Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளங்கோவனுக்கு... நாக்கிலை சனி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EVKS Elangovan Should seek an apology for abusive speech

முறையற்ற பேச்சுக்கு ஒரு மன்னிப்பு கேட்பது பெரியார் பேரனுக்கு இழுக்கல்ல!
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் ஜெயலலிதா வும் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியது பற்றி, இளங்கோவன் சொல்லிய கருத்து இன்று வில்லங்கமாகியிருக்கிறது. மோடி - ஜெயலலிதா சந்திப்பு பற்றி முதலில் இது கள்ள உறவு, அதாவது அரசியல் கள்ள உறவு என்று இளங்கோவன் பேசினார். பின்னர் சென்னையில் நடைபெற்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய இளங்கோவன்

மோடி - ஜெ சந்திப்பு பற்றி சிரித்துக் கொண்டே, "எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை.. அதனால தப்பா நினைக்காதீங்க," என்று சொன்னது மகா ஆபாசமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. இது இன்னமும் யூ டியூப்பில் உள்ளது. இந்தப் பேச்சுக்கு மூன்று நாட்கள் கழித்து திடீரென்று அஇஅதிமுக போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.

இளங்கோவனின் பேச்சு ஆபாசமானது. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த பேச்சு ஏதோ ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு என்று கண்டிப்பதைத் தாண்டி, இதில் இருக்கும் ஆணாதிக்கச் செருக்கும், திமிரும்தான் அதிகப்படியான கண்டனத்திற்குரியவை. கிட்டத்தட்ட 44 சதவிகித வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், செல்வாக்குமிக்க முதலமைச்சர் என்பதால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இதனைத் தாண்டி இவ்விஷயத்தைப் பார்க்க வேண்டும்.

எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், அது நியாயமான, கொள்கை ரீதியான விமர்சனங்களாக இருந்தாலும், அறவே அவற்றை ஒழித்துக் கட்டும், சகிப்புத் தன்மை கிஞ்சித்தும் இல்லாத ஒரு சர்வ வல்லமை பொருந்திய தலைவரே, பெண் என்ற காரணத்தால் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றால், பொது வாழ்வில் உள்ள மற்ற பெண்களின் நிலைப்பற்றி யோசித்துப் பாருங்கள்!

EVKS Elangovan Should seek an apology for abusive speech

மோடி - ஜெ சந்திப்பு பற்றிய இளங்கோவனின் கருத்தின் அடிநாதம் அதில் இருக்கும் ஆணாதிக்க புத்தியும், பெண்களுக்கு எதிரான மன நிலையும்தான். பொது வாழ்வில் இருக்கும், அவர் எவ்வளவுதான் செல்வாக்குடன் இருந்தாலும், ஒரு பெண் எதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதென்பதற்கு இதுவே சரியான உதாரணம்.

ஆனால் இந்த தரம்தாழ்ந்த விமர்சனங்கள் ஏதோ இளங்கோவனால்தான் தமிழக அரசியலில் அறிமுகமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி பேசிய பேச்சுக்கள் அக்மார்க் அவதூறு பேச்சுக்கள்.

2004 ல் சோனியா காந்தி பிரதமராக வாய்ப்பிருந்தபோது, அப்படி அவர் பிரதமரானால், தான் தன்னுடைய தலைமுடியை முற்றிலுமாக மழித்துக் கொள்ளுவேன் என்று நயத்தகு நாகரிகத்தில் பேசியவர்தான் தற்போதய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். எத்தனை கேவலமான மனநிலை!

இன்றும் பாஜக எம் பி க்களும், சங் பரிவார தலைவர்களும், சோனியா காந்தியையும், ஹிந்துத்துவாவை எதிர்ப்பவர்களையும் கண்டித்து வைக்கும் விமர்சனங்கள் அநாகரீகத்தின் உச்சம். தமிழகத்தில் பாஜக தலைவர் ஹெச் ராஜா, தந்தை பெரியார் பற்றி பேசிய பேச்சு இன்னமும் அப்படியேதான் யூ டியூப்பில் உள்ளது. இது ஆபாசமா, கண்ணியமா என்பதை தமிழிசை சவுந்தர்ராஜன்தான் விளக்க வேண்டும்!

