Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு - சங்கா

Featured Replies

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு - சங்கா

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு - சங்கா

 

 
 
 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குமார் சங்கக்கார இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது.

இதனையடுத்து குமார் சங்கக்காரவுக்காக பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு சங்கக்காரவை கௌரவித்த ஜனாதிபதி "இந்த சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புகிறோம்.. எனினும் அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.." எனக் குறிப்பிட்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=71950

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நமக்குத் தானே பிரித்தானிய குடிவரவுத்துறையை பிடிக்காதே...! அப்புறம் எதுக்கு இன்ப அதிர்ச்சி. அதுசரி.. அந்த ருவிட்டர் மாட்டர் என்னாச்சு. சப்புன்னு போயிட்டே. பிரித்தானியாவில் தமிழர்களுடன் உறவை எப்படி பார்ப்பார் இவர். 1983 இல் இவர் அப்பா பார்த்த மாதிரியா.. இல்ல தற்கால யுத்த வெற்றி சிங்களவனாகவா..?! tw_blush::unsure:

  • தொடங்கியவர்

சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! ஏற்றுக் கொள்வாரா?

சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! ஏற்றுக் கொள்வாரா?

 

 
 
 

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து குமார் சங்கக்காரவுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க மற்றும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் சங்கக்காரவிற்கு பரிசில்களை வழங்கினர்.

இந்த தருணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன "இந்த சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புகிறோம்.. எனினும் அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.." எனக் குறிப்பிட்டார்.

பின்னிணைப்பு

எனினும் இதனையடுத்து உரையாற்றிய குமார் சங்கக்கார அது தொடர்பில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை...

http://tamil.adaderana.lk/news.php?nid=71947

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.