Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா T20, ஒரு நாள் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்திய பேட்டிங் வரிசை வளைந்து கொடுக்காத தன்மையுடன் உள்ளது: தோனி

 
 
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் தோனி-விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி.
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் தோனி-விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி.

இதுதான் என் பேட்டிங் வரிசை இந்த இடத்தில்தான் நான் களமிறங்குவேன் என்ற ஒரு விறைப்பான, வளைந்து கொடுக்காத தன்மையுடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இருப்பதாக தோனி அங்கலாய்த்துள்ளார்.

ரஹானே 3-ம் நிலையில் களமிறங்கி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நன்றாக ஆடிவந்தார், இந்நிலையில் மீண்டும் விராட் கோலி நேற்று ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். அணியின் பேட்டிங் வரிசையில் குறிப்பாக 3-ம் நிலையில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.

விராட் கோலி உலகக் கோப்பை பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு நேற்றுதான் அரைசதம் கடந்தார், அதுவும் தான் அரைசதம் கடக்க வேண்டும் என்ற கவனம் இருந்ததே தவிர இந்திய அணியை வெற்றி பெறச் செய்யுமாறு ஆடவேண்டும் என்ற கவனம் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரியவில்லை. இவர் நினைத்த இடத்திலிருந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல தென் ஆப்பிரிக்கா என்ன தற்போதைய மேற்கிந்திய தீவுகளா? என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் இவர் தனது 3-ம் நிலைதான் தனக்கு வேண்டும் என்று நிர்பந்தப் படுத்தியிருக்கலாம்.

இந்நிலையில் தோனி கூறியிருப்பதாவது:

"நான் பேட்டிங்கில் சற்று முன்னால் களமிறங்க வேண்டும். அதே வேளையில் பின்வரிசையில் இறங்குபவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். எனவே நான் கலந்துகட்டி ஏதாவது செய்து, பொருத்திப் பார்த்து டவுன் ஆர்டரை முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக நல்லது என்னவெனில் நான் அதிக ஓவர்கள் ஆடினால்தான், பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி பிற்பாடு பெரிய ஷாட்களை ஆட முடியும்.

இந்த அணிவரிசையின் பின்னால் இருக்கும் சிந்தனை இதுவே, ஆனால் மற்ற சில பேட்ஸ்மென்களும் இதற்கு ஏற்ப தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் சில வேளைகளில் ரன்கள் எடுக்கலாம், சில வேளைகளில் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் பின்வரிசையில் இறங்கி ஆடும் அனுபவத்தை அவர்கள் பெறுவதே முக்கியம்.

மேலும், இந்திய பேட்டிங் வரிசை வளைந்து கொடுக்காத தன்மையில் சிக்கியுள்ளதாக நான் நினைக்கிறேன். 'இதுதான் எனது பேட்டிங் ஆர்டர், இதில்தான் நான் களமிறங்குவேன்' என்ற விறைப்பு உள்ளது. ஆனால் சில வேளைகளில் பின்னால் களமிறங்க வேண்டும், அப்போதுதான் கஷ்டங்கள் புரியும். அதற்காக முன்னால் களமிறங்கி ஆடுவது எளிது என்று கூறவில்லை. ஆனால் முன்னால் களமிறங்கும்போது உங்கள் பின்னால் 3, 4 பேட்ஸ்மென்கள் இருக்கிறார்கள் என்ற சவுகரியம் உள்ளது, அதனால் பெரிய ஷாட்களை ஆடிக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். ஆனால் 5, 6,7-ம் நிலைகளில் இறங்கினால் பெரிய ஷாட்களை உடனடியாக ஆட வேண்டும்.

அதற்கு உங்களுக்கு நீங்களே நம்பிக்கை அளித்துக் கொள்ள வேண்டும், 'ஆம், நாம் இந்த ஷாட்டை தவறாக ஆட முடியாது' என்ற உறுதி அவசியம். பின்னால் களமிறங்கினால் இத்தகைய நெருக்கடிகளை ஒருவர் சந்தித்துதான் ஆகவேண்டும். விஷயம் ஒன்றுமில்லை, நான் முன்வரிசையில் களமிறங்க வேண்டுமெனில் யாராவது ஒருவர் பின்னால் இறங்கித்தான் ஆக வேண்டும். ஊடகத் தரப்பை எடுத்துக் கொண்டால் நிறைய குழப்பங்கள் உள்ளன. அவர்கள் நான் 4-ம் நிலையில் களமிறங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் விராட் கோலியும் 3-,ம் நிலையில் களமிறங்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதேவேளையில் அஜ்ங்கிய ரஹானேயும் 4-ம் நிலையில் ஆட வேண்டும் என்கிறார்கள்.

இது சாத்தியமேயல்ல. இருப்பது 2 இடங்கள் அதற்கு 3 பேட்ஸ்மென்கள்!

எப்போதுமே கேள்வி என்பது இருக்கிறது. நான் விளக்கியது போல், விராட் கோலி 3ம் நிலையில் இறங்க விரும்புகிறோம், ஆனால் சில வேளைகளில் 4-ம் நிலையில் அவர் களமிறங்குவதை நாங்கள் விரும்புகிறோம். வழக்கமாக, 4-ம் நிலை வீரர்களுக்கு 30 ஓவர்கள் கிடைக்கும், 30 ஓவர்கள் என்பது சதம் எடுக்க சிறந்ததொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான். மேலும் அணியில் ஒரு ஆழத்தன்மையை ஏற்படுத்துகிறது” என்றார்.

நேற்றைய தொல்வி குறித்து..

(31-40 ஓவர்கள்) ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும் இது. முதலில் முதல் 10 ஓவர்கள். முதல் 10-இல் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் பிட்ச் மந்தமடைந்து வந்தது. அதனால் பிற்பகுதியில் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. 37-வது ஓவர் முதல் அடித்து ஆட முனைந்தோம், ஆனால் எங்களால் பந்தை மட்டையில் சரியாக வாங்க முடியவில்லை. நானும் விராத்த்தும் நன்றாக நிலைப்பெற்றிருந்தோம், ஆனாலும் பெரிய ஷாட்கள் எங்களுக்கு சிக்கவில்லை.

மேலும் இங்கு புறக்களப்பகுதி பெரியது, பெரிய ஷாட்களை ஆடினால் அது பீல்டர்கள் கைக்கு சிக்காமல் ஆட வேண்டும், பிட்சின் மந்தத் தன்மையால் பவுலர்கள் வீசும் வேகத்தையும் பயன்படுத்த முடியவில்லை.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/இந்திய-பேட்டிங்-வரிசை-வளைந்து-கொடுக்காத-தன்மையுடன்-உள்ளது-தோனி/article7780321.ece

  • Replies 70
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மார்னே மார்கல் சந்தேகம்

India, South Africa, Morne Morkel, Cricket

ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்கல் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் அக்., 22ல் நடக்கிறது. இப்போட்டியில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்கல் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. சமீபத்தில் ராஜ்கோட்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய இவருக்கு, காலில் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மார்னே மார்கல் கூறுகையில், ‘‘மூன்றாவது போட்டியின் போது லேசான காயமடைந்தது உண்மை. ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை. நான்காவது போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால், எங்களது மருத்துவ குழுவினர் காயத்தை குணப்படுத்திவிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இருப்பினும் முழுஉடற்தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை வரவில்லை,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2015/10/1445269760/IndiaSouthAfricaMorneMorkelCricket.html

  • தொடங்கியவர்

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பெரிய ஷாட்களை ஆட வேண்டாம்: ரெய்னாவுக்கு தோனி அறிவுரை

 
தோனி, ரெய்னா.
தோனி, ரெய்னா.

