Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொல்லுக் கொடுத்து அடிவாங்கும் தமிழினம்

Featured Replies

orupaarvai678

பொதுத்தேர்தல் முடிவடைந்தபின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது சாத்தியமில்லையெனத் தெரிவித்திருந்தார்.

சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்து இடாதபடியாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் அனுமதி கோரினால் அதை ரஷ்யாவோ சீனாவோ வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து ரத்துச்செய்து விடும் நிலை ஏற்படும் என்பதாலும் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையில் பயனில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் அர்த்தம் தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்வதை விட வேறு வழயில்லை என்பதுதான்.

தற்சமயம் உள்ள நிலைமையில் சர்வதேச விசாரணை என்பது உடனடியாகவும் இயல்பாகவும் இடம்பெறமுடியாது என்பது உண்மைதான். இது இப்போது மட்டுமல்ல எப்போதே உணரப்பட்டவிடயம்தான்.
இப்போது இருக்கும் நிலைமையை ஏற்றுக்கொண்டு எமக்குக் கிடைக்கவேண்டிய நீதியை இழப்பதா அல்லது நியாயமான நீதி கிடைக்கக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தும் வகையில் எமது முயற்சிகளைப் பரந்த அளவில் மேற்கொள்வதா?

இருக்கும் நிலைமைகளை ஏற்றுக்கொண்டு கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அடங்கிப் போவதென்றால் அரசியல் தலைமைகள் ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன்? மக்கள் போராட்டங்கள் ஏன்?
அப்படியானால் இவர்கள் ஒரு சர்வதேச விசாரணையை கோரப்போவதாக மக்களிடம் ஏன் பொதுத் தேர்தலில் ஆணை கோரினர்?

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட ஒரு சர்வதேச விசாரணை நடந்துமுடிந்துவிட்டது எனவும் அதன் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்திருப்பது ஏன்?

தமிழ் சிவில் சமூகம் சர்வதேச விசாரணை கோரி கையெழுத்துச் சேகரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டவேளையில் சம்பந்தனும், சுமந்திரனும் உள்ளக விசாரணையைத் தமிழ் மக்களிடம் நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் 58,000 வாக்குகளை வழங்கி சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ததன்மூலம் இப்போது பொல்லுக் கொடுத்து அடிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் ஆலோசனையின் பேரில் சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்வாங்கப்பட்டார்.

இவர் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை இழிவுபடுத்துவதிலும் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனக் காட்டுவதிலும் தீவிர அக்கறை காட்டினார். போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமையைப் பகிரங்கமாக வரவேற்று அரச தரப்பை மனம் குளிர வைத்தார்.

கடந்த ஐந்து வருடகாலத்தில் இவர் இப்படியாக தமிழ் மக்களுக்கு விரோதமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் இவருக்கு தமிழ் மக்கள் 58,000 வாக்குகளை வழங்கினர்.

தற்சமயம் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானிக்கும் சக்தி கொண்ட சர்வாதிகாரியாக சம்பந்தனின் அனுசரணையுடன் உயர்ந்து நிற்கிறார்.

இங்கு நாம் சர்வதேச நெருக்கடிகளுக்கான இலங்கைப் பிரதிநிதி அலன் கீலன் வெளியிட்ட சில கருத்துகள் முக்கியமானவை.

அதாவது இலங்கையில் உள்ள சட்டங்களின்படி போர்க்குற்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்ட கீழ்மட்டப் படையினராகிய ஏவலர்கள் மட்டுமே தண்டிக்கப்படமுடியும். ஆனால் இவர்களுக்குக் கட்டளைகளை வழங்கிய மேல்மட்டத்தினரைத் தண்டிக்க இலங்கையின் சட்டங்கள் போதுமானவையாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் யாரைக்காப்பாற்ற உள்ளக விசாரணை பற்றி விருப்பம் கொண்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

எப்படியிருப்பினும் இவர்களுக்கான பதவிகளும் அதிகாரமும் தமிழ் மக்கள் வழங்கிய பொல்லுகள். அதே பொல்லுகளால் தமிழ் மக்களின் தலைகளில் ஓங்கியடிக்கின்றனர் என்பதுதான் உண்மை.

http://tamilleader.com/?p=50787

11959994_926546157412317_104788540972727

  • கருத்துக்கள உறவுகள்
  • இது தான்.. சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்து தமிழர்களின் தலைவிதி. எப்ப தமிழர்கள் சுயமான அரசியல் அறிவோடு சிந்திக்க வெளிக்கிடுகினமோ.. எப்ப உந்த அப்புக்காத்துக் கூட்டத்தை நம்பாமல் தம் வாக்கு பலத்தை நம்பினமோ அப்ப தான் உவைக்கு விடிவு. இல்ல இப்படி நம்பி நம்பி ஏமாற வேண்டியான். அவன் படிச்சவன்.. இவன் படிச்சவன்.. அவன் வந்தால் அது நடக்கும்.. இவன் வந்தால் இது நடக்கும் என்று.. அடுத்தவன் வாயைப் பார்த்து வறுத்துக் குத்திக்கிட்டு வாழ்ந்து சரிய வேண்டியான். அவனவன் தன் பிழைப்பை பார்த்துக்கிட்டு இவைட தலையில மிளகாய் அரைச்சிட்டு போக வேண்டியது தான். tw_blush:tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.