திமுக, அஇஅதிமுக வின் ஆபாச பேச்சு பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு விதத்தில் இதன் மூல வேர் அண்ணாவிடம் இருந்துதான் தொடங்குகிறது. பிரதமர் நேருவும், இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் சந்தித்துப் பேசியபோது, ‘தம்பி, பண்டிதரோ (நேரு) மனைவியை இழந்தவர், பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும் சந்திக்கிறார்களாம், தனியாக அறையில் ஒரு மணி நேரம் பேசுகிறார்களாம். என்ன பேசியிருப்பார்கள், என்ன செய்திருப்பார்கள் தம்பி' என்ற அண்ணாவின் பேச்சு பிரசித்திப் பெற்றது. இதே போல அன்றைய ஒரு முன்னணி தமிழ் சினிமா நடிகையைப் பற்றி பொதுவெளியில் பேச்சு வந்த போது அண்ணா சொன்னது, ‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனுமல்ல, அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியுமல்ல!'.

திமுகவிலிருந்து அஇஅதிமுக பிரிந்த போது எம்ஜிஆரை, திமுக தலைவர் மு.கருணாநிதி விமர்சித்தவையும், அதற்கான அஇஅதிமுகவின் எதிர்வினையும் ஆபாசத்தில் யாரை யார் மிஞ்சுவதென்ற போட்டியாகவே நிகழ்ந்தன. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்' என்பதுதான். 13 ஆண்டுகாலம் எம்ஜிஆர் இருந்த வரையில் முரசொலியில் அனேகமாக தினமும், அஇஅதிமுக வை நடிகர் கட்சி என்றுதான் பிரசுரிப்பார்கள். ஆனால் அந்த அவதூறுகள் திமுக மீது மக்களிடம் இன்னும் மோசமான வெறுப்பலையைத்தான் உண்டாக்கின. எம்ஜிஆர் புகழை மேலும் மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றன.

1989 ல் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ‘ராஜீவ் காந்தியின் சினேகிதி ஜெயலலிதா' என்றுதான் குறிப்பிடுவார். திமுக அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி ஜெயலலிதா கேட்டுக் கொண்டே இருந்த காலகட்டம் அது.

இதில் அஇஅதிமுக ஏதோ சுத்த சுயம்பு என்று நான் சொல்ல வரவில்லை. தங்கள் பங்குக்கு அஇஅதிமுக வும் தமிழக அரசியலில் ஆபாச பேச்சுக்களை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இன்றல்ல, கடந்த 24 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் யார் திமுகவையும், கருணாநிதியையும் அதிகமாக ஆபாசமாக பேசுகிறார்களோ அவர்கள் அமைச்சர்களாவது அம்மா ஆட்சிக் காலத்தில் எழுதப்படாத தகுதி. 1993 ஏப்ரல் 21ம் தேதி அப்போதைய அஇஅதிமுக எம்எல்ஏ தென்னவன், ‘கூட்டிக் கொடுத்து சிலர் அரசியலில் ஆதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார். இந்தப் பேச்சைக் கண்டித்து அன்றைய தினம் காங்கிரசின் 60 எம்எல்ஏ க்களும், திமுக வின் ஒரே உறுப்பினரான பரிதி இளம்வழுதியும் விடிய, விடிய சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் தென்னவன் அமைச்சரானார். இன்று அவர் திமுக வில் உள்ளார் என்பது வேறு கதை.

இதேதான் இன்று அஇஅதிமுகவில் அமைச்சர்களாக இருக்கும் பலரது கடந்த காலமும். ஜெயலலிதாவே இத்தகைய பேச்சுக்களை சட்டசபையிலேயே பேசியிருக்கிறார்.1995ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா பேசியது இன்னமும் அவைக் குறிப்பில் உள்ளது. முதலமைச்சர் ஏன் அப்போதய ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திப்பதில்லை என்ற விமர்சனம் அப்போது அடிக்கடி எழுந்து கொண்டிருந்தது.

