Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவும் ஜே.வி.பியும் ஒண்டா?: யாழ்ப்பாணத் தம்பி

Featured Replies

மகிந்தவும் ஜே.வி.பியும் ஒண்டா?: யாழ்ப்பாணத் தம்பி

 

மகிந்தவும் ஜே.வி.பியும் ஒண்டா?: யாழ்ப்பாணத் தம்பி

 

மனித உரிமை விவகாரம் அரசியல் கருவியாக  கையாளப்படுது இப்பிடி சொன்னது மகிந்தரா? ஜே.வி.பியா? எண்டு குழப்பமாய் இருக்குதே? முந்தி ஒருக்கா மகிந்த சொன்னதை இப்ப ஜே.வி.பி செயலாளர் ரிவின் சில்வா சொல்லி இருக்கிறார்... 
 
அப்பமகிந்தவும் ஜே.வி.பியும் ஒண்டா? எண்டு கேக்கப்படாது.  தாங்கள் ஒண்டுக்குள்ளை ஒண்டு இதைவிட வேற எப்பிடி காட்டுறது? 
 
ஜே.வி.பிக்காரரின்டை இனவாத முகம் அப்பப்ப சாயம் வெளுக்குது. இடைக்கிடை நீமான்கள் மாதிரி கதைப்பினம். பிறகு அநீதிமான்களை காப்பாற்றத் துடிப்பினம். அப்பப்ப தங்களை பேரினவாத சகதி எண்டுறதை நல்லா வெளிக்காட்டுறினம்...
 
இப்பவும் பாருங்கோவன். 
 
ஜெனீவா தீர்மானத்தை மகிந்தவோடு சேர்ந்து எதிர்க்கப்போகினமாம் ஜே.வி.பி. நல்ல விளையாட்டு. 
 
உள்நாட்டு விசாரணை குற்றவாளிகளை தப்பிக்கிற சதி எண்டு தமிழ் மக்கள் அழுகிறநேரத்திலை. உவையள் அதையும் இல்லாமல் செய்ய வேணுமாம்.. ஓ. மகிந்த சொல்லுறார் உள்ளக விசாரணையும் சர்வதேச சதி எண்டு.. 
 
அதாலை ஜெனீவா தீர்மானத்தை எதிர்க்கிறாராம். மகிந்தவை காப்பாற்றுற இந்த வேலைக்கு  முன்னாள் ஜே.விபி. விமல் வீரவன்ச, உதயகம்பன்பில, வாசுதேவ நாணக்கார இந்த இனவாதிகளோட இப்ப ஜே.வி.பிகாரும் சேருகினமாம்..
 
எது எதோடை சேருமோ அதோடை சேருது அவ்வளவுதானே? 
 
நாட்டுக்கு சர்வதேச தலையீடு வேண்டாமாம். அதுக்கு எதிராய் நாட்டிலை மக்களை தெளிவுபடுத்தப் போகினமாம். அதாவது சிங்களப் பேரினவாத வெறியை தூண்டி விடப்போகினம் எண்டுறினம். அதைத்தானே ஜே.வி.பி செய்யும்..
 
முதலிலை கலப்பு நீதிமன்றம் நிறுவ இடமளிக்ககூடாது அது நாட்டின்னை இறைமையை பாதிக்கிறது எண்டு சிங்கள பேரினவாத சக்கரத்திலை சூழறுகிற ஒரு அநீதி இறைமையை பாதுகாக்க நிண்ட வர் இப்ப உள்ளக விசாரணையையும் எதிர்க்கிறார்..
 
அப்பிடி எண்டாால் இவையள் தமிழ் இனப்படுகொலையாளி மகிந்தவையும் அவரின்டை கூட்டாளியளையும் போர்க்குற்றம் இனப்படுகொலை செய்த படையளையும் காப்பாற்ற நினைக்கிறார்.
 
அதுவும் நுட்பமாய் காப்பாற்றப் பாக்கினம். நுட்பமான இனவாதியள். 
 
தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறதைப் பற்றி அவைக்கு கவலை இல்லை. தமிழ் சனம் அழிய வேண்டும் எண்டுறதுதான் அவையின்டை நிலைப்பாடு. தமிழ் சனத்தை இனப்படுகொலை செய்த யுத்தத்தை பயங்கரவாத வெற்றி யுத்தமாய்தானே கொண்டாடுறினம்.
 
அதுபோக பயங்கரவாதியளை அழியுங்கோ எண்டு யுத்தத்தை நடத்தி சனங்களை அழிக்க ஆணையிட்டதும் ஜே.வி.பிதானே. 
 
என்ன இடையிலை பெரிய கதை எல்லாம் கதைச்சு. வன்னி, யாழ்ப்பாணத்திலை வந்து முதலைக் கண்ணீர் வடிச்சு புத்திசாலித்தனமாய் பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் செய்து வடக்கிலை சீட் எடுக்கப் பாத்தவையள் நல்ல அடி வாங்கிக்கொண்டு ஓடினவையள், இப்ப வெளிப்படையாய் அந்த அரசியலை செய்து மகிந்தயை காப்பாற்றினமாம்..
 
நாட்டுக்கு எதிராய் சதி, ஊழல், நிதிமோசடி எண்டு எத்தினை கேசுகளை போட்டு மகிந்தவையும் அவரின்டை குடும்பத்தையும் சிறையிலை அடைக்க வேணும் எண்டு துடிச்ச ஜே.வி.பி இப்ப தமிழரின்டை இந்த விவகாரத்திலை மகிந்தவை காப்பாற்ற நிக்கிறது ஏன்? இதுதன் பேரினவாத அரசியல். 
 
சிங்கள மக்களுக்கு மகிந்த செய்ததுக்கு எதிராய் ஆயிரம் செய்யலாம். ஆனால்  தமிழ் சனங்களுக்கு மகிந்த செய்ததுக்கு அவரை ஒண்டும்பண்ண ஏலாது. அப்படி செய்தால்தான் மகிந்தவுக்கு விழுகிற ஓட்டு ஜே.வி.பிக்கு விழும்....
 
மகிந்தவைக் காப்பாற்றும் இந்த கொள்கையும் மகிந்தவின்டை கொள்கையா எண்டு என்னட்டை கேக்கப்படாது.. இது இடதுசாரிக்கொள்கையாம்.. :(
 

யாழ்ப்பாணத் தம்பி

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124582/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.