Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமசந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிஷா பிஸ்வாலுடனான சந்திப்புக்கு அழைக்க வில்லை - சுரேஷ் பிரேமசந்திரன்.

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.நீர்வேலியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் தெளிவாக சொல்லி இருக்கின்றார் நாங்கள் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது உள்ளக பொறிமுறையை தான் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனா தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேட்பாளர்கள் அனைவரும் உள்ளக பொறிமுறை என்பது தமிழ் மக்களுக்கு பயனில்லை சர்வதேச விசாரணை வேணும் என்று மிக தெளிவாக கூறினார்கள்.

ஆகவே இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான விடுதலையை நோக்கமாக கொண்டு நாங்கள் ஒரு காத்திரமான முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்பாடு உள்ளது உள்ளக விசாரணை என்பது சில சமயங்களில் ஐநா சபை உட்பட உலக நாடுகள் சொல்ல முடியும் உள்ளக விசாரணைகளை நாங்கள் மேற்பார்வை செய்ய முடியும் அது நிச்சயமாக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும் என அந்த நாடுகள் உத்தரவாதம் தர கூடும்.

இலங்கை அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் ஒரு உள்ளக விசாரணைக்கான பொறிமுறை ஊடாக கீழ் மட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு தண்டனை வழங்கலாமே தவிர அதில் முக்கியமான குற்றங்களை புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பது கேள்வியே


அத்துடன் உள்ளக விசாரணை என்பது வெறுமனே ஓர்இருவருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிவடைந்து விடும் ஆனால் சர்வதேச விசாரணை என்பது குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு அப்பால் இந்த குற்றம் இழைக்க காரணம் என்ன தமிழ் மக்களின் பிரச்சனைக்கான காரணம் என்ன இந்த குற்றங்கள் இனியும் நடைபெறாது இருக்க என்ன செய்யவேண்டும் அதற்கு ஏற்ற வகையில் இலங்கையில் எவ்வாறு பிரச்சனையை தீர்ப்பது போன்ற பல விடயங்கள் சர்வதேச விசாரணை ஊடாகவே கொண்டு வர முடியும்.

எனவே தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பிரச்சனைகள் உடனடியாக தீர்க்க கூடியவை அவை தொடர்பிலும் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றேன்.
 
எனவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறப்பட்டு இருக்கின்றதோ அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பும் புதிதாக தெரிவு செய்யபட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவும் செய்யும் என நான் திடமாக நம்புகின்றேன்.

தேசிய பட்டியல் விடயத்தில் ஒரு கட்சி தானாக முடிவெடுத்து தவறு.

தேசிய பட்டியல் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக சேர்ந்து முடிவெடுத்து இருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தனியே தமிழ் அரசு கட்சி மாத்திரமல்ல ஈ.பி,ஆர்.எல்.எப். ரெலோ மற்றும் புளெட் ஆகிய கட்சிகளை உள்ளடக்கியதே.

தேசிய பட்டியல் விடயத்தை அதில் உள்ள ஒரு கட்சி தானாக முடிவெடுப்பது சரியான ஒரு வழிமுறையில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசு கட்சியை மட்டும் மக்கள் தெரிவு செய்யவில்லை அதில் உள்ள ஏனைய கட்சிகளையும் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள்.

எனவே முடிவுகளை எடுக்கும் போது கூட்டமைப்பாக இணைந்து அந்த முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் மக்களுக்கும் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கும் நம்பிக்கை ஏற்படும் அவ்வாறு இல்லாமல் ஒரு கட்சி தானாக முடிவெடுப்பது என்பது இந்த நம்பிக்கைகளை சீர்குலைக்கும் விடயமாகும்.

1982ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்த போது தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.சில சமயத்தில் இந்த தேர்தலில் இன்னமொரு கட்சி தலைவர் தோற்று இருப்பார் ஆயின் அவர் இந்த தேசிய பட்டியல் மூலம் உள்ளவாங்கப்பட்டு இருப்பார்களா இல்லையா ? என்ற கேள்வி உள்ளது என தெரிவித்தார்.

நிஷா பிஸ்வாலுடனான சந்திப்புக்கு அழைக்க வில்லை - சுரேஷ்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது அமெரிக்க தூதுவராலயத்தில் இருந்தோ அழைப்பு வரவில்லை அதனால் என்னால் அந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கொழும்பில் புதன் கிழமை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்திப்பொன்றினை நடாத்தினார்.
 
அந்த சந்திப்பில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ரீதியில் தாங்கள் கலந்து கொள்ளவில்லையா என கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது இந்த முன்னாள் பா உ க்களை எல்லாம் பேட்டி எடுப்பது.

பிஸ்வாலை சந்திக்க எல்லா முன்னாள் பாஉ களையும் அழைக்க முடியுமோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பா உ என்பதைத் தவிர தற்சமயம் அவரிடம்  வேறு ஏதும் பதவியால் இல்லையோ. சுரேசின் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற  பதவிக்கும் ஆப்பாtw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.