போட்டியில் களமிறங்கிய உடனேயே பெரிய ஷாட்களை ஆட வேண்டாம். அதுபோன்ற ஷாட்களை ஆடுவதற்கு முன்னர் காலஅவகாசம் எடுத்துக் கொள்வது அவசியம் என இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு கேப்டன் தோனி அறிவுரை வழங்கியுள்ளார்.

ராஜ்கோட்டில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் ரெய்னா டக் அவுட்டானார். இந்தத் தொடரில் அவர் டக் அவுட்டாவது 2-வது முறையாகும். முன்னதாக முதல் போட்டியில் 3 ரன்கள் எடுத்த ரெய்னா, 2-வது போட்டியில் டக் அவுட்டானார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாகப் பேசிய தோனி மேலும் கூறியதாவது:

ரெய்னாவைப் பொறுத்த வரையில் பார்மைவிட, அவர் பெரிய ஷாட்களை ஆடுவதற்கு முன்னதாக காலஅவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர் களமிறங்கிய உடனேயே பெரிய ஷாட்களை ஆடிவிடுகிறார். எப்போது களமிறங்கினாலும், ஆரம்பத்தில் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு நிதானமாக ஆடுவது முக்கியம். களம்புகுந்த உடனேயே பெரிய ஷாட்களை ஆடுவது அவ்வளவு எளிதல்ல. களத்தில் எந்தெந்த பகுதிகளில் பீல்டர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்கு காலஅவகாசம் அவசியம். அவர் காலஅவகாசம் எடுத்துக் கொண்டு ஆடும்பட்சத்தில் அவரால் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.

3-வது ஆட்டத்தில் தோல்வி கண்டது குறித்துப் பேசிய தோனி, “ஆரம்பத்தில் மைதானம் நன்றாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தின் தன்மை மிக மெதுவானதாக மாறிவிட்டது. அது எங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. ஆடுகளத்தின் தன்மை மாறாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். ஆடுகளத்தின் தன்மை மாறியதால் எங்களால் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை.

எங்கள் அணியின் பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். இங்குள்ள சூழல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவாததால் இது பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானம் என்று நினைத்தேன். ஆனால் நேரம் செல்ல செல்ல பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பித்தது. அதை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள், கூடுதல் பீல்டர்கள் மூலம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆடுகளத்தின் தன்மை மெதுவாக மாறும்போது முதல் 10 ஓவர்கள் மிக முக்கியமானவை. ஆனால் நாங்கள் அந்த ஓவர்களில் போதுமான அளவுக்கு ரன் குவிக்கவில்லை. மிடில் ஆர்டரில் என்னாலும், விராட் கோலியாலும் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. இதேபோல் மைதானத்தின் அவுட்பீல்டும் மிகப்பெரியது என்பதை மறந்துவிட முடியாது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஆட்டத்தின்-ஆரம்பத்திலேயே-பெரிய-ஷாட்களை-ஆட-வேண்டாம்-ரெய்னாவுக்கு-தோனி-அறிவுரை/article7783397.ece

  • தொடங்கியவர்
டுமினி விலகல்
 
20-10-2015 02:40 PM
Comments - 0       Views - 3

article_1445353955-TamilOutDuminy.jpgஇந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க-இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் காயமடைந்த, இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிருந்தும் தென்னாபிரிக்க அணியின் ஜீன் போல் டுமினி பதவி விலகியுள்ளார்.

இவருக்குப் பதிலாக டீன் எல்கர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டுமினி குணமடைய இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தேவைப்படும் எனவும், அவர் தொடர்ந்தும் இந்தியாவில் அணியுடன் இருந்து சிகிச்சையை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கு டுமினி தயாராகி விடுவார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.

தான் பந்துவீசும்போது தன்னை நோக்கி வந்த பந்து தாக்கியதிலேயே டுமினி காயமடைந்திருந்தார். எனினும், தொடர்ந்தும் அப்போட்டியில் களத்தடுப்பில் அவர் ஈடுபட்டிருந்தார். போட்டி முடிவடைந்த பின்னர் ஆராய்ந்ததிலேயே அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கமுடியாதபடி காயம் மோசமானது தெரியவந்திருந்தது.  

- See more at: http://www.tamilmirror.lk/157072#sthash.xOhtsdFW.dpuf
  • தொடங்கியவர்

நம்ம சென்னையில் ‘கிரிக்கெட் தீபாவளி’: கரை சேர்ப்பாரா தோனி

dhoni, india

சென்னை: சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி பண்டிகை கொஞ்சம் முன்னதாகவே வருகிறது. இது, கேப்டன் தோனியின் ‘இரண்டாவது தாய் வீடு’ என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர் ‘சரவெடியாய்’ ரன் சேர்க்கும் பட்சத்தில், ரசிகர்கள் மனங்கள் மத்தாப்பூவாய் மலரும். இப்போட்டியில் கொஞ்சம் அசந்தாலும் தொடர் பறிபோகும். இதனை உணர்ந்து இந்திய வீரர்கள் வெற்றியை வசப்படுத்த வேண்டும்.   

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1–2 என, தொடரில் பின் தங்கியுள்ளது. இன்று நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

பிரிமியர் தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ள தோனிக்கு சென்னையை பொறுத்தவரையில் இரண்டாவது தாய்வீடாகத் தான் உள்ளது. அந்தளவுக்கு சென்னை மண்ணில் உள்ள ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

சூதாட்ட பிரச்னையில் சிக்கிய சென்னை அணி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு(2016, 17) பிரிமியர் தொடரில் பங்கேற்க முடியாது. இனி சென்னை அணிக்கு கேப்டனாக 2018ல் தான் இங்கு தோனி களமிறங்க முடியும். அதுவரை கிரிக்கெட்டில் நீடிப்பாரா அல்லது ஓய்வு பெறுவாரா என தெரியவில்லை.

இதனால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி தோனிக்கு மிகவும் முக்கியம். இப்போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் தக்கவைக்க முடியும்.

துவக்கத்தில் சொதப்பும் ஷிகர் தவான் விழித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து தனிநபராக ரன் மழை பொழியும் ரோகித் சர்மா மீண்டும் அசத்தலாம்.

‘மிடில் ஆர்டரில்’ ஏற்பட்ட தேவையற்ற ‘பேட்டிங் ஆர்டர்’ குழப்பம் அணியின் வெற்றியை பெருமளவு பாதித்துள்ளது. இதில் பந்தாடப்படும் பரிதாபத்தில் உள்ள ரகானே, ரெய்னா, எந்த இடத்தில் வருவார் என்பது அவர்களுக்கே தெரியாது. ரெய்னாவும் ஏமாற்றுவதால் போட்டியை வென்று தரும் திறமையான ‘பினிஷர்’ இல்லாமல் அணி தள்ளாடுகிறது. இதனால் அணியின் நலன் கருதி தோனி, கோஹ்லி இணைந்து, தங்கள் ஈகோவை மறந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் நல்லது.

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா வேகத்தில் கைகொடுக்கலாம். சுழலில் அக்சர் படேல், ஹர்பஜன் சிங்குடன் அமித் மிஸ்ரா இணையலாம்.

நல்ல வாய்ப்பு:

தென் ஆப்ரிக்க அணி இதுவரை இந்திய மண்ணில் இரு அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் நான்கு முறை பங்கேற்றது. இந்த எதிலும் கோப்பை வென்றது கிடையாது. 1991–92 (1–2), 1999–2000 (2–3), 2009–10 (1–2) ல் இந்திய அணி தான் சாதித்தது. 2005–06 (2–2)ல் இரு அணிகள் மோதிய தொடர் ‘டிரா’ ஆனது. இம்முறை சென்னையில் வெல்லும் பட்சத்தில் முதன் முறையாக கோப்பை வென்று அசத்தலாம். 

அதேநேரம் இது எளிதல்ல. ஏனெனில் அணியின் முக்கிய வீரர் டுமினி, கைவிரல் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியது இந்திய அணிக்கு நல்ல செய்தி தான். தவிர, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரும் மார்னே மார்கலும் சந்தேகத்தில் தான் உள்ளார். 

