Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் காய்நகர்த்தலுக்கு சம்பந்தன் உதவக் கூடும்! - என்கிறது இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்க்கட்சி தலைவராக ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதுரங்கத்தில் காய்களை நகர்த்த உதவக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கருத்து வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் 55 பேர் கையெழுத்திட்டு முன்னாள் அமைச்சர் குமார வெலகமையை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். எனினும் 16 ஆசனங்களை மாத்திரமே வென்ற, சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கொண்டு மஹிந்த ராஜபக்ச, அரசியலில் மீண்டும் முன்னுக்கு வர முயற்சிகளை மேற்கொள்ள முடியும். மஹிந்தவின் எண்ணப்படி குமார வெல்கமையை எதிர்க்கட்சி தலைவராக்கினால், அதன்மூலம் மஹிந்த ராஜபக்ச அரசியலில் எதிர்க்கட்சியாக முன்னேற்றம் கண்டு தமக்கு அச்சுறுத்தலாக வந்துவிடுவார் என்று மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் அஞ்சிய காரணத்திலேயே சம்பந்தனின் நியமனத்தை அவர்கள் முன்னிலைப்படுத்தினர்.

இந்தநிலையில் கிரேக்க யுத்தத்தில் ட்ரெஜன் ஹோர்ஸுக்குள் (மரக்குதிரை) இருந்த வீரர்களை போன்று சம்பந்தனும் விடுதலைப் புலிகளின் ட்ரெஜன் ஹோர்ஸாக( மரக்குதிரையாக) அல்லது, புலிகளின் நிழலாகவும் மேற்கத்தைய ஆக்கிரமிப்பாளர்களின் ஆளாகவும் செயற்பட்டு நாட்டை நாசப்படுத்தலாம் என்று மஹிந்தவின் ஆதரவாளர்களான விமல் வீரவன்ச,கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த சூழலில், எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தன், தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கதைப்பாரானால் அவர் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கக்கூடும் என்று இலங்கையின் அரசாங்க ஆங்கில பத்திரிகை கருத்துக்கூறியுள்ளது. இது ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி சிறிசேனவை பிரச்சினைக்கு உள்ளாக்கும் என்றும் அரசாங்க பத்திரிகை கருத்துக் கூறியுள்ளதையும் இந்திய நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=139957&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்க்கட்சி தலைவராக ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதுரங்கத்தில் காய்களை நகர்த்த உதவக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கருத்து வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் 55 பேர் கையெழுத்திட்டு முன்னாள் அமைச்சர் குமார வெலகமையை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். எனினும் 16 ஆசனங்களை மாத்திரமே வென்ற, சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கிரேக்க யுத்தத்தில் ட்ரெஜன் ஹோர்ஸுக்குள் (மரக்குதிரை) இருந்த வீரர்களை போன்று சம்பந்தனும் விடுதலைப் புலிகளின் ட்ரெஜன் ஹோர்ஸாக( மரக்குதிரையாக) அல்லது, புலிகளின் நிழலாகவும் மேற்கத்தைய ஆக்கிரமிப்பாளர்களின் ஆளாகவும் செயற்பட்டு நாட்டை நாசப்படுத்தலாம் என்று மஹிந்தவின் ஆதரவாளர்களான விமல் வீரவன்ச,கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சம்பந்தன்,  மரக்குதிரையாக.... மட்டுமல்ல கடுதாசிப் புலியாக கூட இருக்க மாட்டார் என்று... 
விமல் வீரவன்ச,கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு.... உறுதி மொழி தருகின்றோம். 
ஆனபடியால்... சம்பந்தன் மீது..... தேவையில்லாத அச்சம் வேண்டாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கக்கூடும் என்று இலங்கையின் அரசாங்க ஆங்கில பத்திரிகை கருத்துக்கூறியுள்ளது

திருகோணமலியில் உள்ள சிங்கள மக்களே சம்பந்தன் மாத்தியாவுக்கும் வோட்டு போடவில்லை இதில அவர் சிங்கள மக்களுக்கு குரல் கொடுக்காவிடில் சிங்கள மக்களின் ஆதரவை இழந்துவிடுவாராம்.......இந்த வருடத்திற்கான  சிறந்த நகைச்சுவை 

திருகோணமலையில் உள்ள சிங்கள மக்கள்... சம்பந்தனுக்கு, வாக்குப் போடாவிட்டாலும்,
சென்ற தேர்தலில் பியசெனா என்ற சிங்களவரை... தமிழ் கூட்டமைப்பில் வெல்ல வைத்து, சிங்கள  அரசுக்கு அன்பளிப்பு செய்தவர் என்பதன் மூலம், 
சம்பந்தன் சிங்கள மக்களை... தமிழ் மக்களுக்கு மேலாக மதிக்கிறார் என்பதை, சிங்களவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். :grin:

சம்பந்தன்,  மரக்குதிரையாக.... மட்டுமல்ல கடுதாசிப் புலியாக கூட இருக்க மாட்டார் என்று... 
விமல் வீரவன்ச,கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு.... உறுதி மொழி தருகின்றோம். 
ஆனபடியால்... சம்பந்தன் மீது..... தேவையில்லாத அச்சம் வேண்டாம்.

அண்ணோய்! .. சும்மா மேலால எழுதி விமல்/வாசுதேவ/கம்பன்பிலக்களை மேலும் குழப்பாதையுமங்கோ! சரியாக அறுத்துறுத்து சம் மாத்தயாவைப் பற்றி உறுதி மொழி .. " சம் மாத்தயா, இதுவரை (40வருசமோ) தமிழர்களுக்கு மட்டுமல்ல திருகோணமலைக்கும் .. செய்ததும் ஒன்றுமில்லை, செய்கின்றதும் ஒன்றுமில்லை, செய்யப்போவதும் ஒன்றுமில்லை" .. வலு கிளியராக எழுதிக்கொடுங்கோ! அத்தோடு போற காலத்தில் ஏதோ ஒரு கதிரையை பாவம் கட்டிப்பிடித்தபடி போக விடுங்கோ! என்றும் ஒரு சிம்பதி நோட்டையும் போட்டு விடுங்கோ! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.