Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்
இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கிற்கு செல்லவுள்ள ஜேர்மனிய அமைச்சர், கிளிநொச்சியில் நிறுவப்பட்டு வரும் ஜேர்மன் பயிற்சி நிலையத்தையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

index_zpsqdaiwuhx.gif

http://onlineuthayan.com/news/506

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சந்திப்பு...
   
 

article_1442924196-2.gif

இலங்கைக்கு விஜயம்மேற்கொண்டுள்ள ஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் பிராங்க்-வோல்டர் ஸ்டெய்மயர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையிலான சந்திப்பு,  இன்று செவ்வாய்க்கிழமை  கொழும்பில் நடைபெற்றது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)

article_1442924206-3.gif

article_1442924220-4.gif

article_1442924229-6.gif

article_1442924239-7.gif

article_1442924249-8.gif

article_1442924260-9.gif

- See more at: http://www.tamilmirror.lk/154793/சந-த-ப-ப-#sthash.2OCaFd6y.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நல்லுறவு சந்திப்பு

 

 

நல்லுறவு சந்திப்பு

 

 
 
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் Frank Walter Steinmeier, இன்று (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அங்க அகதிகள் வரேக்க உந்தாள் உங்க வந்துட்டுது. 

அசூல் அடிச்சாலும் அடிக்கும்.... பார்த்து.. :grin:

யார் வந்தாலும், இந்த தாரை, தப்பட்டை கூத்துக் கோஸ்டியல், ஒரு கை பார்க்காம விடாயினம் போல தான் கிடக்குது.... :oO:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

ஜி.எஸ்.பி + சலுகையை புதுப்பிக்க ஜேர்மனி ஒத்துழைக்கும்

ஜி.எஸ்.பி + சலுகையை புதுப்பிக்க ஜேர்மனி ஒத்துழைக்கும்

 

 
 

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி + சலுகையை புதுப்பிக்க ஜேர்மனி ஒத்துழைக்கும் என, அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சர் பிராங் வோல்ரர் ஸ்டீன்மெயர் (Frank Walter Steinmeier) தெரிவித்துள்ளார்.

இலங்கை வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதன்போது கிளிநொச்சியில் ஜேர்மனிய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஜேர்மன் சான்சிலர் (German Chancellor) அஞ்சலா மேர்கல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பையும், பிராங் வோல்ரர் ஸ்டீன்மெயர் இந்த சந்திப்பில் தெரியப்படுத்தினார்.

குறித்த அழைப்பை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=72861

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.