இதனால், சென்னை போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மழை வருமா

 

தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்தியா–தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கு மழையால் பாதிப்பு வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில் முன்னதாக இந்திய அணி இங்கு விளையாடிய இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. கடந்த 2003ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2005ல் தென் ஆப்ரிக்காவுடனான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இப்போட்டிக்கு வருண பகவான் வழிவிடும் பட்சத்தில் சென்னை ரசிகர்கள் காட்டில் மழை தான்.

 

http://sports.dinamalar.com/2015/10/1445432910/dhoniindia.html

 

  • தொடங்கியவர்

சென்னை ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்; அணியில் மாற்றமில்லை

 
படம்: வி.கணேசன்.
படம்: வி.கணேசன்.

வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் உள்ள இந்திய அணி சென்னை ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

பிட்ச் பிற்பாடு மந்தமடைய வாய்ப்புள்ளது, டாஸ் வென்று முதலில் பேட் செய்வதில் நாம் நன்றாக ஆடி வருகிறோம். விரட்டலை நன்றாகச் செய்தாலும், முதலில் பேட் செய்வதே இந்தப் பிட்சில் சிறந்தது என்று கூறினார் தோனி.

இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை.

தென் ஆப்பிரிக்க அணியில் டுமினி, மோர்கெல் காயம் காரணமாக ஆடவில்லை அவர்களுக்குப் பதிலாக ஆரோன் பாங்கிஸோ மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்றால் முதலில் பேட் செய்வதே இந்தப் பிட்சில் உசிதம் என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். எனவே இன்னும் சிறிது நேரத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளனர்.

மோர்னி மோர்கெல் இல்லை, டுமினி இல்லை, டாஸில் தென் ஆப்பிரிக்கா தோற்றுள்ளது. இது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://tamil.thehindu.com/sports/சென்னை-ஒருநாள்-போட்டி-இந்தியா-பேட்டிங்-அணியில்-மாற்றமில்லை/article7792452.ece?homepage=true

  • தொடங்கியவர்

சதம் விளாசினார் கோஹ்லி

kohli, india

சென்னை:  தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கோஹ்லி சதம் அடித்து அசத்தினார் 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1–2 என, தொடரில் பின் தங்கியுள்ளது. இன்று நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் காயமடைந்த டுமினி, மார்கலுக்குப் பதில் கிறிஸ் மோரிஸ், பங்கிசோ சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் ரோகித் சர்மா 21 ரன்னுக்கு அவுட்டானார். ஷிகர் தவான் (7) வழக்கம் போல ஏமாற்றினார். ரகானே (45) நீடிக்கவில்லை.

சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய கோஹ்லி 23 வது சதம் அடித்தார். இந்திய அணி 37.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்திருந்தது.

http://sports.dinamalar.com/2015/10/1445432910/dhoniindia.html

  • தொடங்கியவர்
இந்திய அணி அசத்தல் வெற்றி * டிவிலியர்ஸ் போராட்டம் வீண்
 
Tamil_News_large_1369836.jpg
 

சென்னை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஒருவனாக போராடிய தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் சதம் வீணானது.

 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என, தொடரில் பின் தங்கியுள்ளது. இன்று நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் காயமடைந்த டுமினி, மார்கலுக்குப் பதில் கிறிஸ் மோரிஸ், பங்கிசோ சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் ரோகித் சர்மா 21 ரன்னுக்கு அவுட்டானார். ஷிகர் தவான் (7) வழக்கம் போல ஏமாற்றினார். ரகானே (45) நீடிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய கோஹ்லி 23 வது சதம் அடித்தார். இவர் 138 ரன்களில் ஆட்டமிழந்தார். ரெய்னா (53) அரை சதம் விளாசினார். தோனி 15 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் டக்-அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. அக்சர் (4) அவுட்டாகாமல் இருந்தார்.

 

கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு, துவக்க வீரர் ஆம்லா (7), டூபிளசி (17) ஆகியோர் ஏமாற்றினர். அடுத்து வந்த மில்லர் (6), பெகர்தீன் (22), கிறிஸ் மோரிஸ் (22) ஆகியார் இந்திய சுழலில் அடுத்ததடுத்து வெளியேறினர். குயிண்டன் (43) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனிஒருவனாக போராடிய டிவிலியர்ஸ் ஒருநாள் அரங்கில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 112 ரன்கள் எடுத்தபோது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரின் சூப்பர் பவுன்சிரில் அவுட்டாக, பின்வரிசை வீரர்கள் தட்டுத்தடுமாறினர். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 50 ஒவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரின் இந்திய அணி 2-2 என தற்போது சமன் செய்தது. இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி வரும் 25ம் தேதி மும்பையில் நடக்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1369836

  • தொடங்கியவர்

டிவில்லியர்ஸின் சாகச சதம் வீண்: சென்னையில் இந்தியா அபார வெற்றி

 
  • சென்னை ஒருநாள் போட்டியில் 35 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி.
    சென்னை ஒருநாள் போட்டியில் 35 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி.
  • சாகச சதம் கண்ட டிவில்லியர்ஸ். | படம்: ஏ.எப்.பி.
    சாகச சதம் கண்ட டிவில்லியர்ஸ். | படம்: ஏ.எப்.பி.

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 35 ரன்களில் வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்சின் அச்சுறுத்தலான, சாகச சதம் தென் ஆப்பிரிக்க வெற்றியை உறுதி செய்யவில்லை. இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. ஏன் சாகச சதம் எனில் இந்திய சுழற்பந்து வீச்சு ஆதிக்கத்தில் இருக்கும் போது எந்தஒரு வீரரும் டிவில்லியர்ஸைத் தவிர இப்படியொரு சதம் அடித்திருக்க முடியாது.

320 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய இந்திய அணியை 299 ரன்களுக்கு மட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா 300 ரன்கள் இலக்கை விரட்டிய போது 9 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா 264 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இம்முறை குவிண்டன் டிக் காக், ஹஷிம் ஆம்லா களமிறங்கினர். 3-வது ஓவரின் 3-வது பந்திலேயே அவுட் வாய்ப்புகள் ஏற்பட்டது. டி காக், ஆம்லாவுக்கு இடையே ரன் ஓடுவதில் குழப்பம் ஏற்பட ரோஹித் மிட் ஆனில் இருந்து அடித்த த்ரோ ஸ்டம்பைத் தவிர்த்தது, பிறகு பந்தை எடுத்து பேட்டிங் முனையில் அடிக்க அங்கு ஆம்லா நேரத்தில் கிரீஸுக்குள் மட்டையைக் கொண்டு வந்தார்.

ஆனால் டி காக் அதிரடி முறையில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுக்க முதல் 5 ஓவர்களில் 36 ரன்கள் வந்தது. அப்போது 7 ரன்கள் எடுத்திருந்த ஹஷிம் ஆம்லா, மோஹித் சர்மா பந்தை புல் ஆட மிட்விக்கெட்டில் தவண் சற்றே எம்பி கேட்சை பிடித்தார்.

டுபிளேசிஸ், டி காக் ஜோடி 10 ஓவர்களில் ஸ்கோரை 63க்கு உயர்த்தியது. குமாரை டி காக் அருமையான சிக்சர் ஒன்றை அடித்தார். குமார் பந்துவீச்சு மோசமாக அமைந்தது, ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர் அதிகம் வீசினார், வேகமும் இல்லை. இதனால் அவர் தனது 5 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக் கொடுத்தார். மோஹித் சர்மாவும் விதிவிலக்கல்ல அவர் 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

ஸ்பின்னர்கள் ஏற்படுத்திய சரிவு:

11-வது ஓவரில் அக்சர் படேல் வீச வந்தார். 2 ரன்களையே டுபிளேசி, டி காக்கால் எடுக்க முடிந்தது. 12-வது ஓவரில் ஹர்பஜன் வீச வந்தார். 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த குவிண்டன் டி காக் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். டி காக் டிரைவ் ஆட சபலப்பட்டு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆடினார் எட்ஜ் ஆனது ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார்.