இதற்கு பதில் சொன்ன ஜெயலலிதா இவ்வாறு கூறினார்: ‘நான் ஏன் ஆளுநரை அடிக்கடி சந்திப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன. மே மாதம் 31ம் தேதி சென்னா ரெட்டி ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பிறகு ஒவ்வோர் மாதமும் நான் ஆளுநரை சந்தித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருமுறை நான் ஆளுநர் சென்னா ரெட்டியை சந்தித்த போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். இதனால்தான் நான் அவரை சந்திப்பதை நிறுத்தி விட்டேன்' என்று பேசிய ஜெ வின் பேச்சு மிகவும் முக்கியமானது.

ஜெ.வுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னா ரெட்டி அனுமதி கொடுத்திருந்த காலகட்டம் அது. ஜெ மட்டுமல்ல, அஇஅதிமுகவின் அனைத்து மட்டத்திலும், அவர்களது பத்திரிகையான நமது எம்ஜிஆரிலும் இன்றும் திமுகவையும், கருணாநிதியையும் எத்தககைய அடை மொழிகளால் அழைக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பது அஇஅதிமுகவின் ‘கண்ணிய அரசிலுக்கு' கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறது.

ஆகவே தமிழகத்தில், இடதுசாரிகளைத் தவிர்த்து, வேறெந்த அரசியல் கட்சிக்கும் ஆபாச பேச்சுக்கள் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

இன்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு இளங்கோவன் பேச்சு ஆளும் கட்சிக்கு நன்றாகவே உதவிக் கொண்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்த போது, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு சசிபெருமாள் மரணமும், அதனைத் தொடர்ந்த மதுவிலக்கு போராட்டங்களும் அரசுக்கு உதவின.

ஒரு கட்டத்தில் மதுவிலக்கு போராட்டங்கள் பூதாகரமாக வெடிக்கவே, இதில் நிலை தடுமாறத் துவங்கிய ஆளும் கட்சி இன்று இளங்கோவன் பேச்சை ஊதிப் பெரிதாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளும் கட்சியை பொறுத்த வரையில் மக்களின் உண்மையான பிரச்சனைகளை யாரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் ஒரே இலக்கு. இதற்காக புதிது, புதிதாய் பிரச்சனைகள் உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இளங்கோவன் விவகாரம் முடிவுக்கு வந்தால், நாளைக்கு வேறோர் பிரச்சனை வெடித்துக் கிளம்பும். மக்களின் ஜீவாதார பிரச்சனகளை தீர்க்க முடியாத அரசுகளுக்கு இது வாடிக்கையான, அவர்களுக்கு எப்போதும் கை கொடுக்கும் தந்திரம்தான்.

கடந்த கால தமிழக வரலாற்றை அறிந்தால்தான் நிகழ்காலம் புரியும் என்பதாலேயே இவற்றையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. கொள்கை வழி அரசியல் அறவே மரித்துப் போன சூழல் இருப்பதால்தான் இத்தகைய தனி மனித தாக்குதல்கள் நடக்கின்றன.

சோனியா காந்தி என்ற பெண்மணி தலைவராக இருக்கும் ஒரு மாபெரும் கட்சியின் மாநிலத் தலைவரின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது, அருவருப்பானது, மக்களின் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை சிதறடிக்கக் கூடியது. இளங்கோவனின் கருத்தை சோனியா காந்தி ஆதரிக்கிறாரா என்று தெரியவில்லை. இதனை அகில இந்திய காங்கிரசும், சோனியா காந்தியும்தான் விளக்க வேண்டும். கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறையும், ஆர்ப்பாட்டங்களும், கொடும்பாவி எரிப்புகளும், அஇஅதிமுக இப்பிரச்சனையை இப்போதைக்கு கைவிடாதென்பதையே காட்டுகின்றன. இது தீவிரமாவதற்கு முன் நாகரீகமாக ஒரு மன்னிப்பைக் கேட்டுவிடுவது பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் பேரனுக்கு இழுக்கல்ல!

