Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தீர்மானம் இலங்கை மக்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும்! - ஸ்டீபன் ரப்

Featured Replies

[Thursday 2015-09-10 18:00]
இலங்கை குறித்த புதிய தீர்மானங்கள் எதுவும் பொறுப்புக்கூறுதல், குறித்த இலங்கை மக்களின் சொந்த தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு அமைந்திருக்க வேண்டும என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

இலங்கை குறித்த புதிய தீர்மானங்கள் எதுவும் பொறுப்புக்கூறுதல், குறித்த இலங்கை மக்களின் சொந்த தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு அமைந்திருக்க வேண்டும என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

செப்டம்பர் 2009 இல் இராஜாங்க திணைக்களத்தில் இணைந்துகொண்ட காலப்பகுதியிலிருந்து இலங்கை விவகாரத்தில் நான் ஆழ்ந்த அக்கறையை கொண்டிருந்தேன்.யுத்தத்தின் இறுதி தருணங்களில் இரு தரப்பும் இழைத்திருக்க கூடிய யுத்த குற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எனக்கு ஆணைவழங்கப்பட்டிருந்தது. 2009 ஓக்டோபர் நடுப்பகுதியில் நான் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன், அதன் பின்னர் செனட் விடுத்த வேண்டுகோளின் பேரில் சில அறிக்கைகைளை சமர்ப்பித்தேன்,இலங்கை அதிகாரிகள் நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளனர் என நான் குறிப்பிட்டிருந்தேன்.

உள்நாட்டு நடைமுறைகளிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக நான் இருதடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன்.2014 ஜனவரியில் நான் மீண்டும் விஜயம் மேற்கொண்டவேளை எனது விஜயத்திற்கு எதிராகபாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனது முகத்தை பிசாசின் முகத்தை போல சித்தரிக்கும் பாரிய சுவரொட்டிகளை காணமுடிந்தது. நான் உலக சமாதானத்திற்கு ஆபத்தானவன் என தெரிவிக்கும் வாசகங்கள் அதில் காணப்பட்டன. அவர்கள் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர், நான் கொழும்பிற்கு வந்தவேளை அனைத்தும் அமைதியாக காணப்பட்டது.

இலங்கை விவகாரத்தில் நான் அமெரிக்காவில் உள்ள சகாக்களுடன் இணைந்து தீவிரமாக பாடுபட்டேன். ஜெனீவாவிற்கு இரு பிரேரணைகைளை கொண்டுவந்தோம் மனித உரிமை ஆணையாளர்pன் விசாரணையை கோரும் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்,குறிப்பிட்ட விசாரணை அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம். மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என நான் எதிர்பார்க்கின்றேன். பொறுப்புக்கூறல் மற்றும் மனிதஉரிமைகளுக்காக உறுதியாக நிற்கவேண்டும் என்ற எமது தீர்மானத்திற்கு வெற்றிகிடைத்த ஓரு சந்தர்ப்பமாக இதனை நான் காண்கிறேன்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது, பொதுமக்களிற்கு எதிராக பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட அமைப்பிற்கு எதிராக வலுவான படைபலத்தை அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம். அதேவேளை அத்தகையை செயற்பாடுகள் யுத்தங்களிற்கான சட்டங்களை கருத்திலெடுப்பவையாக அமைந்திருக்கவேண்டும்,யுத்தம் குறித்த சட்டங்கள் பின்பற்றப்படுதல் என்பதை அடிப்படையாக வைத்து அவற்றைநோக்கவேண்டும்.மோதலுடன் எவ்வகையிலும் தொடர்புபடாத மக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கபட்டது, மற்றும் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து நாங்கள் குறிப்பாக ஆழந்த கவலைகொண்டுள்ளோம். எனது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இவை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களது நிலைப்பாடும்,அரசாங்கத்துடனும், சகல சமூகங்களுடனும் நாங்கள் மேற்கொண்ட தொடர்பாடல்களும், முன்னைய அரசாங்கத்திலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படும் தலைமைத்துவம் அவசியம் என இலங்கை மக்கள் தீர்மானிக்கும் நிலையை ஏற்படுத்தின என நாங்கள் கருதுகின்றோம். நான் தற்போதைய யோசனைகளை இன்னும் ஆராயவில்லை.எனினும் எந்த யோசனையும் இலங்கையின் சகலசமூகத்தவர்களுடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை அடிப்படையானதாக கொண்டு உருவாக்கப்படுவது அவசியம்.ஜெனீவாவிலிருந்து வரும் மின்னஞ்சலிற்கு பதில் அளிப்பதற்காக வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் விடயமாக அது அமையமுடியாது.

பொறுப்புக்கூறுதல்,உண்மையை ஏற்படுத்துதல், இவற்றிற்கு அதிகளவிற்கு காரணமான தனிநபர்களை விசாரணை செய்தல், குற்றங்கள் தனிநபர்களாலேயே இழைக்கப்பட்டன. சமூகங்களால் இல்லை என்ற அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற இலங்கையர்களின் சொந்த தேவைகளிற்கு பதிலளிப்பவையாக இந்த யோசனைகள் அமைந்திருக்கவேண்டும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140238&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.