Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் ரஷ்ய இராஜதந்திரியை தாக்கிய வாகனச் சாரதி – காணொளியால் பரபரப்பு

Featured Replies

கொழும்பில் ரஷ்ய இராஜதந்திரியை தாக்கிய வாகனச் சாரதி – காணொளியால் பரபரப்பு

SEP 09, 2015 | 2:10by கார்வண்ணன்in செய்திகள்

russian-dip-assaultகொழும்பில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில், ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் வாகனச் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் மூத்த இராஜதந்திரியே தாக்குதலுக்கு இலக்கானார்.

ஹைட்பார்க் கோணரில் ஆர்பிகோ வாகனத் தரிப்பிடத்தில், வாகனத்தை நிறுத்தியதில் ஏற்பட்ட சச்சரவை அடுத்தே, பிஎம்.டபிள்யூ வாகனச் சாரதியால், ரஷ்ய இராஜதந்திரி தாக்கப்பட்டார்.

நேற்றுமுன்தினம், வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற குறிப்பிட்ட ரஷ்ய இராஜதந்திரி, அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து இதுதொடர்பாக முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கான சிறிலங்காவின் சார்பில் மன்னிப்புக் கோரிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ரஷ்ய இராஜதந்திரியைத் தாக்கிய வாகனச் சாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவி்ட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று முகநூலில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/09/news/9520

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ராஜதந்திரி ஏன்.... மோட்டுச் சிங்களவனிடம், நியாயம் அளக்க போனவர். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்காவா கொக்கா..?? ஐக்கியநாடுகள் சபையின் செயலாளரையே நுளம்படிக்கச் சொன்ன நாடு சிறீ லங்கா. 

forumsmiley4252.gif

  • கருத்துக்கள உறவுகள்

இனி இவர் சிங்கள மக்களின் கதாநாயகன் ஆகி விடுவார்.குத்துப் பாடல்களில் அவரைப் பற்றிக் கத்தத் தொடங்கி விடிவினம்....!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.