பிட்சில் ஸ்பின்னுக்கு சற்றே உதவி இருந்தது. இதனால் அக்சர், ஹர்பஜனை அடிக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ் இறங்கினார். இந்நிலையில் 14-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹர்பஜன் பந்தை மேலேறி வந்து பளார் என்று நேராக அடிக்க, பந்தின் வழியிலிருந்து விலக நினைத்த டுபிளேஸ்ஸிஸ் வலது முழங்கையை பந்து தாக்கியது. டுபிளேஸ்ஸிஸ் வலியில் துடித்தார், மைதானத்தில் சிறிது சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 34 பந்துகளில் 17 ரன்களையே எடுத்த டுபிளேஸ்ஸிஸ் படேல் வீசிய பந்தை ஆஃப் திசையில் தட்டி விட முயன்றார் பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட தோனி கேட்சைப் பிடித்தார், அப்பீல் செய்யாமலேயே அது விக்கெட்தான் என்று அவர் உறுதியாக இருந்தார். டுபிளேஸ்ஸிஸ் அவுட் தீர்ப்பில் திருப்தி அடையவில்லை, ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் அவுட் போல்தான் தெரிந்தது.

15 ஓவர்களில் 79/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. அதாவது 5 ஓவர்களில் 16 ரன்களையே எடுக்க முடிந்த்து. இடது கை அபாய வீரர் டேவிட் மில்லர் 6 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங்கின் சாதுரியமான நேர் பந்துக்கு எல்.பி. ஆனார். 19 ஓவர்கள் முடிவில் 90/4 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

பெஹார்டீன், டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு கவலை அளித்தது காரணம், அதிர்ஷ்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் இருந்தது. ஏனெனில் டிவில்லியர்ஸுக்கு அமித் மிஸ்ரா வீசிய ஒரு பந்து அதிகம் திரும்ப தோனியையும் கடந்த பந்து ஸ்லிப்பிற்கு வர, டிவில்லியர்ஸ் கிரீஸுக்கு வெளியே இருந்தார், ஸ்லிப் பீல்டரின் த்ரோ முயற்சி நூலிழையில் தவறியது. டிவில்லியர்ஸ் தப்பினார்.

பிறகு பெஹார்டீனுக்கு புவனேஷ் குமார் சரியாகக் கணிக்காமல் ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டார், டிவில்லியர்ஸ் மீண்டும் அமித் மிஸ்ராவை புல் ஆட பந்து சரியாகச் சிக்காமல் மிட் ஆனுக்கு முன்னால் விழுந்தது. ஆனால் பெஹார்டீன் ரன் ஓடும் முயற்சியில் பந்து சரியாக சேகரிக்கப் படாததால் ரன் அவுட் வாய்ப்பும் தவற விடப்பட்டது.

இப்படியாக இந்த ஜோடி நகர்ந்தது. டிவில்லியர்ஸும் தனது மூர்க்கமான ஸ்ட்ரோக்குகளினால் அச்சுறுத்திக் கொண்டிருந்தார். இடையிடையே டிவில்லியர்ஸின் ஓரிரு ஷாட்கள் பீல்டருக்கு முன்னதாக விழுந்தபடியும் இருந்தது. இந்நிலையில் 32-வது ஓவரில் மிஸ்ரா பந்தில் பெஹார்டீன் எட்ஜ் செய்தார், தோனி கேட்ச் பிடித்தார் ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், தோனியும், மிஸ்ராவும் வெறுப்படைந்தனர். ஆனால் அதே ஒவரில் மிஸ்ராவின் நேர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று கால்காப்பில் வாங்க நடுவர் கையை உயர்த்தினார். அபாய வீரர் பெஹார்டீன் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டிவில்லியர்ஸ் அப்போது 64 பந்துகளில் 43 நாட் அவுட்.

டிவில்லியர்ஸின் சாகச சதம்:

பெஹார்டீன் அவுட் ஆனவுடன், கிறிஸ் மோரிஸ் களமிறங்க, அதற்கு அடுத்த புவனேஷ் குமார் ஓவரில் டிவில்லியர்ஸ் தனது மூர்க்கத்தை காட்டினார். டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு புல்ஷாட் பவுண்டரி, பிறகு மேலேறி வந்து கவர் திசையில் ஒரு விளாசல் பவுண்டரி மூலம் 66 பந்துகளில் அரைசதம் கடந்தார், பிறகு ஒரு பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு தோனியின் டைவையும் மீறி பைன் லெக் பவுண்டரிக்குப் பறந்தது.

அடுத்ததாக மிஸ்ரா வீச வர, லாங் ஆன் மிட்விக்கெட் இடைவெளியில் ஒரு பவுண்டரி பிறகு ஒரு மூர்க்கமான ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி. பிறகு ஹர்பஜன் சிங்கையும் மிக அற்புதமாக ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசினார். 84 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் டிவில்லியர்ஸ் 75 ரன்களில் அச்சுறுத்த 38 ஓவர்கள் முடிவில் 185/5 என்று தென் ஆப்பிரிக்கா இருந்தது. ஓவருக்கு 5 ரன்கள் விகிதம் கூட இல்லையென்றாலும் டிவில்லியர்ஸ் சாகசத்துக்கு தயாராக ஒரு முனையில் அச்சுறுத்த ஆட்டம் என்னவாகும் என்று புதிராகவே இருந்தது. அப்போது, மோஹித் சர்மா ஓவரில் மோரிஸ் 9 ரன்களில் ரஹானேயின் அற்புதமான த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

மேலும் டிவில்லியர்ஸ் பந்தை டீப்பில் அடித்து மிக வேகமாக இரண்டிரண்டு ரன்களாகவும் அடித்துக் கொண்டிருந்தார். பாங்கிசோ களமிறங்க இடையில் மிஸ்ரா ஒரு ஓவரை சிக்கனமாக வீசி 4 ரன்களையே கொடுத்தார். 40-வது ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா 200/6, டிவில்லியர்ஸ் 87 நாட் அவுட்.

42-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹர்பஜன் சிங்கை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு அபாரமான சிக்சரை விளாசி 97க்கு வந்தார்.

பிறகு மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் மேலேறி வந்து மிக நேராக கொஞ்சம் தாழ்வான சிக்ஸ் ஒன்றை டிவில்லியர்ஸ் அடித்து 98 பந்துகளில் சதம் கண்டார். இது அவரது 22-வது ஒருநாள் சதம்; இந்தத் தொடரில் 2-வது சதமாகும். 44 ஓவர்கள் முடிவில் 229/6 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா. 36 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 71 ரன்கள்.

அப்போதுதான் திருப்பு முனை ஒவரை வீச வந்தார் புவனேஷ் குமார். டிவில்லியர்ஸ் 45-வது ஓவரில் முதலில் 2 அபாரமான 2 ரன்களை முதல் 2 பந்துகளில் எடுத்தார். ஆனால் 3-வது பந்தை பவுன்சராக புவனேஷ் வீச புல் ஆட முயன்றார் டிவில்லியர்ஸ் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தோனியிடன் தஞ்சமடைந்தது. பெரிய திமிங்கிலத்தை வீழ்த்தினார் புவனேஷ் குமார். 107 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 112 ரன்களில் டிவில்லியர்ஸ் பெவிலியன் திரும்பினார். அசாத்தியமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சச்சின் டெண்டுல்கர் இருமுறை ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானின் மிகப்பெரிய் இலக்குகளை தனி மனிதனாக விரட்ட மேற்கொண்ட முயற்சிகளை டிவில்லியர்ஸின் இந்த இன்னிங்ஸ் நினைவூட்டியது.

