Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கத்தில் எமது தேசியத்தை அடகுவைக்க நாம் தயாரில்லை! - அமைச்சர் ஐங்கரநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய அரசாங்கத்தில் எமது தேசியத்தை அடகுவைக்க நாம் தயாரில்லை! - அமைச்சர் ஐங்கரநேசன் Top News
[Monday 2015-08-24 20:00]
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என வடக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என வடக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

  

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையுடன் 2200மில்லியன் ரூபா நிதித் திட்டத்தின் கீழ் ஐந்து கட்டங்களாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று வடக்கு மகாண சபையின் விவசாய கால் நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர், இப்பொழுதும் இங்கு தென்னிலங்கை அரசாங்கத்தால் எமது அடையாளங்களை அழிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட விவசாயத் திணைக்களம் தொடர்பான நியமனம் ஒன்று மிகவும் இரகசியமாக எமது பிரதேசங்களில் செய்யப்பட்டு பெரும்பாலும் சிங்கள மக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இது மிகவும் ஆபத்தான செயல். தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என்றார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இரணைமடுக் குளத்தின் புதியதொரு முக்கியமான வேலைத்திட்டம் இன்று கடந்த காலங்களில் பல சவால்களை தாண்டி நடைமுறைக்கு வருகின்றது. இந்த வேலை நிறைவுற்று செயல்முறைக்கு வரும்பொழுது இரணைமடு தொடர்பாக சிலருக்கு இருக்கும் குழப்பங்கள் இயல்பாக தீருகின்ற வாய்ப்பு வரும்.

கடந்த காலங்களில் இரணைமடு தண்ணீர் பிரச்சினையை தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு தவறான கருத்துக்களை விதைத்தவர்களுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் நியாயமான பதிலை தந்துள்ளார்கள். யாழ்ப்பாண மக்கள் இது விடயம் தொடர்பாக மிகவும் தெளிவான சிந்தனையுடன் செயல்படுகின்றார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் இரணைமடு அணைக்கட்டில் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடக்கு மகாண பிரதம செயலாளர் பத்திநாதர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் வடக்கு மகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், உயர் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் சுதாகரன், நீர்ப்பாசன மற்றும் விவசாய திணைக்களங்களின் தலைவர்கள் விவசாய பெருமக்களின் பிரதிநிதிகள் திட்டப்பணிப்பாளர்கள் என இரணைமடு நலன் விரும்பிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

iranamadu-aingaranesan-240815-seithy%20%

 

 

iranamadu-aingaranesan-240815-seithy%20%

 

 

iranamadu-aingaranesan-240815-seithy%20%
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை

"தல" சம் சொல்ல வேணும்.... ...வால் சொன்னா எடுபடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.