Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனுக்கு வரவேற்பு

Featured Replies

article_1441547262-a.png

எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும்  நாடாளுமன்ற குழுவின் உப தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு சனிக்கிழமை (05) மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதான பாலத்திலிருந்து நேற்று சனிக்கிழமை காலை, நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் தொடரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்,  மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட்தந்தையர்களிடம் ஆசிபெற்றார். இதன்போது, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மகத்தான வரவேற்பளித்தனர்.

article_1441547270-b.png

article_1441547277-c.png

 

http://www.tamilmirror.lk/153507/ந-ட-ள-மன-ற-உற-ப-ப-னர-அட-க-கலந-தன-க-க-வரவ-ற-ப-#sthash.puGtKjI7.dpuf

 

  • தொடங்கியவர்

திரு செல்வம் அடைக்கலநாதனுக்கு .
நாம் எதை வெற்றி கொண்டோம் இப்படி மாலை சூட்டிக் கொள்வதற்கு..........? இந்நேரம் குப்பையில் வீசப்பட்டிருக்கும் இந்த மாலைகளுக்கான செலவை ஏன் ஒரு வறிய குடும்பத்திற்கு கொடுத்திருக்கலாமே...., தொண்டார்கள் முனைவார்கள் தான் ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தலைவனாகிய உங்களுக்கல்லவா?

முடிந்தால்  உங்கள் வன்னித் தேர்தல் தொகுதியில் வசிக்கும் இந்தத் தாயின் துயரத்தை வாசியுங்கள்

http://www.yarl.com/forum3/topic/162764-அன்னையர்-இட்ட-தீ…/#comment-1134353

எமக்கு முன்னால் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது ........., இப்படியான தாய்மார்கள் வாழும் எம்மண்ணில் எப்படி உங்களால் அவர்களின் பிரதிநிதியான உங்களால் இப்படியான கொண்டாட்டங்களில் ஈடுபடமுடிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

.......மக்கள் விரும்பியினம்.......மக்களுக்கு எதிராக நாம் எதையும் செய்யமுடியாது......புலியை வெற்றி கொண்டவனே அடங்கி போய்ட்டான்.....உவையள் எம் மாத்திரம்....

  • தொடங்கியவர்

அடைக்கலநாதனுக்கு யோசப்வாஸ் மக்கள் வரவேற்பு

article_1441856566-a.png

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனுக்கு, நேற்று  புதன்கிழமை (9) மாலை, தோட்டவெளி யோசப்வாஸ் நகர் கிராமத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. கிராம மக்கள், தோட்டவெளி வேதசாட்சிகள் ராக்கினி ஆலய சந்தியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை மோட்டார் சைக்கிள் பவனியுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து, தோட்டவெளி வேதசாட்சிகள் ராக்கினி ஆலயத்திலும்  ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயத்திலும் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்துகொண்டிருந்தார்.

article_1441856576-b.png

 http://www.tamilmirror.lk/153851/அட-க-கலந-தன-க-க-ய-சப-வ-ஸ-மக-கள-வரவ-ற-ப-#sthash.pfzoiyas.dpu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.