45 ஓவர்களில் 239/7 என்ற நிலைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஒன்றும் செய்ய முடியவில்லை. பேங்கிசோ 20 ரன்களிலும், ஸ்டெய்ன் 9 ரன்களிலும் குமாரிடம் அவுட் ஆக, கடைசியில் 264/9 என்று தென் ஆப்பிரிக்கா முடிந்து போக 35 ரன்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா தரப்பில் புவனேஷ் குமார் 10 ஓவர்களில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிவில்லியர்ஸ் விக்கெட் இவரது கைவண்ணமாகும். மோஹித் சர்மா சிறப்பாக வீசி 48 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற, ஹர்பஜன் 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 40 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், அமித் மிஸ்ரா 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆனால் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சு ரன் விகிதத்தை வைத்து அவரது பந்து வீச்சை எடைபோட முடியாது, டிவில்லியர்ஸை நிறைய முறை பீட் செய்தார் மிஸ்ரா. டிவில்லியர்ஸ் இவர் பந்தில்தான் அதிகம் தடுமாறினார்.

ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/டிவில்லியர்ஸின்-சாகச-சதம்-வீண்-சென்னையில்-இந்தியா-அபார-வெற்றி/article7792975.ece?homepage=true

  • தொடங்கியவர்

சென்னை ஒருநாள் போட்டியில் கவனிக்கத்தக்க 7 தகவல்கள்

 
 
chennaioneday_2594367f.jpg
 

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது. ஆட்டநாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் 2-2 என சமநிலை பெற்றது. | விரிவான செய்தி - டிவில்லியர்ஸின் சாகச சதம் வீண்: சென்னையில் இந்தியா அபார வெற்றி |

சதம் அடித்த 8-வது வீரர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த 12வது வீரர் கோலி ஆவார். இதற்கு முன்னர் தோனி, யுவராஜ், டிராவிட், மனோஜ் திவாரி (இந்தியா), மார்க்வாக், ஜெப் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), சையத் அன்வர், நசீர் ஜாம்ஷெத் (பாகிஸ்தான்), ஹாரிஸ் (நியூசிலாந்து), பொல்லார்ட் (மேற்கிந்தியத்தீவு) ஆகியோரும் சதம் அடித்துள்ளனர்.

இந்தியாவின் அதிகபட்சம்

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை (299) நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்னர் 1997ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 292 ரன்கள் எடுத்திருந்தது.

கெடுபிடி அதிகம்

பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரசிகர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கருப்பு உடை அணிந்து வந்த சில இளைஞர்கள் மைதானத்தின் உள்ளே அனுதிக்கப்படவில்லை. போட்டியின் போது சட்டையை கழற்றி எதும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் வெள்ளை நிற டி ஷர்ட் மீது go india உள்ளிட்ட வாசகங்கள் எழுதி வந்த இளைஞர் ஒருவரையும் போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

வெறுத்துபோன ரசிகர்கள்

இந்திய அணியின் ரன்குவிப்பு வேகம் கடைசி நேரத்தில் மிகவும் மந்தமானது. அதுவும் கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் மைதானம் ரசிகர்களின் ஆரவாரமின்றி அமைதியான சூழல் காணப்பட்டது.

சோதித்த தோனி

தோனி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அவர் களமிறங்கிய போது முழுமையாக 5 ஓவர்கள் மீதமிருந்தது. இதனால் அதிரடியாக ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரோ 16 பந்துகளை சந்தித்து 15 ரன் எடுத்து வெளியேறினார். தோனியின் மந்தமான ஆட்டத்தால் இந்திய அணியால் கடைசி 5 ஓவரில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

14 ஆட்டங்களுக்கு பிறகு

உலககோப்பை போட்டிக்கு பின்னர் கோலி தற்போதுதான் சதம் அடித்துள்ளார். கடந்த 14 ஆட்டங்களில் கோலி ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார்.

கோட்டைவிட்ட ரெய்னா

ரெய்னா 46 ரன்னில் கொடுத்த கேட்ச்சை டிவில்லியர்ஸ் மிஸ் செய்தார். எனினும் இந்த வாய்ப்பை ரெய்னா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

http://tamil.thehindu.com/sports/சென்னை-ஒருநாள்-போட்டியில்-கவனிக்கத்தக்க-7-தகவல்கள்/article7796013.ece

  • தொடங்கியவர்

இன்னிங்ஸைக் கட்டமைப்பதில் விராட் கோலி அபாரத் திறமையுடையவர்: தோனி புகழாரம்

 
டுபிளெஸ்ஸிஸ் கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் தோனி. | படம்: ராய்ட்டர்ஸ்.
டுபிளெஸ்ஸிஸ் கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் தோனி. | படம்: ராய்ட்டர்ஸ்.

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமெடுக்க, டிவில்லியர்ஸ் மிரட்ட, கடைசியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டி பற்றியும், கோலியின் பேட்டிங் பற்றியும் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

"தொடக்கத்திலிருந்தே, இந்த போட்டி மட்டுமல்ல, அவர் ஒருநாள் போட்டியில் விளையாடத் தொடங்கியது முதல் கூறுகிறேன், ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே செல்வதில் கவனம் செலுத்துபவர் கோலி.

அவர் 50 ரன்களிலிருந்து 60 ரன்களுக்குச் செல்வதும் பிறகு 100லிருந்து 110 மற்றும் அதைத் தாண்டிச்செல்வதையும் பார்த்தோமானால், இந்த ஸ்கோர்களில்தான் நிறைய பேட்ஸ்மென்கள் அவுட் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே இதனை அவர் கடந்து விட்டால் எப்போதும் பெரிய இன்னிங்ஸுக்கான மனநிலையை அவரிடம் உள்ளதை கவனித்துள்ளேன்.

அவர் ஒன்று, இரண்டு என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ததும் அபாரம். பெரிய இன்னிங்சை ஆடும் போது இத்தகைய அணுகுமுறை மிக முக்கியமானது. நடு ஓவர்களில் பீல்டர்களுக்கு நெருக்கடி கொடுப்பது அவசியம். பெரிய இன்னிங்சை பெரிய ஷாட்களை மட்டுமே ஆடுவதன் மூலம் கட்டமைக்க முடியாது. அதுவும் சரியான வெயில் அடித்துக் கொண்டிருக்கும் போது, பவுலர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக பவுலர்கள் எல்லைக் கோட்டருகே பீல்ட் செய்யும் போது, அவர்களை களைப்படையச் செய்ய வேண்டும்.

அதன் பிறகு 2-வது ஸ்பெல்லை அவர்கள் வீச வரும்போது, தவறிழைப்பார்கள், அடிப்பதற்கு சில பந்துகளை போட்டுக் கொடுப்பார்கள். கோலி இன்னிங்ஸை கட்டமைப்பதிலும் ஓவர்கள் முழுதையும் ஆடுவதிலும் அபாரத் திறமையுடையவர் என்றே நான் கருதுகிறேன்.

மேலும், பிட்ச்கள் வித்தியாசமானவை. ஆஸ்திரேலியா தொடரில் அவர் அடித்த சதங்களையும் இதனையும் நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள். கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது, பந்துகள் அருமையாக பேட்டுக்கு வந்தது, அந்தப் போட்டிகள் பெரிய அளவில் ரன் குவிக்கப்பட்ட போட்டிகள், 350 ரன்களை இருமுறை வெற்றிகரமாக விரட்டினோம். ஆனால் இங்கு பிட்ச் கொஞ்சம் மந்தம், அதனால்தான் கோலியினுடைய இன்னிங்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது, இந்தப் பிட்சில் நன்றாக நிலைபெற்று விட்ட பேட்ஸ்மேன் கடைசி வரை நிற்பது முக்கியம், ஏனெனில் புதிய பேட்ஸ்மென்களுக்கு பிட்சில் பந்துகள் வரும் வேகத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது குறைந்த நேரத்தில் கடினம்.

