Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை: மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Featured Replies

ரவிராஜ் கொலை: மேலும் ஒரு சந்தேகநபர் கைது
ரவிராஜ் கொலை: மேலும் ஒரு சந்தேகநபர் கைது

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு கொழும்பு நாரஹன்பிட்டியில்இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில்கொலையாளிகளை சம்பவ இடத்துக்கு வாகனத்தில் அழைத்து சென்ற ஒருவரையே தற்போது கைது செய்துள்ளனர் எனப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செனவி என்ற கடற்படை சிப்பாயும், மனம்பேரி என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் ரவிராஜ் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிள்ளையான் பயன்படுத்திய துப்பாக்கி என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பின்னர் பிள்ளையான், சரண் என்பவருக்கு இந்த துப்பாக்கியை வழங்கினார் என்றும் சரண் என்பவரே செனவி என்பவருக்கு குறித்த துப்பாக்கியை வழங்கினார் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் கூறுகிறது.

இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://onlineuthayan.com/news/824

ரவிராஜ் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்

தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும், சந்தேக நபரை போக்குவரத்து செய்த நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடற்படை உத்தியோகத்தரான செனவி என்பவரும், காவல்துறை கான்ஸ்டபிளான மானம்பேரி என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


செனவி என்ற நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது. கேணல் சாமி கருணாரட்னவினால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தால்; ரவிராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஊடகவியலாளர் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாமி கருணாரட்ன கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிள்ளையான் இந்த ஆயுதத்தை சரன் என்பவருக்கு வழங்கியதாகவும் அவர் ஆயுதத்தை செனவியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சரன் என்பவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும் இன்டர்போலின் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124545/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.