- ஆர் மணி 
நன்றி தற்ஸ் தமிழ்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

Elangovan justified his comment on Modi-Jayalalitha meeting

ஜெ.-மோடி சந்திப்பை தப்பாக நினைக்காதீர்கள் என்றது எப்படி தப்பாகும்? இளங்கோவன் அதிரிபுதிரி விளக்கம்.

சென்னை: மோடி-ஜெயலலிதா சந்திப்பை தப்பாக நினைக்காதீர்கள் என்று சொன்னது தப்பாகாது என்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசி, மதிய விருந்து சாப்பிட்டு சென்றார்.

இதுகுறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில், "50 நிமிடங்கள் இருவரும் தனிமையில் என்ன செய்தாருப்பார்கள். யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். வயதான காலத்தில் தப்பு ஏதும் நடந்திருக்காது என்று எனக்கு தெரியும்" என்றெல்லாம் வாய்க்கு வந்ததை பேசினார்.

திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இருவருக்கும் கள்ள உறவு உள்ளது என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

இந்த பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தீவிரமாக்கியுள்ள நிலையில், சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார் இளங்கோவன். அவரது விளக்கத்தை பாருங்கள்.

இளங்கோவன் கூறியதாவது: முதல்வரையோ, பிரதமரையோ அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. 'அவர்கள் சந்தித்ததை யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்' என்றுதான் நான் கூறியுள்ளேன். தப்பாக நினைக்காதீர்கள் என்றுதானே நான் சொன்னேன். எனவே நான் சொன்னதில் தவறு இல்லை.

பாஜக மற்றும் அதிமுக நடுவே கள்ள உறவு உள்ளது என்றுதான் நான் கூறினேன். அதை யாரும் தப்பாக புரிந்துகொள்ள வேண்டாம். பத்திரிகைகள்தான் தப்பாக புரிந்து கொண்டுள்ளன. நான் சொன்னது தப்பான நோக்கத்தில் கிடையாது.

பாஜக மேலிட தலைவர்கள் ஜெயலலிதாவை அவ்வப்போது சந்திக்கிறார்கள். இங்குள்ள பாஜக தலைவர்கள் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பதற்காகத்தான் கள்ள உறவு என்ற வார்த்தையை கூறினேன். நான் கூறியதில் எந்த தப்பும் இல்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கையும் சந்திப்பேன். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோவன் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை..... இந்திய அரசியலில் நிஜமாக நடப்பதை இடம் மாறி சொல்லி விட்டாரே தவிர மற்றும் படி நடக்காத விடயங்களல்ல.:cool:
அதிலும் இந்திய அரசியலும் அவர்கள் சினிமா தொழிற்சாலையும் நகமும் சதையும்  போல...tw_cookie:
ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்கள் கூட  ரொனால்ட் ரேகனையும் மாக்கிரட் தட்சரையும் வைத்து அந்தமாதிரி எழுதியிருந்தார்கள்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சர்ச்சைக்குரிய பேச்சின் காணொளி கிடைத்துவிட்டது.