ஹர்பஜன் சிங் குறித்து...

சில வேளைகளில் நாம் பந்து வீச்சை விக்கெட் வீழ்த்துவதை வைத்து மதிப்பிடுகிறோம். விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர் நன்றாக வீசுகிறார் என்று நினைக்கிறோம். விக்கெட் கீப்பராக எனக்கு சில நன்மைகள் உள்ளன, ஒரு பவுலர் என்ன செய்கிறார் என்பதை விக்கெட் கீப்பராக துல்லியமாக மதிப்பிட முடியும், ஹர்பஜன் இப்போது நன்றாகவே வீசுகிறார்.

குறிப்பாக தொடரின் தொடக்கத்திலேயே அஸ்வின் ஆட முடியாமல் போனது பெரிய பின்னடைவு, ஏனெனில் இந்த பிட்ச்களில் அவர்தான் நம் ஆயுதம். அவரை நான் முதல் 10 ஓவர்களில் பயன்படுத்துவேன், நடு ஓவர்களில் பயன்படுத்துவேன், ஸ்லாக் ஓவர்களிலும் பயன்படுத்துவேன்.

இந்நிலையில் இந்தத் தொடரில் ஹர்பஜன் பந்து வீச்சு நன்றாகவே அமைந்தது. அதனால் நான் அவரை முதல் 10 ஓவர்களில் பயன்படுத்த முடியும், சென்னையில் கடைசி 10 ஓவர்களுக்கு முன்னதாகவும் அவரைப் பயன்படுத்தினேன். அவர் எனது அழுத்தத்தைக் குறைத்தார்.

இவ்வாறு கூறியுள்ளார் தோனி.

http://tamil.thehindu.com/sports/இன்னிங்ஸைக்-கட்டமைப்பதில்-விராட்-கோலி-அபாரத்-திறமையுடையவர்-தோனி-புகழாரம்/article7796630.ece

  • தொடங்கியவர்

வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் பலம்

 
 
படம்: வி.கணேசன்.
படம்: வி.கணேசன்.

இருதரப்பு ஒருநாள் தொடர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி மற்ற அணிகளைக் காட்டிலும் பலம் மிக்கதாக திகழ்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு தொடர்களின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் 10 போட்டிகளில் வென்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

மாறாக இந்தியா இத்தகைய 21 கடைசி போட்டிகளில் 11-ல் வென்று 9-ல் தோல்வி தழுவியுள்ளது.

2-ம் இடத்தில் ஆஸ்திரேலியா 16 கடைசி போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்று 5-ல் தோல்வி தழுவியுள்ளது.

3-ம் இடத்தில் இலங்கை அணி உள்ளது. இது 14 கடைசி போட்டிகளில் 7-ல் வென்று 5-ல் தோல்வி தழுவி 2 போட்டிகள் நோ-ரிசல்ட் ஆகியுள்ளது.

பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசம். 28 கடைசி போட்டிகளில் 10-ல் மட்டுமே வென்று 17-ல் தோல்வி தழுவியது.

ஆனால் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடரில் இரு அணிகளுமே தங்கள் சொந்த நாட்டுக்கு வெளியே தங்களிடையே நடந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. 2005-06 ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராக 2-2 என்று டிரா செய்திருந்தது தென் ஆப்பிரிக்கா.

இந்தியாவுக்கு ஆதரவான இன்னொரு புள்ளி விவரம் என்னவெனில், 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 4-2 என்று தொடரைக் கைப்பற்றியது. அதன் பிறகு 7 ஒருநாள் தொடர்களை இந்திய அணியை இங்கு வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா கடைசியாக தொடரின் கடைசி போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக சமீபத்தில் இழந்தது நினைவு கூரத் தக்கது.

http://tamil.thehindu.com/sports/வெற்றி-தோல்வியைத்-தீர்மானிக்கும்-கடைசிப்-போட்டிகளில்-தென்-ஆப்பிரிக்காவின்-பலம்/article7802645.ece

  • தொடங்கியவர்

மும்பை ஒருநாள் போட்டி: டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்

 
 
படம்: ராய்ட்டர்ஸ்.
படம்: ராய்ட்டர்ஸ்.

மும்பையில் சற்று முன் தொடங்கிய 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

காரணம் கடும் வெயில். இதில் தம் பவுலர்களை களைப்படையச் செய்ய டிவில்லியர்ஸ் விரும்பவில்லை என்பதும், மாறாக இந்திய பவுலர்களை வியர்வையில் நனைத்து அதன்மூலம் ஒரு பெரிய இலக்கை எட்ட திட்டமிட்டிருக்கலாம் என்பதும் தெரிகிறது.

இந்திய அணியில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர், கைல் அபாட் சேர்க்கப்பட்டுள்ளனர், டுமினி, மோர்கெல் விளையாடவில்லை.

டி காக், டுபிளேசிஸ் களமிறங்கியுள்ளனர். டேவிட் மில்லர் 3-ம் நிலையில் இறங்கலாம் என்று தெரிகிறது.

பிட்சில் ஓரளவுக்கு நல்ல பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, பிட்சில் உள்ள பிளவுகளினால் ஸ்பின்னர்களுக்கும் உதவியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பெல்லாம் கூடுதல் பீல்டர்கள் நிறுத்த முடியாத விதிமுறைகளின் கட்டுபாடுகளினால் 40-50 ஓவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தது. தற்போது 20 வது ஓவர் முதல் 30-வது ஓவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அணிகளுக்கு இலக்கைத் துரத்தும் போது வெற்றி வாய்ப்பு அதிகம்.

தோனி, அன்று சென்னையில் இறக்கியது போல் டவுன் ஆர்டரை வைத்துக் கொள்ள வேண்டும், அவர் 4-ம் நிலையில் களமிறங்கிடக் கூடாது.

புவனேஷ் குமார் முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி கொடுக்க தற்போது மோஹித் சர்மா பந்துகளில் 2 பவுண்டரி விளாசினார் ஹஷிம் ஆம்லா. தென் ஆப்பிரிக்கா 15/0.

http://tamil.thehindu.com/sports/மும்பை-ஒருநாள்-போட்டி-டாஸ்-வென்று-தென்-ஆப்பிரிக்கா-முதலில்-பேட்டிங்/article7802690.ece

  • தொடங்கியவர்

Screenshot%207_zpsjtha9f73.png

WR_20151025172048.jpeg

இந்திய அணி இலக்கு 439 ரன்கள்: டுபிளசி, டிவிலியர்ஸ் சதம்

AB De Villiers

மும்பை: ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 439 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா சார்பி்ல குயின்டன், டுபிளசி, டிவிலியர்ஸ் என 3 வீரர்கள் சதம் கடந்தனர். 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2–2 என சமநிலையில் உள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரிஸ், பங்கிசோ நீக்கப்பட்டு எல்கர், அபாட் வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

மூன்று வீரர்கள் சதம்:

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன், ஆம்லா சிறப்பான துவக்கம் தந்தனர். ஆம்லா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த குயின்டன் சதம் (102) கடந்தார். இதன் பின் இணைந்த டுபிளசி, டிவிலியர்ஸ் ஜோடி அதிரடியாக ரன் குவித்தது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக விளாசினர். சதம் கடந்த டுபிளசி (133) ரிட்டயர்டு ஹர்ட் முறையி்ல வெளியேறினார். இந்திய பந்துவீச்சை சிதறடித்த டிவிலியர்ஸ் சதம் (119) கடந்தார். இது இத்தொடரில் இவர் அடிக்கும் 3வது சதமாகும். பெகர்டியன் 16 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 438 ரன்கள் எடுத்தது. மில்லர் (22, எல்கர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆம்லா ‘6000’

இப்போட்டியில் ஆம்லா 15 ரன்கள் எடுத்தபோது, ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 123 இன்னிங்சில் பங்கேற்றுள்ள ஆம்லா 6008 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் கோஹ்லி  136 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. 

http://sports.dinamalar.com/2015/10/1445704412/kohliindia.html

  • தொடங்கியவர்

ஒரே நாளில் 'பெர்முடா 'ஆனது இந்திய அணி: தென்ஆப்ரிக்க அணி 438 ரன் குவிப்பு

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, தென்ஆப்ரிக்க அணி 439  ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

de.jpg

டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. குயின்டன் டி காக், ஆம்லா களமிறங்கினர். ஆம்லா 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து டுப்லெசி களமிறங்கினார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தது. 78  பந்துகளை சந்தித்த குயின்டன் டி காக் 16 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உதவியுடன் சதமடித்தார்.குயின்டக் டி காக் அடித்துள்ள 9 சதங்களில் 5 சதங்கள் இந்தியாவுக்கு எதிரானது.

