட படமாக பதிவேற்றியுள்ளார்.

திரைத்துறையினரின் வாழ்த்துக்களையும் தாய்தந்தையருக்கான வணக்கத்தையும் கடந்துபோக மூன்றரை நிமிடம் ஆகும். ஆனால் இச்சின்னஞ்சிறு குறும்படத்திற்கே பெரியவர்களை நினைவுகூர இவ்வளவு மெனக்கெட்டிருக்கும் ஆதேஷ்பாலாவின் ஆர்வத்தை என்னனவென்று சொல்வது? ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அவரது ஆறரை நிமிடக் குறும்படமே அவரின் ஆர்வம் எத்தகையது என்பதை நிரூபித்துவிடுகிறது.

ஒரு இளைஞர் ஒரு இயக்குநரின் அலுவலகத்திற்குள் நுழைகிறார். சினிமா வாய்ப்பு கேட்டுத்தான்! இத்தனைக்கும் அவர் வழியிலேயே தடுக்கப்படுகிறார். ஆனால் அதை உடைத்துக்கொண்டுதான் அந்த இளைஞர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைகிறார். ஒருவேளை இதுதான் இயக்குநர் சொல்ல விரும்பும் முயற்சிக்கான இலக்கணமோ?

இந்த சிம்பாலிக்கான சிங்கிள் ஷாட்டில் மேலும் வியக்கத்தக்க விஷயங்களையும் சிறந்த ஒரு காட்சியின் வழியே உணர்த்திவிடுகிறார் இயக்குநர் இறைநகர் ஆதி.

வாய்ப்பு தேடும் இளைஞராக தயாரிப்பாளர் ஆதேஷ்பாலா வந்து உணர்ச்சிமிக்க நடிப்பினால் நம் புருவங்களை உயர்த்தவைக்கிறார்.

அது எப்படி என்று நீங்களும் பாருங்களேன்......

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-வெள்ளித்திரை-தேடலை-ஒரே-ஷாட்டில்-முன்வைக்கும்-டேக்-ஒன்-ஷாட்-ஒன்-குறும்படம்/article9706710.ece?ref=relatedNews

 

 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தாயின் தாலாட்டு- உறங்கவைக்கும் உன்னதப் பாடல்!

 
Collage_3169686f.jpg
 
 
 

தாய், அவளைப் பற்றிய அறிமுகம் தேவையா, அவளின் அன்பைச் சொன்னால்தான் புரியுமா என்ன? ஆரிரோ என்று தாயிடம் தாலாட்டு கேட்டு வளர்ந்த நமக்கு, தாலேலோ, தந்தனத் தாலேலோ என்னும் வார்த்தைகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.

சாமரம் வீசுவேன்

சந்தனப் பூவாலோ...

மென்மலரே மின்மினியே

என்விழியின் செஞ்சுடரே...

என நீளும் பாடல் வரிகள் அனைத்திலும் தமிழ் விளையாடிச் செல்கிறது.

நடிக்காமல் வாழ்ந்திருக்கும் குழந்தையின் ஆடும் நாசியும், பொக்கை வாயும், பேசும் கண்களும் காணொலியை அதிகம் உயிர்ப்பானதாய் மாற்றியிருக்கின்றன.

உறுத்தாத மெல்லிசையோடு, பாடும் குரலினூடே இழையோடும் காந்தம் கேட்கும் நம்மையும் உறக்கத்துக்கு அழைத்துச் செல்கிறது. கேட்கக் கேட்கப் பிடிக்கும் தாலாட்டுப் பாடம் இது!

காணொலியைக் கேட்கவும், காணவும்...

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-தாயின்-தாலாட்டு-உறங்கவைக்கும்-உன்னதப்-பாடல்/article9715839.ece

  • கருத்துக்கள உறவுகள்

குண்டர்களின் மீதுதான் குண்டாஸ் பாய்கிறதா ?

