Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் -AHRC

Featured Replies

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் -AHRC

 

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் -AHRC



ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த  தீர்மானங்கங்களை நிறைவேற்ற நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் திட்டப் பணிப்பாளர் டெஸ்மன் டி சில்வா தெரிவித்துள்ளார்.


இலங்கையின் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் குறைபாடுகள் பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை விசாரணை செய்யும் விசாரணைப் பிரிவு, சட்ட மா அதிபர்திணைக்களம், நீதிமன்றக்கட்டமைப்பு ஆகியனவற்றில் பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு உண்டு எனவும், மேன்முறையீட்டு விசாரணை மேலும் காலத்தை கடத்தக்கூடிய செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


உள்நாட்டு நீதவான்கள் துரித கதியில் வழக்கு விசாரணை செய்து தண்டிக்க நாட்டம் காட்டுவார்கள் என கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பு கலாச்சாரத்தில் துரித விசாரணை என்பதற்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை காவல் நிலையங்களில் சித்திரவதைகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும், சில அதிகாரிகளினால் துன்புறுத்தல்களை மேற்கொள்ளாது விசாரணை நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பலவந்த காணாமல் போதல்கள் இலங்கையில் குற்றச் செயலாக அறிவிக்கப்படவில்லை எனவும், சட்டமாக இயற்றப்பட்டு எதிர்காலத்தில் அமுல்படுத்தப்பட்டாலும் அந்தச் சட்டத்தின் ஊடாக கடந்த கால குற்றச் செயல்களை தண்டிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனால் கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையின் நீதிமன்றத்துறையில் நிலவி வரும் சிக்கல்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124580/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.