அதே வேளையில் டுப்லெசியும் 111 பந்துகளில் 133 ரன்கள் குவித்து தசை பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். குயின்டன் டி காக் 109 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களதிறங்கிய டி வில்லியர்சும் தன் பங்குக்கு வெளுத்து வாங்கினார்.

இதனால் தென்ஆப்ரிக்க அணியின் ரன்வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. டி வில்லியர்ஸ் 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் 11 சிக்சர்களை விளாசினார். டி வில்லியர்ஸ் 119 ரன்களில் அவுட் ஆனார். தென்ஆப்ரிக்க அணி 47.3 ஓவரில் 400 ரன்களை கடந்தது. கடைசிகட்டத்தில் மில்லர் 22 ரன்களும் பெகார்தீன் 16 ரன்களும் எல்கர் 5 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 438 ரன்களை குவித்தது.

இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 443 ரன்கள் எடுத்ததுதான் ஒருநாள் போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.  அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தென்ஆப்ரிக்க அணி கோட்டை விட்டது. ஒருவேளை டி வில்லியர்ஸ் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் தென்ஆப்ரிக்க அணி புதிய உலக சாதனை படைத்திருக்கும்.

http://www.vikatan.com/news/article.php?aid=54206

இந்தியாவில் முதல்முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா
Tamil_News_large_1372062.jpg
 

மும்பை : ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3-2 என வென்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சமநிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் 'பேட்டிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரிஸ், பங்கிசோ நீக்கப்பட்டு எல்கர், அபாட் வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

 

மூன்று வீரர்கள் சதம்: தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன், ஆம்லா சிறப்பான துவக்கம் தந்தனர். ஆம்லா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த குயின்டன் சதம் (102) கடந்தார். பின் இணைந்த டுபிளசி, டிவிலியர்ஸ் ஜோடி அதிரடியாக ரன் குவித்தது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக விளாசினர். சதம் கடந்த டுபிளசி (133) 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். இந்திய பந்துவீச்சை சிதறடித்த டிவிலியர்ஸ் சதம் (119) கடந்தார். இது இத்தொடரில் இவர் அடிக்கும் 3வது சதம். பெகர்டியன் 16 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 438 ரன்கள் குவித்தது. மில்லர் (22), எல்கர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 36 ஓவரில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை முதல்முறையாக கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் இந்திய தோல்வியடைந்ததன் மூலம் ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு முன் கடந்த 2000 ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் ரகானே அதிகபட்சமாக 87 ரன்களும், தவான் 60 ரன்களும், கேப்டன் தோனி 27 ரன்களும் எடுத்தனர். கடந்த போட்டியில் சதமடித்த விராத் கோஹ்லி இந்த 7 ரன்னில் ஏமாற்றினார்.

 

ஆம்லா '6000': இப்போட்டியில் ஆம்லா 15 ரன்கள் எடுத்தபோது, ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 123 இன்னிங்சில் பங்கேற்றுள்ள ஆம்லா 6008 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் கோஹ்லி 136 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

 

மீண்டும் '438': ஒரு நாள் அரங்கில் 3வது அதிகபட்ச ஸ்கோரை (438) தென் ஆப்ரிக்க அணி மீண்டும் பெற்றது. முன்னதாக, 2006ல் இதே 438/9 ரன்களை (எதிர், ஆஸி., 2006) எடுத்தது. முதலிரண்டு இடங்களில் இலங்கை (443 ரன், எதிர்- நெதர்லாந்து, 2006), தென் ஆப்ரிக்கா (439, எதிர்- வெ.இண்டீஸ், 2015) அணிகள் உள்ளன.

 

2வது முறை: ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 3 வீரர்கள் சதம் அடிப்பது, 2வது முறையாக அரங்கேறியது. முதலிடத்திலும் தென் ஆப்ரிக்க அணியே (எதிர்-வெ.இண்டீஸ், 2015) உள்ளது.

 

இதுதான் அதிகம்: வான்கடே மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச 'ஸ்கோராக' (438) இது அமைந்தது. இதற்கு முன் நியூசிலாந்து அணி 358 ரன்கள் (எதிர்- கனடா, 2011) எட்டியிருந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1372062

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா அணியினருக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

12188956_1113555285330233_56186090678833

11148646_1113555431996885_44103489596525

12063802_1113555391996889_51843791209099

12109234_933677186680976_423487924122419

12105993_933677130014315_689568647272915

12047160_933677236680971_496867160896304

11037254_933677260014302_200208924721621

 

12188121_1113491402003288_32226951802114

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

இசை இந்த வீடியோக்களை ICC உடனேயே தடைசெய்து விடுவார்கள். ICC இன் முகநூலில் இருந்து எடுத்தால் நெடுக இருக்கும்.

  • தொடங்கியவர்

மற்ற அணி பவுலர்கள் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்வடைகின்றனர்; நம் அணியில் இல்லை: தோனி

 
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று கூறுகிறாரோ டிவில்லியர்ஸ்? | படம்: ஏ.எஃப்.பி.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று கூறுகிறாரோ டிவில்லியர்ஸ்? | படம்: ஏ.எஃப்.பி.

முதன் முதலாக இந்தியாவில் ஒருநாள் தொடரை 3-2 என்று வென்று சாதனை படைத்ததோடு, இந்திய அணியை குழிதோண்டி புதைத்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து தோனி பேட்டியளித்தார்.

வங்கதேசத்துக்கு எதிராக படுமோசமாக தொடரை இழந்த பிறகு இப்போது தென் ஆப்பிரிக்க அணி இங்கு ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

எங்களது ஆட்டம் மிக மோசமாக அமைந்தது, எங்களது இந்த ஆட்டத்தை நீங்கள் கணக்கில் சேர்க்க முடியாது என்றார் தோனி.

இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது:

"இது உண்மையான பேட்டிங் பிட்ச். ஸ்பின்னர்களுக்கு பந்துகள் திரும்பவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்கிறார்கள். ஆனால் பிட்சில் ஒரு உதவியும் இல்லாத போது பேட்ஸ்மெனை பின்னால் சென்று ஆட வைக்க முடியவில்லை. நல்ல வேகம் வீசக்கூடிய பவுலர்கள் இருந்தாலும், அவர்களாலும் பவுன்ஸ் செய்ய முடியவில்லை. ஏனெனில் நமது பவுலர்களால் பந்தின் தையலை தரையில் பட்டு எழுப்ப முடியவில்லை.

மிக அரிதாக நமது அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். இதுதான் காரணம், முதல் 25 ஓவர்களை அவர்கள் பார்த்த பிறகே அவர்களை நிறுத்த முடியவில்லை. பவுண்டரிகள் அடிப்பதை தடுக்க முடியவில்லை.