 

 

நன்றி : சத்தியம் ரீவி

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: உயிரின் விதியை எழுதிச் செல்லும் சாலை விதிகளுக்கான கானா பாடல்

 

 

 
kanabala_002_3174996f.jpg
 
 
 

வீட்டைவிட்டுப் புறப்படும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. சாலை விதிகளைப் பற்றி கவலைப்படாமல் அதிவேகத்தில் பறப்பவர்களால்தான் இந்த நிலைமை என்றில்லை. அவசரம் அவசியம் என்று நியாயம் கற்பித்துக்கொண்டு, ஒருவேளை காரணம் சரியாகவே இருந்தாலும் விதிகளுக்குப் புறம்பாக எந்த வழியிலும் படுவேகமாக செல்பவர்களாலும்தான் இந்த நிலை.

நகர சாலைகளில் நாம் எவ்வளவுதான் சரியாக வண்டி ஓட்டிச் சென்றாலும் நம்மை மோதிவிட்டுச் செல்வதுபோல வந்து லாவகமாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டு செல்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். தாறுமாறாக வந்து மோதுபவர்களும் அவர்களைப் போன்றவர்கள்தான். இத்தகையவர்கள்தான் சாலை விபத்துகள் சகட்டுமேனிக்கு நடக்கக் காரணமானவர்கள்.

இனி அந்த பயம் தேவையில்லை என்று நம்பிக்கை இனிப்பைத் தந்திருக்கிறார்கள் சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர். சென்னையில் வாகன விபத்துகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்கள் அவர்கள்.

விபத்துகளை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ளார். இப்பாடலை கானாபாலா பாடியிருக்கிறார். மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமான கருத்துக்களை பளிச் பளிச் தெறித்துள்ளார். பெரும்பாலும் இளைஞர்களை முன்னிறுத்திதான் அவர் பாடலின் கருத்துகளைப் பாடிச் செல்கிறார்.

சாலையில் நம் கண்ணெதிரே நடக்கும் பல்வேறு விபத்துகளும் பாடலின் ஊடே காட்டப்பட்டுள்ளது. அவற்றைக் காணும்போதே நெஞ்சம் பதறுகிறது. பாடல் காட்சிகளுக்கே இப்படி என்றால் அதில் நாமும் ஒருவராக நினைத்தே பார்க்கமுடியவில்லை.

இந்த வீடியோ பாடலை உருவாக்கிய குழுவினரான நிரஞ்சன் ஜேவிஜே, சுந்தர், வசந்த் இஎஸ், பார்த்திபன் உள்ளிட்ட இசை மற்றும் படபிடிப்பு செய்துகொடுத்த வீடியோ குழுவினரின் திறமை, மக்களுக்கு பயன்படும் விதமாக அமைந்ததோடு உயிரின் விதியை எழுதிச் செல்லும் சாலை விதிகளுக்கான கானா பாடலாகவும் அமைந்துவிட்டது.

''இஎம்ஐயில வண்டி வாங்கி எமனை வம்புக்கு இழுக்காதே. ஹெல்மெட்டை வீட்டுல வச்சுட்டு வந்து போலீஸ்கிட்ட மாட்டாதே. டிராபிக் ரூல்ஸை பாலோ பண்ணு. மீறிப் போனா ஆறடி மண்ணு....''என்று கானா பாலாவுக்கே உண்டான அந்த சென்னை மொழி கானாக் குரல் நம்மை உலுக்கி நிமிர வைக்கிறது.

யாரோ சிநேகமாக நம் தோளை வருடிச் சொல்வதுபோலவும் உள்ளது இப்பாடல். அப்புறமென்ன பாட்டு பட்டையக் கிளப்பட்டும். ''நான் ஒழுங்காக சாலை விதிகளை மதிப்பேன்'' என புறப்படும்போதே சிந்தித்து முடிவெடுத்துவிட்டு நாமும் வண்டியைக் கிளப்புவோம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உயிரின்-விதியை-எழுதிச்-செல்லும்-சாலை-விதிகளுக்கான-கானா-பாடல்/article9726969.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.