Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீடற்ற உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும்! - நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச தலையீடற்ற உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும்! - நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு
[Tuesday 2015-09-22 20:00]
உள்நாட்டு பொறிமுறைமையின் ஊடாக மட்டுமே போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறைமை ஒன்றின் ஊடாக தீர்வு வழங்கப்படும்.

உள்நாட்டு பொறிமுறைமையின் ஊடாக மட்டுமே போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறைமை ஒன்றின் ஊடாக தீர்வு வழங்கப்படும்.

  

இந்த அனைத்து பொறிமுறைமைகளும் உள்நாட்டு ரீதியில் வடிவமைக்கப்பட்டு அமுல்படுத்தப்படுமே தவிர, இந்த விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களோ சர்வதேச பிரதிநிதிகளோ உள்வாங்கப்பட மாட்டார்கள். 2009ம் ஆண்டு நாடு எதிர்நோக்கிய பயங்கரவாத சவால்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஸ்திரமான இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதனை இலக்காகக் கொண்ட நல்லிணக்க முனைப்புக்களை தைரியமாகவும் பொருத்தமாகவும் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை.

நல்லிணக்க முனைப்புக்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் சர்வதேச சமூகம் இலங்கை மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக இந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடுமென பரவலாக அச்சம் வெளியிடப்பட்டது.பயங்கரவாதத்தை இல்லதொழிக்க தலைமை தாங்கிய அரசியல் தலைமைகள் மற்றும் படைவீரர்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கடந்த இரண்டு பிரதான தேர்தல்களிலும் மக்கள் எடுத்த புத்திசாதூரியமான தீர்மானங்களினால் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ள வழியமைத்துள்ளது. ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் இலங்கை மீது நம்பிக்கை கொண்டுள்ளது.

“2009ம் ஆண்டு மே மாத இறுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், அப்போதைய ஜனாதிபதியின் அழைப்பிற்கு இணங்க ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரும் கூட்டாக இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். நிரந்தர தீர்வுத் திட்டமொன்றை வழங்குதல், சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக மனித உரிமைகளை பேணுதல், பொறுப்பு கூறுதல்களை உறுதி செய்தல் போன்ற உறுதிமொழிகளை கடந்த அரசாங்கம் அளித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு சார்பான தீர்மானமொன்றை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறேன். அது குறித்து தற்போது கருத்து வெளியிடப் போவதில்லை. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளாத வகையில் பொறிமுறைமை உருவாக்கப்படும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிபுணத்துவ ஆலோசனை அறிவுரைகளுடன் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை மீளவும் செய்யத் தயாரில்லை. அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டை எற்படுத்திக்கொள்ள விரும்புகிறொம். இனவாதத்தை அல்லது மதவாதத்தை தூண்டி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கத் தயாரில்லை.அனைத்து இன சமூகங்களும் தடையின்றி வாழக்கூடிய ஓர் நாட்டை உருவாக்குதல் எமது பொறுப்பாகும்.எந்தவொரு இன சமூகமும் அசாதாரணமாக அழுத்தங்களை அனுபவிக்க இடமளிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140995&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Lucky guy!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.