இப்போது தான் தவறாக ஒன்றும் பேசவில்லையே என்று மழுப்புகிறார்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவன் பேசிய அந்த சர்ச்சைக்குரிய பேச்சின் பின்.....
அவர ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தி, அதனைப் பற்றி விளக்கம் அழித்துக் கொண்டிருந்த போது....
ஜெயா ரிவி நிருபர்... இளங்கோவனைப் பார்த்து, "உங்கள் வீட்டுப் பெண்கள்... வேறு யாரையும் சந்தித்தால், நீங்கள் கூறியதும் பொருந்துமா? என்ற தொனி படக் கேட்டு விட்டார்.  அதோடை இளங்கோவனின்  கண்கள் சிவந்து, கைகள் உதறி.... வாய் கோணலாகிப் போய்... அந்த நிருபரைப் பார்த்து பயங்கரமாக பேசி விட்டார். அதன் பின்... அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அந்த நிருபரை... புரட்டி எடுத்து விட்டார்கள். :grin:
இந்தக் காணொளியும் கிடைத்தால், இணைத்து விடுங்கள் இசை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இளங்கோவன் பேசிய அந்த சர்ச்சைக்குரிய பேச்சின் பின்.....
அவர ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தி, அதனைப் பற்றி விளக்கம் அழித்துக் கொண்டிருந்த போது....
ஜெயா ரிவி நிருபர்... இளங்கோவனைப் பார்த்து, "உங்கள் வீட்டுப் பெண்கள்... வேறு யாரையும் சந்தித்தால், நீங்கள் கூறியதும் பொருந்துமா? என்ற தொனி படக் கேட்டு விட்டார்.  அதோடை இளங்கோவனின்  கண்கள் சிவந்து, கைகள் உதறி.... வாய் கோணலாகிப் போய்... அந்த நிருபரைப் பார்த்து பயங்கரமாக பேசி விட்டார். அதன் பின்... அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அந்த நிருபரை... புரட்டி எடுத்து விட்டார்கள். :grin:
இந்தக் காணொளியும் கிடைத்தால், இணைத்து விடுங்கள் இசை. 

https://www.youtube.com/watch?v=mbbUyD5cTDg

இதோ அந்தக் காணொளி.. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு....  நன்றி இசை. :)
------

ஈவிகேஎஸ் இளங்கோவனை ரொம்பக் கேவலமாக விமர்சித்து போஸ்டர்கள்.. 

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை மிகக் கேவலமாக, இழிவாக, தரக்குறைவாக விமர்சிக்கும் வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களை அதிமுகவினர் சென்னையிலும் பிற இடங்களிலும் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மிக மிக மோசமாக உள்ளது. பார்ப்போர் முகம் சுளித்து வெறுப்பாக முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அளவுக்கு அகோரமாக இருக்கிறது.

ADMK cadres come up with nasty posters against EVKS Elangovan

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியும் கூட அடங்காமல் அதிமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களால் அதிமுகவுக்கும், முதல்வருக்கும்தான் கெட்ட பெயரைத் தேடிக் கொடுக்கும் என்பதை அதிமுகவினர் அறியாமல் போனதுதான் ஆச்சரியமாக உள்ளது.

ஒரு போஸ்டரில் இளங்கோவனை நாயே என்று திட்டியுள்ளனர். தமிழகத்தில் எங்குமே நடமாட விட மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். ஜெயலலிதா காலில் இளங்கோவன் அமர்ந்து வணங்குவது போல போட்டோஷாப் வேலை செய்துள்ளனர்.

ஆயிரம் விளக்கு கே.சி. விஜய் என்பவர் ஏற்பாட்டின் பேரில் இந்த போஸ்டரைப் போட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அமைச்சர் பா. வளர்மதி, திருச்சி எம்.பி. குமார், சென்னை எம்.எல்.ஏ. வி.பி கலைராஜன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

அடுத்த போஸ்டர் இன்னும் மோசம். மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ் என்பவர் போட்டுள்ள போஸ்டர் இது. கூடி இனம் அழித்தோரையும், கொச்சைப்படுத்தா தமிழ் மண்ணில், தேச நலன் கருதி, நேசக் கரம் கூப்பும் சகோதரத்துவ சந்திப்பில், பாலினம் மட்டுமே காணும் இளங்கோவன் என்று கூறி எழுத்தில் கூற முடியாத வகையில் அவரைத் திட்டி வாசகம் வைத்துள்ளனர்.

ADMK cadres come up with nasty posters against EVKS Elangovan

இந்த போஸ்டரில் ராஜபக்சே சோனியா ஒரு படத்திலும், இன்னொரு படத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா இருக்கும் படமும் இடம் பெற்றுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

காங்கிரஸ் தொண்டர்கள், சும்மா பார்த்துக் கொண்டு இருக்காமல், ஜெயலலிதாவை விமர்சித்து..... போஸ்டர் ஓட்ட வேண்டும். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.