அனைத்து உத்திகளும் நேற்று தோல்வியடைந்தன, யார்க்கர்கள், ஷார்ட் பிட்ச் பந்துகள், ஸ்பின்னர்கள் வைடாக வீசி பேட்ஸ்மெனை ரன் எடுக்க விடாமல் செய்வது என்று அனைத்தையும் முயன்றோம் ஆனால் பயனளிக்கவில்லை. இது போன்ற நாட்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், நாம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும், அடுத்த முறை இத்தகைய பிட்ச் கிடைத்தால் எதிரணியினரை இவ்வளவு ரன்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது. இலக்கைத் துரத்துவது என்பது ஒருபுறம் இருந்தாலும், எதிரணியினரை நிறுத்துவதும் அவசியம். சில கேட்ச்களையும் நாம் பிடிக்க வேண்டும்.

நாம் எப்போதும் 3 ஸ்பின்னர்களுடன் ஆட முடியாது. அதே வேளையில் பேட்டிங் பிரச்சினைகளையும் களைந்தாக வேண்டும். நடுவரிசை மற்றும் கீழ் வரிசையில் பேட்டிங் வலுவடைய வேண்டும். அதே போல் ஆட்டத்தின் எந்த தருணத்திலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பவுலர்கள் வேண்டும்.

சீராக விளையாட நன்றாக ‘செட்டில்’ ஆன அணியாக இருக்க வேண்டும், நம் அணி ஓரளவுக்கு இன்னும் செட்டில் ஆகாத அணியாகவே உள்ளது.

அணிச்சேர்க்கை பற்றி நிறைய விவாதித்தோம். ஆனாலும் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தால் ஆட்டத்தின் முடிவும் மாறாமலேயே போகும். நம்மிடையே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லை. ஸ்டூவர்ட் பின்னியை முயற்சி செய்தோம், ஆனால் அதுவும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் நடப்பு இந்திய அணியில் அவர்தான் சிறந்த ஸ்விங் பவுலிங் ஆல் ரவுண்டர், இரண்டு சிறந்த ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் என்றால் அது ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர்கள்தான். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் சிறந்த அணி, இதனை அதிகபட்சமாக எப்படி பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியும்.

மற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை நாம் பார்த்தோமானால், வேகப்பந்து வீச்சாளர்கள் வருகின்றனர், ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்கு அவர்கள் உயர்ச்சி பெறுகின்றனர். விரைவில் அவர்கள் தங்களது பலம், பலவீனங்களை உணர்ந்து ஸ்ட்ரைக் பவுலர்களாக அந்த அணிகளில் மாறிவிடுகின்றனர். நம் பவுலர்களால் அவ்வாறு உயர்வு பெற முடியவில்லை. மேலும் ஒரு தனிப்பட்ட வீரர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக நிறைய கால அவகாசம் தந்து, அதுவும் பயனளிக்காமல் போகும்போது, ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம், ஆனால் அவர்களும் ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர், இதனால் லைன் மற்றும் லெந்த்தில் வீசும் பவுலர்களை நாடினோம். மோஹித் சர்மா 3-வது வேகப்பந்து வீச்சாளராக இருக்கச் சிறந்தவர். இந்நிலையில் நமக்குச் சிறந்த அணிச்சேர்க்கை எது என்பதை தீர்மானிக்க வேண்டும். யார் கடைசி ஓவர்களில் நன்றாக வீசக்கூடியவர்கள், யார் நடு ஓவர்களை நன்றாக வீசக்கூடியவர்கள், யார் புதிய பந்தில் நன்றாக வீசக்கூடியவர் என்று பல விஷயங்களை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக பார்த்து நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை முயற்சி செய்தோம், ஆனால் அவர்கள் நன்றாக வீசவில்லை. ஆனால் இவர்கள் வேறு வடிவத்தில் அதாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் அணிக்கு ஆடும்போதும், துலீப், தியோதர் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக வீசியவர்களாகவே இருக்கின்றனர்.

நம் அணி மாற்றமடையும் காலக்கட்டத்தில் உள்ளது. சில நேரங்களில் இதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் டாப் பவுலர்களாக இருப்பதற்கும் சர்வதேச கிரிக்கெட்டில் டாப் பவுலர்களாக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இந்தப் போட்டியில் ஸ்பின்னர்கள் மோசமாக வீசினார்கள் என்று கூறுவது நியாயமாகாது. அணியின் ஆட்டத்தில் உச்சமும், தாழ்வும் மாறி மாறி வருகிறது. ஆனால் இன்னும் நன்றாக ஆடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒரு போட்டி நம்மிடமிருந்து முழுதுமாக பறிக்கப்பட்ட போட்டியாக அமைந்தது"

இவ்வாறு கூறினார் தோனி.

  • தொடங்கியவர்

பந்துவீச்சு மாற்றங்களில் தோனியிடம் நெகிழ்வுத் தன்மை இல்லை: கவாஸ்கர்

 
தோனி. | படம்: ஏ.பி.
தோனி. | படம்: ஏ.பி.

பந்துவீச்சாளர்களைக் கையாள்வதில், ஓவர்களை மாற்றிக் கொடுப்பதில் நெகிழ்வுத்தன்மையில்லாது இருக்கிறார் தோனி என்று கூறுகிறார் சுனில் கவாஸ்கர்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வரும்போது தோனி நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதில்லை. ஆனாலும் அவரிடத்தில் வேறு தெரிவுகளும் இல்லை.

இந்திய அணியின் மிகப்பெரிய கவலை தற்போது பந்துவீச்சே. டி20-தொடரிலும் தற்போது ஒருதின போட்டிகளிலும் பந்துவீச்சாளர்கள் எப்படி சாதாரணமாக வீசுகின்றனர் என்பதை நாம் பார்த்தோம். வான்கடே பிட்சில் பந்துகள் திரும்புவதற்கும், பந்து எழும்புவதற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சரியாக வீசவில்லை. 135 கிமீ வேகத்தை வைத்துக் கொண்டு ஷார்ட் பிட்ச் வீசினால் ஒரு பயனும் ஏற்படாது.

இந்த வேகத்தைக் கொண்டு தென் ஆப்பிரிக்க பேட்டிங்கை ஒன்றுமே செய்ய முடியாது. பவுன்சர்கள் மூலம் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்றால் குறைந்தது மணிக்கு 145 கிமீ வேகமாவது இருப்பது அவசியம். புவனேஷ், மோஹித் அதிகபட்சமாக ரன்களைக் கொடுத்தனர்.

அஸ்வின் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது என்றே நான் கருதுகிறேன். அவர் விளையாட மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டார். ஆனால் 3-வது ஒருநாள் போட்டியின் போது அவர் வலைப்பயிற்சியில் வீசினார். ஆனாலும் அவர் விரைவில் வருவது நல்லதல்ல, தசைநார் காயம் நீண்ட நாட்களுக்கு பிரச்சினை தரக்கூடியது. எனவே டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் பொறுமை காப்பது அவசியம்.

டிவில்லியர்ஸ் அதிரடி பற்றி..

அவர் ஒரு சூப்பர் மேன். அசாதாரணமான இன்னிங்ஸ். அவரது வெற்றிக்குக் காரணம் அவர் நிலையெடுக்கும் தன்மையில் உள்ளது. பவுலர்களின் மனத்துக்குள் புகுந்து பார்க்கிறார், பிறகு அடிப்பதற்கான நிலை எடுக்கிறார். டெஸ்ட் தொடரில் அவரை வீழ்த்துவதற்கு இந்தியா தீர்வு கண்டாக வேண்டும்.

அதேபோல், கேகிசோ ரபாதா இந்தத் தொடரின் கண்டுபிடிப்பு என்றே நான் கருதுகிறேன். அவர் எப்போதும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவரிடம் வேகம் உள்ளது, இவர் நீண்ட தூரம் செல்வார்.

இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.